Friday, May 22, 2026

கழிவு “

கழிவு “ உடலின் கழிவு வியர்வை – சிறு நீர் – மலம் அது போல் ஆசையின் கழிவு தான் விந்துவும் ஆனால் இறையின் பொருட்கள் எலாம் உடல் வெளி விட்டு வெளியே வருவதேயிலை வாசி – நாசி விட்டு வெளி வருவதிலை அமுதம் – இந்த அபூர்வ உணவும் தான் அதனால் தான் இதுக்கு போகாப்புனல் என பேரு வெங்கடேஷ் See less

காமம் – காதல் – அன்பு ” – 2

காமம் – காதல் – அன்பு ” – 2 உலகில் பெரும்பாலோர் உடல் சார்ந்த காமத்தில் தான் உள்ளார் இது மிருக உணர்ச்சிக்கு சமம் ஆம் சில அபூர்வ காதலர்கள் – கவிஞர்கள் உடல் தாண்டி உயிர் பத்தி சிந்திக்கிறார்கள் இயற்கை நேசிக்கிறார்கள் ஆனாலும் உடலும் – அதன் தேவையும் உளது அன்பு என்பது ஆன்மாவுக்கு தெய்வத்துக்கும் இருக்கும் தெய்வீக தொடர்பு ஆகும் இது எண்ணமற்ற – ஆசையற்ற அசைவற்ற நிலையில் வருவது வெங்கடேஷ் See less

சுத்த தேகம் ” – விளக்கம்

சுத்த தேகம் ” – விளக்கம் ஸ்தூல நாத விந்துக்களினால் ஸ்தூல தேகம் உருவாகிறதெனில் ?? சூக்கும தேகமாம் ஆன்ம – சுத்த தேகம் உண்டாக எனில் சூக்கும நாத விந்துக்கள் உதவி வேணும் தானே?? அவைகள் கலப்பினால் தான் சுத்த தேகம் ஆன்ம தேகம் கிட்டும் இது உறுதி உண்மை வெங்கடேஷ்

Third Eye “

Third Eye “ Its activation and Opening is all about Entering into Third Ventricle The Sacred Hiatus The Sacred Void the Cosmic Space The Holy Lake filled with Divine Water Popularly called Semen Cup
BG Venkatesh

தெளிவு 457

தெளிவு 457 சன்மார்க்கி வேறு சன்மார்க்க சங்கத்தவர் வேறு சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினர் தான் சன்மார்க்க சங்கத்தார் அன்பர்கள் அவர்கள் சாகா நிலை அறியாதாவராகையால் பெறாதவராகையால் அவர் சன்மார்க்கி அல்லர் “ சாகாதவனே சன்மார்க்ki வெங்கடேஷ் “ S

இதுவும் அதுவும் ஒன்று தான் ”

இதுவும் அதுவும் ஒன்று தான் ” சரவணப்பொய்கையும் குளமும் முருகன் பிறந்த சரவணப்பொய்கையும் வள்ளல் பெருமான் தன் அகவலில் எனது " குளத்தினும் நிரம்பிய சிவபதியே " குளமும் ஒன்றும் தான் ரெண்டும் சிரசில் உள்ள சுழுமுனை உச்சிக்குழி தான் குறிப்பிடுது ஞானிகள் கருத்தில் வேறுபாடு இருக்காது
வெங்கடேஷ் See less

மனம் அடங்குவது எவ்வாறு அறிவது ??

மனம் அடங்குவது எவ்வாறு அறிவது ?? முன்னர் எந்த விஷயத்தில் மனம் சஞ்சலம் அடைந்ததோ ?? அந்தந்த விஷயங்களில் மனம் நிச்சலனலில்லாமல் ஆடாமல் அசையாமல் தைர்யமாக நிற்கிறதோ ?? எதிர் கொள்கிறதோ ? அப்போதே தெரிந்து கொள்ளலாம் மனம் அடங்குகிறது என மனம் நம் வசமாகிறது

வெங்கடேஷ் See

குருவின் அவசியம் “

குருவின் அவசியம் “ உண்மைச் சம்பவம் சென்ற ஞாயிறன்று அபார்ட்மெண்ட்டில் பேச்சு ஆன்மீகம் – குரு – ஜக்கி என ஒரு சுற்று அப்போது ஒருவர் பெரியவர் குரு என்பவர் இடைத்தரகர் மாதிரி – அவர் எதுக்கு ?? என்றார் நான் : – நேற்று உங்கள் மகன் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தாரே ?? எனக்கேட்டேன் அவர் : ஆமாம் – கார் ட்ரைவிங்கு ஸ்கூலில் வந்து கற்றுக்கொடுக்கிறார் நான் : ஏன் என்றேன் – அவராகவே கத்துக்கிட்டு ஓட்ட வேண்டியது தானே ? “ அவர் : எப்படி முடியும் ?? கத்துக்கொடுக்க ஆள் வேணும் என்றார் நான் : ட்ரைவிங்கு லைசென்ச் ஓட்டுனர் உரிமம் எப்படி எடுப்பீர்கள் ?? அவர் : ஒரு இடைத்தரகர் மூலம் தான் நான் : ஏன் RTO மூலம் நீங்களாகவே எடுக்க வேண்டியது தானே ?? அவர் : புரோக்கர்க்கு தான் என்ன வேணும் ?? எப்படி செய்வது ? யாரைப்பார்ப்பது என தெரியும் எவ்ளோ கட்டணம் நான் : உங்கள் மகன் எந்த காலேஜ் ?? அவர் : PSG Engg நான் : மேற்படிப்பு எங்கு ?? எப்படி ?? அவர் : அமெரிக்கா – அதுக்கு அவர் கல்லூரி பேராசிரியர்கள் உதவுகிறார்கள் நான் : ஏன் அவனாகவே முயன்று தெரிந்து கொண்டு போகலாம் அல்லவா ?? அவர் : எப்படி முடியும் ??? அவர்க்கு தான் இவன் படிப்புக்கு எங்கே எந்த கல்லூரி சரிப்பட்டு வரும் – நல்ல மதிப்பு – வேலை வாய்ப்பு தெரியும் நான் : இதுக்கெல்லாம் இடைத்தரகர் புரோக்கர் – விஷயம் தெரிந்தவர் வேணும் – ஆனால் கடவுள் எங்கே எப்படி இருக்கார் னு தெரியாது ? எப்படி அடைவது ? என்ன செய்தால் அடையலாம் னு தெரியாது ?? அதை சொல்லிக்கொடுக்கிறவர் – அவர் இடைத்தரகர் புரோக்கர் – அவர் வேணாமா ?? னல்ல வேடிக்கை நகைச்சுவை இலையா ?? அவர்க்கு கோவம் வந்து போய்விட்டார் இது தான் நிதர்சனம் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 81

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 81
பாடி இந்த இடம் சென்னையில் இருக்கு அம்பத்தூர் அருகே பாடி = ஆயுத பாசறை கிடங்கு இது பிரணவ உச்சி குறிப்பதாகும் அங்கு தான் எல்லா தெய்வீக ஆயுதங்களை சூக்கும ஆயுதங்களை சாதகன் எடுத்து செல்கிறான் வெங்கடேஷ்[[ See less

ஆறாம் திருமுறை – ஞானசரியை – 23

ஆறாம் திருமுறை – ஞானசரியை – 23 பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. பொருள் : உலகீர் இந்த உலக போகம் எலாம் ஒரு பொருட்டே அல்ல – இது பொய் ஆகும் – தெளிவிலாத இருளில் இருப்போரே – இந்த உலகில் மரணமடைவது அழகலவே சுத்த சிவ சன்மார்க்கத்தில் அணைந்து மரணமிலாப்பெரு வாழ்வு வாழலாம் – வாருங்கள் இங்கே சிற்சபை அமுதம் உண்டு களித்து அருள் திறத்தால் எண்ணியது எல்லாம் ஈடேற வாழலாம் – வாருங்கள் என அழைக்கும் வள்ளல் பெருமான் உங்களை சேர்ப்பதுக்கு இருப்பாரே அன்றி - தடுப்பவர் யாருமிலையே
வெங்கடேஷ் See less
ஆறாம் திருமுறை – ஞானசரியை – 23 பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. பொருள் : உலகீர் இந்த உலக போகம் எலாம் ஒரு பொருட்டே அல்ல – இது பொய் ஆகும் – தெளிவிலாத இருளில் இருப்போரே – இந்த உலகில் மரணமடைவது அழகலவே சுத்த சிவ சன்மார்க்கத்தில் அணைந்து மரணமிலாப்பெரு வாழ்வு வாழலாம் – வாருங்கள் இங்கே சிற்சபை அமுதம் உண்டு களித்து அருள் திறத்தால் எண்ணியது எல்லாம் ஈடேற வாழலாம் – வாருங்கள் என அழைக்கும் வள்ளல் பெருமான் உங்களை சேர்ப்பதுக்கு இருப்பாரே அன்றி - தடுப்பவர் யாருமிலையே
வெங்கடேஷ் See less

அயோத்தியும் திருப்போரூரும்

அயோத்தியும் திருப்போரூரும் புறத்தே முதலாவது ராமனின் ஜென்ம பூமி போரிலா அமைதியான இடம் மௌனம் விளங்கு இடம் உபசாந்த மௌனம் ஆகும் ரெண்டாவது முருகனின் வாசஸ்தலம் அது ரணபூமி போர்க்களம் ஞான அஞ்ஞானத் தத்துவங்களுக்கிடையே சதா நடக்கும் போர்க்களம் இது கண்ணனின் ஸ்தலம் கூட அதனால் இது குருஷேத்ரமும் கூட முன்னது அகத்திலே ஏகாதசம் எனில் பின்னது துவாதசாந்த வெளி ஆகும் வெங்கடேஷ்

லிங்கமும் சரவணபவ அறுகோணமும் “

லிங்கமும் சரவணபவ அறுகோணமும் “ எப்படி லிங்கம் ஆண் பெண் சேர்க்கை குறிக்க வருதோ ?? நாத விந்து கலவை குறிக்க வருதோ ?? அவ்வாறே சரவணபவ அறுகோணமும் தான் ரெண்டுமே ஒன்று தான் வெங்கடேஷ்

குருஷேத்ரம் சன்மார்க்க விளக்கம்

குருஷேத்ரம் சன்மார்க்க விளக்கம் குருஷேத்ரம் = குரு ஆகிய ஆன்மா பிரம்மம் விளங்கு ஸ்தலம் இடம் இந்த இடத்தில் தான் பாரதப்போர் நடந்ததாக கூறுவர் அதாவது குரு இடத்தை ஆட்சி செய்ய , கைப்பற்ற நடந்த போர் தான் அது ஞான தத்துவங்களுக்கும் அஞ்ஞான தத்துவங்களுக்கும் நடக்கும் சண்டை தான் இது தான் எல்லா இதிகாச புராணத்துக்கும் அடிப்படை விஷயம் வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below By the time we realise Our father was right Our children already there To say we are wrong By the time we realise Our ancestral foods n traditional medicines right We already caught in chronic diseases

Badhey Venkatesh 🤯💡👏 See less

வாசி உருவாக்கும் தந்திரம் “

வாசி உருவாக்கும் தந்திரம் “ தவத்தில் சாம்பவி ஆற்றில் கேசரி தானாக ஆகும் பட்சத்தில் வாசி தானாக உருவாகும் கீழ் இருக்கும் படம் விளக்கும் ஊத அவசியமிலை முருக அறுகோணம் அனுமன் அளிக்கும் எப்படி வித்தியாசமாக ?? வெங்கடேஷ் See

Thursday, May 21, 2026

“ பிரகஸ்பதி குரு – ஞான குரு “

“ பிரகஸ்பதி குரு – ஞான குரு “ இருவர் ஆடை நோக்கில் நவகிரக குரு மஞ்சள் மட்டும் ஆனால் ஞான ஆதி குருவுக்கு மஞ்சளுடன் வெண்மை கலந்தது ஆனால் உலகம் இருவருக்கும் ஒரே ஆடை தான் அணிவிப்பர் பாவம் அதுக்கு வித்தியாசம் தெரியாது வெங்கடேஷ்

அருள் அறிவும் அருள் வடிவும்

அருள் அறிவும் அருள் வடிவும் ரெண்டும் வெவ்வேறு ஆம் அருள் அறிவால் நாம் ஆன்ம அறிவு பெறுவோம் ஆன்ம தேகமும் பெற்றுக்கொள்வோம் அருள் அறிவிக்க எல்லா ரகசியமும் தெரிந்து கொள்வோம் அதே அருள் அறிவால் தான் அருள் வடிவாம் ஒளி தேகம் அடையணும் அது அழியாத் தனி வடிவு அகவல் வரிகள் அருள் பெருமை பறை சாற்றும் ஆக அருள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வெங்கடேஷ்

பொன்னார் மேனியன் – சன்மார்க்க விளக்கம் “

பொன்னார் மேனியன் – சன்மார்க்க விளக்கம் “ இது சிவத்தின் பல பெயர்களில் ஒன்றாகும் அதாவது சுத்த சிவத்தின் தேகம் பொன் போல் உளதாம் அதனால் இந்தப் பேர் இதன் அர்த்தம் - ?? இது பொன்னம்பலவெளியின் உருவகம் தான் இந்த பேர் – பொன்னம்பலத்தில் சிவம் நடம் இடும் – அணு அசையும் போது அவர் தேகம் பொன் போல் ஒளி விடுவதால் இந்தப்பேர் உருவமிலா சிவத்துக்கு உருவகம் செய்து உள்ளனர் நம் முன்னோர் வெங்கடேஷ்

கண்மணிப்பெருமை ”

கண்மணிப்பெருமை ” கண்மணி வலிமையானது ஒப்பற்றது அதனால் இது கொண்டு ஆற்றும் தவமும் வலிமையானதும் ஒப்பற்றதும் ஆகும் யாரே அறிவார் கண்மணி பெருமையை ?? திருவடி பெருமை அறிந்தாரே
கண்மணி பெருமை அறிவார்

வெங்கடேஷ்

Lock and Dock

Lock and Dock Tom Dick and Harry Know how to Liplock But Esoteric people Know how to Dock Their Psyche with Universal Consciousness and Cosmic Consciousness And remain Still
BG Venkatesh See less

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் Stillness is the Greatest Surrender – Saint Ramana ஆடாதீர் அசையாதீர் –வள்ளல் பெருமான் அசைவு ஒழித்து நிற்றல் தான் உண்மையான சரணாகதி – அது தான் தவம் சாதனம் – அது தான் மேலேற - அனுபவத்தில் மேலேற வழி காட்டும் ஞானிகள் கருத்து வேறுபாடிருக்கவே இருக்காது – ஒத்துமை தான் இருக்கும் வெங்கடேஷ் See less

அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26

அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26 உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. பொருள் : நான் உங்களுக்கு நல்ல தேவையானதை சொல்கிறேன் – ஏனெனில் எல்லவரும் ஆன்மா தான் என்ற ஒருமை உணர்வினால் அன்றி வேறிலை கல்வி கற்றாரும் – கல்லாதாரும் மாண்டு போகவே காண்கிறோம் அந்தக்கரணம் – மனம் கலங்கடிக்கும் மரணம் அடைய உங்களுக்கு சம்மதமா ?? எனக்கு இதில் சற்றும் இசைவில்லை உங்கள் மனம் என்ன மனமோ ?? கல்மனமோ ? வல்மனமோ ?? என நானறியேன் சன்மார்க்கம் அணைமின் – இது இறப்பொழிக்கும் நன்மார்க்கம் ஆம் என அழைக்கும் வள்ளல் பெருமான் வெங்கடேஷ் See less

On a Pragmatic Front

On a Pragmatic Front The day We realize that Things “ Fallen Apart “ so far Beginning to “ Falling in Line “ Is the day That Atman Soul has taken charge of Our Life Then We realise that Hence forth Our life once “ Bed Full of thorns Turning to Bed Full of Roses A Big Miracle Indeed That’s the Power of Atman Soul BG Venkatesh Se

ஆன்மா பெருமை "

ஆன்மா பெருமை " முன்பு சிரமப்பட்டதெலாம் இப்போது எளிதாக போகிறதென்றால் நேரம் மேலாண்மை உணர்ச்சி மேலாண்மை உடல் மனம் மேலாண்மை விழிப்புணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ஆன்மா நம் வாழ்வை தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டது என பொருள் நம் வாழ்க்கை முட்படுக்கையாக இருந்தது இப்போது ரோஜாப்படுக்கை ஆகிவிடும் இது உண்மை ை வெங்கடேஷ்

தெளிவு 460

தெளிவு 460 விந்து ஜெயம் காமம் உண்டாகாமல் தடுக்கும் வாசி நடத்துவதால் காலத்துடன் ஈடுபடாமல் இருக்கச்செயும் வழி ஆகும் உடல் முதுமை அடையாமல் காக்கும் வழியும் ஆம் வெங்கடேஷ்

அருட்பா 6ம் திருமுறை – ஞான சரியை 27

அருட்பா 6ம் திருமுறை – ஞான சரியை 27 சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே. பொருள் : சன்மார்க்கத்தாரின் தம் தலைவனாகிய அபெஜோதியை – எனைத்தாங்குகின்ற பெரும் தலைவனை – தனித்திருக்கும் சபையின் தலைவனை – பொன்னம்பல சிற்றம்பல தலைவனை - நல்ல மார்க்கத்தில் நடத்திய தெய்வத்தை –எனக்கு அருளமுதம் அளித்த தலைவனை – அறிவில் சிறியதாய் விளன்கும் மார்க்கத்தார் அறிய முடியாத புண்ணிய்னை ஞானப்பொருளாகி – உண்மைப்பொருளாகி - முழுமைப் பொருளாகி – அதில் பொருந்தி இருக்கும் மருந்தை - மற்ற மார்க்கம் விடுத்து சிற்றம்பல வெளியில் நடம் செய் அபெஜோதியை அடைவீர் உலகீர் தெளிவு அடையும் பொருட்டே வெங்கடேஷ் See less

பாவனா யோகம் 2

பாவனா யோகம் 2 வள்ளல் இந்த முறை பின் பற்றி இருக்கார் இது அவர் அருளிய அருட்பாவில் பிரமாணம் இருக்கு இதன் அர்த்தம் யாதெனில் அதாவது அவர் தவம் அவர்க்கு முன்பாகவே இந்த அனுபவம் அந்த அனுபவம் வரப்போவுது என முங்கூட்டியே கூற – அந்த அனுபவங்கள் வந்துவிட்டதாகவே அவர் எண்ணி கற்பனையில் இருக்க – அது உண்மையிலே சித்தித்துவிட்டது அவர்க்கு அதாவது அவரை காந்தம் போல் மேலிழுத்துக்கொண்டு இருந்தது அவர் தவம் அவரும் மேலே மேலே போய்க்கொண்டே இருந்தார் என்பது உண்மை வெங்கடேஷ் See less

வெள்ளை மாளிகை”

வெள்ளை மாளிகை” புறத்திலே இருக்கும் வெள்ளை மாளிகை நாட்டுக்கு போவதே எல்லா மென்பொறியாளர் – மேற்படிப்புக் கல்வியாளர் கனவு ஆனால் ஆன்ம சாதகரோ தன் அகத்தில் விளங்கும் “ ஏழு நிலை மாடம் ஆம் வெள்ளை மாளிகை “ ஏறுவதே பெரும் கனவு லட்சியம் ஆகக்கொண்டு உள்ளார் புறத்தை விட அகம் மிக சிறந்தது வெங்கடேஷ் See less

தெளிவு 462

தெளிவு 462 நம் பௌதீக சுவாசம் என்பது நம் உடல் UPS ல் ஓடுவதுக்கு சமம் ஆம்
அதே பிரபஞ்ச சக்தியால் வாசியால் உடல் இயங்குவது என்பது மின் வாரியம் கொடுக்கும் மின்சக்தியால் ஓடுவதுக்கு சமம் ஆம் என்ன சரியா ?? வெங்கடேஷ்

சிங்கா – சிங்கி 51

சிங்கா – சிங்கி 51 நீண்ட நாட்களுக்குப்பின் சிங்கா சிங்கி பதிவு
சிங்கா : எரியற கொள்ளியில் நெய் ஊத்தறதுக்கு நல்ல உதாரணம் சொல் சிங்கி சிங்கி : உலகமே குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இருக்குன்னு நம்பி மோசம் போகும் போது – அதுக்கு ஆமாம் சாமி போட்ற மாதிரி – எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் குரு விசிறி சாமியார் தன் முதுகு அடியில் தொட்டு – அப்டியே மேலே ஏத்தி வந்துட்டாரு – இது அவர் எனக்கு குடுத்த உயர் தீக்ஷை னு சொன்னது தான் சிங்கா சிங்கா : உன் மண்டை தப்பித்தது வெங்கடேஷ் See less

திருவடி பயிற்சி

இன்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் முதல் இரு கட்டம் ஜெர்மனி நாடு வாழ் இந்தியர் சிறிது முக நூல் தொடர்பு மட்டுமே. வெங்கடேஷ் See less

