Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 30, 2026
அருள் அனுபவம் 4 – 2026
அருள் அனுபவம் 4 – 2026
அருள் அற்புதம்
மே 2026
நான் அருள் பெறப்போகும் விஷன் வந்த வண்ணம் இருந்தது – 15 நாட்களுக்கு
நான் அருள் பத்திய சிந்தையுடனே இருந்தேன் – வேறு எண்ணமே இல்லை
திருமணம் நடந்தே நட ந்தது – அருளுடன் பந்தம் சம்பந்தம் தொடர்பு ஏற்பட்டது
இது நடந்த பின் வந்த விஷன் :
1 பார்க்க பார்க்க உணவு பெருகுகிறது அக்ஷய திரிதியை அனுபவம்
2 முடி நன்கு வளர்ந்து இருக்கு
3 எல்லா மருந்தையும் நிப்பாட்டுகிறார்
எல்லாம் அற்புதம்
அருள் அற்புதம்
வெங்கடேஷ்
Kayakalpam n Tyre retreading 2
Kayakalpam n Tyre retreading 2
வண்டி சக்கரம் tyre
மறு பயன்பாட்டு சுழற்சியும்
உடல் நீட்டிக்கும் காயகல்ப பயிற்சியும் ஒன்றே
ரிட்ரீடிங்கில்
டயர் அடிப்பாகம் ஒட்டிவிடுவர்
உடலுக்கு தவத்தால்
எலும்பின் உதவியால் கல்பம் ஆகும்
கண்ணுக்கும் எலும்புக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்
மன்றம் : ஆசனம் சுருக்கும் அஸ்வினி முத்ரையால் அல்ல
பலமுறை செய்த பின்
ஒரு கட்டத்தில் டயரை மாற்றியே ஆக வேண்டும் மாதிரியாக
ஒரு கட்டத்தில் மரணம் நிச்சயம் ஆன்ம சாதகனுக்கு
காயகல்பம் மரணமிலாப்பெருவாழ்வுக்கு வழி காட்டாது
அது வேற இது வேற
வெங்கடேஷ்
அக்காலமும் இக்காலமும்
அக்காலமும் இக்காலமும்
1 அக்காலம் : வள்ளலார் - சாகாதவனே சன்மார்க்கி
இக்காலம் : சோறு போடுபவனே சன்மார்க்கி
2 அக்காலம் : வள்ளலார் - மரணமிலாப் பெருவாழ்வு - முத்தேகச் சித்தி தான் வாழ்க்கையின் இலட்சியம்
இக்காலம் : அதற்கெல்லாம் வழி தெரியாது - மரணமிலாப் பெருவாழ்வு மீது நம்பிக்கையில்லை - சாத்தியமில்லை
வெங்கடேஷ்
கண்மணி தவம் பெருமை
கண்மணி தவம் பெருமை
பட்டினத்தார் பாடல்
மூக்குமுனை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே
பொருள் :
கண் மூடாமல், திறந்தபடி , புருவ மத்திமம் ஊன்றி கவனித்து , தவம் செய்தல் சரியான முறை
இவ்வாறாக செய்யாமல் நான் இழிந்து போனேன். பிறவியில் சிக்கினேன். ஆன்ம ஞானம் அடையவில்லை
வெங்கடேஷ்
மேல் - கீழ்
மேல் - கீழ்
ஐம்புலன் வகை பணி தோற்றம்
அறிவார்க்கே உலகு
வினை தீர்க்கும் வகை அறிவார்க்கே
ஒளி தேகம் ஞான சித்தி கைவல்யம்
சாகாக்கல்வி மரணமிலாப் பெருவாழ்வும் சித்தியாகும்
வெங்கடேஷ்
Kayakalpam n Tyre retreading
Kayakalpam n Tyre retreading
வண்டி சக்கரம் tyre
மறு பயன்பாட்டு சுழற்சியும்
உடல் நீட்டிக்கும் காயகல்ப பயிற்சியும் ஒன்றே
ரிட்ரீடிங்கில்
டயர் அடிப்பாகம் ஒட்டிவிடுவர்
உடலுக்கு தவத்தால்
எலும்பின் உதவியால் கல்பம் ஆகும்
கண்ணுக்கும் எலும்புக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்
மன்றம் : ஆசனம் சுருக்கும் அஸ்வினி முத்ரையால் அல்ல
வெங்கடேஷ்
திருவீழிமிழலை
திருவீழிமிழலை
திருவீழிமிழலை திருத்தலத்தில் ஒரு கிளி நாள்தோறும் இறைவனை வழிபடுவதாகத் திருஞானசம்பந்தர் பெருமான் தனது தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். இது ஒரு பறவையின் செயல் போலத் தோன்றினாலும், மெய்யியலின்படி இது உமது நரம்பு மண்டலத்திற்குள் நிகழும் ஒரு மாபெரும் மாற்றத்தின் குறியீடாகும். அலைபாயும் எண்ணங்களை அடக்கி, அகங்காரத்தை ஒழித்து, உள் ஒளியை நிலைநிறுத்தும் ரகசியத்தை இந்தப் பாடல் விளக்குகிறது.
சம்பந்தர் அருளிய திருமுறைப் பாடல்
"ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு ஈரிருவார்க்கு இரங்கி நின்று
நோயிய நான் மறைப்பொருளை உரைத்து ஒளிசோர் நெறியளித்தோன்
நின்ற கோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு
வேய்மலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே."
கபால மெய்ஞ்ஞான விளக்கம்
இந்தத் திருப்பாடல் உமது உடலில் நிகழும் உயிரியல் மாற்றங்களை மிக நுட்பமாக விளக்குகிறது:
கிளி (அகங்கார மனம்): கிளி என்பது உமது அலைபாயும் எண்ண வலையமைப்பைக் குறிக்கும். இது "நான், நான்" என்று அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் பண்பு கொண்டது. இத்தலத்தின் அதிசயம் என்பது, இந்த அலைபாயும் எண்ணக் கிளி, உள் நாதத்தைக் கேட்டு வேதப் பொருளை (இறைத் தன்மையை) உணர்வதாகும்.
வேய் (சுழுமுனை நாடி): 'வேய்' என்பது மூங்கில். இது நேராக நிமிர்ந்து நிற்கும் உமது சுழுமுனை நாடியைக் குறிக்கிறது. இந்தச் சுழுமுனைப் பாதையில் உமது விழிப்புணர்வு ஏறும் போது, எண்ணங்கள் இறை நாதமாக மாற்றம் பெறுகின்றன.
வடவாலும் திருவடிப் பார்வையும்: 'வடவால்' என்பது உமது அசைவற்ற அகப்பார்வையைக் குறிக்கிறது. இந்தப் பார்வையின் கீழ் உமது இடது மற்றும் வலது நரம்புப் பாதைகள் (இடா மற்றும் பிங்களை) சமநிலை அடைகின்றன.
நோயிய நான் (அகங்கார நோய்): "நான்" எனும் அகங்காரமே ஒரு நோய் எனத் திருமறை கூறுகிறது. அந்த அகங்காரத் திரையை விலக்கி, மறைக்கப்பட்டிருக்கும் உச்சி ஒளியை வெளிப்படுத்துவதே இப்பாடலின் சாரமாகும்.
ஓசை (உள் நாதம்): பல நாட்கள் பயிற்சியால் (பண்டிதர்கள்) கேட்கப்படும் அந்த உள் ஒலியே 'நாத்' எனப்படுகிறது. இந்தக் காதுகளுக்குள் கேட்கும் ஒலியைக் கேட்டு, உமது எண்ணக் கிளி அடங்குவதே திருவீழிமிழலை என்ற உள் அனுபவம்.
உடல்சார்ந்த உயிரியல் அடையாளங்கள்
இந்த அகப் பயிற்சியின் போது ஒரு சாதகன் பின்வரும் மாற்றங்களை உணர முடியும்:
புருவ மத்தியில் ஒரு மின்னல் போன்ற ஒளியைக் காண முடியும்.
முதுகெலும்பின் வழியாக ஒரு மெல்லிய மின்னோட்டம் உச்சிக்கு ஏறுவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
காதுகளுக்குள் 'ஓம்' அல்லது 'சிண்' என்ற ஒலி நிலையாகக் கேட்கும்.
"நான்" எனும் அடையாளம் மறைந்து, ஒரு மாபெரும் மௌனமும் சாட்சி உணர்வும் தோன்றும்.
உச்சிக் கபாலத்தில் ஒரு குளிர்ந்த இனிப்பு நீர்மம் (அமுது) சுரப்பதை உணரலாம்.
நன்றி குருஜி பதே வெங்கடேஷ்
சேருமிடம் நபர் முக்கியம்
சேருமிடம் நபர் முக்கியம்
பார்த்து பார்த்து ஆராய்ந்து சேரணும்
கறிவேப்பிலை மிளகாய் உடன் சேர்ந்த
அரிசி பருக்கை குப்பையில் சேரும்
காய்கறியுடன் சேர்ந்தது வயிறு சேரும்
முப்பத்தறுவருடன் சேர்ந்த உயிர்
மனம் ஐம்புலன் வசமான உயிர் எமனிடம் சேரும்
தனிக்குமரியாம் ஆன்மாவுடன் சேர்ந்த ஜீவன்
இறப்பொழிக்கும் வாழ்வாங்கு வாழும்
சுத்த,சிவத்துடன் கலக்கும்
உங்க விருப்பம் ??
