Wednesday, February 4, 2015

நெற்றிகண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத - சொர்க்க வாசல் திறக்கும் வழி

நெற்றிகண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத - சொர்க்க வாசல் திறக்கும் வழி ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள் 1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல் 2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் பார்வைகளுடன் கலத்தல் 3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல் ( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் ) 4 சூக்கும பஞ்ச பூத - இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் 5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும், மனமும் அசைவற்று நிற்றல் 6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல் 7 மூலாக்கினியால் மனோ நாசம் - மனம் அடங்கிப் போதல் 8 மேலும் மூலாக்கினியால் நாதம் உண்டாகுதல் விந்து - பரவிந்துவாக மாற்றம் அடைதல் : 9. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல் 10 கண்மணிகளினால் சிவக்கலை ( விந்து ) நடு நெற்றிக்கு மேலேறுதல் 11. மூலாக்கினியால் விந்து - பரவிந்துவாக மாறுதல் 12 நாதத்தால் பரவிந்து வாசியுடன் கலத்தல் 13 விந்து + வாசி சுழிமுனை நாடியில் பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல் 14 பிரமரந்திரம் திறப்பு - பரமபத வாசல் திறப்பு - உள் பிரவேசித்தல் 15 மூலாக்கினியின் தகிப்பால் மும்மல நாசம் - பழ வினைகளும் நாசம் 16 ஆன்ம தரிசனம் - மௌனம் - 1008 இதழ் கமலம் முற்றும்