Wednesday, May 20, 2026

பாலத்துறையும் ராமர் சேதுவும் “

பாலத்துறையும் ராமர் சேதுவும் “ ரெண்டும் சுழி நாடி குறிக்க வருது துறை ஆகிய உச்சிக்கு செல்ல பாலம் ஆகிய நாடி – சுழி நாடி தான் பாதை வழி ராமர் இலங்கைக்கு சென்ற மாதிரி இதுவும் அதுவும் ஒன்றே வெங்கடேஷ்

உடலும் உயிரும் உலகமும்

உடலும் உயிரும் உலகமும் உடல் உயிரை ஆட்சி செய்வது ஐந்து தொழில் செய் தலைவர் எனில் அயன் மால் ருத்திரன் உள்ளிட்டோர் தத்துவங்கள் மூலம் ஆட்சி இந்த உலகை ஆட்சி செய்வது பெரும் பணக்காரர்கள் Rothschildes Rockefellers Vanguards Black Rocks திரைமறைவு ஆட்சி வெங்கடேஷ்

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி கார்கொண்ட மேனிய௰னுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை யார்கொண்டுரைசெய்வா ரம்புவியிற் --சீர்கொண் டருணகிரி மேவுகின்ற வையாநீ வேண்டிக் கருணைபுரி யாதிருந்தக் கால் விளக்கம் : அருணாச்சலா நீ கருணை புரிந்து அருளாமல் இருந்தக்கால் – மாலும் அயனும் காணா நின் பெருமையை ஆர் தான் உலகிற்கு உரைப்பார் ?? உன் அருள் கருணை தான் எல்லாவற்றிற்குமே முதலும் அடிப்படையும் ஆம் வெங்கடேஷ்

சத்குருவும் பொய்க்குருவும்

சத்குருவும் பொய்க்குருவும் சத்குரு தவகுரு தேச விடுதலைக்கு சிறைக்கு சென்று வந்த தேச பக்தர்க்கு சமம் அதில் உண்மை தேச பக்தி நேர்மை அர்ப்பணிப்பு அடக்கம் அவகுருவோ கஞ்சா கள்ளக்கடத்தல் திருட்டு கற்பழிப்பு குற்றத்துக்கு சிறைக்கு சென்று வந்த சமூக விரோதியர்க்கு சமம் இருவருமே சிறைக்கு சென்று வந்தவர் தான் எப்படி வித்தியாசம் ?? வெங்கடேஷ்

தவம் பெருமை

தவம் பெருமை அறத்தால் வருவதே இன்பம் அதே போல் தவத்தால் வருவதே தயவு ஒருமை சித்தி அனுபவம் வினைக்கழிவு அனுபவம் சடங்கால் அன்னதானத்தால் அல்ல வெங்கடேஷ்

செஞ்சுடர்ப்பூவும் – செந்தூரமும்

“ செஞ்சுடர்ப்பூவும் – செந்தூரமும் பிரசாத மாலை " 1. திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் “ செஞ்சுடர்ப்பூ “ அளிக்கத் தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே 2 . அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்” செஞ் சுடர்ப்பூவைப் “ பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே இங்கு குறிக்கப்படும் செஞ்சுடர்ப்பூவும் பெண்கள் அணியும் செந்தூரமும் ஒரே பொருள் இடம் குறிப்பது ஆம் அது ஆன்மா விளங்கு நெற்றி நடு அனுபவம் செந்தூர் விளங்கு செந்தில் ஆண்டவர் ஆன்மா பிரம்மம் அப்ப எப்படி சமய மதம் பொய்யாகும் ?? வெங்கடேஷ்

ஆலங்கட்டி மழை - தத்துவ விளக்கம்

ஆலங்கட்டி மழை - தத்துவ விளக்கம் இது ஒரு வகை மழை மழையும் அமுதமும் ஒன்று என கூறியுள்ளேன் இது நிரூபிக்கும் பதிவு ஆலம் எனில் விஷம் அது சுழி உச்சி குறிப்பது ஆம் அங்கிருந்து ஆன்ம சாதகன் உடலில் வீழும் அமுத தாரைகள் தான் ஆலங்கட்டி மழை என உலகம் அழைக்குது ஆலங்கட்டி – அமுதம் ஆம் வெங்கடேஷ்

ஆரத்தழுவல் தத்துவ விளக்கம்

ஆரத்தழுவல் தத்துவ விளக்கம் ஆரம் எனில் மாலை மாலை மாதிரியாக நம் உடலை மற்றொரு உடல் சுற்றி இருத்தல் சாதாரண உலக வாழ்வில் ஆனால் ஆன்ம சாதனுக்கு அருள் ஆன்மா அபெஜோதி உடலை சுற்றி தழுவி இருத்தல் அவ்வளவு எளிதல்ல இது
வெங்கடேஷ்

மதுக்கரையும் கும்பக்கரையும் “

மதுக்கரையும் கும்பக்கரையும் “ இதுவும் அதுவும் ஒன்றே “ கும்பக்கரை – நீர் வீழ்ச்சி “ இந்த பிரபலமான இடம் தேனி ஆண்டிப்பட்டி அருகே இருக்கு தத்துவ விளக்கம் : ரேசகம் பூரகம் கும்பகம் முதல் ரெண்டு ஆற்றும் வரையில் நாம் பிறப்பிறப்பு எனும் கடல் அலை சுழற்சியில் ஆனால் கும்பகம் எனும் நிலை அடைந்துவிட்டாலோ கடல் தாண்டி கரை சேர்ந்ததாக பொருள் அதனால் கும்பக்கரை என்ற பேர் சுழி உச்சி தான் கரை அங்கு அமுதம் சுரப்பதால் அதை நீர் வீழ்ச்சியாக காட்டியிருக்கிறார் நம் முன்னோர் மதுக்கரை : அதே மாதிரி மது ஆகிய அமுதம் சுரக்கும் இடமாகிய உச்சி தான் மதுக்கரை ஆனது இது கோவையில் இருக்கு ரெண்டும் ஒரே இடம் குறிப்பது
வெங்கடேஷ்

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி “தாயினுநல்‌ லாரினிய தாதையினுந்‌ தானல்லார்‌ ஆயிலரு ணேச்‌ ரடியேற்கு--மாயவுடல்‌ கோகப்‌ பொருத்துவரோ நூறு வயதிருந்தும்‌ சாகப்‌ பொருத்துவரோ சற்று” விளக்கம் : தாயை விடவும் தனைதைவிடவும் நல்லவர் ஆகிய அருணாச்சலர் அடியவர் வினைகள் ஞான விரோத தத்துவங்கள் உடை மாய உடலத்துடன் கூட ஒப்புவாரோ ?? நூறு வயது வாழ்ந்து சாக விரும்புவாரோ ?? இந்த மாயப்பிறப்பு தரும் உடல் விரும்பார் வெங்கடேஷ் Se

குடுமிப்பிடி “

குடுமிப்பிடி “ ஐயர் வைத்திருப்பது பின் மண்டையில் குடுமி இந்த இடத்தில் தான் பெண்களும் பூ வைத்துக்கொள்வர் இதன் சூக்குமம் ?? இதை - இந்த வழி உறுதியாகப் பிடித்தால் தான் நெற்றிக்கண் சேர முடியும் வெங்கடேஷ்

Tuesday, May 19, 2026

அருட்பா - 6ம் திருமுறை - அக்கச்சி " 1

அருட்பா - 6ம் திருமுறை - அக்கச்சி " 1 வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி மயில்குயில் ஆச்சுத டி. பொருள் : அதாவது சுழுமுனை வாசலில் இருக்கும் 5 இந்திரிய ஒளிகள் + சிலபல ஒளிகள் தான் மயில் இவைகள் உச்சிக்கு வந்த போது – அது நாத ஸ்தானம் ஆகையால் – அந்த மயில் குயில் ஆகிவிட்டது என தன் ஆன்ம சுழுமுனை அனுபவம் இங்கே விளக்குகிறார் வள்ளல் பெருமான் இதைத் தான் மயில் குயில் ஆச்சு எங்கிறார் 2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி வள்ளலைக் கண்டேன டி. பொருள் : மனதின் ஆட்டம் அசைவு எல்லாம் ஒழித்து நின்றேன் அதனால் பரவெளியில் ஆன்மாவின் ஆட்டம் அசைவு கண்டேன் வெங்கடேஷ் See less

அக்கச்சி - 2

அக்கச்சி - 2 சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன டி - அக்கச்சி சோதியைக் கண்டேன டி. பொருள் : சாதி சமயம் எனும் சச்சரவு விட்டுவிட்டேன் – ஆன்ம ஜோதியை கண்டேன் நான் அருட்ஜோதியாகிய ஆன்ம ஜோதி கண்டேன் 4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி ஐயரைக் கண்டேன டி பொருள் : இந்த பொய் ஆகிய உலக வாழ்க்கையை ஒழித்து – நான் பரவெளியில் நடம் செயும் ஆன்ம ஜோதியைக் கண்டேன் வெங்கடேஷ் Se

பாஞ்சாலி “ – சன்மார்க்க விளக்கம்

பாஞ்சாலி “ – சன்மார்க்க விளக்கம் பாஞ்சாலி = பாண்டவர் மனைவி இந்த பேரின் உண்மை பொருள் : 5 இந்திரியங்களுடன் கூடி சதா அசையும் சக்தி ஆகிய ஜீவன் குறிப்பது இந்தப்பேர் அதான் அவளுக்கு 5 புருஷன்கள் உலகில் யார்க்காவது எந்தப்பெண்ணுக்காவது ஒரே சமயத்தில் 5 புரூஷன்கள் இருப்பார்களா ?? வெங்கடேஷ் See less

தெளிவு 465

தெளிவு 465 எப்போது விந்து பரவிந்துவாக மாற்றம் அடையுதோ ?? அப்போது தான் இந்த அனுபவத்துக்குப்பின் தான் “ நமக்குள் தயவு முழுமை “ அடையும் வெங்கடேஷ் See less

தந்தையும் மகனும்

தந்தையும் மகனும் தனயன் வழி விட்ட பின் தான் தந்தையை காண முடியும் அதாவது சுப்ரமணியன் வழிவிட்ட பின் தான் சுத்த சிவம் தரிசிக்க முடியும் வெங்கடேஷ் See less

ஞான சரியை - 28

ஞான சரியை - 28 சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே பொருள் : உலக வாசனை இல்லாதவர் – உலக னோக்காக இல்லாதவர் மனதில் உண்மையாய் அமர்ந்து அருளும் மேலான உண்மை ஆசிரியரை – சுத்த சிவத்தை எவராலும் காண முடியாத என்றும் விளங்கும் வான் பொருளை மேலான பரம்பொருளை எல்லா னிலைகளிலும் கலந்து தானாகி விளன்குகின்ற உண்மையை சத்தியத்தை எனக்கு எல்லாம் செயும் வல்லபத்தை அளித்த தனிப்பதியை உறவு என சென்றடைந்து மக்களே மனமெல்லாம் கனிந்து உருகி உள்ளபடி னினைந்து புகழ்ந்து வணங்கவும் எல்லாம் இனிதாய் ஆகும் வெங்கடேஷ் முற்றிற்று See less

தெளிவு

தெளிவு உலகில் மச்சுவீட்டில் வாழ்ந்தால் ஊர் உலகம் நம்மை போற்றும் வணங்கும் தலையில் வைத்து கொண்டாடும் இதையே தன் சிரசில் இருக்கும் மச்சுவீட்டில் ஞானி வாழ்ந்தாலும் உலகம் அவர்க்கு இதை செய்யும் ரெண்டும் ஒன்றாமோ ?? வெங்கடேஷ் See

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1 1 ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1 பொருள் : அசைவை ஒழித்து 5 புலங்களும் தத்தம் செயல் இழந்து – இறந்த நிலையில் நான் தவம் ஆகிய தூங்காத தூக்கம் ஆற்றி சுகத்தில் திளைப்பது எப்போது ?? அகங்காரம் = அசைவு 2 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2 பொருள் : தவம் செய்து அதன் மூலம் சிவத்தின் கருணை வெள்ளம் என் உள்ளத்தில் தேங்கி நிற்பது எப்போது ?? தவம் = சிவயோக நித்ரை வெங்கடேஷ் See

சத்திய ஞான சபையும் - சத்திய ஞானக்கோட்டமும்

சத்திய ஞான சபையும் - சத்திய ஞானக்கோட்டமும் வள்ளல் பெருமான் பின் பற்றி வழி ஒற்றி பின் வருபவைகள் கட்டப்பட்டுள்ளன 1 சத்திய ஞானக்கோட்டம் – திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா 2 அறிவுத்திருக்கோயில் – ஆழியார் – வேதாத்ரி மகரிஷி இவரும் கூட அவர் மாதிரி ஆய்வு செய்து சில அனுபவம் பெற்றிருப்பர் எனினும் சத்திய ஞான சபை என்பது அனுபவ வெளிப்பாடு ஆம் பின்னவர் ஆய்வின் – கல்வியின் வெளிப்பாடே அன்றி அனுபவம் இல்லை ஆன்ம அனுபவம் இல்லை – ரெண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது வெங்கடேஷ்

சும்மா இருத்தல் “

சும்மா இருத்தல் “ சாமானியன் உடல் மட்டும் சும்மா இருக்கும் மனம் சதா உழன்று கொண்டே இருக்கும் அதனால் நினைத்தது நடப்பதில்லை ஆனால் ஞானியர்க்கோ உடல் மனம் ரெண்டும் சும்மா இருக்கும் ஆடாமல் அசையாமல் னிற்கும் அது தான் எல்லாம் ஆற்றும் வல்லமை தருது ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ?? வெங்கடேஷ்

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3 1 சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்? பொருள் : இந்திரியங்கள் தத்தம் செயல் இழ்ந்து – வாய் பேசாது – காது கேளாது – அதாவது காணாக்கண் கேளாச்செவி அனுபவம் சித்தித்து –சதா உன் நினைவாகவே – உன் ஒரே நினைவாகவே இருப்பது எப்போது ?? பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? 8 பொருள் : ஓரிடத்தில் நிலைத்து வாழாமல் பேய் போல் அலைந்து – பிணம் போல் கிடந்து – ஆடாமல் ஆசையாமல் பிணம் போல் கிடந்து – எல்லா பெண்களையும் தாய் போல் பாவித்து என் தவம் முடிப்பது எப்போது?? வெங்கடேஷ் See les

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி - 4

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி - 4 மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5 பொருள் : மாயாலோகமாகிய இந்த உலக வாழ்வு விடுத்து மறுத்து ஆன்மா வீற்றிருக்கும் கோட்டை 1008 இதழ் கமலத்தை கைவரப் பெறுவது எப்போது ?? காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6 பொருள் : ஆன்மா ஸ்தலம் நம் கை வரப்பெற இறை அருள் நான் கைவரப்பெறப் போவது எப்போது ?? வெங்கடேஷ் See

தெளிவு 468

தெளிவு 468 மனம் வழி பயணம் மரணப்பாதைக்குத் தான் ஆன்மா வழிப் பயணம் ஆனந்த வாழ்வுக்கு சத்தியமான நித்ய வாழ்வுக்கு தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம் வெங்கடேஷ் See less

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் நம் திருவாசகத்தில் பிரணவத்தில் மனிதர்க்கு அவர் வாழ்வுக்கு தேவையான செல்வம் எல்லாம் இறை வைத்துள்ளான் என்கிறது இதைத்தான் இஸ்லாம் – ஞானிகள் அவர் நூல் Tales from Arabian Nights ல் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் எம் ஜி ஆர் – ஒரு குகை திறந்து உள்ளே செல்ல அங்கே ஏகப்பட்ட செல்வம் இருக்க அதை அவர் எடுத்து வந்து செல்வச்செழிப்புடன் வாழ்வார் ரெண்டும் கூற வருவது ஒன்று தான் ஞானிகள் கருத்து ஒருமித்துத்தான் போவார்களே அன்றி வேற்றுமை இருக்காது வெங்கடேஷ்

திருவாசகம் – சிறப்பு பெருமை சு மாணிக்க யோகீசுவரர் உரை

திருவாசகம் – சிறப்பு பெருமை இந்த நூல் பெருமை பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை – அனுபவத்துக்கும் வரவிலை ஆனால் இந்த நூல் செய்த அற்புதம் பற்றி சொல்லத்தான் இந்த பதிவு இந்த நூல் என் கையில் கிடைத்த ஆண்டு 1998 அப்போதிலிருந்து இதை நான் ஆய்வு செய்து வருகிறேன் இதிலிருந்து தான் திருவடி கண்மணி தவம் எடுத்து பயின்று வருகிறேன் சரியாக எப்படி செய்வது என பல ஆண்டுகளுக்குப்பின் தான் கண்டுபிடித்தேன் காலம் விரயமாயிற்று இன்னமும் ஆய்வு செய்துகொண்டு தான் இருக்கேன் இதிலிருந்து தான் முத்தேக சித்தி – பொற்சபை சிற்சபை இடங்கள் – திருவடி விளங்கும் இடம் எல்லாம் அறிந்து கொண்டேன் வினைகள் தீர்க்கும் வழி எல்லாம் இது தான் எனக்கு கற்றுக்கொடுத்தது இந்த அற்புத நூல் தான் என் சாதனத்தின் தவத்தின் அடிப்படை ஆகும் அதனால் தான் வள்ளல் பெருமானும் திருமந்திரம் திருவாசகம் ஓதச் சொன்னார் – ஆனால் நம்மவரோ – இதெல்லாம் சமயமத நூல் என ஒதுக்கி வைத்துவிட்டதால் – அன்னதானம் தான் சன்மார்க்கம் என பரிதாப நிலையில் உள்ளார் வெங்கடேஷ் See less

கோரம் – அகோரம் “

கோரம் – அகோரம் “ கோரம் = அசிங்கமானது - அருவருப்பானது – விரும்பத்தகாதது அகோரம் = இதன் எதிர்ப்பதம் – அழகானது வாசி எனும் உள்சுவாசம் – இதை ஞானிகள் அகோரம் என்பர் அதனால் இது அழகானது ஆம் இதை பயிலும் சாதகர்கள் அகோரிகள் எனில் அவர்களும் அழகானவர் தானே ? வெங்கடேஷ் See less

சிகை – சிகாமணி “ – சன்மார்க்க விளக்கம்

சிகை – சிகாமணி “ – சன்மார்க்க விளக்கம் சிகை = நம் தலைமுடி கேசம் குறிப்பதாம் இது நம் உடலின் உச்சியில் இருக்கு இது சி + கை ஆம் சி = ஒளி கை = சுழுமுனை அதாவது சுழுமுனை உச்சியில் இருக்கும் சுப்பிரமணி தான் சிகாமணி வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85 “ ஒத்தக்கால் மண்டபம் “ இது பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு அருகில் இருக்கு இதன் அர்த்தம் – இது சுழுமுனை நாடி குறிக்குது அது ஒற்றை கம்பம் ஆகையால் – அது தூண் மாதிரி சித்தரிக்கப்பட்டு – மண்டபம் ஆக்கி காட்டியிருக்கிறார் நம் மக்கள் ஆயிரங்கால் மண்டபம் மாதிரி ஒற்றைக்கால் மண்டபம் முன்னது மூளை குறிக்குது ெங்கடேஷ்

தெளிவு 469

தெளிவு 469 பாம்பின் கால் பாம்பறியும் ஒரு பெண் மனதை மற்றொரு பெண்ணே அறிய முடியும் அவளுக்கே ஆழம் தெரியும் அது போல் திருவடி பெருமையும் – கண்மணி பெருமையும் தவம் ஆற்றுவோரே அறிவர் மற்றெலார் ?? வெங்கடேஷ் S

தெளிவு 471

தெளிவு 471 “ நம்பினோர் கைவிடப்படார் “ இது கடவுளைக் குறிக்குது சினிமா ரசிகர்க்கு : கல்பனாவை நம்பினோர் கைவிடப்படார் இது ரசிப்பதுக்கு – வாழ்க்கைக்கு அல்ல உண்மை சன்மார்க்க அன்பர்க்கு : “ திருவடி நம்பினோர் கைவிடப்படார் “ வெங்கடேஷ் See less

கண்மணி பெருமை

கண்மணி பெருமை திருவடி தவத்தால் கண்மணி தவத்தால் – அதன் வல்லபத்தால் 1 மூன்று மலங்களும் சாதகன் கண் முன்னே நிறுத்தும் 2 36 தத்துவங்களும் நம் கண் முன்னே காட்டும் ( வள்ளல் பெருமான் – ஆறாறு காட்டிய அபெஜோதி ) வெங்கடேஷ் See less

நிதர்சனம்

நிதர்சனம் சினிமா கதாநாயகன் தன் நாயகியுடன் டூயட் பாடும் போது நினைத்துக்கொள்ளக்கூடும் : எத்தனை பேர் தொட்ட உடல் -- எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் எத்தனை பேர் இட்ட முத்தம் ?? - இது பட்டினத்தார் பாடல் ஆனாலும் இங்கே இது பொருந்தும் தானே ?? வெங்கடேஷ்

தெளிவு 475

தெளிவு 475 எப்படி கப்பல் நங்கூரம் பாய்ச்சிய பின் அசையாமல் நிற்குதோ ?? அப்படியே தான் தவத்தில் கண்களால் நங்கூரம் பாய்ச்சினால் மனம் அசைவை ஒழித்து நின்றுவிடும் செயல் இழந்துவிடும் பின் என்ன ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் தான் வெங்கடேஷ்