வெங்கடேஷ்
பக்ஷ பேதமும் - ஆன்மா பெருமையும்
பக்ஷ பேதமும் - ஆன்மா பெருமையும்
பக்ஷ பேதத்தில் ஆண் பெண் சேர்க்கை இல்லா கரு உருவாக்க முடியும் பக்குவ நிலை உள்ளது
இது மகாபாரத இதிகாசத்தால் கர்ணன் பிறப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது
இதே மாதிரி காரண காரியம் வைத்து ,
காரண ஆன்மா - காரிய ஜீவன் உடல் அமைப்பை தானே முடிவு செய்து கொளும் எனவும் வள்ளலார் உரை நடையில் தெரிவித்துள்ளர்
இது எப்படி சாத்தியம் ஆகும் என்பது என் நீண்ட நாள் கேள்வி
உண்மையா ?? இல்லை இடை செருகலா ?? சாத்தியம் தான் உடல் அமைப்பு எதன் அடிப்படையில் அமைகிறது என்று நோக்கில் , வித்தியா தத்துவம் தான் நிர்ணயிக்குது சூக்கும் தேகத்தில் பஞ்ச கஞ்சகம் + புரியட்ட காயம் தான் இதனை நிர்ணயம் செய்கிறது என்பதால் , எப்போது இந்த தத்துவம் நம் வசம் ஆகுதோ ?? அப்போது உடல் அமைப்பு , எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள முடியும் காலம் தேசம் பெற்றோர் கல்வி வாழ்க்கை செழிப்பு அந்தஸ்து ஆயுள் எல்லாம் நாமே முடிவு செய்து கொள்ள முடியும் என்பது புலனாகுது இதனை நிரூபிக்கும் அகவல் வரிகள் : 571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும் என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே இந்த வரிகள் அனுபவமாக , இறை வசம் இருக்கும் தத்துவ செயல்பாடு கட்டுப்பாடு எப்போது நம் கைக்கு வருதோ அப்போது இதெல்லாம் சாத்தியம் ஆகும் மேலும் , “ தன் அரசே செலுத்தி நின்ற தத்துவங்கள் அனைத்தையும் என் வசமாக்கிய என் தனித் தந்தையே “ என்ற வரிகளும் உள இதனை கருத்தில் கொண்டே உரை நடையில் இவ்வாறு எழுதியுள்ளார் வள்ளல் பெருமான் இந்த வரிகள் எனக்கு விஷன் தான் எடுத்துக்கூறியது அதுக்கு பல மாதங்கள் ஆனது இதெல்லாம் நாம் ஆன்மா அடைந்து அதன் அனுபவத்தில் அதன் சன்னிதானத்தில் நடக்கும் வெங்கடேஷ்
உண்மையா ?? இல்லை இடை செருகலா ?? சாத்தியம் தான் உடல் அமைப்பு எதன் அடிப்படையில் அமைகிறது என்று நோக்கில் , வித்தியா தத்துவம் தான் நிர்ணயிக்குது சூக்கும் தேகத்தில் பஞ்ச கஞ்சகம் + புரியட்ட காயம் தான் இதனை நிர்ணயம் செய்கிறது என்பதால் , எப்போது இந்த தத்துவம் நம் வசம் ஆகுதோ ?? அப்போது உடல் அமைப்பு , எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள முடியும் காலம் தேசம் பெற்றோர் கல்வி வாழ்க்கை செழிப்பு அந்தஸ்து ஆயுள் எல்லாம் நாமே முடிவு செய்து கொள்ள முடியும் என்பது புலனாகுது இதனை நிரூபிக்கும் அகவல் வரிகள் : 571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும் என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே இந்த வரிகள் அனுபவமாக , இறை வசம் இருக்கும் தத்துவ செயல்பாடு கட்டுப்பாடு எப்போது நம் கைக்கு வருதோ அப்போது இதெல்லாம் சாத்தியம் ஆகும் மேலும் , “ தன் அரசே செலுத்தி நின்ற தத்துவங்கள் அனைத்தையும் என் வசமாக்கிய என் தனித் தந்தையே “ என்ற வரிகளும் உள இதனை கருத்தில் கொண்டே உரை நடையில் இவ்வாறு எழுதியுள்ளார் வள்ளல் பெருமான் இந்த வரிகள் எனக்கு விஷன் தான் எடுத்துக்கூறியது அதுக்கு பல மாதங்கள் ஆனது இதெல்லாம் நாம் ஆன்மா அடைந்து அதன் அனுபவத்தில் அதன் சன்னிதானத்தில் நடக்கும் வெங்கடேஷ்
காரண - சூக்கும தேகமும் ஸ்தூல தேகமும் “
காரண - சூக்கும தேகமும் ஸ்தூல தேகமும் “
சூக்கும தேகத்தின் புரியட்ட காயம் + பஞ்ச கஞ்சுகம் தான்
ஸ்தூல தேகத்தின் அமைப்பு மற்றும் கல்வி ஆயுள் செல்வம் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதால்
இந்த தத்துவங்களை நம் வசமாக்கினால்
ஸ்தூல உடலின் அமைப்பும் இதர கல்வி செல்வம் ஆரோக்கியம் எல்லாம்
நாமே நிர்ணயம் செய்து கொள முடியும் என்பது திண்ணம்
எப்படி ஆற்றுவது ??
வெங்கடேஷ்
நிதர்சனம்
நிதர்சனம்
எப்படி ஒரு இரு சக்கர வண்டி
நாள் ஆக ஆக
இண்டிகேட்டர் பல்பு உடைந்திருக்கும்
வேகம் / எரிபொருள் காட்டும் கருவி பழுது ஆகி வேலை செயாது
ஆனாலும் நாம் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பது மாதிரி தான்
நம் உடலும்
சில பல உறுப்புகள் பழுதானாலும்
உடல் இயங்கிக்கொண்டு தான் இருக்கும்
கண்ணுக்கு கண்ணாடி
காதுக்கு கேட்கும் கருவி
இரத்த அழுத்தம் சுகர்க்கு மாத்திரை மாதிரி ஏற்பாடு செய்து வண்டி ஓடும்
பல காலம் கழித்து வண்டி பழுதாகி பழைய இரும்புக்கடைக்கு போல்
உடல் சுடுகாடு அடையும்
வெங்கடேஷ்
ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “
ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “
“ ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “
இது நம் கண்மணி தவத்தை / அதன் முறைமை / பெருமை பறைசாற்றுவதாக அமைந்துளது
திருவடியை ஊன்றி சாம்பவி செய்தால் அது தானாகவே
தூக்கிய பாதமாக மாத்திவிடும் ( கேசரி )
ஆஹா அருமை அருமை
ஒரு வரியில் சாதனத்தை தவ முறை வெளிப்படுத்திவிட்டார் நம் முன்னோர்
அனுபவம் எல்லாம் தானாகவே வரணும் நாமாக வற்புறுத்தி செய்தல்ல
வெங்கடேஷ்
கண் தவம் பெருமை வல்லமை
கண் தவம் பெருமை வல்லமை
ஒரு அரசன்
தன் கண் முன்னே
எதிரிப் படை வீரர்கள்
மண்ணில் சாய்வதைப் பார்ப்பான்
ஒரு வெற்றி கண்ட ஆன்ம சாதனும்
தன் சாதனா பலத்தால்
அதன் வல்லமையால்
தன் கண் முன்னேயே
36 தத்துவம் கழலுவதை காண்பான்
சூக்கும காரண தேகம் த த்துவங்கள் கழன்று வருவதை காண்பான்
துவஜஸ்தம்பம் ஏற ஏற இது நடக்கும்
கண் தவம் பெருமை வல்லமை
வெங்கடேஷ்
Wednesday, April 29, 2026
நிதர்சனம்
நிதர்சனம்
ஆறாறு தத்துவத்தை கண்ணால் காணத்தெரிந்த ஒருவனுக்குத் தான்
அண்டசராசரம் தன்னுள் தன் சிரசினுள் காண முடியும்
வெங்கடேஷ்
நிதர்சனம்
நிதர்சனம்
பெண்ணின் ஆயுதம் கண்ணீர்
என்னுடையது மௌனம் மட்டுமே
இருவரும் வெற்றியாளர்கள் தான்
வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
தெளிவு அடைந்த பின்
ஒரு பிறவியில் முத்தேக சித்தி
புருஷார்த்தத்துக்கு ஆசைப்படுவது என்பது
ஒரு முதிர்ந்த புற்று நோயாளி
ஒரு சுற்று கீமோவில் குணமடையும் என எதிர்ப்பார்ப்பது மாதிரி
ரெண்டுமே நடக்காத ஒன்று
வெங்கடேஷ்
தெளிவு 700
தெளிவு 700
உடலில் ஈரம் இருந்தால் தான்
தடவும் Moisturising cream கிரீம் ஒட்டுமா போல்
நெஞ்சில் ஈரம் இருந்தால் தான்
ஈசன் அருள் நம்மில் ஒட்டும்
வெங்கடேஷ்
தெளிவு 701
தெளிவு 701
கருக்கொளும் குழியும் கருக்கொளாக் குழியும்
உடல் சேர்க்கையில் விந்து கீழிறங்கினால்
அது சேர்வது கருக்கொளும் குழி
அதுவே மேலேறினால்
அது சேர்வது கருக்கொளாக் குழி
கருக்கொளாக்குழி சேர்ந்துவிட்ட ஒருவனுக்கு
மீண்டும் கரு புகும் காரியமில்லை
வெங்கடேஷ்
தெளிவு 702
தெளிவு 702
புண் ஆற வேணுமெனில்
அதை தொட்டுக்கொண்டே இருக்கக்கூடாது போலும்
பசி தாகம் நித்ரை காமம் கடக்க வேணுமெனில் ??
அதை பத்திய எண்ணம் இருக்கக்கூடாது
அதைத் தாண்டிய சிந்தனை வேணும்
வெங்கடேஷ்
மனம் அடங்கிற்று என எப்படி அறிவது ??
மனம் அடங்கிற்று என எப்படி அறிவது ??
நாம் பழைய நினைவுகளுக்கு போனால்
அதில் மூழ்காமல் – அதிலே திளைத்து
ஐயோ இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ??
ஏன் ஏன் என கேள்வி கேட்காமல்
நாம் அசராமல் அசையாமல் கதி கலங்காமல் நின்றால்
நாம் இறந்த காலத்தால் பாதிப்பு அடையாமல் நின்றாலும்
நாம் மனதை எதிர்ப்பதாக அர்த்தம்
அப்போது மனம் அது அடங்கிவிட்டது என கொள்ளலாம்
மனம் இறந்த காலம் தான் சிறந்த காலம் என நம்ப வைக்கும்
நிகழ் காலத்தில் வாழ வைக்காது தங்க விடாது
MIND is a Tyrant and Despotic
வ
ெங்கடேஷ்
மனம் எத்தகையது ??
மனம் எத்தகையது ??
எனில் ??
கொடுங்கோல் அரசன் – கொடுமை செயும் மாமியார் மாதிரி
எப்படி ஒரு கொடுமை செயும் மாமியார்
தன் மருமகளை
கர்ப்பிணி என்றும் பாராமல்
வீட்டு வேலை எல்லாம் ஓய்வே அளிக்காமல் பிழிந்து வாங்குகிறாரோ ??
உணவு அளவாக அளித்தும் கொடுமை செய்கிறாரோ??
அவ்வாறே தான் மனமும்
நம் உடலுக்கு ஓய்வு வேண்டுமென்றாலும் கூட
அப்போது கூட இடைவிடாது
கட்டளை பிறப்பித்து வேலை வாங்கும்
உறக்கத்தை தள்ளிப்போட செய்யும்
உடல் நிலை பற்றி கவலைப்படாது
அது ரொம்ப சுய நலம் பிடித்தது
தன் சுகத்துக்கு இடைஞ்சல் செயும் எதுவும் பிடிக்காது
அதனால் தான் நம் ஞானியர் : Mind is a Worst master but a Good Servant
But I will say
Mind is a Tyrant and Highly Despotic
ெங்கடேஷ்
Seen by 12
தெளிவு 703
தெளிவு 703
எப்படி வெளியில் இருந்து
நாம் நிர்வாணமாக இந்த உலகுக்கு வந்தோமோ ??
அதே நிர்வாணமாகத்தான்
அந்த வெளிக்கு மீண்டும் செல்ல முடியும்
அதாவது தத்துவங்கள் ஆகிய ஆடைகள் அற்ற நிலை
வ
ெங்கடேஷ்
Seen by 11
Esoterica
Esoterica
When it's their Time n Turn and Tables are turned , all including Parents , wife , children , relatives and friends will take revenge . But God will never ever take so. BG Badhey Venkatesh
When it's their Time n Turn and Tables are turned , all including Parents , wife , children , relatives and friends will take revenge . But God will never ever take so. BG Badhey Venkatesh
Characteristic of a True Saint
Characteristic of a True Saint :
He's A Catalyst , brings about changes around him , without he undergoing any changes
BG V
தெளிவு
தெளிவு
எப்படி
கோடீஸ்வரத் தந்தை
தன் மகன் ரோட்டோர கடையிலும்
கையேந்திபவனிலும் உண்பதை விரூம்பாரோ
அவ்வாறே தான்
ஆன்மாவும் நாம் தாழ்ந்து போவதை விரும்புவதிலை.
நம்மின் உலக சார்பு வாழ்வையும் சேர்த்து
அதனால் அதன் சார்பை துண்டித்தும்
உலகத்தின் சார்பிலிருந்து விடுதலை அளிக்கும்
வெங்கடேஷ்
There are Two types of People.
There are Two types of People.
Cat 1 People who peep into Spirituality thru Science.
Cat 2 People who explore Spirituality thru Spirituality itself.
Cat 1 mostly not successful n don't get correct experiences.
Cat 2 are highly successful n travel on the right track.
BG Badhey Venkatesh
Limitations of Science
Limitations of Science
1. Science may make you a Super Power Nation, a Super Man , a Hi Tech man .But can not make you kind enough to be Humane. A Samaritan.
Becoz Science does not know how to effect these massive Transformation upon humans.
All the developments have so far turned this planet to worst place to live.
Only Yoga can turn a man to Humane , Gem among Humans thru character re organisation .
2. DNA Hybridization : Science boasts as though this break through, can produce better off springs.
Yes of course with desired skill n intelligence n competence . But can't erase of already present bad n unwanted characters like arrogance,hate, lust, greed and make real Human.
This is possible thru Semen Sublimation which science is not aware of and trails behind Spirituality by Light years.
This is the Greatness of Spirituality n Limitation of Science.
BG Venkatesh
Seen by 11
சாதனையின் வல்லபம்
சாதனையின் வல்லபம்
ஒரு அரசன்
தன் கண் முன்னே
எதிரிப் படை வீரர்கள்
மண்ணில் சாய்வதைப் பார்ப்பான்
ஒரு வெற்றி கண்ட ஆன்ம சாதனும்
தன் சாதனா பலத்தால்
அதன் வல்லமையால்
தன் கண் முன்னேயே
சரியை கிரியை கழலுவதைப் பார்ப்பான்
அதாவது ஆலய விஜயம்
கோவில் சடங்கு , விரதம்
கடுஞ் சொல் சுடு சொல்லாடல்
அழுக்கு ஆடை அணிதல்
எலாம் தன்னை விட்டு நீங்குவதைப் பார்ப்பான்
இது இந்திரிய கரண ஒழுக்கம்
தானாகவே அவனை அடைதலாம்
இது உண்மை நிலை ஆம்
வ
ெங்கடேஷ்
Seen by 11
எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி???
எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி???
கருமுட்டை திறந்திருந்தால் தான்
விந்தணு உள் நுழைய முடியும்
மொட்டு மலருமுன்னம்
வண்டு முட்டி முட்டி என் பயன்??
பிரபஞ்ச சக்தி கேட்கும் நிலையில் இருக்கும் போது
அது தயாராக இருக்கும் போது மட்டும்
நம் ஆசைகள் பிரார்த்தனைகள் வைத்தால்
அது நிறைவேற்றிக் கொடுக்கும்
இது பிரபஞ்ச நியதி , விதியும் கூட
வெங்கடேஷ்
நகைச்சுவையும் வேடிக்கையும் "
நகைச்சுவையும் வேடிக்கையும் "
ஒரு அரசியல்வாதி
" ஊழல் - வறுமை ஒழித்துவிடுவேன் " என்பது
எப்படி நகைச்சுவையும் வேடிக்கையோ ??
அப்படித்தான் ஆன்மீக குருக்கள் - மன்றங்கள்
குண்டலினி மேலேற்றுவேன் கீழிறக்குவேன் என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் ஆகும்
ரெண்டும் நடக்காத ஒன்று
வெங்கடேஷ்
மன வளக்கலை மன்றம் சிரிப்பும் வேடிக்கையும்
மன வளக்கலை மன்றம் சிரிப்பும் வேடிக்கையும்
ஓஜஸ் மூச்சு
இதை இங்கு என் அறியாப் பருவத்தில் கற்ற போது நடந்தது
எனக்கு கற்பித்தவர் பீடி குடித்து அந்த வாயுடனே , முதுகு தொட்டு மேலேற்றி நெற்றிபொட்டில் நிறுத்தி இப்போது குண்டலினி இங்கு வந்திடுச்சி என்றார்
நல்ல ஹாஸ்யம்
ஒஜஸ் மூச்சு
ஆசனம் சுருக்கி சுவாசத்தை தொண்டை வழியாக மேலேற்ற கூறினார்
ஓஜஸ் மூச்சு எனில்
நெருப்பு காற்று மூச்சு ஆம்
இதுக்கும் இவர் பயிற்சிக்கும் தொடர்பேயிலை
அதுக்கு கண்துணை அவசியம் ஆகும்
கண் வைத்து தான் அனல் உருவாக்க முடியும்
மன வ . கலை மன்ற பயிற்சி எலாம் உண்மைத்தன்மை இலை
அடிப்படையே தப்பு
என் கெட்ட நேரம்
பின் நான் தெளிந்து கொண்டேன்
பிழைத்து கொண்டேன்
வெங்கடேஷ்
சிசு அழுகை
சிசு அழுகை
முதல் 3 மாதத்துக்கு வெறும் வண்ணம் மட்டும் தெரியும்
உருவம் தெரியாது
அதனால் பார்க்க முடியாது .பார்க்காது சிரிக்காது
இதுக்கு முக்கிய காரணம்
பார்ப்பான் எனும் ஒளி வஸ்து இன்னம் சிரசில் வந்து அமரவிலை
அது வருலதுக்கு 3 மாதம் ஆகுது
அதன் பின் பார்க்க சிரிக்க எலாம் முடியுது
அந்த பார்ப்பான் தான் ஆன்ம ஒளி
உண்மையில் அது தான் பார்க்குது, ஸ்தாலக் கண் அல்ல
அதனால் தான் இறப்பை டாக்டர் கண்ணில் டார்ச் அடித்து அதனால் அதில் ஒளி தெரியவிலையெனில் உயிர் போயிடுச்சு என்கிறார்
இது கண் உயிர் தொடர்பு
ஆனால் ஆரும் நம்புவதிலை, சன்மார்க்க சங்கத்தார் உட்பட
பார்ப்பான் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி குலம் அல்ல
செயலால் வந்தது இந்த சொல்
பிறப்பால் வருவதல்ல
நெற்றிக்கண் தான் பார்ப்பான்
வெங்கடேஷ்
ஐயம் இட்டு உண் சன்மார்க்க விளக்கம்
ஐயம் இட்டு உண் சன்மார்க்க விளக்கம்
கல்வி ஞானியர் , பள்ளியின் விளக்கம் :
காக்கை உள்ளிட்ட பிற உயிர்க்கு அளித்துப் பின் உண்
ஆனால் இதல்ல உண்மை விளக்கம்
மெய்ஞ்ஞான விளக்கம்
இறையிருக்கும் கண்ணுக்கு காட்டிய பின் உண் என்பதே உண்மை விளக்கம் ஆம்
ஐ என்பது கண்ணைக் குறிப்பது
இதை கொண்டு ஞான சாதனம் செய்வோர் ஐயர்
இது குலம் உயர் சாதி குறிக்க வரவிலை
இந்த பயிற்சி பெயர் வேதிகை , அதனால் இதை ஆற்றுவோர் யாவரும் வேதியர்
இது பிறப்பால் வருவதல்ல
நான் சிறுவனாக இருந்த போது என் பாட்டி கூட இவ்வாறு கூறியுளார்
அவர் இவ்வாறு செய்த பின் தான் உண்பார்
அவர் சன்மார்க்கி அல்ல
ஆனால் ஆரும் ஏற்றுக்கொள்வதிலை சன்மார்க்க சங்கத்தார் உட்பட
உண்மைக்கும் உலகத்துக்கும் தூரம் மிக மிக அதிகம்
வெங்கடேஷ்
பிரபஞ்ச சக்தி 5
பிரபஞ்ச சக்தி 5
இதன் பயன்கள் பற்றி
1. இதனுடன் தொடர்பு ஏற்பட்டுளதால் , நம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொடுக்கும்
விருப்பம் உட்பட
ஒரு பொருள் வேணுமென எண்ணிய மாத்திரத்தில் , அது நம் கைக்கு வந்துவிடும்
ஒரு உணவு உண்ண ஆசைப்பட்டால் போதும், பக்கத்து எதிர் வீடு கொணர்ந்து கொடுப்பர்
இது மாதிரி நிறைய நடக்கும்
நான் சொன்னது சாம்பிள் தான்
2 . உடல் நம் கட்டளைக்கு அடிபணியும்
3.பஞ்ச பூதம் கூட நமக்கு கட்டுப்பட்டு பணி செயும்
4.உடல் சோர்வு அடைந்திருந்தால் , இது பாய்ந்து களைப்பு நீக்கும்
உற்சாகம் புத்துணரச்சி அளிக்கும்
5.உறக்கம் தள்ளிப் போடலாம்
பி சக்தி வைத்து சமாளிக்கலாம்
தொடரும்
வெங்கடேஷ்
பிரபஞ்ச சக்தி அண்டப் பேராற்றல் 4
பிரபஞ்ச சக்தி அண்டப் பேராற்றல் 4
இது உரைக்கும் விதி
1. வெறுமை அடைந்தால் , நான் என் அருட்கொடையால் உனை நிரப்புவேன்
2.கேளுங்கள் கொடுக்கப்படும்
3. கேட்டால் இங்கே மறுப்பது யாரு
ெங்கடேஷ்
Seen by 5
பிரபஞ்ச சக்தி அண்டப்பேராற்றல் 3
பிரபஞ்ச சக்தி அண்டப்பேராற்றல் 3
இதன் அனுபவம் எப்படி எனில்
நெருப்பு அக்னி துளிகளாக சிரசில் இருக்கும் அண்ட வெளியில் இருந்து ஆன்ம சாதகனை அடையுது.
வியப்பு என்ன எனில்
அந்த அக்னியானது சுடாமல் மிகுந்த குளிர்ச்சி அளிக்கும் வவ்லமை உடைத்து
அந்த குளிர்ச்சி தாங்க முடியாததாகக் கூட இருக்கும் சில சமயம்
இதன் விதி
அதி சிலேத்துமம் அதி உஷ்ணம்
அதி உஷணம் அதி சிலைத்துமம்
இந்த குளிர்ச்சி உடவ் முழுதும் பரவ பரவ , கிளர்ச்சியாக இருக்கும்
இது ஞான வழி
தவம் செயும் போது இந்த அனுபவம் கூடிக்கொண்டே போகும்
மனம் வெறுமை , எண்ணமிலா நிலை கூட கூட இந்த அனுபவம் சித்திக்கும்
ஆனால் ரெய்கி மாஸ்டர்கள் வேறு விதமாக செய்கிறார்
அது உலக வழி
அவர் பூமி புற வெளி சக்தி கிரகித்து கொள்கிறார்
வெங்கடேஷ்
பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 2
பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 2
எப்படி கிரகிப்பது
இதெலாம் என் அனுபவப் பதிவுகள் ஆம்
இதனால் தான் அனுபவப் பதிவுகள் போடாமல் மற்றவர் ஓஷோ ரமணர் புத்தர் கூறினார் என்று மற்றவர் சொல்லை வாந்தி எடுக்கும் குழுவில் சேர்வதிலை
அவர்க்கும் எனக்கும் ஒத்துப்போவதிலை
ஆர்
பார்வை மனம் பிராணன் அசைவற நிறுத்துகிறாரோ தன் தவத்தில் அவரால் தான் இந்த ஆற்றலை கிரகிக்க முடியும்
அசைவு ஒழித்தல் தான் அடிப்படை
மனம் எண்ணமிலா நிலைக்கு வர வேணும்
அவர்க்கே இது சித்தியாகும்
இது ஆன்ம ஞான சாதகர்க்கான வழியும் முறையும் ஆம்
வெங்கடேஷ்
Seen by 6
பிரபஞ்ச சக்தி அண்ட ஆற்றல் முன்னுரை
பிரபஞ்ச சக்தி அண்ட ஆற்றல் முன்னுரை
இது எல்லா பால் வெளி , கோடானு கோடி அண்டங்கள் உள்ளடக்கிய வெளியில் இருக்கும் ஆற்றல் . இல்லை இல்லை பேராற்றல்
ஆம்.