தெளிவு 476

தெளிவு 476 இரு பார்வைகள் கலந்தால் உலகத்தில் காதல் மலரும் இதே பார்வையுடன் மனம் கலந்தாலும் காதல் மலரும் – அது சன்மார்க்க காதல் ஆம் இது தான் சன்மார்க்க சாதனமும் ஆம் இது கொடுக்கும் அனுபவங்கள் அளப்பரிது எல்லா மேல் நிலை அனுபவத்துக்கும் அடிப்படை இதை புரிந்து ஆற்றுவார் ஒருவருமிலை வெங்கடேஷ் See less

தெளிவு 477

தெளிவு 477 அழுத பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும் அதே போல் தீவிரதரம் உள்ள சாதகர்க்குத் தான் அருள் இயற்கை தன்னை வெளிப்படுத்தும் மற்றெலார் ?? வெங்கடேஷ் See less

ிதர்சனம்

நிதர்சனம் பூக்கும் எல்லா மலர்களும் இறை திருப்பாதம் அடைவதில்லை கோவில் பூஜைக்கு சேர்வதில்லை போலும் பிறக்கும் எல்லா உயிர்களும் திருச்சிற்றம்பலம் நுழைவதுமில்லை இறை திருவடி சேர்வதில்லை கோடியில் ஒன்றுக்கு தான் அந்தப்பேறு வெங்கடேஷ்

பிடித்தவர்களும் விட்டவர்களும்

பிடித்தவர்களும் விட்டவர்களும் பஞ்ச இந்திரியங்களையும் ஐம்புலங்களையும் பிரணவத்தில் பிடித்துக்கட்டியவர்கள் உளர் இவர் ஞானியர் இதை தனித்தனியாக உலக வாழ்வில் அலையவிட்டவர் உளர் இவர் சாமானியர் இவர் பொறம்போக்கு ரெண்டும், இரு துருவம் தானே ?? வெங்கடேஷ் See less

பரமார்த்த குருவும் சீடனும்

பரமார்த்த குருவும் சீடனும் சீடன் : குருவே சிற்றம்பல வெளி அனுபவத்த விளக்கிச் சொல்லுங்கள் தயை கூர்ந்து குரு : அது டெட் ஈசி மகனே பார் – உன் முக நூல் கணக்கை பார்த்தால் என் கணக்கை பார்த்ததாக அர்த்தம் – அதே போல் என் கணக்கை பார்த்தால் உன் கணக்கை பார்த்ததாக பொருள் சீடன் : புரியவிலை குருவே குரு : அதாவது உன் சன்மார்க்க நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் – என் நண்பர்கள் உனக்கும் நண்பர்கள் ஆவர் – “ எங்கு நோக்கினாலும் ஒரே முகம் தான் – எல்லாம் ஒன்று –ஒன்றே “ – இது தான் சிற்றம்பல வெளி அனுபவம் இப்போது புரிந்ததா ?? சீடன் : நங்கு விளங்கிற்று குருவே – ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே குரு : அன்னதானம் செய்து – ஜீவகாருண்னியம் செய்து சன்மார்க்க பயிரை வளர்த்து வா மகனே தவம் எல்லாம் புறந்தள்ளி வை மகனே இது தான் சன்மார்க்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் வெங்கடேஷ் See less

தெளிவு 480

தெளிவு 480 வெள்ளை மனசுகாரனுக்கு அறிவு சுத்தமா இல்லை அழுக்கு மனசு காரனுக்கும் அறிவு சுத்தமா இல்லை வெங்கடேஷ்

வெட்ட வெளி சுத்த வெளி பெருமை

வெட்ட வெளி சுத்த வெளி பெருமை அழுக்கு உலக வாசனை ஒன்றுமிலாததால் சுத்தமானது ஆனால் அதே சமயத்தில் சுத்தமான பொருளால் அறிவால் நிரம்பியுள்ளது வெங்கடேஷ் See less

நெஞ்சக்கோட்டை

நெஞ்சக்கோட்டை “ காதலரும் சாதகரும் : நெஞ்சக்கோட்டை திறப்பாய் “ என ஏக்கத்துடன் பாடி வருகிறார் ஆனால் இருவர்க்கும் ஒரு ஒருமை உள்ளது இருவருமே கண்ணால் தான் நெஞ்சக்கோட்டை தட்டுகிறார் கண்ணால் தான் திறக்கிறார் அதனால் தான் உள்ளேயே செல்கிறார் இருவரும் ஒரே படகில் தான் பயணம் வெங்கடேஷ்

ஜீவனின் குணம் ??

ஜீவனின் குணம் ?? ஜீவன் நீர் மாதிரி பள்ளம் நோக்கி உலகம் – புலன் இன்பம் – விஷயம் நோக்கித்தான் பாயும் இதை பூஜை தூப புகை மாதிரி மேல் நோக்கி பரம் நோக்கி பாயச்செய்ய வேண்டும் வெங்கடேஷ் See less

மனம் – எத்தகையது ??

மனம் – எத்தகையது ?? மனம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையில் அதன் வெளியில் நாம் இயங்கும் வரையில் நம் வீடு உலகம் கல்வி செலவம் உறவு மனைவி மக்கள் சுற்றார் எல்லாம் தான் உலகம் இது உண்மை நிஜம் இது தான் பெரிது மிக பெரிது என நம்மை நம்ப வைக்கும் மன வெளி தாண்டி விட்டாலோ இதன் சாயம் வெளுத்துவிடும் மனம் தன் கட்டுப்பாடு இழந்துவிடும் எல்லாம் மனதின் மாயா ஜாலம் தான் வெங்கடேஷ் See less

இராமாயணமும் விழிப்புணர்வும்”

இராமாயணமும் விழிப்புணர்வும்” ராமன் தன் கோதண்டத்தின் மீது நாணேற்றும் ரகசியம் அறிந்துவிட்டால் விழிப்புணர்வின் ரகசியம் அம்பலமாகிவிடும் எப்படி சாத்தியப்படுத்துவது என்ற சாதனை அவிழ்ந்துவிடும் கண்மணி தவம் ஆற்றுவார் அறிவார் வெங்கடேஷ் See less

உரை நடை முரண் “

உரை நடை முரண் “ எல்லா சன்மார்க்க சங்கத்தாரும் உரை நடை நம்பி மோசம் போகின்றார் முக்யமாக : “ சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் இதன் விளக்கங்கள் உரை நடையில் இருப்பினும் – அது தவறாகவே இருக்கு ஆனால் எல்லாரும் அதை உண்மை என நம்பி அதையே பயன்படுத்துகிறார் வள்ளல் நிறைய விஷயம் மறைத்துவிட்டார் – அதில் சாவேபோ வும் அடங்கும் எனவே இதை நம்ப வேணாம் தக்க குரு மூலம் இதன் உண்மை அனுபவ விளக்கம் பெறவும் இல்லையெனில் தாங்களாகவே ஆய்வு செய்து கண்டுபிடிக்கவும் இது தான் சரியான வழி வெங்கடேஷ் See less

சந்தைப்படிப்பும் சொந்தப்படிப்பும் 3

சந்தைப்படிப்பும் சொந்தப்படிப்பும் 3 சந்தைப்படிப்பு – உலக ஆசிரியர் கற்றுத்தருவார் சொந்தப்படிப்பு – ஞானாசிரியர் கற்றுத்தருவார் முன்னவர் தமிழ்ப்பண்டிதர் பின்னவர் ஞான பண்டிதர் வெங்கடேஷ் See less

ஒற்றைப்பார்வை “

ஒற்றைப்பார்வை “ “ அவளும் நானும் “ அவள் தன் ஒற்றைப்பார்வையால் காதல் கனியை கையடக்கம் செய்கிறாள் அவள் காதலனை வீழ்த்திவிட்டாள் அவனும் வீழ்ந்துவிட்டான் இது புறம் ஆனால் நானும் என் இரு பார்வையை ஒற்றைப்பார்வையாக்கி பல ஆண்டுகள் தவம் செய்கிறேன் இன்னமும் ஆன்மா எனும் கனி விழவில்லை இது அகம் அவள் அவள் தான் நான் நான் தான் வெங்கடேஷ் See le

மெய்ஞ்ஞானப் புலம்பல் பத்திரகிரியார் பாடல்கள்

மெய்ஞ்ஞானப் புலம்பல் பத்திரகிரியார் பாடல்கள் எக்காலக்கண்ணி - 6 தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13 பொருள் : எல்லா உறவும் பொய் – மாயை – வினை மயக்கத்தால் வந்தது என அறிவால் தெளிந்து இருப்பது எப்போது ?? சிந்தை மயக்கம் ஒழிவது எப்போது ?? வெங்கடேஷ் See less

தெளிவு 485

தெளிவு 485 கொம்பன் நீ என்ன பெரிய கொம்பனா ?? எந்த கொம்பனாலும் முடியாது என்ற வாசகங்களைக் கேட்டிருப்போம் அப்படி என்ன இருக்கு இந்த ஒற்றை வார்த்தையில்?? கொம்பு = சுழுமுனை நாடி குறிக்குது யார் இந்த ஏற அரிதான கொம்பில் ஏறுகிறாரோ அவரே கொம்பன் இந்த கொம்பு உச்சியில் இருக்கும் தேன் மிகச்சுவையானது அது தான் கொம்புத்தேன் வெங்கடேஷ் See less

நகைச்சுவையும் வேடிக்கையும் “

நகைச்சுவையும் வேடிக்கையும் “ மனசு வெள்ளை ஆக இருக்க விரும்புகின்றோர் தலைமுடி வெள்ளை ஆனவுடன் அதுக்கு வர்ணம் பூசுவது ?? வெங்கடேஷ் See less

கண்மணி பெருமை - திருவடி பெருமை “

கண்மணி பெருமை - திருவடி பெருமை “ மனம் அற்றுப் போவதும் மனம் வெற்றாகிப் போவதும் கண்ணில் இருக்கும் ரகசியம் திருவடி தவத்தில் இருக்கும் தந்திரம் வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81 “ திருனீறு மலை இந்த இடம் கோவில் சென்னையில் பல்லாவரம் அருகே இருக்கும் பெருமாள் கோவில் நான் சிறு வயது பிள்ளையாக இருக்கும் போது சென்று வந்துள்ளேன் – பின் இந்த வருடம் 40 ஆண்டுக்கு பின் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது அங்கு முன்னர் ஒரு சிறு ஓடை இருக்கும் அங்கு குளிக்கலாம் – இப்போது காணவில்லை சென்னையில் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோர் செல்லும் கோவில் இந்த கோவில் என்ற அளவுக்கு மிகப்பிரசித்தி பெற்ற கோவில் மலை மீது அமைந்திருக்கும் பெருமாள் கோவில் அதாவது தருநீறு = அருள் பொடி குறிப்பது ஆம் மலையில் இருக்கும் சுழுமுனை உச்சியில் இருந்து அருள் வீசும் - இந்த அக அனுபவத்தை புறவிளக்கமாக சொல்ல வந்தது இந்த கோவில் அந்த உச்சியில் ஆன்மா விளங்குது என்பதுக்காக அங்கே பெருமாள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கார் வெங்கடேஷ்

தெளிவு 482

தெளிவு 482 கறந்த பால் முலை புகாது திறந்த நெற்றிக்கண் மூடாது வெங்கடேஷ் See less

சடங்கும் அனுபவமும் “

சடங்கும் அனுபவமும் “ ஆகாய கங்கை தவத்தால் கீழ் இறக்கி வினைகள் தீர்த்தக்கால் பிறவி ஒழியும் அது அனுபவம் – உண்மையும் கூட பகீரதன் மாதிரி ஆற்றுவது அரிதிலும் அரிது கோடியில் ஒருவர்க்கே சித்தி ஆனால் ஈமச்சடங்கில் அஸ்தியை எடுத்து போய் கங்கையில் கரைத்தால் அது சடங்கு இதில் பயனிலை மீண்டும் பிறப்பெடுப்பார் என்பது உண்மை உறுதி இது சடங்கின் இழிவு அனுபவம் அனுபவம் தான் சடங்கு அதனருகே செல்ல முடியாது ு வெங்கடேஷ்

ஈரோடு – பேர் சன்மார்க்க விளக்கம் “

ஈரோடு – பேர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர் கோவை அருகே இருக்கு விளக்கமாக : ஈரம் உடை ஓடு ( கபாலம் ) தான் ஈரோடு அதாவது கருணை மிகப்பெரிய அளவில் விளங்கு கருணைக்கடலாம் அபெஜோதி சிரசில் ஓட்டில் கபாலத்தில் வீற்றிருப்பதால் அதுக்கு ஊர் அமைத்து புறத்தே காட்டியிருக்கார் நம் முன்னோர் வெங்கடேஷ்

சிற்றின்பமும் அபானனும்

சிற்றின்பமும் அபானனும் சிற்றின்பத்தில் கட்டிலில் ஏன் ஒரு ஆண் மிக வேகமாக செயலாற்றுகின்றான் ?? எனில் அபானன் இயக்கத்தால் தான் அபானன் மிக வேகமாக செயல்படும் வாயு அது வெளியேற வேண்டும் கூட விந்துவையும் வெளியேற்றுது அதனால் வேகமாக ஈடுபடுகிறான் வெங்கடேஷ்

Monday, May 18, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 87

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 87 கம்பம் – பெரியகுளம்
இந்த ஊர்கள் மதுரை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கு கம்பம் = இது சுழுமுனை நாடி குறிக்க வந்த ஊர் பெரியகுளம் – உச்சியில் இருக்கும் நீர் நிலை ஆகிய சரவணப்பொய்கை இது மிகச்சிறியது ஆகையால் – பேரை எதிர்மறையாக பெரியகுளம் என வைத்துள்ளனர் – நல்ல சமயோசிதமாக எல்லா ஞான ரகசியத்தையும் புறத்திலே காட்டியிருக்கின்றார் நம் நல்ல முன்னோர் நாம் தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கவில்லை வெங்கடேஷ் S

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? எப்படி ஒரு துணிக்கு இரு பக்கங்களோ ஒன்று மேல் இருக்கும் பக்கம் பளபளப்பாக – பார்ப்பதுக்கு அழகாக இருக்கோ ?? கீழ் பக்கம் மங்கலாக இருக்கோ அவ்வாறே தான் நம் மனமும் அழகான பக்கத்தையே உலகுக்கு காட்டும்
அழுக்கு பக்கத்தை காட்டாது வெங்கடேஷ் See less

On a Pragmatic Front

On a Pragmatic Front “ As Relationships and connections cant be Forced Thrusted , So is that Experiences also cant be thrusted – It Should Manifest Happen on its Own BG Venkatesh

யா”தவர் பெயர் சன்மார்க்க விளக்கம்

யா”தவர் பெயர் சன்மார்க்க விளக்கம் யாதவர் கண்ணன் பிறந்த இடையர் குலம் இது சாதாரண பேர் அல்ல காரணப்பேர் ஆம் யார் “ ய” காரமாகிய 10 ம் வாசலை சுழுமுனையை நோக்கி தவம் செய்கின்றாரோ அவரே யாதவர் இந்த குலத்தில் பிறந்தவர் அல்லர் நிச்சயமாக பீகார் லல்லு யாதவர் அல்ல
வெங்கடேஷ் See less

நிதர்சனம்

நிதர்சனம் ஆன்மீக வியாபாரம் செயும் எல்லா சாமியாரும் சாமியாரிணியும் சொல்லும் மிகப்பிரபலமான வசனம் : “ MY RELIGION IS VERY SIMPLE – LOVE “ உண்மை என்னவெனில் அன்புக்கும் அவர்க்கும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ் See less

தெளீவு 483

தெளீவு 483 கண் மூடி தவம் செய்து அடைவது மோசம் கண் திறந்து செய்து அடைவது மோட்சம் வெங்கடேஷ் See less

As Above So Below

As Above So Below As is that Jesus May Fail - but Prayers Never So is that God May Lie - But My Visions Hunches Never BG Venkatesh See less

வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை ஏன் நிறுவினார் ஏற்பாடு செய்தார்??

வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை ஏன் நிறுவினார் ஏற்பாடு செய்தார்?? நிச்சயமாக அன்னதானம் மட்டும் செய்வதுக்காக அல்ல என்பது உண்மை அதாவது – சங்க அன்பர்கள் எல்லவரும் சாதனம் கற்றும் அதில் வரும் சந்தேகங்களை சத்விசாரம் மூலம் தீர்த்துக்கொள்ளவும் – சத்விசாரம் செய்யவும் – அன்பர்கள் தங்கள் அறிவில் வளரவும் – மேல் நிலை அனுபவங்கள் பற்றி தெரிந்துகொள்ளத் தான் சங்கத்தை ஏற்பாடு செய்தார் அதை வலியுறுத்தவும் செய்தார் ஆனால் இப்போது நடப்பது என்ன ?? எல்லாரும் கூட வேணும் அபெஜோதி மந்திரம் ஓத வேணும் அன்னதானம் இட வேணும் கலைய வேணும் அவ்வளவு தான் இதுக்காகவா சங்கம் ?? கேவலமா இருக்கு ?? வெங்கடேஷ் S

தெளிவு 484

தெளிவு 484 திருவடி இணக்கம் உள் முக பயணம் திருவடி சுணக்கம் பிணக்கம் உலக முக பயணம் வெங்கடேஷ் See less

நெற்றிக்கண் - பெருமை வல்லபம்"

நெற்றிக்கண் - பெருமை வல்லபம்" இந்த காலத்தில் எப்படி ஒரு பெண் தன் பிரசவத்தையே பார்க்கமுடியுதோ ?? அப்படியே தான் சாதகனுக்குத் தனக்குள் நடக்கும் அனுபவ விவரத்தை நெற்றிக்கண் விஷனாக காட்டும் அவன் தெளிவு அடையலாம் எந்த நிலையில் உள்ளோம் என அறிந்துகொள்ளலாம் வெங்கடேஷ் See less

தெளிவு

தெளிவு கரை கண்டவனால் தான் கறை கண்டனைக்காண முடியும்
வெங்கடேஷ் See less

தெளிவு 501

தெளிவு 501 பிரணவத்தின் அடி – நடு – முடியும் திருவடியின் அடி நடு முடியும் ஒன்றல்ல ஆய்வு செய்வோர்க்கு விளங்கும் வெங்கடேஷ் See less

ஞான தானம் 3

ஞான தானம் 3 வாழ்வில் உயர்ந்த லட்சியம் உடையோர் பிறர் உயர உதவி செய்கிறார் இது ஞான தானம் ஆகும் வெங்கடேஷ் See less

தெளிவு 500

தெளிவு 500 சர்க்கரை தேடி எறும்பு தானே வரும் பக்குவம் தகுதி அடைந்தால் மாணாக்கனை தேடி குரு ஆசான் தானே வருவார் நேரம் வந்தால் எமன் சாமானியரை தானே தேடி வருவான் வெங்கடேஷ்

பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ??

பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ?? இதன் சன்மார்க்க விளக்கம் என்னவெனில்?? இது ஆரம்பிப்பது கொடியேற்றத்துடன் முடிவது திருமணத்துடன் – 10 ஆம் நாளில் கொடியேற்றம் = பரவிந்து மேலேறுதல் குறிப்பது ஆம் இது நடந்தால் தான் சாதகன் தன் ஆன்மீக பயணம் ஆரம்பித்திருக்கிறான் என பொருள் படும் இது பலர்க்கு நடப்பதே இலை - சாதனம் என்ன ? எப்படி என தெரியாது - - இது கைகூட பல ஆண்டுகள் ஆகும் 10ஆம் நாள் சிவன் பார்வதி திருமணம் = ஜீவன் + ஆன்மா கலப்பு ஆகும் 10 = யகாரம் ஆகிய பத்தாம் வாசலில் – 8+ 2 வரும் 10 குறிப்பது ஆம் எல்லா அக அனுபவமும் புறத்திலே திருவிழா – கோவில் சடங்குகளாக இருக்கு மக்கள் பராக்கில் இருக்கின்றார் -உள்ளே திரும்பவிலை வெங்கடேஷ் See less

Greatness of Zero – THIRD VENTRICLE “

Greatness of Zero – THIRD VENTRICLE “ Zero is valueless Yet it adds value when added next to any number The greater number of zeroes The Higher is its value It is nothing Yet it has everything within it Sameway Third Venricle is also ZERO It is NOTHING YET IT CONTAINS EVERYTHING WITHIN IT IT CONTAINS COSMOS – MULTIVERSES WITHIN IT SUCH IS ITS GREATNESS IT’S THE CREST OF SUZHUMUNAI – THE TIP IN INDIAN TRADITION SUZHUMUNAI IS CALLED ZERO POPULARLY BUT NONE KNOWS IT YOU SHOULD BECOME FORMLESS TO SEE IT BG VENKATESH See less

சிரிப்பு – காலம் மாறிப்போச்சி

சிரிப்பு – காலம் மாறிப்போச்சி செந்தில் : யாரண்ணே வந்துட்டுப்போறது ?? க மணி : என் நண்பர்டா – வக்கீலா இருக்கார் செந்தில் : என்ன சொல்றார் அண்ணே ?? க மணி : நம்ம சமுதாயம் ரெம்ப மோசமாயிட்டுதுனு சொல்றாரு இப்ப இருக்க பொண்ணுங்க ரெம்ப மோசமாயிட்டாய்ங்க னு சொல்றாரு எதுக்கு விவாகரத்து கேட்கிறதுன்னே விவஸ்தை இல்லாமப் போய்டுச்சுனு சொன்னாரு என்னை 1 காபி டே க்கு கூட்டிப்போகாமல் – பேக்கரிக்கு கூட்டிப்போனது 2 இரவு பிரியாணி கேட்டதுக்கு அது வாங்கிக்கொடுக்காமல் – இன்று விரதம் என கூறியது 3 அன்னபூர்ணா கூட்டிப்போகச் சொன்னால் – லோக்கல் ஓட்டல் கூட்டிப்போனது 4 கடையில் கெட்டித்தயிர் வாங்காமல் – அவுகளை வீட்டிலேயே புரை குத்தச்சொன்னது இதெல்லாம் காரணம் கூறி விவாக ரத்து கேட்கிறார்களாம் செந்தில் : காலம் மாறிப்போச்சு – அப்பா காலம் மாறிப்போச்சு வெங்கடேஷ் S

கண்மணி பெருமை – அதன் வல்லபம்

கண்மணி பெருமை – அதன் வல்லபம் சுள்ளி பொறுக்கும் என் கள்ளி தன் ஒற்றைப்பார்வையால் என் இதயத்தில் பற்ற வைக்கிறாளே கொள்ளி வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு திருவடி அனுபவத்தில் தச நாதம் ஆரம்பித்து சுழுமுனையின் கடை நாதமாம் ஓங்காரத்தில் முடியும் சிற்றம்பல அனுபவத்தில் கடை நாதமாம் பாதச் சிலம்பொலியில் முடியும் அது போல் தான் தேகத்தில் அனேக நறுமணத்தில் ஆரம்பித்து சாதன பலத்தால் அனுபவத்தில் கடை வாசமாம் கற்பூரத்தில் முடியும் அது ஆன்மாவின் வாசம் ஆம் வெங்கடேஷ்
எமனும் மனமும் இருவருக்கும் ஒற்றுமைகள் உள ரெண்டும் நம்மைக்கொன்றுவிடும் இருவருக்கும் நேரம் தவறாமையில் மிகுந்த நம்பிக்கை எமன் நம் ஆயுள் முடிந்துவிட்டால் அதனினும் ஒரு வினாடி கூட பொறுக்க மாட்டார் மனமோ 2 மணி நேரம் சாதனம் எனில் அதனினும் ஒரு வினாடி கூட அதிகம் செய்ய விடாது அவ்ளோ பர்ஃபெக்ட் டைமிங்க் யார்க்கு வரும் ??
வெங்கடேஷ்

பூஜ்ஜியமும் ராஜ்ஜியமும்

பூஜ்ஜியமும் ராஜ்ஜியமும் ஒன்றுமிலா பூஜ்ஜியம் தான் எல்லாம் அடக்கி வைத்துளது தனக்குள் அதனுள் தான் இறை சாம்ராஜ்ஜியமே அதனுள் தான் இறையே அதனுள் அண்ட சராசரமும் அடக்கம் அதனால் தான் நம் முன்னோர் : “ பூஜ்ஜியத்துள் ராஜ்ஜியம் என்றார் “ பூஜ்ஜியம் = சுழுமுனை யாரே கண்டார் இந்த அற்புதத்தை ?? வெங்கடேஷ் See less

சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2

சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2 இதை தியானம் தவம் செய்ய வழி துறை அறியாதார் கட்டவிழ்த்த கதை – பேசும் மிகப்பிரபலமான வசனம் – காப்பி அடித்தது : உரை நடையில் இருந்து சகஜம் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார்கள் நம் மக்கள் சகஜம் :: இதுக்கு பிரமாணம் “ எத்தொழிலை செய்தாலும் ஏது அவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே வித்தகமாய்க்காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான் “ எல்லாரும் வள்ளல் பெருமான் அவர் காட்டுக்க்கு சென்று தவம் செய்விலை – மக்களோடு மக்களாக இருந்தார் – அதனால் அவர் சகஜத்தில் இருந்தார் – தவம் செய்யவில்லை என்ற வாதம் நகைப்புக்குரியது வெங்கடேஷ்

சமாதியும் ஜீவ சமாதியும் “

சமாதியும் ஜீவ சமாதியும் “ சமாதி என்ற பெருமை வாய்ந்ததை மிக கேவலப்படுத்திவிட்டார் கேவலமான அரசியல்வாதிகள் அவர் தலைவர் புதைத்த இடத்துக்கு சமாதி எங்கிறார் பின் சித்தர் – யோகியர் அடங்கி ஒடுங்கின இடத்துக்கு என்ன பேர் ?? அதை ஜீவ சமாதி என அழைப்பது நலம் இருவரும் ஒன்றாமோ ?? தற்காலத்தில் சமாதி = அரசியல் தலைவர் புதைக்கப்பட்டது ஜீவ சமாதி = ஞானியர் – யோகியர் இடம் இது தெளிவு ஆம் வெங்கடேஷ்

பூங்கிண்ணமும் தேன் கிண்ணமும் “

பூங்கிண்ணமும் தேன் கிண்ணமும் “
பூ ஆகிய ஆன்மா இருக்கும் கிண்ணத்தில் தான் அமுதம் ஆகிய தேன் இருக்கு ஆதலால் பூங்கிண்ணத்தில் தேன்கிண்ணம் உள்ளது உற்று நோக்கில் ரெண்டும் ஒன்று தான் ரெண்டு கிண்ணமும் ஒன்று தான் வெங்கடேஷ்

ுச்சு வீடும் மச்சு வீடும் “ 2

குச்சு வீடும் மச்சு வீடும் “ 2 குச்சு வீடு ஜீவன் வசிக்கும் குடிசை வீடு இது வாடகை வீடு ஆம் வாடகை தான் உணவு உறக்கம் நீர் மச்சு வீடு இது ஆன்மா வசிக்கும் மாடி வீடு இது சொந்த வீடு சாதனா தந்திரத்தால் குடிசை வாடகை வீட்டை சொந்த வீடாக ஆக்கிக்கொள்வது சாதகன் கடமையும் தர்மமும் ஆம்
வெங்கடேஷ் See less

தெளிவு

தெளிவு எப்படி வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியுமோ?? அப்படியே தான் எதனால் பிறந்தோமோ ?? அதனால் தான் பிறப்பை அறுக்க முடியும் அது பஞ்ச பூதத்தில் இருக்கும் ரகசியம் ஆம் வெங்கடேஷ் See less

தர்ம யுத்தம்

தர்ம யுத்தம் எது எனில்?
அரசியல் தலைவர்கள் நடத்துவது அல்ல கத்தி இன்றி ஆயுதம் துப்பாக்கி இன்றி ரத்தம் சிந்தாமல் நடக்கும் யுத்தம் தான் அது அது நம் பிறவிக்கடலை நீந்த செயும் யுத்தம் ஆம் மும்மலத்துடன் நடத்தும் யுத்தம் ஆம் வெங்கடேஷ் See less

பிரமரந்திரம் “ – சன்மார்க்க விளக்கம்

பிரமரந்திரம் “ – சன்மார்க்க விளக்கம்

இது சிரசின் உச்சியில் இருக்கும் சிறு துளை பிரம = ஆன்மா ரந்திரம் = ஓட்டை துளை அதாவது பிரமம் ஆகிய ஆன்மா இருக்கும் துவாரம் தான் பிரமரந்திரம்
வெங்கடேஷ் See less

வளர்பிறையும் தேய்பிறையும் “

வளர்பிறையும் தேய்பிறையும் “ சாமானியர் தம் வாழ்வு நிலவின் தேய்பிறைக்கு ஒப்பாம் ஆயுள் – உடல் வனப்பு நாளும் தேய்ந்து தேய்ந்து முடிவில் ஒன்றுமிலா அழிந்து போம் இது உலகம் அறிந்ததே ஆனால் ஞானியர் தம் வாழ்வோ நாளும் வளரும் நிலா போல் ஆம் சாதனா தந்திரத்தால் விந்து கலை வளர்த்து அது பூரண சந்திரனாய் முழு நிலவாய் ஜொலிக்க செய்கிறார் தம் உடல் ஆயுள் என்றும் 16 ஆக மாற்றிக்கொள்கிறார்
தேய்வுமிலை வளர்ச்சியுமிலை என்றும் 16 மார்க்கண்டேயன் ஆகிறான் இருவரும் இரு துருவம் தானே ?? வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85 நம் திருவிழாவின் போது ஒரு விளையாட்டு வைப்பார்கள் ஒரு கம்பம் அதன் உச்சியில் பரிசுப்பொருள் யார் மேலேறி எடுக்கிறாரோ அவர்க்கே பரிசு ஆனால் மேலேற மேலேற நீர் ஊற்றி சறுக்க வைப்பர் ஊர் மக்கள் ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு அதெல்லாம் மீறி சிலர் வெற்றி பெறுவர் இது என்ன சொல்ல வருது எனில் ? அந்த கம்பம் – சுழுமுனை கம்பம் ஆம் அதுவும் வழுக்கும் சறுக்கும் குணம் உடைத்து அதாவது ஏறுவது மிகவும் கடினம் அதைக்குறிக்கத்தான் நீர் ஊத்தி சறுக்க வைப்பது இந்த துன்பம் தடை மீறி ஆன்மா தரிசனம் பெற வேணும் என்பதைத்தான் இந்த விளையாட்டு குறிக்குது
எப்படி விளையாட்டில் ஞானம் கலந்துள்ளனர் நம் முன்னோர் ?? வெங்கடேஷ்

இதிகாசம் பெருமை “

இதிகாசம் பெருமை “ இதிகாசம் வேறு வரலாறு வேறு கரிகாலன் அணை கட்டினான் – வரலாறு ராஜ ராஜ சோழன் பெரிய கோவில் கட்டினான் - வரலாறு ஆனால் இதிகாசமாம் பாரதமும் ராமாயணமும் வரலாறு அல்ல அது யோக ஞான அனுபவத்தின் வெளிப்பாடு உலக மக்களுக்கு எளிதாக ?? புரிய வைக்க இந்த ஏற்பாடு எக்காலத்துக்கும் அழியாமல் இந்த அனுபவம் வழிகாட்டவே இது கட்ட பொம்மன் பத்திய வாழ்க்கை வரலாற்றை சிவாஜி மூலம் சினிமா எடுத்து உலகத்துக்கு பாமரர்க்கு தெரிவிப்பது போல் தான் ஞானம் மரணமிலாப்பெருவாழ்வு பத்திய யோக ஞான அனுபவம் தான் இதிகாசம் இலை எனில் ஞானத்துக்கான பாதை உலகத்துக்கு தெரியாமலே போகும் உலகம் என்றுமே இருளில் மிதக்கும்
வெங்கடேஷ்

ஆன்மாவும் அபெஜோதியும்

ஆன்மாவும் அபெஜோதியும் எப்படி ?? ஆன்ம ஒளியில் மஞ்சள் வெண்மை நிறம் கலந்துளதோ ?? கேரள மக்கள் ஒணம் பண்டிகையின் போது அணியும் ஆடை வண்ணம் கவனித்தால் விளங்கும் ஆரை வரவேற்கிறார் ?? அப்படியே அபெஜோதி சிற்றம்பல சிதம்பர ஜோதியில் தத்பர ஜோதியும் சித்பர ஜோதியும் கலந்து நிற்கும் வெங்கடேஷ்

ெய்த்தவ சாதனம் – அனுபவம் “

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம் மனம் போச்சு நினைவும் போச்சு மெய்ஞ்ஞான வீடதனில் மேவும் போதே." விளக்கம் : தவம் சரியான திசையில் பாதையில் ஏற்படும் அனுபவத்தை சித்தர் எடுத்துரைக்கின்றார் அதாவது மெய்ஞ்ஞான வீடு பேறாம் அனுபவம் சித்திக்கும் பட்சத்தில் மனமும் நினைவும் இல்லாமல் போகும் என்றவாறு மனமும் சித்தமும் இருக்காது என் அனுபவமும் இதே தான் – கண்மணிகள் மேலேற மேலேற மனம் செயலற்று நிற்கும் சித்தம் சுத்தம் அடைந்தபடி இருக்கும் அடர்த்தி குறையும் வெங்கடேஷ் Se

வித்தை – உலக வாழ்வும் ஞானவாழ்வும் “

வித்தை – உலக வாழ்வும் ஞானவாழ்வும் “ ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்கா சென்று பணி செய்து இந்தியாவில் நல்ல பணி அமர்ந்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது மாதிரி வித்தையில் – வேள்வி ஹோமம் யாகம் பூஜை செய்து அதன் மூலம் ஜீவனம் நடத்துவது இதுவே இளங்கலை படிப்புடன் நிறுத்தாமல் முது நிலை – முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகள் சாதனை செய்வது மாதிரி வேதம் சாத்திரம் படித்து அதன் பொருள் உணர்ந்து அதை சாதனை தவம் ஆக்கி தவம் புரிந்து அதில் அனுபவம் பெற்று சித்தி அடைதல் இதெல்லாம் படி நிலைகள் யார் யார்க்கு எது விருப்பமோ ?? அதை செயலாம் வெங்கடேஷ் Se

Sunday, May 17, 2026

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2 உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில் அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய் கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே. பொருள் : இந்த அருள் உருவம் பார்த்த மட்டில் - மரம் துளிர்த்துவிடும் வடிவம் தாங்கி வந்து என் தேகத்தில் அருள் மணப்பூ ஆகிய ஆன்ம ஒளி அளித்தனை – வீசச்செய்தனை ஆன்மாவே – கருணை மிக உள்ள பெருங்கடலே – என் கண் அமர்ந்த ஒளியே இந்த பாக்களில் எல்லம் தான் ஆன்ம தேகம் பெற்றதை உறுதி செய்கிறார் வெங்கடேஷ்

யார் ஆன்மாவைத் தரிசனம் செய்வார் ??

யார் ஆன்மாவைத் தரிசனம் செய்வார் ?? யார் எல்லாம் 4 வகை யோனியில் வருகின்றாரோ அவரெலாம் காணார் யார் இதை விடுத்து ஐந்தாம் யோனி எனும் பிரமரந்த்ரம் வழியாக உள் போகிறாரோ?? இதன் மூலம் மறுபிறப்பு எடுக்கிறாரோ ?? அவரே தன் ஆன்மாவை தரிசனம் செய்வார் அவரே தன்னையே காண்பார் அவன் துவிஜன் எனும் நாமம் பெறுகிறான் வெங்கடேஷ் See less

அருட்பா – 5 ம் திருமுறை - பிரசாத மாலை 1

அருட்பா – 5 ம் திருமுறை - பிரசாத மாலை 1 திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத் தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே. இந்த அருட்பா எல்லார் சந்தேகத்தையும் தீர்க்கிறது – யார் யார் எல்லாம் வள்ளல் பெருமான் ஒளி தேகம் பெற்றாரா ?? இல்லை 1 அவர் கற்பூரம் வைத்து எரித்துக்கொல்லப்பட்டார் என அந்தணர்களும் 2 செங்கல் சூளையில் வைத்துக்கொல்லப்பட்டார் என் பொய் கட்டுக்கதை கட்டிவிடும் மனவளக்கலை மன்றம் நிறுவனர் வேதாத்ரிக்கு இந்த பாடல் நல்ல தக்கதொரு பதில் ஆகும் இந்த பாடல் தான் ஒளி தேகம் – ஆன்ம தேகம் அடைவதுக்கான சமிக்ஞை பெற்று அதன் அடைவு குறிக்கின்றார் பொருள் ஆன்மா தன் முன் எழுந்தருளி செஞ்சுடர்ப்பூ ஆகிய ஆன்ம ஒளி உடைய தேகம் அருள வர – அது அளிக்க – நான் தயவுடை நிதியே எனக்கு மீண்டும் அருள் நீறு வழங்கக் கோர - ஆன்மாவும் அகமகிழ்ந்து அளித்ததாக தன் தேக மாற்றத்தை – ஸ்தூல தேகம் ஒளி தேகமாக மாற்றம் அடைவதுக்கான இசைவு அருள் – ஆன்மாவிடம் பெற்ற அனுபவத்தை இந்த பாடல் – பிரசாத மாலை மூலம் உலகுக்கு அறைந்து தெரியப்படுத்துகிறார் வெங்கடேஷ்

நெஞ்சுக்குழி – சன்மார்க்க விளக்கம்

நெஞ்சுக்குழி – சன்மார்க்க விளக்கம் இது சொன்னவுடன் பெண்கள் தங்கள் இதயத்தில் தாலி நிற்கும் இடம் என்றே எண்ணுகிறார் இது அதைக்குறிக்கவிலை நெஞ்சுக்குழி எனில் நம் சிரசில் இருக்கும் “ ப “ கரக்குழி குறிப்பதாம் அது குழி பள்ளம் போல் இருப்பதால் அவ்வாறு பேரிட்டுள்ளனர் நம் முன்னோர் ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் நெஞ்சம் என்பது இது தானே அன்றி உறுப்பாகிய இதயம் குறிக்க வந்ததல்ல வெங்கடேஷ்

அருள் அனுபவம் – 2026

அருள் அனுபவம் – 2026 மார்ச் 2026 நான் அருள் பெறப்போகும் விஷன் வந்த வண்ணம் இருந்தது – 15 நாட்களுக்கு நான் அருள் பத்திய சிந்தையுடனே இருந்தேன் – வேறு எண்ணமே இல்லை இயேசு கிறிஸ்து ? ?? , தாலி கொடுக்க நான் ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டுவது மாதிரியாக அது மாதிரி கல்யாணம் தொடர்பாக விஷன் வந்தபடி இருந்தது நான் புரிந்து கொண்டுவிட்டேன் பின்னர் திருமணம் நடந்தே நட ந்தது – அருளுடன் பந்தம் சம்பந்தம் தொடர்பு ஏற்பட்டது அதுக்கு முதலில் வினாயகர்க்கும் சிவன் பார்வதிக்கும் பாதப்பூஜை செய்கிறேன் – பின்னர் திருமணம் நடந்தது எனக்கு ஒரே வியப்பு தான் – உலக வாழ்க்கையிலும் இப்படித்தானே நடக்கும் அதே மாதிரி தெய்வத்திருமணமும் நடக்குதே என வியப்பு எனக்கு இதுக்கு தகுதி இல்லை என்ற எண்ணம் தான் இதெல்லாம் இந்த பிறவியில் சாத்தியமிலை ஆனால் எப்படி இது நடந்தது என்று எனக்கு புரியல இதன் பயனாக – உடல் பிணி நோய் தணியும் சரியாகும் என்று விஷன் கூறி இருக்கு அது உண்மையாகவும் இருக்கு வருங்காலத்தில் அருள் அனுபவம் அதிகமாகுமாம் இன்னும் அற்புதம் நடக்குமாம் பார்க்கணும் இது நடந்த பின் வந்த விஷன் : சென்ற வாரம் ஒரு நாள் , வேதாத்திரி என் வீட்டுக்கு வருகிறார் அவர் முகம் ஒரு பக்கம் கறுத்து கொப்பளம் மாதிரியாக கோரமாக இருக்கு அவர் என் காலில் விழுந்து “ என்னை மன்னித்துவிடு “ என்றார் விஷன் முடிந்துவிட்டது அவர் பெறாததை நான் பெற்றதை அங்கீகரிக்கும் விதமாக இந்த விஷன் அமைந்திருக்கு 1 மேல் மருவத்தூர் பங்காரு அடிகள் , நான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க எனக்கு சாமரம் வீசுகிறார் 2 பாண்டி அரவிந்தர் என் கையில் மோதிரம் அணிவிக்கிறார் என்னை அணைத்துக்கொள்கிறார் 3 ஸ்ரீ ராகவேந்திரர் தன் காமதேனுவுடன் வந்து என்னை ஆசிர்வதிக்கிறார் எல்லாம் அருள் பெற்றதன் விளைவு – நலம் என் தாய் தந்தையர் விஷனில் வந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் என் தாயார் எனக்கு திருஷ்டி கழிக்கிறார் 4 சூக்கும காரண தேக சங்கிலி கழற்றுகிறார் – நான் துவஜஸ்தம்பம் மேலே ஏற ஏற இது நடக்குது 5 உடல் உறுப்புகளை மாற்றி அமைக்கிறார் இதயம் நுரையீரல் மாத்ரி 6 பார்க்க பார்க்க உணவு பெருகுகிறது அக்ஷய திரிதியை அனுபவம் 7 புது முடி நன்கு வளர்ந்து இருக்கு கருத்து இருக்கு 8 எல்லா மருந்தையும் நிப்பாட்டுகிறார் 8 இளமை மீண்டு வருது 9 புது பல் முளைக்குது 10 என் கையில் கங்கணம் கட்டுகிறார் 11 எனக்கு நிறைய பதக்கம் அணிவிக்கிறார் 12 என் கையில் வெற்றி கோப்பை 13 என் கையில் மந்திரக் கோல் – சித்தர்கள் கையில் இருப்பது மாதிரியாக சித்து செய்ய 14 Light body and neural connections சரி செய்கிறார் மாற்றி அமைக்கிறார் 15 அசரீரி – ஊழ் அகற்றப்போவதாக கூறினர் - நல் வினை தீ வினை விட்டு அகற்றினர் இது மாதிரி நிறைய எல்லாம் அற்புதம் - அருள் அற்புதம் வெங்கடேஷ்

பகுத்தறிவு என்றால் என்ன ??