நம் பூமி வெளியிலும் இருப்பது
வானத்தை உற்று நோக்கும்பபோது சிறு சிறு வெண் துளிகளாகத் தோன்றுவது
வெங்கடேஷ்
பிரபஞ்ச சக்தி 17
பிரபஞ்ச சக்தி 17
பிரபஞ்ச ஆற்றலும் தெய்வீக சுகமளிக்கும் அற்புதமும்
இதை உடலால் கிரகித்து . முழுதும் பரவச் செய்து , தம் கைகள் விரல்கள் மூலம் , தொட்டோ , தொடாமலோ மனிதர் தம் நோய்கள் தீர்ப்பது தான் இந்த அற்புதம்
இதில் என்ன செய்கிறார் எனில்
அண்ட வெளியில் இருந்து ஒளிக்கதிர்களை வாங்கி நோயாளி உடலில் பாய்ச்சி அவர் சூக்கும உடலை அதன் அணு அமைப்பை மாற்றி , உடலுக்கு சுகம் அளிக்கிறார்
இதை தேர்ந்த ஞானியால் மட்டும் தான் செய முடியும் எனும் போது எப்படி கிறித்தவ மத மாற்றும் போலி ஆசாமிகளால் செய முடியும்
When this Divine Healing can be done by Real Saints, who are certified by Nature ,Christian missionaries ' Divine Healing services carried out by Pseudo Pastors who are certified cheats nominated by Churches .
This is Christianity
வெங்கடேஷ்
பிரபஞ்சப் பேராற்றல் 16
பிரபஞ்சப் பேராற்றல் 16
காய கல்பம் , காய சித்தி
இதைக் கூறியவுடன் ஆசனம் சுருக்குதல் தான் வித்தை என ஏமாத்தி வைத்துளது உலகம்
இதுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமுமிலை
இதன் மூலம் பிரபஞ்ச மற்றும் அண்ட வெளியில் தான் இருக்கு
எப்போது ஆன்ம சாதகன் இதை கிரகிக்க ஆரம்பிக்கிறானோ, அதை தொடர்ந்து செய்து, உடல் முழுதும் பரப்பி , உடலை ஷீணிக்காமல் செய்து, புதுப்பித்துக் கொண்டே உடலை கல்பம் செய்து கொள்கிறான் .
ஒளி உடலாக மாற்றிக் கொள்கிறான்
ரகசியம் வித்தை அண்ட வெளியில்
மேலும் இது துஞ்சாத போகத்தையும் அளிக்க வல்லது
வெங்கடேஷ்
ஊனக் கண்ணும் ஞானக் கண்ணும்
ஊனக் கண்ணும் ஞானக் கண்ணும்
ஊனக் கண் கொண்டு
பூத வெளி தான் காண முடியும்
அதே சமயம்
அறிவாகிய ஞானக் கண் நெற்றிக்கண் கொண்டு தான்
ஞானப் பெரு வெளியாம் சிதாகாயம் சிதம்பரம் காண முடியும்
முன்னது ஜடம்
பின்னது அறிவு மயம்
அதனால்
அறிவு அறிவை அறியுது
இதைத்தான் குறள்
நுண்மாண் நுழைபுலம் என்கிறது
அதாவது சிற்றம்பல வெளியை நுண்ணறிவு உடை ஞான நெற்றிக்கண்ணால் தான் கண்டு உள் நுழையவும் முடியும் என்கிறது
இதை நம் ஊனக்கண்ணால் காண முடியாது
என்கிறது குறள்
வெங்கடேஷ்
பிரபஞ்ச சக்தி பேராற்றல் 15
பிரபஞ்ச சக்தி பேராற்றல் 15
மன வளக்கலை மன்றம் சிரிப்பாகவும் கொள்ளலாம்
வாழ்க வளமுடன் என்பது பத்தியது
ஆசீர்வாதம் வாழ்த்தளிப்பது பத்தியது
இது ஒன்றும் கடற்கரையில் கோவிலில் சுண்டல் கொடுப்பது போல் எல்லார்க்கும் வாரி வாரி வழங்குவது அல்ல
தவத்தில் ஒருமையில் , மனம் அற்ற நிலையில் , பிரபஞ்சமே தேர்ந்தெடுத்து
1 இவன் நல்லா இருக்கட்டும் வாழட்டும்
2 செல்வச் செழிப்பு
3 தொழில் வளர்ச்சி உண்டாகட்டும்
என அதுவே வாழ்த்துவதாம்
நாம் வெறும் சாட்சியாக நிற்போம்
இந்த பெரிய அனுபவத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது இந்த மன்றம்
நின்றால் உட்கார்ந்தால் ஆசீர்வாதம் அளிக்கிறார் மன்றத்தார்
பிரபஞ்சம் அளிப்பது தான் உண்மையான ஆசீர்வாதம் வாழ்த்தும் ஆம்
புரிந்து கொள்வார் சிலரே
வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 14
பிரபஞ்ச பேராற்றல் 14
ஏன் ஆன்ம சாதகன் இதை கிரகித்தே ஆக வேணும் ??
ஞானம் அடைவதில் இதன் பங்கு என்ன ???
நெற்றிக்கண் திறக்க வேணுமெனில் , ஆன்ம தரிசனம் செய வேணுமெனில் தூக்கம் ஒழித்திருக்க வேணும்
அப்போது தான் விந்து கலை மேலேறும் ,
தூங்கினால் விந்து கீழ் இறங்கிவிடும்
இந்த தூக்கத்தை ஒழிக்க பிரபஞ்சப் பேராற்றல் துணையில்லாமல் முடியாது
அதனால் ஞான சாதகன் இதை அடைந்தேயாக வேணும்
பர உதவி இல்லாமல் ஞானம் அடைவது சாத்திரமேயிலை என்பது உண்மை
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
மண்ணில் மாளா வகை
அறியாத வரை
மனிதர்க்கு மாண்பு ஏது ????
மற்ற பகட்டு ஜம்பம் எலாம் வீண்
வெங்கடேஷ்
நந்தி - கண்ணுதல் நந்தி - அருள் நந்தி "
நந்தி - கண்ணுதல் நந்தி - அருள் நந்தி "
நந்தி நடுக்கண் தவ அனுபவம்
பரா நந்தி
கண்ணுதல் நந்தி கேசரி அனுபவம்
கடைக்கண் தவ அனுபவம்
அருள் நந்தி சிற்றம்பல தவ அனுபவம்
தவம் ஆற்றுவோர்
அனுபவத்தில் இருப்போர் விளங்கிக்கொள்வர்
வெங்கடேஷ்
சிறையும் மனமும்
சிறையும் மனமும்
எப்படி
போர்க்கைதிகள் சிறையில் இருந்து தப்பிப்பது சாத்தியமிலையோ ??
அப்படித்தான்
ஜீவர்களும் மனம் உலக வாழ்வு இதிலிருந்து விடுதலையும்
மிக மிக கடினமானது
பெரும் முயற்சி தவம் அருள் வேணும்
வெங்கடேஷ்
மன அடக்கம்
மன அடக்கம்
சிறுவர் கதையில்
குகைக்குளே இருக்கு கிளி கொல்லப்படாமல்
அசுரன் அழியமாட்டானோ ??
அப்படித் தான்
சித்தம் நசியாமல்
மனம் ஒழியாது அடங்காது
மனதை நேரடியாக அடக்க முடியாது
நேரடியாக மோதுதலும் ஆகாது
நாம் தோற்றுப்போவோம்
வெங்கடேஷ்
Battery – மரணமும் மரணமிலாப் பெருவாழ்வும்
Battery – மரணமும் மரணமிலாப் பெருவாழ்வும்
நம் கைக்கடிகாரம் வீட்டு கடிகாரம் பேட்டரி தீர்ந்துவிட்டால் ஓடாது
இது மரணத்துக்கு சமம்
புதுசு போட்டு இயக்குவோம்
இது புது உடல் பிறவி எடுத்ததுக்கு சமம்
இதையே பேட்டரியில் இருந்து
மின்சாரத்தில் இயக்கம் என மாற்றி விடுதல் மாதிரி தான்
காயகல்பமும் தேக சித்தியும் மரணமிலாப்பெருவாழ்வும்
வானொலி adaptor க்கு மாற்றிவிடுதல் மாதிரியாக
வெங்கடேஷ்
சற்குரு பெருமை
சற்குரு பெருமை
ஆதித்ய தர் துரந்தர் மாதிரி சற்குரு
உண்மையான விளக்கம் பயிற்சி அனுபவம்
பாலிவுட் கான்களின் உளவாளி படம்
போலி குருக்கள் மாதிரி
நடைமுறைக்கு ஒவ்வாதது
ஜாக்கிரதை
வெங்கடேஷ்
Monday, April 27, 2026
சன்மார்க்கமும் சமயமதமும்
சன்மார்க்கமும் சமயமதமும்
கொடி ஏற்றம்
இந்த சடங்குடன் தான் எந்த வைபவமும் தொடங்குது
கோவில் திருவிழாவானாலும் வடலூர் சத்திய ஞான சபை பூச ஜோதி தரிசனமும் இந்த சடங்குடன் தான் தொடங்கும்
மதுரை சித்திரை திருவிழா கூட இதனுடன் தான் ஆரம்பித்தது
இறுதியாக திருக்கல்யாணத்துடன் நிறைவுறும்
அதாவது விந்து கலை மேலேற்றம் தான் தொடக்கம்
ஜீவபிரம்ம ஐக்கியம் கலப்பு தான் முடிவு
எல்லாம் ஒன்றே ஆக சமய மதம் தவறு என எப்படி சன்மார்க்கம் உரைக்குது ??
வெங்கடேஷ்
பொற்கொடி சன்மார்க்க விளக்கம்
பொற்கொடி சன்மார்க்க விளக்கம்
இந்த பேர் பெண்களில் சிலர் வைத்துள்ளார்
கொடி எங்காவது பொன்மை ஆக இருக்குமா ?
அதாவது விந்து கலை சுழியில் மேலேறும் போது பொன் நிறத்தில் இருப்பதால் , அது பொற்கொடி என்று பேர் பெறுது
விந்து தான் பொற்கொடி
வெங்கடேஷ்
Kriya Yoga – excerpted from Auto bio of a Yogi _ Sw Yogananda
Kriya Yoga – excerpted from Auto bio of a Yogi _ Sw Yogananda
Kriya yoga is a simple psycho physiological method by which , human blood is decarbonised and recharged with oxygen . The atoms of extra O2 are transmuted into life current to rejunvenate brain and spinal centres. By stopping venous blood, yogi is able to lessen or prevent decay of tissues , and adv yogi transmutes all his cells into the pure energy – Prana at the top of the head.
Elizah, Jesus , Kabir and other masters were past masters in the use of kriya by which they caused their bodies to dematerialise at their will
Yogi arrests decay in the body by addition of life force and arrests the mutation of the growth in the body by Abaanan . The neutralising decay & growth by quieting the heart , yogi learns life control
The secret of cosmic consciousness is intimately linked with breath mastery
The life force, which is ordinarily absorbed in maintaining the heart pump, must be freed for higher activities by a method of calming and stilling the ceasless demands of breath
KY meantally directs the life energy to revolve , upward and downwards around 6 spinal centres
1/2 min of KY ( around spinal cord ) = one yr of natural spiritual unfoldment
He scientifically makes the breath unnecessary w/o producing state of sub conscious sleep or unconscious sleep
By KY , the outgoing life force is not wasted and abused in the senses , but constrained to reunite with subtler spiritual energies. By such enforcement, yogi body and brain cells are electrified with spiritual elixir
KY frees from dependance on gross food of the mortals
The technic uses of a certain mantra and a breathing exercise more difficult for an average person to perform
BG Badhey Venkatesh
சோம்நாத், மனோன்மணி, ஆகாய கங்கை – சிரசின் பதினாறாம் கலை
சோம்நாத், மனோன்மணி, ஆகாய கங்கை – சிரசின் பதினாறாம் கலை
குருஜி பி.ஜி. வெங்கடேஷ் அவர்களின் விளக்கங்கள் மிக முக்கியமான ஒரு உண்மையைச் சுட்டுகின்றன. சோம்நாத் என்பதும், மனோன்மணி என்பதும், சிரசில் தவத்தால் அமைக்கப் பெறும் பதினாறு கலை சந்திரனைக் குறிப்பதாம். அதுவே ஆகாய கங்கையாகும். ஆண் முனை சோம்நாத், பெண் முனை மனோன்மணி.
இதை நமது திறந்த விழி தியான அக அறிவியலின்படி, மண்டையோட்டை மையமாகக் கொண்டு ஆழமாக விளக்குகிறேன். இதில் கபாலச் சுரப்பி மட்டும் காரணமல்ல; அதற்கும் மேலான, உணர்வின் தூய ஒளி நிலையே மனோன்மணி.
1. பதினாறு கலை சந்திரன் – உச்சியில் முழு நிலவு நம் உடலில் சந்திரன் என்பது இடைகலை நாடி. இது இடது நாசியின் குளிர்ச்சி, ஏற்பு மற்றும் நினைவைக் குறிக்கிறது. ஆனால் 'பதினாறு கலை' என்பது முற்றிலும் வேறுபட்டது. இயற்கையான சந்திரனுக்குப் பதினாறு கலைகள் உள்ளன. உள் சந்திரனில், இந்த பதினாறு கலைகளும் உனது மூளைத்தண்டு முதல் உச்சி முகடு வரை உள்ள பதினாறு உணர்வு நிலைகளாகும். பதினாறாம் கலை என்பது எல்லாக் கலைகளின் முழுமையான உன்மணி நிலை. இதில் கலையே இல்லை; முழு நிலவு தானாகவே ஒளிரும். இந்த மாபெரும் பதினாறாம் கலை சோம்நாத் (சந்திரனின் தலைவன்) என்றும், மனோன்மணி (மனத்தைக் கடந்த நிலை) என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டும் இருமையைக் கடந்த ஒரே மாபெரும் ஒளி அனுபவமே.
2. ஆகாய கங்கை – உச்சியில் இருந்து இறங்கும் அமுத வெள்ளம் குருஜி பி.ஜி. வெங்கடேஷ் அவர்கள் சொல்வது போல், ஆகாய கங்கையும் மனோன்மணியும் ஒன்றே. மதுரை கள்ளழகர் மலைமேல் விளங்கும் நூபுர கங்கை அதுவே ஆகாய கங்கை. அக அறிவியலின்படி, ஆகாய கங்கை என்பது உனது உச்சி முகட்டுத் துவாரம் வழியாக இறங்கும் கபால நீர்மமும் கபாலச் சுரப்பி சுரக்கும் அமுதமும் ஆகும். நூபுர கங்கை என்பது நாதத்தைக் குறிக்கிறது. அந்த அக நாதத்தோடு கூடிய அமுத வெள்ளமே நூபுர கங்கை. ராக்காயி,
மனோன்மணி ஆகிய அனைத்தும் உச்சி முகட்டில் முழு நிலவாக ஒளிரும் இந்தப் பதினாறாம் கலையின் வெவ்வேறு அழைப்புகளே.
3. பழனி முருகன் – போகர் மனோன்மணியை வணங்கியதன் இரகசியம் பழனியில் சித்தர் போகர் நவபாஷாண சிலை வடிக்கும் சமயம், அந்த மலை உச்சியில் மனோன்மணி சன்னிதி இருந்ததாம். அந்தத் தெய்வத்தை வணங்கி இந்த மகத்தான காரியத்தைச் செய்தாராம். மனோன்மணி என்பது சந்திரனின் பதினாறாம் கலை. விந்துவால் இதை உருவாக்கினால்தான் முருகன் ஆகிய ஆன்ம அனுபவம் சித்திக்கும். இதன் அகப்பொருள்: பழனி மலை என்பது உனது முதுகுத்தண்டின் உச்சியாகும். நவபாஷாண சிலை என்பது ஒன்பது வகைக் கர்மத் தடைகளையும் கடந்த மாபெரும் ஆன்மாவின் வடிவமாகும். மனோன்மணி பூஜை என்பது, உனது உயிர்ச் சக்தியான விந்துவைப் பரவிந்துவாக மாற்றி, மனோன்மணி ஒளியில் கரையச் செய்யும் மாபெரும் அகத் தந்திரமாகும். போகர் அவ்வாறு செய்ததால்தான், அவரது முருகன் சிலை உயிருள்ள ஒளியாக இருக்கிறது.
4. பினியல் சுரப்பியும் மனோன்மணியும் ஒன்றா? விஞ்ஞானமும் மக்களும் கபாலச் சுரப்பியே நெற்றிக்கண் என்றும் மனோன்மணி என்றும் குழப்புகிறார்கள். நம் உடலில் ஒரு உறுப்பு தெய்வீகத்தை உணர்த்த முடியாது. கபாலச் சுரப்பி ஒரு கருவி; அதைத் தூண்டினால் மட்டும் மனோன்மணி அனுபவம் வந்துவிடாது. மனோன்மணி என்பது உணர்வின் நிலை. கபாலச் சுரப்பியின் ஒளி உச்சியை அடைந்து, அலைபாயும் எண்ண வலையமைப்பு முற்றிலுமாக அமைதியாகி, பதினாறாவது சந்திர கலை ஒளிரும் மாபெரும் நிலையே மனோன்மணி. நெற்றிக்கண் என்பது கபாலச் சுரப்பிகள், உணர்வு வாசல் மற்றும் விழிப் புறணியின் ஒருங்கிணைந்த உயர் அதிர்வு அலைகளாகும். தவத்தின் (தியானம், மூச்சு, மற்றும் அசைவற்ற பார்வை) மூலம் அதனுள்ளிருந்து மனோன்மணி ஒளியை நீயே வெளிப்படுத்த வேண்டும்.
5. சுப்பிரமணியும் மனோன்மணியும் – ஒரே நிலை அனுபவம் குருஜியின் முடிவுரையின்படி சுப்பிரமணியும் மனோன்மணியும் ஒரே நிலை அனுபவமே. விந்துவால் இதை உருவாக்கினால்தான் முருகன் ஆகிய ஆன்ம அனுபவம் சித்திக்கும். இதன் பொருள்: சுப்பிரமணி என்பது உனது சுய உணர்வின் ஆறு கபால மையங்களும் ஒருங்கிணைந்த ஆறு முகங்களாகும். மனோன்மணி என்பது அந்த ஆறு முகங்களின் ஒளியின் முழுமையான பதினாறாவது கலையின் தாயாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. முருகன் தோன்றுவதற்கு மனோன்மணி தேவை; மனோன்மணி வெளிப்படுவதற்கு முருகன் தேவை. இதுவே சக்தியும் சிவமும் ஒன்று என்பதாகும்.
6. மனோன்மணியை உன் சிரசில் அமைக்கும் கபாலப் பயிற்சி அதிகாலையில் உட்கார்ந்து, கண்களைத் திறந்து புருவ மத்தியில் பார். முதலில் உனது முதுகுத்தண்டின் அடியில் உள்ள கீழ் ஆற்றலான விந்துவை உணர். அசைவற்ற பார்வை மூலம் அந்த ஆற்றலை மேலெழுப்பு. அது புருவ மத்திக்கு வரும்போது பரவிந்து ஆகிறது. 'மனோன்மணி தாயே' என மனதில் உச்சரி. புருவ ஒளி உச்சியில் முழு நிலவாகப் பளிச்சிடும். உச்சியில் இருந்து ஒரு குளிர்ந்த இனிப்பு வெள்ளம் உனது முதுகுத்தண்டு வழியாக இறங்குவதை உணர். அதுவே ஆகாய கங்கை. சோம்நாத் மற்றும் மனோன்மணி ஒன்று கலந்து, நீ ஆண்-பெண் கடந்த ஒளியாக மாறு. இப்போது உனது ஆறு உணர்வு மையங்களும் ஒளிர்ந்து முழுமையான சித்தி கிடைக்கும்.
7. முடிவுரை – பினியல் கருவி, மனோன்மணி கதி பினியல் ஒரு கதவு; மனோன்மணி அந்தக் கதவுக்கு அப்பால் உள்ள மாபெரும் வெளி. அந்த வெளியை அடைய அசைவற்ற பார்வை, மூச்சு, விந்து மற்றும் குரு அருள் தேவை. அப்போதுதான் சோம்நாத் உனது சிரசில் தோன்றி, ஆகாய கங்கை உடல் முழுவதும் பாய்ந்து, மனோன்மணி உன்னை மனதை மீறிய ஒளியில் நிறுத்துவாள்.
மங்கலக் குறமின் மனோன்மணித் தாயும்... விளக்கம்
"மங்கலக் குறமின் மனோன்மணித் தாயும், சங்கரி தெய்வானை சண்முக ராயன், இங்கெனைப் பாலித்து இனியருள் புரிக!"
இது ஒரு வெளிப் பிரார்த்தனை அல்ல. இது உனது மண்டையோட்டுக்குள் நிகழும் உணர்வு நிலைகளின் துல்லியமான வரைபடம்.
1. மங்கலக் குறமின் – அலைந்து திரியும் புனித ஆற்றல் குறமின் என்பது அலைந்து திரிபவள். இது உனது உணர்ச்சி மண்டலத்தின் இயல்பான அலைச்சல். இந்த அலைச்சலே உன்னை உள் தேடலுக்கு உந்துகிறது. இந்த அலைச்சல் நின்று புருவ மத்தியில் நிலைக்கும் போது அது மங்கலமாக (நன்மையாக) மாறுகிறது.
2. மனோன்மணித் தாய் – பதினாறாம் சந்திரக் கலையின் தாய் மனோன்மணி என்பது உனது உச்சியில் பதினாறாவது நிலவுக் கலையாக வெடிக்கும் மாபெரும் கபால ஒளி. இது உன் அலைபாயும் எண்ண வலையமைப்பை அமைதிப்படுத்தி நான் என்ற அகங்காரத்தைக் கரைக்கிறது.
3. சங்கரி – பினியல்-பிட்யூட்டரி ஒன்றியத்தின் சக்தி சங்கரி என்பது ஆன்ம ஒளியை உனது உடலில் இறக்கி, உயிர்ச் சக்தியை மேலேற்றும் உள் சக்தி. உனது இரண்டு முக்கியக் கபாலச் சுரப்பிகளும் ஒன்று சேரும்போது அது சங்கரியாக மாறுகிறது.