பகுத்தறிவு என்றால் என்ன ?? 5/10 ஆண்டுக்கு ஒரு தடவை தன் வீட்டுக்கு வெள்ளை அடித்தால் மகிழ்ச்சியுடன் சந்தோஷம் காட்டும் இவர் நம் கோவிலுக்கு 10 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் – சம்ப்ரோக்ஷணம் செய்தால் மட்டும் எள்ளி நகையாடுவது அதை மூட நம்பிக்கை என்பது வெங்கடேஷ்

ஆன்மா – அருள் - அபெஜோதி கண்டால் என்ன ஆகும் ??

ஆன்மா – அருள் - அபெஜோதி கண்டால் என்ன ஆகும் ?? வள்ளல் தன் அருட்பாவில் 1 பசி போகும் 2 காய்ந்த- பட்ட - உலர்ந்த மரம் துளிர்த்துவிடும் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் ராமன் கோதண்டத்தை வளைத்தான் என்பதும் சாதகன் பிரணவத்தை வளைத்தான் என்பதும் அதே சாதகன் தன் கண்களை உள்ளே திருப்பினான் என்பதும் ஒன்று தான் ராமன் அம்பு எய்தினான் என்பதும் சாதகன் கண்ணிலிருந்து பார்வையை மேல் செலுத்தினான் என்பதும் ஒன்று தான் உள் யோக ஞான அனுபவம் தான் வெளியில் இதிகாச புராணமாக உருவகம் ஆகியிருக்கு யாரே அறிவார் இந்த ரகசியத்தை?? வெங்கடேஷ்

சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3

சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3 சிவவாக்கியர் பாடல் : மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள் வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார் மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே! அதாவது : ஞானியர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மோன நிலையிலும் பரத்துடன் கலந்த நிலையிலே இருப்பார்கள் எங்கிறார் சிவவாக்கியர் ஞானிகள் யோகிகள் பெண் முலை மேல் படுத்து இருந்தாலும் அவர்கள் ஆசையற்ற நிலையிலே – தம் ஞான நிலையிலேயே லயித்து இருப்பார்கள் என்று உறுதி செய்கிறார் உலக நடையினர் நிலை சொல்ல வேண்டுவதில்லை வெங்கடேஷ்

இவர்கள் இப்படி

இவர்கள் இப்படி 1 மாணவர்கள் காதலர்கள் தத்தம் பெற்றோர் கண்காணிப்பு வளையத்தில் 2 அரசியல்வாதிகள் பெரும் தொழில் அதிபர்கள் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்தில் அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்தில் 3 ஆனால் ஆன்ம சாதகரோ அருள் – அருளாளர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கார் வெங்கடேஷ்

அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம்

அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம் இந்த அக்ஷதையை நாம் அனைவரும் திருமண ஜோடிகளுக்கும் – மற்றும் விசேஷங்களிலும் தூவுவோம் இது அரிசியும் மஞ்சளும் கலந்ததாகும் அதாவது வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறத்துடன் இருக்கும் இது ஆன்மாவின் நிறமாகும் அதாவது அக்ஷம் = கண் – கண்ணில் இருந்து ஆன்ம ஒளி வந்து மணமக்களை வாழ்த்துவதாக /ஆசிர்வதிப்பதாக நம் முன்னோர் வைத்திருக்கும் சடங்கு ஆம் வெங்கடேஷ் See less

தெளிவ

தெளிவு வீட்டின் பின் பக்க கதவு வழியாக ஒருவன் உள் வந்தால் அவன் திருடன் கள்வன் வீட்டை துடைத்து சுத்தமாக்கி சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான் அதே ஆன்மாவும் பின் வாசல் வழியாக வந்தாலும் அதுவும் சுத்தம் செய்யும் நம்மில் இருக்கும் எல்லா துர்க்குணத்தை நீக்கி சுத்தம் செய்யும் அவனும் கள்வன் தான் ஆனால் உள்ளம் கவர் கள்வன் அவன் எல்லா பேற்றையும் நல்கி நம் வாழ்வை வளமாக்கும் ரெண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு உலகளவு வித்தியாசம்
வெங்கடேஷ்

ஆண்மையும் பேராண்மையும் “

ஆண்மையும் பேராண்மையும் “ பெண்ணை கருவுறச் செய்து குழந்தை உண்டாக்க ஆண்மை வேண்டும் ஆனால் சாதனா தந்திரத்தால் தனக்குளேயே சுப்பிரமணியனை உண்டாக்க பேராண்மை வேண்டும் முன்னது காட்டிலும் பின்னது மிகக் கடினம் கடினம் வெங்கடேஷ்

மன்றங்கள் பல வகை

மன்றங்கள் பல வகை 1 மனமகிழ் மன்றம் 2 மன வளக்கலை மன்றம் 3 பூ விழி மன்றம் மன மகிழ் மன்றம் – இதில் மது மாது’ சூது வாது ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் தான் மன வளக்கலை மன்றம் நம்பினால் குண்டலினி காய கல்பத்தில் போவது மோசம் அதே பூவிழி மன்றம் பற்றினோர் உறுதியாகப் போவது மோட்சம் வெங்கடேஷ் See less

நிதர்சனம்

நிதர்சனம் வலையும் வளையும் தன் இருப்பிடமாம் தன் வளையாம் பிரணவத்தில் வசிக்கத்தெரியாததால் உறையத் தெரியாததால் மனம் எனும் வலையில் சிக்கி கவலையில் மூழ்குகிறான் மனிதன் BGV See less

தெளிவு

தெளிவு மூன்று சூக்கும பொருட்களின் கலவை தான் முப்பூ முப்பூ எனில் சோமசூரியாக்கினி கலைகளின் சங்கமம் இது கொண்டு உலகையே ஜெயிக்க முடியும் பார்வை மனம் பிராணன் ஒன்றுபடுத்துதலும் முப்பூ முடிப்பது ஆம் இதுவும் கொண்டு எல்லாம் ஆற்ற முடியும் என்பதுவும் உண்மை வெங்கடேஷ் See less

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை ஆன்ம தேகம் அடைவு

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை ஆன்ம தேகம் அடைவு 1 விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக் கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக் கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன் அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே. 2 அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே. செஞ்சுடர்ப்பூ = ஆன்ம தேகம் – அதுக்கான செம்மை ஒளி இந்த மாதிரி 5ம் திருமுறை - 10 பாக்களில் வள்ளல் பெருமான் தான் ஆன்ம தேகம் எனும் சுத்த தேகம் அடைவதுக்கான சமிக் ஞைகளை ஆன்மா அருள் காட்டியதாக பாடி உறுதி செய்கையில் எல்லா சன்மார்க்க சங்க மேதைகளும் – அவர் 6 ம் திருமுறையில் தான் சுத்த சன்மார்க்கம் எனும் அரும்பெரும் நிலைக்கு வந்தார் – அதனால் அது தான் ஓத வேணும் மற்றதை ஒதுக்க வேணும் என்று இருக்கின்றார் என்ன அறிவு என்ன அறிவு ? திருவடிப்புகழ்ச்சி – 6ம் திருமுறைக்கு முன்பே அளிக்கப்பட்டது இவர்க்கு ஆராய்ச்சி எல்லாம் ஒன்றுமிலை – இல்லாமலே முடிவுக்கு வந்துவிடுகின்றார் எல்லவரும் அவரவர் ஆய்வு செய்து முடிவுக்கு வர வேணுமே அல்லாது மற்றவர் சொல் கேட்கலாகாது – என் சொல் உட்பட வெங்கடேஷ்

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ??
எனில் – ஈறைப் பேனாக்கி – பேனை பெருமாளாக்கும் தன்மை உடைத்து எப்படி எனில் நாகேஷ் ஒரு சினிமாவில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணத்தால் அழுத படி தான் இருப்பார் ஒரு திருமண விழாவில் – விளக்கு எரிந்து கொண்டிருக்க – அதைப் பார்த்து – அது அருகே இருக்கும் துணியில் பரவி அது எரிந்து – பின் அது மண்டபம் முழுதும் பரவி எல்லாரும் இறந்து விட்டால் என்னாவது என நினைத்தேன் அதான் அழுதேன் என்பார் அது மாதிரி நம் மனமும் அது பெருக்கி = துர்ப்பெருக்கி அதை கண்டித்து வைக்கணும் வெங்கடேஷ்

உண்மையான சாதகனின் அனுபவம் எப்படி ??

உண்மையான சாதகனின் அனுபவம் எப்படி ?? இருக்கும் எனில் – ஒன்றும் அறியா வயதில் திருமணம் செய்துவிட்டால் – அந்தப்பெண்ணுக்கு தன் கணவன் செயும் களிப்பு சேட்டையால் தன் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் என்பது அறியாளோ ?? அவ்வாறே தான் நல்ல சாதகனுக்கும் – நல்ல நிலைக்கு வந்துவிட்ட சாதகனுக்கும் – ஸ்த்தினிபாதம் வாய்த்த சாதகனுக்கும் வரும் அனுபவங்கள் என்ன என்றே அறிய வாய்ப்பில்லை வரும் அனுபவம் பேர் என்ன ?? எதனால் வருது ?? எதை செய்வதால் வருது ? இதன் பலன் என்ன ?? என்றெலாம் தெரியாது இதுக்கெல்லாம் அவன் ஆதாரம் பிரமாணம் அருட்பா – திருமந்திரம் திருவாசகம் படித்து தெரிந்து கொள்ளணும் மற்றவரிடத்தில் கேட்டால் அவர்க்கு தெரிந்தது தான் சொல்வாரேயன்றி நம் சந்தேகத்தை தீர்க்க மாட்டார் அருள் – விஷன் தான் வழி காட்டணும் – காட்டும்
வெங்கடேஷ்

நான் உச்சரிக்கும் பாடல்

நான் உச்சரிக்கும் பாடல் பதிவில் – மனிதர் உடல் அதில் கலர் கலராக சக்கரங்கள் – குண்டலினி கீழ் – முதுகுத்தண்டின் அடியில் இருந்து – மேலேறி – தலை அடைவதாக படம் வரைந்து – சிவ சக்தி நடம் என இது தான் இறுதி உச்சகட்ட அனுபவம் என எழுதி இருப்பது படிக்கும் போது – நான் மனதுக்குள் உச்சரிக்கும் பாடல் வரிகள் : எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் இந்த நாட்டிலே – இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் நம் நாட்டிலே உண்மை தானே ?? மக்களுக்கு எப்போது அறிவு விளங்கும் ?? இருளில் இருந்து மீள்வார் ?? யாரே அறிவார் ?? வெங்கடேஷ்,

திருக்கழுக்குன்றம் - கழுகு மலை - ஊர் பெருமை சிறப்பு “

திருக்கழுக்குன்றம் - கழுகு மலை - ஊர் பெருமை சிறப்பு “ திருக்கழுக்குன்றம் – - சிவன் ஸ்தலம் கழுகு மலை = முருகன் ஆலயம் இது காரணத்தால் வைக்கப்பட்ட பேர் ஆம் கழுகுகள் பார்வைக்கு பேர் போனவை ராமாயணத்தில் – சம்பாதி எனும் கழுகு – தன் இருப்பிடத்திலேயே இருந்தபடி சீதை இருப்பிடம் பார்த்து கண்டுபிடித்து விட்டு – சீதை இலங்கையில் அசோக வனத்தில் உள்ளாள் என்று கூறுகிறார் இது கொண்டு அதன் பார்வை கூர்மை தெரிந்துகொள்ளலாம் கோவில்களுக்கு ஏன் இந்த பேர் எனில் ?? நம் பார்வையும் தெய்வம் இருக்கும் இடமாம் மலை மீது சேர வேண்டும் என தெரிவிப்பது தான் இந்த திருத்தலம் ஆம் அதன் மூலம் நாம் தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாடு செய்துள்ளனர் நம் முன்னோர் எவ்வளவு அறிவு ?? தான் அவர்க்கு ?/ வெங்கடேஷ் See less

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95 பொருள் : மூலாக்கினி எழுப்பி , அதனுடன் விந்துவைக் கூட்டி – அதை உச்சிக்கு செலுத்தி – பின்னும் மேல் செலுத்தி – முழு நிலா அமைத்து – அதிலிருந்து அமுதம் இறக்கி – பசி தீர்வது எப்போது ??
வெங்கடேஷ்

வயலூர் – ஊர் பெருமை சிறப்பு

வயலூர் – ஊர் பெருமை சிறப்பு இது முருகன் திருத்தலம் வயல் எனில் நீர் சூழ்ந்த இடம் தெய்வம் இருக்கும் இடமும் நீர் சூழ்ந்த இடமாகையால் - இந்த இடத்துக்கு இப்படி பேர் வைத்து – அங்கு ஆன்மாவாகிய முருகனை ஸ்தாபித்துள்ளனர் நம் முன்னோர் ஆன்மாவின் இருப்பிடமும் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது உண்மை இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும் தெய்வத்தின் இருப்பிடத்தை பலப்பல பேர்களில் பலப்பல கோவிலகளை பலப்பல இடங்களில் அமைத்துள்ளனர் நம் முன்னோர் வெங்கடேஷ்

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்? பொருள் : இந்த உடல் எனும் ஏணி கொண்டு நடக்காமல் – நூல் ஏணி ஆகிய சுழுமுனை நாடியில் பயணித்து உச்சி நோக்குவது எக்காலம் ?? தோல் ஏணி = உடல் நூல் ஏணி – சுழுமுனை நாடி வெங்கடேஷ் See less

ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “

ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “ ஔவைக்குறள் : பரமாய சத்தியுள் பஞ்சமாபூதத்தின் தரம் மாறில் தோன்றும் பிறப்பு அதாவது 5 பூதங்களின் தரம் மாறிப்போனால் நாம் பிறப்பு எடுப்போம் அப்படியானால் அதே 5 பூதங்களின் தரத்தை மீண்டும் நிலை நிறுத்தினால் – நாம் பிறப்பிறப்பற்ற நிலை அடைவது உறுதி என ஆகிறது எப்படி செய்வது ?? ஆற்றுவது? மண் – இது இடியாப்புவி ஆக மாற வேணும் நீர் – போகாப்புனல் ஆகணும் நெருப்பு தீ – ஒளியாக்கனல் ஆகணும் காற்று – வாசி வேகாக்கால் ஆகணும் ஆகாயம் -= சாகாத்தலை ஆகணும் இது நடந்துவிட்டால் சாதகன் மரணமிலாப்பெரு வாழ்வு வாழ தகுதி அடைந்து விடுவான் இதுக்கு மாபெரும் முயற்சி – தவம் – கடின உழைப்பு வேணும் தொடர் உழைப்பு – அயரா முயற்சி வேணும் வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below As is that Diamond cuts diamonds So is that Those which gave us The Physical Body and Birth Ether – Water – Fire – Air _ Space All in Impure form When converted to its Purest Versions Bestows with Deathless Life and Deathless Bodies BG Venkatesh See less

முத்தியும் சித்தியும் – 3

முத்தியும் சித்தியும் – 3 முப்பூ என்று திரிவார்கள் அந்த முப்பூ வந்த வகை காணார் அப்பூ என்றும் அறிந்தக்கால் சித்தி ஆம் என்று கும்மி அடியுங்கடி -வாலைச்சாமி பொருள் : அதாவது முப்பூ முப்பூ என்று அலைவார்கள் – அது என்ன ஏது ? என அறியார் எப்படி செய்வது என அறியார் அது எது – எப்படி ஆற்றுவது என் அறிந்து கொண்டால் சித்தி கைகூடும் என கும்மி அடியுங்கள் எங்கிறார் வாலைச்சாமி சித்தர் இதைத்தான் வள்ளல் பெருமான் முத்தி என்பது முன்னுறு சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் முதலில் முத்தி முப்பூ முடிக்க வேணும் - அதனால் சித்தி கைகூடும் வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87 நம் கோவில்களில் மரம் வைத்திருப்பர் ஆனால் அது ஒரு மரமாக இருக்காது ரெண்டு ஆக இருக்கும் – அது ஆலமும் வேம்பும் கலந்து இருக்கும் அதன் கீழ் வினாயகர் அமர்ந்திருப்பார் இது ஏன் எனில் ?? இரு மரம் என்பது = சூரிய சந்திர நாடிகள் தான் இவைகள் ஒன்று சேரும் ஓரிடத்தில் அந்த இடத்தில் 5 இந்திரியங்களும் ஒன்று கூடி கலந்து நிற்கும் என்பதை இந்த மரம் + வினாயகர் சடங்கு மூலம் புறத்தில் காட்டுகின்றார் நம் முன்னோர் வெங்கடேஷ்

மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம்

மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம் இந்த அருமையான வார்த்தையை வள்ளல் தன் அருட்பாவில் பயன்படுத்தியுள்ளர் அனேக இடங்களில் இதன் விளக்கம் கன்யாகுமரி சபை படி : கண்மணி மாடம் = மேலான இடம் மணி = கண்மணி அதனால் இதன் பொருள் = கண்மணி நல்ல வேடிக்கை மணிமாடக்கோவில் மணி = சுப்பிரமணி இருக்கும் நெற்றி நடு மாடம் = நெற்றி நடு அதாவது ஆன்மா இருக்கும் தலத்தை தான் வள்ளல் பெருமான் மணிமாடக்கோவில் என அழைக்கிறார் வெங்கடேஷ் See less

சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்

சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம் நெல்லி இருக்கு காட்டுக்குள்ளே – கரு நெல்லி இருக்கு வீட்டுக்குள்ளே பொருள் : நாம் சாப்பிடும் பொருளாகிய நெல்லிக்காய் காட்டில் புறத்தில் இருக்கு விளையுது ஆனால் கரு நெல்லி ஆகிய கண்மணி நம் வீடாகிய தேகத்தில் இருக்கு எங்கிறார்கள் சித்தர்கள் வெங்கடேஷ் S

சன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”

சன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை” எப்படி முதலை வாய் அகப்பட்ட இரை தப்புவது அரிதோ ?? அப்படித்தான் மாயையிலிருந்து மீள்வதும் ஜீவகாருண்ணியம் எனும் சடங்கிலிருந்து நம் சன்மார்க்க அன்பர்கள் சங்கத்தாரும் தவம் சாதனா பாதத்துக்கு திரும்புவதும் வெங்கடேஷ்

இவர் அவர் அல்ல

இவர் அவர் அல்ல வெள்ளை கோட் அணிந்திருந்தவர் எல்லாரும் டாக்டர் அல்லர் தலைப்பாகை தலையில் குல்லா அணிந்த எல்லவரும் வாசி சித்தி ஆனவர் அல்லர் மஞ்சள் வெள்ளை ஆடை அணிந்தவரும் தலைப்பாகை அணிந்து மகாமந்திரம் உச்சரிப்பருவம் அன்ன தானம் அளிப்பவரும் வடலூர் விஜயம் செய்பவரும் சன்மார்க்கத்தவர் அல்லர் ஜாக்கிரதை உஷார் வெங்கடேஷ்

சுத்த உஷ்ணம் பெருமை

சுத்த உஷ்ணம் பெருமை மும்மல மயக்கத்தில் இருக்கும் ஜீவனும் பாசத்தால் கண்ணீர் விடும் நினைவால் உருகும் அதனால் உயிர் இறக்கும் அதே மும்மலத்தை உருக்கினாலோ ? தவத்தால் சுத்த உஷ்ணத்தால் உருக்கினால் ஜீவன் உயிர் நித்திய தன்மை அடையும் இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்

ஆரூரனும் போரூரனும்

ஆரூரனும் போரூரனும் முன்னவர் – திருவாரூர் தியாகராஜர் கோவில் கொள் ஆரூரன் பெருமான் திருவாசகம் : ஆரூர் அமர்ந்த அரசே போற்றி பின்னவர் – போரூர் அமர்ந்த முருகப்பெருமான் கந்தசாமி கடவுள்
வெங்கடேஷ்

பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “

பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “ வள்ளல் பெருமான் உரை நடையில் “ மனதை சதா காலமும் சிற்சபையில் வைத்திருக்கப் பழகவும் அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப் பழகவும் “ அப்படி எனில் பொற்சபை சிற்சபை என்பது நம் இரு கண்கள் அல்ல குமரி செல்வராஜ் உரைப்பது போல் அதே சமயம் – இரு பெட்டி அல்ல சத்திய ஞான சபையில் விளக்கியபடி அது சிவ வெளிகள் புருவ மத்திக்கு மேல் விளங்கு சிவ வெளிகள் உலகம் நம்பினால் மோசம் போவோம் விஷயம் வித்தை தெரிந்த ஆசாரியன் விளக்குவார் வெங்கடேஷ்