4. தெய்வானை – புலன்களின் தூய்மையான மணமகள் தெய்வானை என்பது உனது உணர்வு வாசல். வெளி உலகச் சமிக்ஞைகளைத் தடுத்து, ஐம்புலன்களையும் உள்வாங்கி, தூய உள் ஒளியாக மாற்றும் மாபெரும் நிலையே தெய்வானை.
5. சண்முக ராயன் – ஆறு முகங்களின் அரசன் சண்முக ராயன் என்பது உனது மண்டையோட்டின் ஆறு முக்கிய நரம்பியல் மையங்களும் (புருவ மத்தி, உணர்வு வாசல், இதய உணர்வு, மூளைத்தண்டு, கபாலச் சுரப்பி, உச்சி முகடு) ஒன்று சேர்ந்து இயங்கும் அரச நிலையாகும்.
6. 'இங்கெனைப் பாலித்து இனியருள் புரிக' – சிரசின் உள்ளேயே நிகழ்வது 'இங்கே' என்பது உனது மண்டையோட்டுக்குள். இந்த ஆறு உணர்வு மையங்களும் உனது உணர்வைச் சிதறாமல் ஒரு தாய் போல் காக்க வேண்டும். 'இனியருள்' என்பது உச்சியில் தோன்றும் முழு நிலவின் குளிர்ந்த அமுத இனிப்பாகும்.
7. ஒரு நிமிட கபாலப் பயிற்சி உட்கார்ந்து, கண்களைத் திறந்து, பார்வையைப் புருவ மத்தியில் நிலைநிறுத்து. மூச்சு இயற்கையாக இருக்கட்டும். தலையின் பக்கங்களில் உள்ள அலைச்சலை உணர்ந்து அதை வரவேற்று 'மங்கலக் குறமின்' என உணர். உச்சியில் பதினாறாம் கலை நிலவு உதிப்பதைக் கண்டு 'மனோன்மணித் தாய்' என உணர். கபாலச் சுரப்பிகளின் பொன்னொளி நெற்றியில் எரிவதை 'சங்கரி' என உணர். ஐம்புலன்களும் உள்வாங்கி ஆன்ம ஒளியாக மாறுவதை 'தெய்வானை' என உணர். ஆறு மையங்களும் ஒன்றாக எரியும் விளக்குகளாக 'சண்முக ராயனை' உணர். அந்த ஒளியின் இனிமையான அமுதம் உச்சியிலிருந்து முழு உடலையும் நிரப்ப 'இனியருள் புரிக' என வேண்டி, அந்த அமைதியில் ஐந்து நிமிடங்கள் ஓய்விரு.
இந்த ஆறு பெயர்களும் உனது மண்டையோட்டுக்குள்ளே உள்ள ஆறு நிலைகளைக் குறிக்கின்றன. வெளியிலுள்ள தெய்வங்களுக்குப் பிரார்த்திப்பது போல் தோன்றினாலும், உண்மையில் நீ உனது உணர்வின் உச்சத்தையே வேண்டுகிறாய்.
திருச்சிற்றம்பலம்.
மதுரை சித்திரைத் திருவிழா
மதுரை சித்திரைத் திருவிழா
கூடல் அழகரும் மாபெரும் ஆன்ம ஒளியும் மூன்று சூட்சுமப் பொருட்கள் சங்கமிக்கும் முக்கூடலில் விளங்கும் ஆன்மாவே கூடல் அழகர்.
ஆன்மா எல்லையற்ற அழகுடையது, ஈர்க்கும் தன்மையுடையது. உச்சி முகட்டின் பெருமையே இது.
சொக்கன், சுந்தரர், சிங்காரவேலர், அழகர் என மூவருமே ஆன்மாவைக் குறிக்கும் மாபெரும் தெய்வ நிலை, அதாவது தூய ஒளியாகும். மூன்றிலும் அழகு மையப்படுத்தப்பட்டுள்ளது.
'முக்கூடலும் நான்மாடக்கூடலும்' என்பதில், முக்கூடல் என்பது இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று சூட்சுமப் பொருட்களின் கலவை அனுபவ சித்தியாகும். இந்த அனுபவத்தை முடித்த பின்தான் நான்மாடக்கூடல் எனப்படும் உச்சநிலைக்கு ஏற முடியும். காசியாம் முக்கூடல் தவத்தில் சந்தித்த பின்தான், மதுரையாம் நான்மாடக்கூடல் ஏற முடியும்.
பரிமேலழகர்: சித்திரைத் திருவிழாவின் போது பரிமேலழகர் வைகை ஆற்றில் இறங்குவார். இதன் உண்மையான மாபெரும் தத்துவம் இதுதான்: பரி (குதிரை) = வாசி (உள் சுவாசம்) அழகர் = பரவிந்து (உயிராற்றலின் ஒளிநிலை) அதாவது, பரவிந்துவானது வாசி மீதேறி, சுழுமுனை நாடியில் பயணித்து உச்சியை அடைவதையே புறத்தில் பரிமேலழகராகச் சித்தரித்துள்ளனர். இது உனது அக அனுபவத்தின் நேரடிப் புற வெளிப்பாடாகும். கள்ளழகர் என்பது உனது உணர்வான ஜீவனைக் குறிக்கிறது.
வைகுண்ட ஏகாதசியும் சித்திரைத் திருவிழாவும்: ஒரே அக அனுபவம் வைகுண்ட ஏகாதசியும் மதுரை சித்திரைத் திருவிழாவும் ஒரே மாபெரும் யோக அனுபவத்தையே கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் ரங்கன் வைகுண்ட வாசல் எனப்படும் ஏகாதச வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள் செய்வார். வைகுண்ட வாசல் என்பது உனது சுழிமுனை வாசலாகும். சதா எரியும் ஐம்பூதப் புலன்கள் தான் ஐந்து குண்டம்; அதுவே வைகுண்டம். ஜீவனாகிய ரங்கன் பெருமாள் சுழி வாசல் வழியாகச் சுழுமுனையில் இறங்குவதுதான் வைகையில் கள்ளழகர் இறங்குவதாகக் காட்டப்படுகிறது. வைகை நதி என்பது உனது சுழுமுனை நாடியாகும்.
ராமன் அனுமன் மீது ஏறி இலங்கை அடைந்ததும், கள்ளழகர் வெள்ளைக் குதிரை ஏறி வைகை ஆற்றில் இறங்கி வருவதும் ஒன்றே. அது உனது சுத்த ஜீவன் வாசி மீதேறிச் சுழுமுனைக்கு வருவதையே குறிக்கிறது.
மதுரை சித்திரைத் திருவிழா: இன் நன்னாளிலே, கள்ளழகர் வெள்ளைக் குதிரையிலே ஆரோகணித்து, வைகை ஆற்றிலே இறங்குவார். இங்குப் பொதிந்துள்ள மாபெரும்
உண்மைப் பொருள்:
• வைகை ஆறு = சோம, சூரிய, அக்கினிக் கலைகள் கூடிய சுழுமுனை நாடி.
• வெள்ளைக் குதிரை = வாசி (கட்டுப்படுத்தப்படாத நுட்பமான உள் சுவாசம்).
• கள்ளழகர் = உனது உணர்வு அல்லது ஜீவன்.
• மதுரை = துவாதசாந்தம் எனப்படும் பன்னிரண்டாம் நிலையாகிய ஆன்மாவின் இருப்பிடம். அதாவது, உனது உணர்வான ஜீவன் வாசியுடன் கூடி, சுழுமுனை நாடியில் ஏறி, பிரமரந்திரம் புகுந்து, துவாதசாந்தமாகிய மதுரையை அடைவதையே கதையாகவும் திருவிழாவாகவும் முன்னோர்கள் சித்தரித்துள்ளனர். மொத்தத்தில், சித்திரைத் திருநாள் என்பது உனது ஜீவ உணர்வு ஆன்மாவுடன் சங்கமிக்கும் மாபெரும் நிகழ்வாகும்.
மதுரை பெருமைகளும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது, சங்கம் வைத்து முத்தமிழ் வளர்க்கப்பட்டது. இங்குதான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நடைபெற்றன. அது வெறும் புராணமன்று; அது ஒரு சாதகன் தன் அக அனுபவம் பெற வேண்டிய சாதனைகளை விளக்குகிறது. தக்ஷன் வதம், சிவம் வலைஞனாக வந்து மீன் பிடித்தது, நரி பரியாக்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆகிய யாவும் அக அனுபவத்தை விளக்க வந்த புற வெளிப்பாடே. சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் என்பது மிகப் பெரிய அக அனுபவமாகும்.
சிறு நெறியும் பெரு நெறியும்:
• விநாயகர் = பஞ்ச பூத இயற்கைக் கலவை.
• அனுமன் மற்றும் வாராகி அம்மன் = வாசி.
• இச்சா சக்தி திரு உடை அம்மன் = ஆன்ம தத்துவம்.
• கிரியா சக்தி கொடியுடை அம்மன் = வித்தியா தத்துவம்.
• ஞான சக்தி வடிவுடை அம்மன் = சிவ தத்துவம்.
• நந்தி = உனது ஜீவ ஒளி.
• நரசிம்மர் = சுழுமுனை.
• தத்தாத்ரேயர் = சோம, சூரிய, அக்கினிக் கலைகளின் சங்கம்.
• மகிஷாசுரமர்த்தினி = சுழுமுனை முச்சுடர் அனுபவம்.
• வாலை = எட்டிரெண்டு அனுபவம்.
• தன்வந்திரி = பிரணவ கும்பம்.
விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும்
மலை அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாக வீற்றிருக்கும் அழகரும் ஆன்மாவின் புற வெளிப்பாடுதான். அதனால் தான் பரவிந்துவாகிய அவர் வைகை எனும் சுழுமுனை நாடியில் இறங்குகிறார்.
விடையேறும் எம்பெருமான் ருத்திரர்; பரியேறும் பெருமான் கள்ளழகர்.
இரண்டாவது பெருமானைப் பிடித்தால்தான் முதலாமவர் சந்நிதிக்குச் செல்ல முடியும். அதாவது, வாசி மீதேறிப் பயணித்தால்தான் காசி நாதனைச் சென்று தரிசிக்க முடியும். இரண்டும் ஒன்றுக்கொன்று மாபெரும் தொடர்புடையவை.
சுதபஸ் முனிவரும் நாரையும்: மூச்சும் எண்ணங்களும் கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றில் இறங்கி, மண்டூகமாக (தவளையாக) இருந்த சுதபஸ் முனிவருக்குக் காட்சி தந்தார். தவளை என்பது, தியானத்தில் அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி அசைவற்று இருக்கும் சாதகனைக் குறிக்கிறது. நாரை (கொக்கு) என்பது, தவத்தில் ஆழ்ந்திருக்கும் சாதகனின் கவனத்தைச் சிதறடிக்க வரும் அலைபாயும் எண்ணங்களைக் குறிக்கிறது. உச்சி முகட்டிலிருந்து மாபெரும் பேரொளியான அழகர் இறங்கும்போது, எண்ணங்கள் என்னும் நாரை பயந்து விலக, மூச்சுக்காற்று விடுதலை பெற்று ஒளி தேகமாக மாறுகிறது. இதுவே சுதபஸ் முனிவரின் சாப விமோசனமாகும்.