ஆன்ம அனுபவம் - திருப்போரூர்‌ சன்னிதிமுறை மாலை

ஆன்ம அனுபவம் - திருப்போரூர்‌ சன்னிதிமுறை மாலை "அஞ்ஞான வல்லிருள்போய்‌ அன்பர் குணக்குன்‌ றின்மிசை மெய்ஞ்ஞான பானுவெளி தோன்றச்‌ - செஞ்ஞான நாதத்தொலி கூவும்‌ நற்கொடிப்‌ போரூரன்‌ இரு பாதத்தை நெஞ்சே பணி” 65 விளக்கம் : வெட்டவெளி எனும் குன்றின் மீது ஞான சூரியன் உதிக்கவும் அதில் நாதம் ஒலிக்கவும் , அதனால் மும்மல இருள் அகலவும் திருப்போரூர் அமர்ந்த குமரன் இணையடி பணிவாய் தொழுவாய் நெஞ்சமே வெங்கடேஷ்

Friday, May 15, 2026

ஆரோகணமும் அவரோகணமும்

ஆரோகணமும் அவரோகணமும் சங்கீதத்தில் மதிப்பெண்ணில் நம் வாழ்வில் – செழிப்பில் நிறுவன லாப நட்டத்தில் விலைவாசியில் எல்லாம் இருக்கும் ஆரோகணமும் அவரோகணமும் குண்டலினியில் மட்டுமில்லை வெங்கடேஷ்

குண்டலினி இருப்பிடம் – பதிவு

குண்டலினி இருப்பிடம் – பதிவு “ அரவாமுதன் “ – பேர் சன்மார்க்க விளக்கம் இது பிரபலமான வைணவ பெயராம் இதன் சன்மார்க்க விளக்கம் யாதெனில் அரவாமுதன் = அரவு + அமுதன் அரவு = பாம்பு = குண்டலினி அமுதன் = அமுதமாகிய கண்ணனாகிய ஆன்மா ஆன்மா சிரசில் இருப்பதால் குண்டலினியும் அங்கு தான் இருக்கு என்பது உண்மை இது காளிங்க நர்த்தனம் செய்த அழகிய கண்ணனை கண்ட பின் வைத்த பேர் ஆகும் அதாவது குண்டலினி மீது அழகிய கண்ணன் ஆடல் நாட்டியம் செய்ததால் அரவாமுதன் என பேர் பெற்றான் இது ய முனை நதியில் நடந்த சம்பவம் குண்டலினி மல ஜலம் கழிக்கும் இடத்தில் இருக்கும் எனில் – யமுனை நதி அந்த நாற்றம் பிடித்த இடத்திலா இருக்கு?? கண்ணன் அந்த இடத்தில் தான் இருக்கின்றானா ?? யோசிக்க வேணும் மக்களே ?? “ எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு “ இந்த குறள் இந்த பதிவுக்கும் குண்டலினிக்கும் மிக பொருந்தும் ஆமாம் வெங்கடேஷ் See

தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும்

தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும் ரெண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் அதாவது தஷ்ணாமூர்த்தி = தென் திசையில் அமர்ந்திருக்கும் ஆன்மக்குரு தென்னவன் = தென் திசையில் வீற்றிருக்கும் மன்னவன் ஆகிய ஆன்மா தென் பாண்டி மன்னவன் கூட ஆன்மாவைத்தான் குறிப்பதாகும் அப்போ ரெண்டும் ஒன்றே தானே ?? தென்பாண்டிச்சீமை என்பது ஆன்மா இருக்கும் தலம் தான் அப்போ சேர சோழர்கள் எனில் இட பிங்களைகள் தானே?? சேர சோழ பாண்டியர்கள் = மூன்று நாடிகள் கலைகள் குறிப்பதாகும் நான் சொல்வது சரிதானே ?? வெங்கடேஷ் See less

வாழ்க்கை – அர்த்தம்

வாழ்க்கை – அர்த்தம் அர்த்தம் என்ன எனில் ?? நம் எண்ணத்துக்கும் இறைவனின் திரு எண்ணத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் நம் வாழ்வு நாம் நினைத்தது நடந்தால் யோகம் அதிர்ஷ்டம் எங்கிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருந்தது என அறியாமலே நினைத்தது நடக்கவிலையெனில் காலம் – கிரகம் – என பழி போடுகிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருக்கவில்லை என அறியாமலே வெங்கடேஷ் See less

என்ன உலகமடா இது ??

என்ன உலகமடா இது ?? சாமானியர் தன் பெற்றோர் மனைவி மக்கள் பிரிந்து வெளியூர் சென்று வேலை பார்த்து காசு சம்பாதித்தால் பெருமை பேசும் உலகத்தார் அதே சாதகர் தன் குடும்பம் பிரிந்து சென்று தவம் சாதனம் செய்து ஞானம் தேடினால் அருள் சம்பாதிக்க சென்றால் மட்டும் பண்டாரம் பரதேசி என நிந்தை செய்கிறார் என்ன உலகமடா இது ?? வெங்கடேஷ் See less

உலகம் எப்படி மோசம் போயிருக்கு??

உலகம் எப்படி மோசம் போயிருக்கு?? குண்டலினியில் எப்படி என பார்ப்போம் ?? குண்டலினி உண்மையில் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் தான் இருக்கு ஆனால் அது எந்த உறுப்பு என்பது தான் மக்களும் மன்றங்களும் மகரிஷிகளும் - அருள் தந்தைகளும் யோகிகளும் - நம் சமகால குருமார்களும் குழம்பிப்போயுள்ளனர் – தவறான முடிவுக்கு வந்து உலகை வழி நடத்தி சென்றுள்ளார் மேலுள்ளவர் கூற்றுப்படி அது முதுகுத்தண்டின் அடியில் மலஜலம் கழிக்கும் இடத்தில் இருக்கு எங்கிறார் எப்படி ஒரு தெய்வீகப்பொருள் இப்படி அசுத்தமான இடத்தில் போயிருக்கும்?? யோசிக்க வேணாமா ?? அது அந்த இடமான மல ஜலம் கழிக்கும் இடமாம் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் இல்லை அது வேறு இடமான - குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் - மத்தியில் இருக்கு ஆனால் அதுக்கும் குய்யம் குதம் என தான் பேர் – அதுவும் மலத்தையும் காற்றையும் வெளியேற்றுவதால் இதை சரியாக அர்த்தம் எடுக்கத்தவறியதால் கோடிக்கணக்கான பேர்கள் இந்த தவறான பாதையில் குண்டலினி பயிற்சி செய்து ஒரு அனுபவமும் சித்திக்காமல் மோசம் போயினர்/.கின்றார் என்பது உண்மை மற்றுமொரு சேதி - அது மேலேறுவதுமில்லை கீழ் இறங்குவதுமிலை அது பிரபஞ்ச வெளியை மறைத்து – குறுக்கே நிக்குது இதன் சரியான இடம் திருவாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது படித்து தெளியவும்
ெங்கடேஷ் Se

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் உலக வாழ்வில் ஒருவன் இளைத்து வந்தால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கான் என பொருள் அவன் இறக்கப்போகின்றான் என பொருள் அதே ஒரு சாதகன் இளைத்து வந்தால் அவன் ஞானி ஆகிறான் என பொருள் இளைத்தல் எனில் தத்துவம் ஒவ்வொன்றாகக் கழலுதல் ஆகும் 36 கழன்று வருதல் குறிப்பது ஆம் ெங்கடேஷ்

தெளிவு 506

தெளிவு 506 போர்வீரர்களில் உடலில் மட்டும் தான் போர்க்காயங்களா என்ன ?? சாதகர்களில் உடலிலும் தான் ஆமாம் சாதனம் ஏற்படுத்தும் உஷ்ணத்தினால் கொப்பளங்கள் கட்டிகள் அதன் வடுக்கள் இருக்கும் காலத்துக்கும் அவனும் மலத்துடன் இடும் போருக்கு இது அடையாளம் ஆம் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் இதுவும் அதுவும் ஒன்று அரசு ஊழியர்க்கு அளிக்கப்படும் சலுகைகள் விடுமுறை பறிக்கப்பட்டால் அவர் எப்படி கொதித்துப்போவாரோ ?? – அவ்வாறே தான் மனமும் இத்துணை நாளும் அளித்து வந்த உணவு - சுகம் புலனின்பம் – கரண இன்பம் பறித்தால் அதுவும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் படிப்படியாக பறிக்க வேணும் மெள்ள மெள்ள விஷம் வைக்க வேணும் வெங்கடேஷ் See less

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம் செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி! மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி! பொருள் : செத்த சவம் எப்படி அசையாது இருக்குமோ – மனம் முதலிய கரணங்கள் எல்லாம் செயல் அற்றிருக்குமோ ?? அவ்வாறு நான் இருக்கிறேன் என் அறிவில் மயக்கம் இல்லை – தெளிந்திருக்கிறேன் எல்லாரும் மற்றாரும் – அதாவது எந்த ஒரு விகல்பமும் விளைவிக்கும் தத்துவமும் இல்லை – 36 தத்துவங்களும் ஒழிந்து விட்டன நான் மீண்டும் ஓருடலில் பிறக்க மாட்டேன் எங்கிறார் சித்தர் வெங்கடேஷ் See less

மனம் எப்படிப்பட்டது ??

மனம் எப்படிப்பட்டது ?? உதாரணம் அன்று மழை அதனால் பள்ளி லீவு என நினைத்து அங்கு சென்றால் அங்கு லீவு விடாமல் பள்ளி வைத்தால் முதலில் மனம் ஒப்பாது பின்னர் அது சமாதானமாகி பள்ளி வகுப்பில் ஒன்றும் அது போலத் தான் மனமும் தவத்தின் போது முதலில் ஒத்துழைக்க மறுக்கும் – இன்று வேணாம் - இவ்வளவு நேரமா 3 மணி நேரமா என தடை போடும் ?? பின்னர் தவம் செய்ய செய்ய - சிறிது நேரத்துக்குப்பின் சமாதானமாகி அதனுடன் ஒன்றிப்போம் இது தான் மனதின் குணம் நடத்தை வெங்கடேஷ்

ஞானியரும் சாமானியரும் “

ஞானியரும் சாமானியரும் “ வளைதலின் பயன்கள் உலக வழக்கில் சாமானியர் அரசுப்பணியாளர்க்கு கூழைக்கும்பிடு போடுகிறார் உடல் வளைந்து வணக்கம் வைக்கிறார் தன் காரியம் சாதித்துக்கொள்கிறார் அரசுப்பணியாளரோ அரசியல்வாதிக்கு தன் உடல் வளைத்து கும்பிடு போட்டு தன் வாழ்க்கையில் பணியில் முன்னேறுகிறார் தன் அந்தஸ்தில் எங்கோ போகிறார் தன் எண்ணத்தை ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார் சாதகரோ தன் கண்ணை வளைத்தும் பிரணவத்தை வளைத்தும் மும்மலம் வெல்கிறார் தன் சுய தரிசனம் ஆன்ம தரிசனம் செய்கிறார் இவைகள் வளைதலின் பயன்கள் வெங்கடேஷ் See less

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? – 2

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? – 2 காய கல்பம் இதுக்கு விந்து அவசியமென உலகம் அறிந்து வைத்திருக்கு ஆனால் எங்கிருக்கும் விந்து என்பதில் தான் கொழப்பமே அதனால் இது மன்றத்தில் எப்படி ஆற்றுவது என கற்றுத்தருகிறார் எனில் குறியில் இருக்கும் விந்துவை அஸ்வினி முத்ரை மூலம் – கெட்டிப்படுத்தி அதை மேல் கொண்டு வந்தால் – நம் உடல் காய கல்பம் அடையும் நல்ல வேடிக்கை – தமாஷ் தான் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகின்றார்?? குறியில் இருப்பது பிரஜா உற்பத்திக்கு என இயற்கை ஒதுக்கி வைத்திருப்பது அது எப்படி ஞானத்துக்கு உதவும் – முடியும் ?? நல்ல ஹாஸ்யம் தானே?/ உண்மையான காயகல்பத்துக்கு எங்கிருந்து விந்து பயன்படுத்த வேணும் என குரு சொல்லித்தருவார் அதை எப்படி கையாள்வது எனவும் – என்ன செய்ய வேண்டும் என உரைப்பார் இந்த மாதிரி எல்லாம் உலகம் ஏமாற்றப்பட்டுள்ளது போலி குருமார்களால் மன்றத்தால் கொழப்பம் தான் மிஞ்சியதே தவிர ஒரு பயனுமிலை ஜாக்கிரதை ஜாக்கிரதை அதை விட்டு மீண்டால் தான் மக்கள் தெளிவார்கள் வெங்கடேஷ்

சகச சமாதி பெருமை மேன்மை

சகச சமாதி பெருமை மேன்மை மரணத்தில் உடல் புதைக்கப்படும் உயிர் நீங்கிவிடும் ஆனால் ஜீவசமாதியில் உடலும் உயிரும் சேர்ந்து புதைந்திருக்கும் உயிர் நீங்கி இருக்காது பல நூறு ஆயிரம் ஆண்டுக்குப்பின் நீங்கும் ஆனால் சகச சமாதியில் உடலும் உயிரும் புதைந்து போவதேயிலை சதா ஜீவித்து நிற்கும் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடைத்து அது நித்ய தேகம் ஒளி தேகம் வெங்கடேஷ்

Erotica and Esoterica

Erotica and Esoterica Erotic men = Want to Possess the Beauty Esoteric men = Appreciate Beauty No possession BG Venkatesh

யார்க்கு நீண்ட நேரம் சாதனம் சாத்தியம் ??

யார்க்கு நீண்ட நேரம் சாதனம் சாத்தியம் ?? அதாவது 5 – 6 மணி சாதனம் சாத்தியம் எனில் ?? யார்க்கு சாதனத்தில் தவத்தில் பிடிப்பு ஏற்பட்டு அதனால் நல்ல நிலைக்கு ஏறியுள்ளாரோ தினம் தினம் அனுபவத்தில் மேலேறுகிறாரோ அவர்க்கே அது சாத்தியம் ஆகும் அவர்க்கே அது இன்பம் களிப்பு அளிக்கும் அவர் தினம் ஏதோ ஒன்று கற்றுக்கொள்வர் வெங்கடேஷ்

கருவறைகள்

கருவறைகள் தாயின் கருவறைக்குள் உயிர் தங்குவது பத்து திங்கள் மட்டுமே ஆனால் சிரசிலே விளங்கு கருவறை இதயக் கருவறையில் உயிர் என்றுமே ஒளி விட்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது இது தான் கோவில் கருவறையாக புறத்தே காட்டப்பட்டுளது வெங்கடேஷ் See less

கும்பக்கரை – நீர் வீழ்ச்சி “

கும்பக்கரை – நீர் வீழ்ச்சி “ இந்த பிரபலமான இடம் தேனி ஆண்டிப்பட்டி அருகே இருக்கு தத்துவ விளக்கம் : ரேசகம் பூரகம் கும்பகம் முதல் ரெண்டு ஆற்றும் வரையில் நாம் பிறப்பிறப்பு எனும் கடல் அலை சுழற்சியில் ஆனால் கும்பகம் எனும் நிலை அடைந்துவிட்டாலோ கடல் தாண்டி கரை சேர்ந்ததாக பொருள் அதனால் கும்பக்கரை என்ற பேர் சுழி உச்சி தான் கரை அங்கு அமுதம் சுரப்பதால் அதை நீர் வீழ்ச்சியாக காட்டியிருக்கிறார் நம் முன்னோர் வெங்கடேஷ்

புருவக்கண் பூட்டு திறக்கும் முறை காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000

புருவக்கண் பூட்டு திறக்கும் முறை காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 "பூட்டுடைத்துக் கண்டவர்கள் மெத்த வுண்டு புத்தியுள்ளோர் அவர்களே சித்தர் சித்தர் ஆட்டமிதிற் காண்பார்கள் அநேகங் காட்சி அம்மம்மா வென்றார்கள் சுத்த வீரர் காட்டம் விறகெய்தாமற் தீயிடாமல் கதிர் மதிக்கு மத்தியது புருவ மத்தி நாட்டமிடக் கோபுரத்தின் வாசற் பூட்டு நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளே." விளக்கம் : சூரிய சந்திரர்க்கு நடுவே இருப்பது இந்த பூட்டு பிரணவ கோபுரத்தின் வாசல் – நாசிமுனை என்றெல்லாம் பேர் இதை திறந்தவர் வீரர் தான் ஆர் தன் நாட்டத்தை புருவமத்திமாம் இடையிலே வைத்து தவம் ஆற்றுகின்றாரோ அவர்க்கு இந்த புருவப்பூட்டு திறந்து கொள்ளும் என்றவாறு வெங்கடேஷ் See less

அருள் எப்படி வேலை செய்யும் ??

அருள் எப்படி வேலை செய்யும் ?? உண்மை சம்பவம் – இந்தியா அப்துல் கலாமுடன் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி – அவர்க்கு நிறைய பணிகள் – ஏவுகணை பற்றியது அதில் மூழ்கி இருந்தார் அத்துணையும் கலாம் அவர்கள் தான் கொடுத்தது அவர் திறம்பட செய்து கொண்டிருந்தார் அதனால் வீட்டு வேலைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் னேரம் ஒதுக்க முடியவில்லை ஒரு நாள் அவர் பெண் குழந்தைக்கு பிறந்த நாள் – வீட்டுக்கு நேரத்துக்கு செல்ல முடியவில்லை அறிந்த கலாம் அவர்கள் – அந்த விஞ்ஞானி வீட்டுக்கு தானே சென்று – அவர் மகளுக்கு வாங்க வேண்டிய புத்தாடை – கேக் சாக்லெட் வாங்கிக்கொடுத்து – கொண்டாடிவிட்டு வந்தார் இப்படித்தான் அருளும் சாதக நிலையில் மேலேறிய சாதகனுக்கு உதவி செய்யும் அவர் தேவையை அருளே தானே அறிந்து பூர்த்தி செய்யும் அது தான் அருள் அதன் குணம் அருளுக்கு இணையில்லை வெங்கடேஷ் See less

ஜீவகாருண்ணியத்துக்கும் தயவுக்கும் வேறுபாடு

ஜீவகாருண்ணியத்துக்கும் தயவுக்கும் வேறுபாடு ரொம்ப எளிது ஜீவகாருண்ணியம் = SYMPATHY தயவு = EMPATHY அவ்ளோ தான் வெங்கடேஷ் See less

தெளிவு 506

தெளிவு 506 உலக வழக்கில் இரு கை சேர்ந்தால் இரு மெய்யும் சேர்ந்துவிடும் ஆனால் சாதகர்க்கோ “ கை“யோடு சேர்ந்தால் அவன் உயிர் கரை சேர்ந்துவிடும் அவன் ஆன்மாவுடன் கலந்துவிடுவான் ஆமாம் கைலாயம் – துவாரகையோடு கலந்தால் அவன் கரை சேர்ந்துவிடுவான் ஆற்றுவது யார்?? வெங்கடேஷ் See l

நால் வகை வர்ணம் விளக்கம்

நால் வகை வர்ணம் விளக்கம் யார் மூளை பலம் உள்ளவனோ அவனே பிராமணன் யார் தோள் பலம் உள்ளவனோ அவனே சத்ரியன் யார் இடுப்பு பலம் உள்ளவனோ அவனே வைசியன் யார் கால் பலம் உள்ளவனோ அவனே சூத்திரன் வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் - எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் - எக்காலக்கண்ணி கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்? பொருள் : கண்ணில் இருக்கும் திருவடி பாய்ந்தது - கண் ஒளி பிறந்தது அதனால் வித்தை விளங்கிற்று விண்ணில் இருக்கும் ஆன்ம ஒளி கண்டதும் ஆயிற்று ஆன்ம ஒளி விளங்கி வெளிப்படுவது எப்போது ?? வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்? பொருள் : நாம் நினைக்கும் போதெல்லாம் நிறைந்த முழுமையை பூரணத்தை சுழுமுனை மேல் கண்டு கண்ணில் நீர் உதிர்ப்பது எப்போது ?? ஆன்மாவைக்கண்டு எப்போது அழுவது என வினவுகிறார் சித்தர் ?? வெங்கடேஷ் See less

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ??