மீனாட்சி திருமணமும் அழகரின் திரும்புதலும் மீனாட்சி என்பது இமைக்காத மாபெரும் சாட்சி உணர்வு. திருக்கல்யாணம் என்பது அந்தச் சாட்சி உணர்வு பரம்பொருளோடு இணையும் துவாதசாந்தப் பெருவெளியாகும். அழகர் திருமணத்தைக் காணாமல் ஆற்றுக்குள்ளேயே திரும்புவது, உச்சி முகட்டிலிருந்து இறங்கி வரும் பேரொளி கீழ்நிலை மையங்களில் தங்கிவிடாமல், சாட்சி உணர்வின் இணைவு நடந்தவுடன் மீண்டும் தன் மூல இடமான உச்சி முகட்டிற்கே திரும்பி நிலைபெறுவதைக் குறிக்கிறது.
புற உலகில் கொண்டாடப்படும் இந்த மாபெரும் திருவிழா, உண்மையில் உனது கபாலச் சிம்மாசனத்தில் விழிப்புணர்வும் பேரொளியும் இணைந்து நடத்தும் மாபெரும் அகத் திருவிழாவே அன்றி வேறில்லை!
திருச்சிற்றம்பலம்.
மதுரை சித்திரைத் திருவிழா
கூடல் அழகரும் மாபெரும் ஆன்ம ஒளியும் மூன்று சூட்சுமப் பொருட்கள் சங்கமிக்கும் முக்கூடலில் விளங்கும் ஆன்மாவே கூடல் அழகர்.
ஆன்மா எல்லையற்ற அழகுடையது, ஈர்க்கும் தன்மையுடையது. உச்சி முகட்டின் பெருமையே இது.
சொக்கன், சுந்தரர், சிங்காரவேலர், அழகர் என மூவருமே ஆன்மாவைக் குறிக்கும் மாபெரும் தெய்வ நிலை, அதாவது தூய ஒளியாகும். மூன்றிலும் அழகு மையப்படுத்தப்பட்டுள்ளது.
'முக்கூடலும் நான்மாடக்கூடலும்' என்பதில், முக்கூடல் என்பது இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று சூட்சுமப் பொருட்களின் கலவை அனுபவ சித்தியாகும். இந்த அனுபவத்தை முடித்த பின்தான் நான்மாடக்கூடல் எனப்படும் உச்சநிலைக்கு ஏற முடியும். காசியாம் முக்கூடல் தவத்தில் சந்தித்த பின்தான், மதுரையாம் நான்மாடக்கூடல் ஏற முடியும்.
பரிமேலழகர்: சித்திரைத் திருவிழாவின் போது பரிமேலழகர் வைகை ஆற்றில் இறங்குவார். இதன் உண்மையான மாபெரும் தத்துவம் இதுதான்: பரி (குதிரை) = வாசி (உள் சுவாசம்) அழகர் = பரவிந்து (உயிராற்றலின் ஒளிநிலை) அதாவது, பரவிந்துவானது வாசி மீதேறி, சுழுமுனை நாடியில் பயணித்து உச்சியை அடைவதையே புறத்தில் பரிமேலழகராகச் சித்தரித்துள்ளனர். இது உனது அக அனுபவத்தின் நேரடிப் புற வெளிப்பாடாகும். கள்ளழகர் என்பது உனது உணர்வான ஜீவனைக் குறிக்கிறது.
வைகுண்ட ஏகாதசியும் சித்திரைத் திருவிழாவும்: ஒரே அக அனுபவம் வைகுண்ட ஏகாதசியும் மதுரை சித்திரைத் திருவிழாவும் ஒரே மாபெரும் யோக அனுபவத்தையே கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் ரங்கன் வைகுண்ட வாசல் எனப்படும் ஏகாதச வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள் செய்வார். வைகுண்ட வாசல் என்பது உனது சுழிமுனை வாசலாகும். சதா எரியும் ஐம்பூதப் புலன்கள் தான் ஐந்து குண்டம்; அதுவே வைகுண்டம். ஜீவனாகிய ரங்கன் பெருமாள் சுழி வாசல் வழியாகச் சுழுமுனையில் இறங்குவதுதான் வைகையில் கள்ளழகர் இறங்குவதாகக் காட்டப்படுகிறது. வைகை நதி என்பது உனது சுழுமுனை நாடியாகும்.
ராமன் அனுமன் மீது ஏறி இலங்கை அடைந்ததும், கள்ளழகர் வெள்ளைக் குதிரை ஏறி வைகை ஆற்றில் இறங்கி வருவதும் ஒன்றே. அது உனது சுத்த ஜீவன் வாசி மீதேறிச் சுழுமுனைக்கு வருவதையே குறிக்கிறது.
மதுரை சித்திரைத் திருவிழா: இன் நன்னாளிலே, கள்ளழகர் வெள்ளைக் குதிரையிலே ஆரோகணித்து, வைகை ஆற்றிலே இறங்குவார். இங்குப் பொதிந்துள்ள மாபெரும்
உண்மைப் பொருள்:
• வைகை ஆறு = சோம, சூரிய, அக்கினிக் கலைகள் கூடிய சுழுமுனை நாடி.
• வெள்ளைக் குதிரை = வாசி (கட்டுப்படுத்தப்படாத நுட்பமான உள் சுவாசம்).
• கள்ளழகர் = உனது உணர்வு அல்லது ஜீவன்.
• மதுரை = துவாதசாந்தம் எனப்படும் பன்னிரண்டாம் நிலையாகிய ஆன்மாவின் இருப்பிடம். அதாவது, உனது உணர்வான ஜீவன் வாசியுடன் கூடி, சுழுமுனை நாடியில் ஏறி, பிரமரந்திரம் புகுந்து, துவாதசாந்தமாகிய மதுரையை அடைவதையே கதையாகவும் திருவிழாவாகவும் முன்னோர்கள் சித்தரித்துள்ளனர். மொத்தத்தில், சித்திரைத் திருநாள் என்பது உனது ஜீவ உணர்வு ஆன்மாவுடன் சங்கமிக்கும் மாபெரும் நிகழ்வாகும்.
மதுரை பெருமைகளும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது, சங்கம் வைத்து முத்தமிழ் வளர்க்கப்பட்டது. இங்குதான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நடைபெற்றன. அது வெறும் புராணமன்று; அது ஒரு சாதகன் தன் அக அனுபவம் பெற வேண்டிய சாதனைகளை விளக்குகிறது. தக்ஷன் வதம், சிவம் வலைஞனாக வந்து மீன் பிடித்தது, நரி பரியாக்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆகிய யாவும் அக அனுபவத்தை விளக்க வந்த புற வெளிப்பாடே. சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் என்பது மிகப் பெரிய அக அனுபவமாகும்.
சிறு நெறியும் பெரு நெறியும்:
• விநாயகர் = பஞ்ச பூத இயற்கைக் கலவை.
• அனுமன் மற்றும் வாராகி அம்மன் = வாசி.
• இச்சா சக்தி திரு உடை அம்மன் = ஆன்ம தத்துவம்.
• கிரியா சக்தி கொடியுடை அம்மன் = வித்தியா தத்துவம்.
• ஞான சக்தி வடிவுடை அம்மன் = சிவ தத்துவம்.
• நந்தி = உனது ஜீவ ஒளி.
• நரசிம்மர் = சுழுமுனை.
• தத்தாத்ரேயர் = சோம, சூரிய, அக்கினிக் கலைகளின் சங்கம்.
• மகிஷாசுரமர்த்தினி = சுழுமுனை முச்சுடர் அனுபவம்.
• வாலை = எட்டிரெண்டு அனுபவம்.
• தன்வந்திரி = பிரணவ கும்பம்.
விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும்
மலை அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாக வீற்றிருக்கும் அழகரும் ஆன்மாவின் புற வெளிப்பாடுதான். அதனால் தான் பரவிந்துவாகிய அவர் வைகை எனும் சுழுமுனை நாடியில் இறங்குகிறார்.
விடையேறும் எம்பெருமான் ருத்திரர்; பரியேறும் பெருமான் கள்ளழகர்.
இரண்டாவது பெருமானைப் பிடித்தால்தான் முதலாமவர் சந்நிதிக்குச் செல்ல முடியும். அதாவது, வாசி மீதேறிப் பயணித்தால்தான் காசி நாதனைச் சென்று தரிசிக்க முடியும். இரண்டும் ஒன்றுக்கொன்று மாபெரும் தொடர்புடையவை.
சுதபஸ் முனிவரும் நாரையும்: மூச்சும் எண்ணங்களும் கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றில் இறங்கி, மண்டூகமாக (தவளையாக) இருந்த சுதபஸ் முனிவருக்குக் காட்சி தந்தார். தவளை என்பது, தியானத்தில் அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி அசைவற்று இருக்கும் சாதகனைக் குறிக்கிறது. நாரை (கொக்கு) என்பது, தவத்தில் ஆழ்ந்திருக்கும் சாதகனின் கவனத்தைச் சிதறடிக்க வரும் அலைபாயும் எண்ணங்களைக் குறிக்கிறது. உச்சி முகட்டிலிருந்து மாபெரும் பேரொளியான அழகர் இறங்கும்போது, எண்ணங்கள் என்னும் நாரை பயந்து விலக, மூச்சுக்காற்று விடுதலை பெற்று ஒளி தேகமாக மாறுகிறது. இதுவே சுதபஸ் முனிவரின் சாப விமோசனமாகும்.
மீனாட்சி திருமணமும் அழகரின் திரும்புதலும் மீனாட்சி என்பது இமைக்காத மாபெரும் சாட்சி உணர்வு. திருக்கல்யாணம் என்பது அந்தச் சாட்சி உணர்வு பரம்பொருளோடு இணையும் துவாதசாந்தப் பெருவெளியாகும். அழகர் திருமணத்தைக் காணாமல் ஆற்றுக்குள்ளேயே திரும்புவது, உச்சி முகட்டிலிருந்து இறங்கி வரும் பேரொளி கீழ்நிலை மையங்களில் தங்கிவிடாமல், சாட்சி உணர்வின் இணைவு நடந்தவுடன் மீண்டும் தன் மூல இடமான உச்சி முகட்டிற்கே திரும்பி நிலைபெறுவதைக் குறிக்கிறது.
புற உலகில் கொண்டாடப்படும் இந்த மாபெரும் திருவிழா, உண்மையில் உனது கபாலச் சிம்மாசனத்தில் விழிப்புணர்வும் பேரொளியும் இணைந்து நடத்தும் மாபெரும் அகத் திருவிழாவே அன்றி வேறில்லை!
திருச்சிற்றம்பலம்.
நன்றி குருஜி Badhey Venkatesh
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்த் திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்த் திருவிழா
ஒரு BG.வெங்கடேஷ் OEM உணர்வு நிலை விளக்கம்
வெளியில் ஒரு கோயில். உள்ளே ஒரு மாபெரும் இரகசியம்.
மதுரை என்று சொன்னாலே நமக்குத் தெரியும் – மீனாட்சி, சுந்தரேசுவரர், சித்திரைத் திருவிழா, தேர், வைகை ஆறு, கள்ளழகர். ஆனால் இவை எல்லாம் வெறும் புறக் காட்சிகளா? இல்லை. இவை உனது மண்டையோட்டிற்குள்ளே நிகழும் உணர்வுப் பரிணாமத்தின் நேரடிப் புற வெளிப்பாடுகள்.