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? யாரைக் கேட்டாலும் – எந்த சாதகரை கேட்டாலும் – நான் புருவ மத்தி தியானம் செய்கிறேன் – அங்கு தான் எல்லாம் இருக்கு – ஆன்மா அபெஜோதி உட்பட என்றே கூறுகிறார் இது என்ன அனியாயம் ?? இது எப்படி இருக்கு எனில்? எல்லாத்துக்கும் மோடி தான் காரணம்னு சொல்ற மாதிரி வீட்டில் நீர் வரவிலை எனில் அதுக்கு மோடி தான் காரணம் நாட்டில் மழை வெள்ளம் வந்தால் அதுக்கும் மோடி தான் காரணம் என்பார் இது நல்ல நகைச்சுவை ஆம் இதை சன்மார்க்கத்தாரும் சொல்வது – சாதகம் செயும் சன்மார்க்கத்தார் அரிதிலும் அரிது – அவரும் இப்படி கூறுவது மிகப்பெரிய சறுக்கல் – இது அவர் இன்னமும் ஆய்வு செய்து உண்மை கண்டுபிடிக்க வேணும் என்பதை காட்டுது இந்த கூற்றையே வாசி பயிற்சியாளரும் கூறுவது எனக்கு மிகவும் வியப்பும் வேதனை தருகிறது சன்மார்க்கத்தார் ஒரு பயிற்சியும் செய்யாத போது – இந்த குழு சேர்ந்தவர் தீவிர பயிற்சி ஆற்றுகின்றார் – சந்தோஷம் தான் – ஆனால் இந்த கருத்து தான் சறுக்கல் - இவர் சாதனம் செய்வதாலேயே இவர் மீது எனக்கு தனி மரியாதை மதிப்பும் உண்டு ஏனெனில் நம் சன்மார்க்க சாதனைக்கும் வாசி பயிற்சிக்கும் அனேக ஒற்றுமைகள் உள்ளன ஆனால் இவர் இம்மாதிரி உண்மைக்கு புறம்பாகக் கூறுவது தான் இவர் இன்னமும் உண்மையை – சரியான பாதை கண்டுபிடிக்கவில்லை அனுபவம் பெறவில்லை என்பதை உறுதி செயுது காலம் அருள் தான் வழி காட்ட வேணும் வெங்கடேஷ்

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் :

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் : 1 வழக்கு – ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் உண்மை : அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் 2 வழக்கு – ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே உண்மை : நல்லது ஆவதும் பெண்ணாலே – தீயவை அழிவதும் பெண்ணாலே 3 வழக்கு – கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் உண்மை கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம் 4 வழக்கு – : கல்லைக்கண்டால் நாயைக்காணோம் – நாயைக்கண்டால் கல்லைக்காணோம் உண்மை : கல்லைக்கண்டால் நாயகனைக்காணோம் – நாயகனைக்கண்டால் கல்லைக்காணோம் 5 வழக்கு – குரைக்கிற நாய் கடிக்காது உண்மை : குழைகிற நாய் கடிக்காது வ
ெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்? பொருள் : சதா நம்மை அசைவுக்கு ஆட்படுத்தும் தத்துவ குப்பைகளை வேரோடு களைந்து – தனித்து – தனிக்குமரியாக விளங்குவது எப்போது ?? ஜீவன் தத்துவக்கூட்டத்தோடு விளங்கும் ஆன்மா தனித்து நிற்கும் நான் எப்போது ஆன்ம நிலை அடைவேன் ?? என வினவுகிறார் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று நவமணி - நவரத்னம் ரெண்டும் ஒன்று தான் நவ மணி = 9 மணிகளால் ஆனது நவரத்தினமும் 9 மணிகளால் ஆனது இது பிரணவத்தை குறிக்க வந்த பதங்களாகும் அது 9ஒளிகளால் ஆனது ு வெங்கடேஷ்

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை சூலம் – திரிசூலம் ( சோம சூரியாக்னிக்கலைகள் ) பிடிக்க வேண்டிய கைகள் கரண்டி பிடித்துக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது இந்த பரிதாப நிலை எப்போது மாறும் ?? வெங்கடேஷ் See less Seen by 2

ஞானியும் உலகமும்

ஞானியும் உலகமும் மருத்துவர் : பசி இருக்கா ?? மல ஜலம் போகுது இல்லையா ? தூக்கம் சரியா இருக்கு இல்லையா ?? அப்ப நீங்க உடல் ஆரோக்கியத்தோட நல்லா இருக்கீங்கன்னு அர்த்தம் இது உலக நடை இந்த இத்யாதிகள் பசி – தாகம் நித்திரை காமம் - மல ஜல வெளியேற்றம் இல்லாதிருப்பது தான் ஞானத்துக்கு தேவை இது இல்லாதிருந்தால் தான் அவன் ஞானி இப்போ தெரிந்ததா உலகமும் ஞானியும் இரு துருவம் என்று ?? வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்? பொருள் : ஓரின்பம் = ஆன்மா உயர் ஞான வீதி = சுழுமுனை நாடி சுழுமுனை நாடியினுள் ஊடுருவி சென்று உச்சியில் பேரின்ப வீடு ஆகிய ஆன்மாவைக் கண்டு அந்த பேறு பெற்றிருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

காகிதப்பூக்கள்

காகிதப்பூக்கள் யார் யார் சாதனம் செய்யாமல் வெறும் அன்னதானம் மட்டும்செய்தும் ஜீவகாருண்ணியம் தான் எல்லாம் என இருக்கிறாரோ அவர் எல்லாம் காகிதப்பூக்கள் மாதிரி அது இறை திருவடிக்கு போய் சேரா யார் காருண்ணியத்துடன் சாதனமும் சேர்த்து ஆற்ஊகிறாரோ ?? அவர் மணம் வீசும் பூக்கள் ஆவர் அது இறை திருவடிக்கு சமர்ப்பிக்கப்படும் இது தான் வித்தியாசம் நீங்கள் எப்படி ?? வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்? பொருள் : எப்படி காந்தம் இரும்பை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டுள்ளதோ ??அவ்வாறே என் சிந்தையையும் உன் திருவடியில் – கண்ணில் இழுத்து கட்டியிருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

சன்மார்க்கம் “ – சன்மார்க்க விளக்கம்

சன்மார்க்கம் “ – சன்மார்க்க விளக்கம் சன்மார்க்கம் எனில் சத்து + மார்க்கம் சத்து எனில் மெய் உண்மை ஆம் சத்து எனில் என்றும் இருக்கும் ஆன்மா ஆகிய விந்து ஆம் சத்து எனில் விந்து ஆம் யார் தன் சாதனத்தில் விந்தை கையாள்கிறாரோ ?? அதன் மூலம் சாகா நிலைக்கு வருகிறாரோ அவர் தான் சன்மார்க்கி சோறு போடுபவனல்ல வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே நம் திருச்செந்தூர் முருகன் கோவிலும் குஜராத் சோம்னாத் ஆலய சிவலிங்கமும் ஒரே பொருளை குறிக்க வருவதாகும் ஆன்மா எனும் பிரம்மத்தை குறிக்க வருவதாகும் ரெண்டுமே கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் அது காரணமாக அமைக்கப்பட்டிருக்கு பிரம்மம் நீர் நிலையில் தான் இருக்கு – சிரசில் அதனால் தான் இவ்வாறான அமைப்பு சோம்னாத் – விந்துவாகிய சந்திரனின் பூரண கலை நிறைவைக் குறிக்க வருவது தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றே தான் வெங்கடேஷ்

சுழி நாடி பெருமை

சுழி நாடி பெருமை பேரிடர் கால மீட்பில் பெருமழை வெள்ளம் சமயம் ஒரு கனமான கயிறு கட்டி தான் மக்களை மீட்பர் அதே மாதிரி ஒரு கயிறு பிடித்து தான் மேலேறி ஒவ்வொரு உயிரும் பிறவியில் இருந்து மீளவேணும் ஆனால் அது மெல்லிய மிக மெல்லிய கயிறு மாதிரி விளங்கு சுழி நாடி வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்பு பாடல் கவனிக்கவும் வெங்கடேஷ்

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம்

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம் மனம் போச்சு நினைவும் போச்சு மெய்ஞ்ஞான வீடதனில் மேவும் போதே." விளக்கம் : தவம் சரியான திசையில் பாதையில் ஏற்படும் அனுபவத்தை சித்தர் எடுத்துரைக்கின்றார் அதாவது மெய் ஞ் ஞான வீடு பேறாம் அனுபவம் சித்திக்கும் பட்சத்தில் மனமும் நினைவும் இல்லாமல் போகும் என்றவாறு மனமும் சித்தமும் இருக்காது வெங்கடேஷ்

ஞான போதினி யோக வாசிட்டம்

ஞான போதினி யோக வாசிட்டம் “ மனமானது ஜீவனின் இச்சா சொரூபம். ஜீவன் பரமாத்மா சொரூபம் “ இது ஞானக்குறளுக்கு சமம் இரு வரியில் பல உண்மைகள் வெளிக்கு கொண்டு வந்துளது மனம் ஜீவன் ஆன்மா என தரம் படி பிரித்துக்காட்டுகிறது உலகம் மனம் ஜீவன் ஒன்றென போட்டு குழப்பிக்கொள்ளுது மனம் என்பது ஜீவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு உபகருவி அது ஆசை சலனத்துக்கு அசைவுக்கு உட்பட்டிருக்கும் தன்மை உடைத்து மனம் ஜீவனுக்கு மேல் தான் ஆன்மா ஆன்மா என்றாலும் பரமாத்மா என்றாலும் ஒன்றே தான் பர வெளி விளங்கு ஆ(த்)ன்மா தான் பரமாத்மா – அவ்ளோ தான் பரமாத்மா தான் இறுதி பொருள் அல்ல அது தான் நாம் அடையும் இறுதி அனுபவம் அல்ல உலகத்துக்கு கொழப்பத்தான் தெரியும் அதை நம்பவே கூடாது அதுக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டு தூரம் ஆன்மாவே சுத்த சிவத்துடன் அதன் திருவடியில் கலக்க வேணும் வெங்கடேஷ்

கேரம் விளையாட்டும் தியானம் தவ முறையும்

கேரம் விளையாட்டமும் தியானம் தவ முறையும் கேரம் போர்டு – இதில் 1 சாதாரண ரகம் 2 பந்தய ரகம் என ரெண்டு வகை முதலாவது வீட்டில் பயன்படுத்துவது விலை குறைவாக தரமும் குறைவாக இருக்கும் ரெண்டாவது மிக உயர்ந்த ரகம் விலையும் அதிகம் இதில் தான் பந்தயங்கள் நடைபெறும் Tournament board என்றழைப்பர் காய்கள் வழுக்கியபடி செல்லும் ஆடிக்கொண்டே இருக்கத் தோன்றும் Tournamentக்கு வீட்டு ரகம் சரிப்பட்டு வாரா Tournament ரகமே பொருந்தி வரும் அதே மாதிரியாக தவத்திலும் சரியான உயர் ரகம் என்றிருக்கு அது தான் ஞானத்துக்கும் ஒளி தேக / ஞான சித்திக்கு உதவும் மற்ற பயிற்சிகள் நெருங்க முடியாது கண் பயன்படுத்தாத முறைகள் சரியிலை உதவாது வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சுட்ட பழம் சுடாத பழம் நாம் அறிந்தது முருகன் ஔவையார்க்கு கேட்டது இதில் உண்மையான சுட்ட பழம் எது எனில் ?? விந்து தான் சுடும் பழம் அது தவத்தால் பஞ்ச இந்திரிய கூட்டுறவால் தகிக்கும் அந்த நிலையில் சுழி வழியாக மேலேறும் என் விஷனில் ஒருவர் கையால் பிடிக்க முடியாத அளவுக்கு வெப்பத்தால் துடிக்க துடிக்க அதை மேலேத்துகிறார் பின்னர் என் நெற்றியில் பதிக்கிறார் அப்போது நான் உணர்ந்து கொண்டேன் – இது தான் சுடும் பழம் இந்த பழம் – ஆன்ம கனியாக மாறுது என்பது உண்மை வெங்கடேஷ்

Thursday, May 14, 2026

சாதகனின் இலக்கணம்

சாதகனின் இலக்கணம் ஓர் அனுபவம் சித்தித்தால் அதிலே லயித்து இருந்துவிடக்கூடாது அங்கேயே டேரா போட்டிருக்கக்கூடாது அது குட்டையில் வீழ்ந்து கிடப்பதுக்கு சமம் மாறாக இன்னும் மேலே மேலே என ஏறியபடி தான் இருக்கணும் அனுபவம் வந்து கொண்டே இருக்கும் இது கடல் நீர் ஆழத்துக்கு போவதுக்கு சமம் வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? பொருள் : ஆடாமல் அசையாமல் இருப்பது சாகாமல் செத்ததுக்கு சமம் ஆகும் 36 தத்துவங்கள் ஒழிந்து தீக்கிரையாகி இருத்தல் வேகாமல் வெந்ததுக்கு சமம் ஆகும் இந்த அரும் பெரும் நிலை அடைந்து ஆன்மாவின் பொன்னடிக்கீழ் லயித்திருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

தெளிவு 510

தெளிவு 510 ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒரு வருடத்தில் Ph D டாக்டர் பட்டம் பெற முடியுமானால் ஒரு ஆன்ம சாதகனும் இந்த ஒரு பிறவியிலேயே முத்தேக சித்தி மரணமிலாப்பெரு வாழ்வு ஞான சித்தி 647 கோடிகள் யாவையும் பெறக்கூடும் வெங்கடேஷ்

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4 இடத்தைக் கொடுத்தா மடத்தை புடுங்குவான் வழக்கு – அதிக இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிடுவான் கொஞ்சம் இடம் கொடுத்தால் நம் சொத்தை அபகரித்துவிடுவான் உண்மை : தெய்வம் /ஆன்மாவுக்கு நம் நெஞ்சில் இடம் அளித்தால் அது நம் மடமையை புடுங்கிவிடும் நமக்கு நல்ல தெளிவு அறிவு நல்கும் அதாவது ஆன்மா நம் உள்ளத்தில் ஒளி வீச ஆரம்பித்தால் – தேவையில்லாத காரியம் / எண்ணம் யாவையும் எடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திவிடும் நாம் புனிதர் - புருஷோத்தமன் ஆவோம் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் இமய மலை உச்சி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதும் சுழுமுனை உச்சி ஏறுவதும் ஒன்று தான் ரெண்டும் பனி மூடியது தான் ரெண்டும் குளிர் பிரதேசம் தான் சாமானியரால் ஏற முடியாதது தான் என்ன ?? முன்னது புறம் பின்னது அகம்

சாதகன் எப்படி ??

சாதகன் எப்படி ?? ஆன்ம சாதகன் எப்படி எனில்?? புலி பதுங்குவது பாய்வதுக்குத் தான் போலும் ஆன்ம சாதகனும் ஓய்வெடுப்பதும் அவனுக்கு ஓய்வு என்பது உடல் அசதியால் அல்ல நேரம் வீணடிக்க அல்ல – கருவி கரணங்கள் களித்து இருக்க அல்ல நாளை ஓட்டத்துக்கு தீவிர சாதனத்துக்கு தயாராகி வருதலுக்கான அறிகுறியாம் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் சிரசின் உச்சியில் இருந்து அமுதம் இறக்கி உண்பதும் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி உண்பதும் தென்னை மரத்தில் இருந்து இள நீர் இறக்கி உண்பதும் ஒன்று தான் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் வெள்ளிங்கிரி – திருமலையும் ஒன்று தான் ரெண்டும் ஏழு மலைகள் கொண்டது வெள்ளிங்கிரி ஏறினால் பார்ப்பது சிவத்தை திருமலை ஏறினால் பார்ப்பது பெருமாள் ஆன ஆன்மாவை வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்? பொருள் : இரு சுவாசம் விட்டு நீங்கி – சுழுமுனை சுவாசம் பிடித்து – உச்சியில் திருவடியில் நிலைத்திருப்பது எப்போது ?? நாட்டுக்கால் ரெண்டும் = சூரிய சந்திர கலை நடுவுக்கால் = சுழுமுனை சுவாசம் ஆட்டுக்கால் = ஆடும் அடிகள் வெங்கடேஷ்

தெளிவு 516

தெளிவு 516 ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ஒன்றுவைத்து புறம் ஒன்றுபேசுவார் உறவுகலவாமை வேண்டும் பெருமைபெரு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும் மருவுபென்ஆசையை மறக்கவேவேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில் நான்வாழ வேண்டும் தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகதுய்யமணி உன்முக சைவமணி சண்முகதெய்வ மணியே. மக்களில் சிலர் – ஞானிகள் பெண்ணாசையை மறக்க வேணுமெனில் – பெண்கள் ஆணாசையை மறக்க வேணும் தானே ? அப்படி அவர்கள் பாடவிலையே என கேட்கின்றார்கள் ?? இது இரு பாலர்க்கும் பொருந்தும் பொதுவானதாம் அதாவது பாலுணர்வில் இருந்து –விடுதலை வேணும் என்பது தான் அது எதிர் பாலின மோகத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பது தான் அது இதுக்கு மகா கவி பாரதி பாடல் தான் பிரமாணம் “ மோகத்தை கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு “ மோகம் என்பது இரு பாலர்க்கும் பொதுவான வார்த்தை ஆம் வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்? பொருள் : முச்சுடர்களும் – சோமசூரியாக்கினிகள் உச்சியில் ஒன்றாக்கி ஆன்மாவின் நடனம் – அசைவை காண்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

அருள் எப்படி வேலை செயும் ?? 2

அருள் எப்படி வேலை செயும் ?? 2 உண்மை உதாரணம் : ரிலையன்ச் பொது மேலாளர் – இலை நிர்வாக இயக்குனர் பதவி அதில் இருப்பவர் உயர்ந்த – வேலைகள் தான் செய்ய வேணுமே அல்லாது – அரிசி பருப்பு வாங்க மளிகைக்கடை – தோட்ட வேலை – பால் வாங்கி வருவது போன்ற அற்ப வேலைகள் செய்வது அபத்தம் அவர் எப்படி வேலை எங்கு நிர்வாகம் கவனித்தால் கொழுத்த லாபம் பார்க்க முடியும் ?? எங்கு உற்பத்தி பின் தங்கி இருக்கு எப்படி சரி செய்வது என எண்ண வேணுமே அல்லாது இது மாதிரி சில்லறை வேலைகள் பத்தி எண்ணக்கூடாது அதுக்கு அந்த நிறுவனமே தனித்தனி பணியாள் அமர்த்தி அந்த சின்ன சின்ன வேலைகள் செய்துவிடும் அப்படித்தான் அருளும் ஆன்ம சாதகனும் அவன் சாதகத்தில் கவனம் செலுத்த அவனுக்கு தேவையானதை அதுவே பூர்த்தி செய்யும் உணவு உறையுள் தேவைகள் அருளே கவனித்துக்கொள்ளும் அதுக்கு சாதகன் தகுதி அடைந்து இருக்கோணும் இது தான் அருளின் அற்புத செயல்பாடு ஆம் வெங்கடேஷ் See less

ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும் தன் ஆசை எண்ணத்தால் காம குரோதத்தால் விகல்பத்தால் ராக துவேஷத்தால் நம்மை “ ஒரு வழிப்படுத்துவது “ மனம் ஆனால் ஆன்மாவோ இதெல்லாம் நீக்கி ‘ நம்மை நல்வழிப்படுத்துவது ஆகும் ரெண்டும் இரு துருவம் தானே?? வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்? பொருள் : வேதம் அதன் அந்தம் ஆகிய வேதாந்தம் எல்லாம் விட்டு 36 தத்துவம் அதன் அந்தம் ஆகிய நாதாந்தத்தில் வசிப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

தெளிவு 520

தெளிவு 520 எப்படி ஒலிம்பிக் போல் மிகப்பெரிய போட்டியில் வெல்ல நம் தினசரி உணவும் அதன் சத்தும் போதாதோ ?? அவ்வாறே தான் முத்தேக சித்தி மரணமிலாப் பெரு வாழ்வும் ஞான சித்திகள் எல்லாம் அடைய இந்த உலக வாழ்வின் உணவு சக்தி போதவே போதாது அதுக்கு பிரப ஞ்ச சக்தி மிக மிக அவசியம் ஆகும் இது கொண்டு தான் பசி தாகம் நித்திரை கடக்க முடியும் இது உண்மை சத்தியம்
வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல் வெட்ட வெளியாக விசும்பறிதல் எக்காலம்? பொருள் :

நூலறுந்த பட்டம் போல் அந்தரத்தில் பறப்பது போல் – நானும் எல்லா ஆதாரத்தையும் விட்டு – வெட்ட வெளியை – அந்த வானத்தை அறிவது எப்போது ?? வெங்கடேஷ்

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் ஞானியர் – “ திருவடி சரணம் - திருவடி சரணம் “‘’ அவர் அறிவில் மேலேறுகிறார் பிறவி மயக்கம் அறுக்கின்றார் சாமானியர் தாயின் வயிறே சரணம் தாயின் வயிறே சரணம் என்கிறார் பூமியில் பிறந்தபடி உள்ளார் வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்? பொருள் : பதி பசு பாசத்தில் – மூன்றாவது ஆகிய மலமாகிய பாசத்தை நீக்கி – பசுவாகிய ஜீவனை பதி ஆகிய சிவம்/ஆன்மாவில் வைத்து அன்புடன் இருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம் மெய்யகத்தே உள்ளே விளங்கும் சுடர் நோக்கில் கை அகத்தில் நெல்லிக்கனி பொருள் : சுழுமுனை உச்சியில் விளங்கும் சுடர் நோக்கினால் – ஆன்மா – அதன் அனுபவம் நம் கையில் – அது சித்திக்கும் BG Venkatesh See less

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம் கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன் அகத்தே நின்ற ஒளி பொருள் : கண்ணில் விளங்கும் இன்பம் தரும் திருவடி கண்டால் - அதுவே உள் நிற்கும் ஆன்ம ஒளி – உயிர் ஒளி ஆகும் வெங்கடேஷ்

எட்டாக்கனி – சன்மார்க்க விளக்கம்

எட்டாக்கனி – சன்மார்க்க விளக்கம் உலகில் எல்லவரும் பேசுவது தன் காதலி / அரசு /உயர் வேலை = எட்டாக்கனி ஆக இருக்கு ஆனால் உண்மையில் எது எட்டாக்கனி எனில் ?? சாமானியரால் எளிதில் அடைய முடியாததாகிய ஆன்மா தான் எட்டாக்கனி ஆகும் மிக மிக உயர்ந்த இடத்தில் – துரிய மேல் மலையில் 36 தத்துவங்கள் கடந்த நிலையில் – பேசா நிலையில் மௌனத்தில் இருப்பதால் அதுக்கு எட்டாக்கனி என பேர் வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? 155 பொருள் : சாத்திரமும் வேதங்களும் எல்லாம் பொய் ஆக்கி தனித்து நிற்கும் சூத்திரம் ஆகிய ஆன்மாவை “ கண்டு “ என் துயர் போக்கிக்கொள்வது எப்போது ?? வெங்கடேஷ்: See less

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் மதுரைக்கு செல்லும் வழியில் செங்கல்பட்டு – விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் வரத்தான் செய்யும் அது போல் தான் சுத்த சன்மார்க்க தவமாம் சிவ யோகத்தின் வழியில் குண்டலினி வாசி கிரியா யோகம் – அதன் அனுபவம் வரத்தான் செய்யும் அதனால் நான் கற்றுத்தருவது “ எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் “ என பகரல் சரியாமோ ?? இது நகைச்சுவையும் வேடிக்கையும் ஆகும் இது புரியாமல் என்னை கேலி செய்கின்றார் சித்தம் தெளிந்தோர் – சிவா வாசி என்கின்றோர் வெங்கடேஷ் See less

தெளிவு 525

தெளிவு 525 நாணல் மாதிரி வளைந்து கொடுக்கின்றார் வாழ்வில் பணியில் முன்னேறுகிறார் வசதியில் அந்தஸ்தில் எங்கோ போகிறார் அவ்வாறே தான் பிரணவத்தை வளைக்கும் ஆன்ம சாதகனும் சாதனத்தில் மேலே மேலே போகிறார் அருளில் முன்னேறுகிறார் என்ன ?? முன்னது புறம் பின்னது அகம் அவ்ளோ தான் வித்தியாசம் வெங்கடேஷ் See less

வாசி – மர்ம யோகம் – சுத்த சன்மார்க்க தவம் “

வாசி – மர்ம யோகம் – சுத்த சன்மார்க்க தவம் “ 1 வாசி – இது பலரால் பயிலப்பட்டு வரும் பிரபலமான யோகம் ஆனால் இதன் உச்ச பட்ச அனுபவம் – ஜீவசமாதி தான் மரணம் உறுதி ஆனால் சில நூறு /1000 ஆண்டுகள் கழித்து நடக்கும் 2 மர்ம யோகம் – இது ஜீவ சமாதி தாண்டி – சகச நிலையில் இருந்து பிரப ஞ்ச சக்தியை பயன்படுத்தி – உடலை காயகல்பம் செய்து நீண்ட நாள் வாழ வழி சொல்லும் அற்புத யோகம் இது பசி தூக்கம் இல்லாத வாழ்வு வாழ வைப்பதாகும் 3 சுத்த சன்மார்க்க தவம் - இதெல்லாம் தாண்டி தேகத்தை சுத்த் பிரணவ ஞான தேகமாக மாற்றி எல்லா சித்திகளும் பெற்று ஞான சித்தி வகைகள் 647 கோடி வகைகள் பெற்று வாழ்வாங்கு வாழ்வு வாழ்வதாகும் இதில் மரணமே இல்லை உடலுக்கும் ஸேர்த்து வாசி = பள்ளி படிப்பு மாதிரி +2 வரை மர்ம யோகம் – கல்லூரி படிப்பு வரை இளங்கலை – வரை சுத்த சன்மார்க்க முறை = பல்கலைக் கழகம் படிப்பு முனைவர் பட்டம் படிப்பது மாதிரி வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 1 மலை மீது கோவில் ஆன்மா துரிய மலை மேல் இருப்பதை இப்படி புற விளக்கம் கொடுத்திருக்கின்றார் நம் முன்னோர் 2 கோவிலில் குளம் நடுவே மண்டபம் ஆன்மா நீர் சூழ்ந்த நிலையில் தீவு போல் இருப்பதால் – இதன் அமைப்பு – அதன் புற வெளிப்பாடு ஆகும் இது 3 மரம் அடியில் பிள்ளையார் தெய்வம் பிரணவ மரத்தின் அடியில் 5 இந்திரியங்கள் சேர்ந்து தெய்வ அமைப்பு உண்டாக்குவதை இந்த அமைப்பால் உணர்த்தியுள்ளார் நம் முன்னோர் இது நம் இயற்கை வளத்தை காக்க செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்? பொருள் : என்னை விட்டு நீங்காது ஆன்மா என்னோடு கலந்திருக்க - நான் உனை விட்டு நீங்காது உன்னோடு - ஆன்மாவோடு கலந்து இருப்பது எப்போது ?? வெங்கடேஷ்

மனம் இப்படித்தான்

மனம் இப்படித்தான் எப்படி எனில் சிறு வயதில் வீட்டில் விருந்தினர் வந்தால் பள்ளிக்கு மட்டம் போடலாம் என சொல்லும் அதே வளர்ந்த பின்னும் அது மாறுவதே இல்லை இப்போதும் விருந்தினர் வந்தக்கால் அதனால் சாதனம் வேணாம் என சொல்லும் நாம் எவ்ளோ தான் வளர்ந்தாலும் மனம் மட்டும் மாறுவதே இல்லை அது தன் ஆசை குறைத்துக்கொள்வதே இல்லை வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்? பொருள் : செம்பில் மலம் ஆகிய களிம்பு போல் – ஜீவன் – ஆன்மாவில் ஒட்டி இருக்கும் சிவத்தை மறைத்திருக்கும் மலத்தை நீக்கி தன் சுய தரிசனம் செய்வது எப்போது ?? வெங்கடேஷ் See less

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் “ உப்பிட்டவனை உள்ளளவும் நினை “ வழக்கு : உலக நடையில் நமக்கு படி அளக்கும் எசமானரை நம் உயிர் உள்ளவரை நன்றி மறவாமல் இருக்கோணும் நல்ல சிரிப்பு உண்மைப்பொருள் இந்த உடல் தான் உப்பிட்ட பாண்டம் இதை நமக்கு அருளியவன் அந்த சிவம் அந்த சிவத்தை நாம் உள்ளத்தில் – ஆன்மாவில் வைத்து நினைக்க வேணும் வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம் பொருள் : ஊமை கனவு கண்டு அதை உரைக்க முடியா நிலை போல் – நானும் உரைக்க அறியா இன்பமாகிய ஆன்மாவைக்கண்டு அந்த இன்பத்தை நான் அறிந்து கொள்வது எப்போது ?? ஆன்ம இன்பம் வாயால் உரைக்கலாகா இன்பம் ஆகும் வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92 “ வாஸ்து கோப்பை “ இதில் நீர் நிரப்பி அதில் ஒரு மலர் /கள் போட்டு வைத்திருப்பர் இதிருந்தால் நல்லது – செழிப்பு – வீட்டுக்கும் தொழிலுக்கும் என நம்பி நம் மக்கள் வைக்கின்றார் உண்மை என்ன ?? இது ஆன்மாவின் புற வெளிப்பாடு ஆன அமைப்பு ஆகும் அதுவும் நீரால் சூழ்ந்து உள்ளது ஆன்மா மலர் ஆம் இதைத்தான் இவ்வாறு காட்டியுள்ளார் வெங்கடேஷ் See less

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று சுழுமுனை இது துரிய மலை எனவும் “ ஊசி மலை “ எனவும் விளங்குது ஊசியின் முனையில் சிறு ஓட்டை இருப்பது போல் இதன் உச்சியிலும் சிறு ஓட்டை இருப்பதால் வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்? பொருள் : கூட்டில் புழு கொட்டப்பட்டு குளவியாக உருமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்தாற்போல் – நானும் பிரணவ வீட்டில் அடைந்து ஆன்மா ஆக மாற்றம் அடைந்து அருள் வேண்டுவது எப்போது ?? வெங்கடேஷ் See less

நிதர்சனம்

நிதர்சனம் உலக வாழ்வில் பணியில் பொருள் தேடத் தெரிந்த நம் மக்களுக்கு சித்தர் பாடலுக்கும் ஞானியர் பாடலுக்கும் திருவாசகத்துக்கும் திருமந்திரத்துக்கும் பொருள் தேடத்தெரியவிலை குருடர்க்கு போல் மற்றவர் துணை வேண்டியிருக்கு வெங்கடேஷ் See less

தெளிவு 530

தெளிவு 530 மூலத்துதித்தெழுந்த முக்கோண சக்கரத்துள் வாலைதனை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே பட்டினத்தார் இந்த பூரணமாலை மூலமாக நமக்கு 2 விளக்கம் கிடைக்குது 1 மூலம் எங்கிருக்கு ?? 2 வாலை இருப்பிடம் ?? அதாவது மூலத்தில் தான் வாலை இருக்கு அப்படி எனில் மூலம் என்பது முதுகுத்தண்டின் அடி இல்லை என்பது உறுதி ஆகுது மூலம் என்பது நம் சிரசில் தான் இருக்கு அது புருவ மத்தி ஆம் இந்த பூட்டைத்திறந்தால் தான் அதனுள் வாலை அனுபவம் சித்திக்கும் அப்போது வாலை ஆகிய சிறுமி இருப்பது இரு கண் + புருவ மத்தி சேர்த்தால் வரும் முக்கோணத்தினுள் தான் என்பது உறுதி வெங்கடேஷ்

சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ??

சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ?? உண்மை உதாரணம் ஒரு அன்பர் – குரு சாமி மாதிரி – அவர்க்கு அனேக சீடர்கள் வாய் பேசா மௌன சாமி வைத்தியம் தான் தொழில் – அதனால் ஞானமும் பேசுவது அவரது வாடிக்கை அவர் விளக்கம் : சிவகாமி = சிவத்தை காமிப்பவள் – அதாவது காட்டுபவள் எப்படி ?? சூப்பர் விளக்கம் இல்ல ?? இந்த மாதிரி விளக்கம் கொடுப்பவர்க்கு உலகமெங்கும் சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் அபெஜோதி மந்திரம் அருள் நலம் – வளம் கூடட்டும் உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு தங்கள் சேவை தொடர அருள் அந்த அ பெ ஜோதி ஆசி செய்யட்டும் என கூவுகிறார் இப்படி இருந்தா சன்மார்க்கம் எப்படி உருப்படும் ?? இவர்க்கே அறிவு இப்படி என்றால் இவரை கொண்டாடும் கூட்டத்துக்கு எவ்வளவு அறிவு இருக்கோணும் சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட ஆட்கள் தான் அதிகம் – இந்த அரைவேக்காடை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் அரைவேக்காடுகள் அதனால் தான் ஜீவகாருண்ணியம் என்றால் அன்னதானம் என்ற நிலையில் இருக்கு உண்மை உணரப்படாமல் வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92
நாய் இந்த விலங்கை அனேக வீட்டில் வளர்க்கின்றார் இது விழித்த படி இருந்து நமக்கும் நம் பொருளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நன்றியுள்ளது நாய் = விழிப்புணர்வு இதோடு நாமும் வாழ்ந்தால் நம் உடலுக்கும் உயிர்க்கும் பாதுகாப்பு உண்tu ு வெங்கடேஷ்

Cheiros When Were You Born ??

Cheiros When Were You Born ?? Gemini – May 21 – June 20 Charactreristics /Traits of Geminis 1 Student 2 Story teller 3 Gypsy 4 Wanderer 5 Journalist 6 Trickster 7 Comedian 8 Child 9 Writer 10 Teacher 11 Messenger Check it out for yrself BG Venkatesh See less

குழந்தையும் மனமும்

குழந்தையும் மனமும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் இப்ப குழந்தையும் மனமும் கூட ஒன்று தான் – எப்படி என பார்ப்போமா ?? குழந்தை இருக்கின்ற வீட்டில் எந்த நேரமும் பொருட்கள் இறைந்து சிதறி கிடக்கும் ஒழுங்கு முறை இருக்காது சிரிப்பும் இருக்கும் அழுகையும் இருக்கும் சிறு பிள்ளை சமாளிக்க அதிக சக்தி வேணும் அதே போல் தான் மனம் இருக்கின்ற வரை செயல்படுகின்ற வரையிலும் அங்கு எண்ணச் சிதறல் இருக்கும் மீன் மார்க்கெட் – காய்கறி சந்தை போன்று ஒரே இரைச்சல் நிம்மதி இருக்காது , மனதை சமாளிக்கவும் அதிக சக்தி வேணும் மனவுறுதியும் அவசியம் வேணும் வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்? பொருள் : ஆன்மாவின் அசைவை எப்போது காண்பது என வினவுகிறார் ? அதாவது 5 இந்திரிய சக்திகளின் ஒளிகள் அருவி போல் கொட்ட – 1000 இதழ் தாமரை ஆகிய சிரசில் உள்ள மூளையில் ஆன்ம ஒளியின் ஆட்டம் அசைவு நடக்குது அதை எப்போது காண்பது ?? வெங்கடேஷ் See less

On a Pragmatic Front

On a Pragmatic Front First become a “ Disciple “ to your Atman Soul “ Discipline “ sets on its own unto You This is the Way But its ONE WAY BG Venkatesh See less

தெளிவு 538

தெளிவு 538 காற்று வீசினால் கொசு ஈ பறக்காது அது போல் ஆன்ம ஒளி வீசினால் மனம் செயல்படாது மலம் இருக்காது இது உண்மை வெங்கடேஷ் See less

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் ஞான சம்பந்தர் முதன்மை சீடன் கண்ணுடைய வள்ளல் : தன் ஞான நூல் “ ஒழிவில் ஒடுக்கத்தில் “ – இவ்வாறு தனக்கு உபதேசித்ததாக கூறுகிறார் “ நான் அறிவித்தாலன்றி நீ அறியாய் என்றான்” எவ்வளவு பெரிய ஞானி அவர் – ஞான சம்பந்தர் ?? அவரே தன்னை குறிப்பிடும் போது – “ நான் “ என தான் கூறியுள்ள போது - - இந்த சாதக நிலையில் இருக்கும் பேர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவிலை – அப்பா தாங்க முடியவிலை - யாம் நாம் என கூறிக்கொள்வதும் சாது என பேர் வைத்துக்கொண்டாலே போதும் – அவர் – யாம் நாம் என ஏதோ அவர் ஆணவ மலத்தை வென்ற புனிதர் – மலரகிதர் அல்லர் போல பேசுவதும் அவர் நடவடிக்கைகள் தான் எல்லாம் கலி காலம் தான் போலிகள் வேஷம் போடுகிறார்கள் வெங்கடேஷ் See less

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? பொருள் : உடல் கீழ் விழு முன் – அதை விட்டு உயிர் பிரியும் முன் – அமுதம் உற்பத்தி செயும் விதம் கல்வி அறிவது எப்போது ?? ஆவின் பால் = அமுதம் வெங்கடேஷ் See less

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் கடலில் மூழ்கி முத்து எடுக்கத் தெரிந்த நம் மக்களுக்கு தம் சிரசில் இருக்கும் அமுதக்கடலில் மூழ்கி முத்துக்குமரனை எடுக்கத்தெரியாதது முத்துக்குமரன் = ஆன்மா முருகன் வெங்கடேஷ்
மக்கள் எப்படி ?? உலக மக்கள் இந்த ஆட்டம் ஆட்றார் பாண்டி ஆட்டம் - தேவராட்டம் கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் – பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆனால் ஞானியோ ஆடுவது அருளாட்டம் அருள் அவர் வாழ்வில் விளையாடுவது தான் அது இது மற்றவர்க்கு தெரியாது காண முடியாது அவர் உரைத்தால் தான் உண்டு வெங்கடேஷ் See less

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் நம் பிறவி எனும் கடன் அடைக்கணும் அதுக்கும் அசல் வட்டி இருக்கு ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு தவ வாழ்வுக்கு வராதவரோ அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார் அசல் பக்கம் தலைவைக்கவில்லை யார் தவ வாழ்வு மேற்கொண்டு தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ அவரே அசல் செலுத்துகின்றார் தம் வினைக்கணக்கை முடிக்கின்றார் இது உண்மை நீங்கள் எப்படி ?? வெங்கடேஷ் See less

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் –

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் – இது முருகன் கோவில் வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும் ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர் வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ் See less

கிரிக்கெட்டும் வினையும்

கிரிக்கெட்டும் வினையும் கிரிக்கெட்டில் பந்தை சுழற்றி வீசினால் அது எங்கு விழும் எப்படி அவுட்டாக்கும் என்பது ஆர்க்கும் தெரியாது பேட்ஸ்மேனுக்கும் சேர்த்து Like Shane Warne - Ashwin அதே மாதிரி மனிதர் வாழ்வில் வினைகள் சுழற்றி சுழற்றி பந்து வீச ஆரம்பித்தால் எது எப்படி தாக்கும் ?? என்னென்ன நோய் வரும்?? எந்த பாகம் செயல் இழக்கும் ?? எப்படி காசு கரையும் ?? எப்ப உயிர் போகும் ? ஆர்க்கும் தெரியாது கிரிக்கெட் விளையாட்டு ஆனால் நம் வாழ்வு விளையாட்டல்ல நல்லதே நினைக்கணும் செயணும் வெங்கடேஷ்

தெளிவு 153

தெளிவு 153 ராமன் நாணை பூட்டினான் என்றால் அவன் தன் பார்வையை நெற்றியில் வைத்து கட்டினான் என பொருள் அம்பு விட்டான் என்றால் கண் பார்வை மேலே செலுத்தினான் என பொருள் ராவணனைக் கொன்றான் என்றால் மும்மலங்கள் - 7 திரைகள் தீக்கிரையாகின என பொருள் எல்லா சன்மார்க்கத்தாரும் இதை பற்றி எல்லாம் யோசிப்பதே இலை சோறு போடவே சரியா இருக்கு என் செய ?? எப்போது விடிவு வரும் ?? உலகத்துக்கும் சன்மார்க்கத்துக்கும்?? வெங்கடேஷ்

சுழி பெருமை

சுழி பெருமை சுழிமுனை கண்ணாடி அது உள்ளதை உள்ளபடி காட்டும் தன்மை உடைத்து அதனால் தான் பாம்பு மனித / பெண் ரூபமெடுத்து வந்தாலும் பாட்டு பாடும் போதும் கண்ணாடியில் அது உண்மை பாம்பு சொரூபம் காட்டுது சினிமாவில் காட்டப்பட்டாலும் இது உண்மையாக இருக்கக் கூடும் வ ெங்கடேஷ்

இவர் அவர் அல்ல

இவர் அவர் அல்ல வெள்ளை கோட் அணிந்திருந்தவர் எல்லாரும் டாக்டர் அல்லர் தலைப்பாகை தலையில் குல்லா அணிந்த எல்லவரும் வாசி சித்தி ஆனவர் அல்லர் ஜாக்கிரதை உஷார் வெங்கடேஷ்

Tuesday, May 12, 2026

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ மெய்ஞ்ஞானம் “ எண்ணம் பெருமை “ அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் 2 எல்லாம் சிவமே ஆற்றுது எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும் இதெல்லாம் எண்ணத்தின் பெருமை விஞ்ஞானம் : Thoughts can heal இரு ஞானமும் ஒன்றே உரைக்குது இது நல்ல விஷயமாயிற்றே வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே ஆலாந்துறை இருட்டுப்பள்ளம் செம்மேடு இந்த மூன்று இடங்கள் கோவையில் அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக என்ன விசேஷம் எனில் ?? மூன்றுமே ஒரே இடத்தை நம் உள்ளிலே குறிக்க வருபவை சுழி உச்சி குறிக்க வரும் இடங்கள் ஆலாந்துறை – குண்டலி தன் விஷமுகத்தால் மூடி இருக்கும் நீர் நிலை ஆகிய குளம் குழி இருட்டுப்பள்ளம் – பகாரக்குழி அது இருளில் இருப்பதால் செம்மேடு – உயர்ந்த இடத்தே விளங்கு நாதஸ்தானம் குறிக்க வந்த இடம் விஷயம் தெரிந்தவர்க்கு உண்மை புலப்படும் வெங்கடேஷ் See less

ஆன்ம சாதகர் இலக்கணம் ??

ஆன்ம சாதகர் இலக்கணம் ?? எப்படி பெரியவர்களுக்கு தனி மருந்து மாத்திரை அளவு சிறு பிள்ளைக்கு மருந்து ஊசியாக இல்லாது திரவ வடிவில் இருக்கோ ?? அப்படித் தான் தோன்றிய வேதாகமம் சரியாதிகளில் நிற்போர்க்கும் பூஜை விரதம் சாங்கியம் சடங்கு என நிற்போர்க்கும் தவம் ஆற்றாதவர்க்கும் ஆகும் ஊன்றிய வேதாகம் தவம் ஆற்றுவோர்க்கு ஞானப்படிகளில் பயணிப்போர்க்கும் ஆகும் உலகத்தார்க்கும் ஞானியர்க்கும் வித்தியாசம் வெங்கடேஷ்