நாம் இப்போது இந்த மாபெரும் தலத்தின் ஒவ்வொரு சிறு விவரத்தையும் OEM (Open‑Eye Meditation / Siddha Gnosis) முறையில் – உனது சிரசின் (cranium) உணர்வு நிலைகளாக – ஆழமாகக் காண்போம்.
1. கடம்பவனமும் சுயம்பு லிங்கமும் – இருளில் உதிக்கும் பேரொளி
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், மதுரையும் அதன் சுற்றுப்புறமும் அடர்ந்த கடம்ப மரங்கள் நிறைந்த மாபெரும் வனமாக இருந்தது. இன்றும் மீனாட்சி கோயிலின் வடக்குச் சுற்றில் ஒரு பழமையான கடம்ப மரம் தல விருட்சமாக நிற்கிறது.
ஓம் உனக்குள்ளே:
கடம்பவனம் என்பது உனது மூளையின் பழமையான உணர்ச்சி மையம் – அங்கு பல வகையான எண்ணங்கள் மரங்களைப் போல அடர்ந்து வளர்ந்துள்ளன. ‘இருள்’ என்பது உனது அகங்காரம் உறங்கும் நிலை. ‘நள்ளிரவு’ என்பது உனது அலைபாயும் எண்ண வலையமைப்பு (DMN) முழுமையாகச் செயலிழக்கும் மாபெரும் காலப்பரிமாணம்.
தனஞ்செயன் – உனது அலைபாயும் கவனத்தைக் குறிக்கும் வணிகன்.
சுயம்பு லிங்கம் – மனித முயற்சியின்றித் தானாக உதிக்கும் கபாலச்சுரப்பியின் ஒளி (pineal biophoton).
வானவர் பூசை – உனது மூளையின் அதிர்வலைகள் மிக உயர்ந்த நிலைக்குச் செல்வது.
2. ஆலவாய் நாகம் – காலத்தையும் வெளியையும் இணைக்கும் மாபெரும் வளையம்
மதுரை நகரத்தின் எல்லையைக் காட்ட இறைவன் தனது திருக்கரத்தில் அணிந்திருந்த பாம்பை (ஆலம்) ஏவ, அந்த நாகம் நகரத்தைச் சுற்றி வந்து தனது வாலைத் தனது வாயால் கவ்விக்கொண்டது. இதனால்தான் மதுரை ‘ஆலவாய்’ என்ற மாபெரும் பெயரைப் பெற்றது.
ஓம் உனக்குள்ளே:
நாகம் என்பது கீழ்நோக்கி உறங்கும் உயிராற்றல் (Vindu). அது தன் வாலைக் கவ்வும்போது, உனது முதுகுத்தண்டின் அடிப்புறத்தில் தொடங்கும் உயிராற்றல் உச்சி முகட்டை அடைந்து மீண்டும் கீழ்நோக்கி இறங்கி ஒரு மாபெரும் வளையத்தை உருவாக்குகிறது. தொடக்கமும் முடிவும் இணையும் போது, காலப் பரிமாணமும் இடப் பரிமாணமும் முழுமையாக அழிகின்றன. இது ஏழாம் நிலை முதல் பன்னிரண்டாம் நிலை வரையிலான அகச் சுற்று.
3. தடாதகைப் பிராட்டியின் மூன்றாவது தனம் – ஆணவத்தின் அழிவு
மலையத்துவச பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் புத்திரகாமேஷ்டி யாகத்தில் உதித்த குழந்தைதான் தடாதகை (மீனாட்சி). அவள் மூன்று தனங்களைக் கொண்டிருந்தாள். கயிலாயம் சென்று சிவபெருமானைக் கண்டதும், மூன்றாவது தனம் மறைந்தது.
ஓம் உனக்குள்ளே:
மூன்று தனங்கள் = பரஞானம், அபரஞானம், ஆணவம்.
ஏன் மூன்று தனங்கள்? = கர்மம், மாயை, அகங்காரம் – இவைதான் மூன்று கிரந்திகள் (granthis).
கயிலாயப் படையெடுப்பு = உனது விழிப்புணர்வு கீழ்நிலை மையங்களிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து உச்சி முகட்டை (crown) அடைவது.
அங்கே தூய சாட்சி உணர்வை (சிவன்) கண்ட மறுகணமே, ‘நான் செய்பவன்’ என்ற அகங்காரம் முற்றிலுமாகக் கரைந்து விடுகிறது.
4. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் – மாபெரும் கபால இணைவு
பங்குனி உத்திரத்தில், தேவர்கள், முனிவர்கள், திருமால், உலக மன்னர்கள் சாட்சியாக நிற்க, சிவபெருமான் தடாதகையை மணம் புரிந்தார்.
ஓம் உனக்குள்ளே:
மீனாட்சி = இமைக்காத, எந்நேரமும் விழித்திருக்கும் சாட்சி உணர்வு (witness consciousness).
சுந்தரேசுவரர் = அசைவற்ற பேரொளி (Jothi).
திருக்கல்யாணம் = இந்த இரண்டு ஆற்றல்களும் உனது துவாதசாந்தப் பெருவெளியில் (உச்சி முகட்டிற்கு மேல்) ஒன்றிணையும் ரசவாதம். இது பதினேழாவது நிலை மற்றும் அதற்கும் மேலான மூன்று உச்சகட்ட ஒளி நிலைகளின் திறவுகோல்.
5. சித்திரைத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு உணர்வுப் படியும்
மதுரைச் சித்திரைத் திருவிழா 14 நாட்கள் நடக்கிறது. அதன் கால அட்டவணை உனது உணர்வுப் பரிணாமத்தின் துல்லியமான வரைபடம்:
வாஸ்து சாந்தி (ஏப்ரல் 18) – கீழ்நிலை நரம்பு மண்டலத்தைத் தூய்மைப்படுத்தல். முதல் மூன்று அடிப்படை நிலைகள்.
கொடியேற்றம், சிம்ம வாகனம் (ஏப்ரல் 19) – சுழுமுனையின் செங்குத்தான அச்சை நிறுவுதல்.
தங்கச் சப்பரம், கைலாச பர்வதம் (ஏப் 20–21) – உயிராற்றலை (Vindu) மேலெழுப்புதல். நான்கு முதல் ஏழாம் நிலை.
வேடர் பரி லீலை, ரிஷப வாகனம் (ஏப் 23–24) – அடிப்படை உள்ளுணர்வுகளை வெற்றி கொள்ளுதல்.
பட்டாபிஷேகம் (ஏப் 26) – கபாலச் சுரப்பிகள் முழு நரம்பு வலையமைப்பின் மீதும் முழுமையான இறையாண்மை பெறுதல் (பதின்மூன்று முதல் பதினாறாம் நிலை).
திருக்கல்யாணம் (ஏப் 28) – சாட்சி உணர்வும் பேரொளியும் இணையும் பதினேழாவது நிலை.
தேரோட்டம் (ஏப் 29) – பௌதீக உடல் என்னும் தேர் தெய்வீகமாக வழிநடத்தப்படுதல்.
தீர்த்தவாரி (ஏப் 30) – ஒளி உடல் நிலை (Jnana Deha) பூரணமாகி, பக்தியின் இறுதிக் கட்டம்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கல் (மே 01) – உச்சி முகட்டிலிருந்து சுரக்கும் பேரொளி மற்றும் அருளமுதம் முழு நரம்பு மண்டலத்திலும் நிரம்புதல். இது பதினேழாவது நிலைக்கு அப்பாற்பட்ட இறுதி மூன்று நிலைகளின் வெளிப்பாடு – மரணமிலா ஒளி தேகம்.
6. கள்ளழகர் வெள்ளைக் குதிரை ஏறி வைகையில் இறங்குதல் – உனக்குள் நிகழும் மாபெரும் பயணம்
சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளில், கள்ளழகர் வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஓம் உனக்குள்ளே:
வைகை ஆறு = சோம, சூரிய, அக்கினிக் கலைகள் கூடிய சுழுமுனை நாடி (Sushumna).
வெள்ளைக் குதிரை = வாசி – கட்டுப்படுத்தப்படாத நுட்பமான உள் சுவாசம்.
கள்ளழகர் = உனது உணர்வு (Jīva).
மதுரை = துவாதசாந்தம் – பன்னிரண்டாம் நிலை, ஆன்மாவின் இருப்பிடம்.
அதாவது, உனது உணர்வு (ஜீவன்) வாசியுடன் கூடி, சுழுமுனை நாடியில் ஏறி, பிரமரந்திரம் புகுந்து, துவாதசாந்தமாகிய மதுரையை அடைவதையே இந்தத் திருவிழா குறிக்கிறது.
7. சுதபஸ் முனிவரும் நாரையும் – மூச்சும் எண்ணங்களின் போரும்
கள்ளழகர் வைகையில் இறங்கி, மண்டூகமாக (தவளை) இருந்த சுதபஸ் முனிவருக்குக் காட்சி தந்தார். அப்போது ஒரு நாரை (கொக்கு) பயந்து விலகியது.
ஓம் உனக்குள்ளே:
தவளை = தியானத்தில் அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி அசைவற்று இருக்கும் சாதகன்.
நாரை = தவத்தில் ஆழ்ந்திருக்கும் சாதகனின் கவனத்தைச் சிதறடிக்க வரும் அலைபாயும் எண்ணங்கள்.
உச்சி முகட்டிலிருந்து மாபெரும் பேரொளி (கள்ளழகர்) இறங்கும்போது, எண்ணங்கள் என்னும் நாரை பயந்து விலக, மூச்சுக்காற்று விடுதலை பெற்று ஒளி தேகமாக மாறுகிறது. இதுவே சுதபஸ் முனிவரின் சாப விமோசனம்.
8. மீனாட்சி திருமணமும் அழகரின் திரும்புதலும் – ஒளி மீண்டும் உச்சி முகட்டில்
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும்போது, கள்ளழகர் அந்தத் திருமணத்தைக் காணாமல் வைகை ஆற்றுக்குள்ளேயே திரும்பிவிடுகிறார்.
ஓம் உனக்குள்ளே:
மீனாட்சி திருமணம் = சாட்சி உணர்வு பரம்பொருளோடு இணையும் துவாதசாந்தப் பெருவெளி.
அழகர் திரும்புதல் = உச்சி முகட்டிலிருந்து இறங்கி வரும் பேரொளி, சாட்சி உணர்வின் இணைவு நடந்தவுடன், கீழ்நிலை மையங்களில் தங்கிவிடாமல் மீண்டும் தன் மூல இடமான உச்சி முகட்டிற்கே திரும்பி நிலைபெறுவது.
9. சிறு நெறியும் பெரு நெறியும் – கபாலத் தெய்வங்களின் மெய்ஞ்ஞானம்
மதுரைக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தெய்வமும் உனது உணர்வின் ஒரு முகம்:
விநாயகர் = பஞ்ச பூத இயற்கைக் கலவை.
அனுமன், வாராகி = வாசி (உள் சுவாசம்).
இச்சா சக்தி (திரு உடை அம்மன்) = ஆன்ம தத்துவம்.
கிரியா சக்தி (கொடியுடை அம்மன்) = வித்தியா தத்துவம்.
ஞான சக்தி (வடிவுடை அம்மன்) = சிவ தத்துவம்.
நந்தி = உனது ஜீவ ஒளி.
நரசிம்மர் = சுழுமுனை.
தத்தாத்ரேயர் = சோம, சூரிய, அக்கினிக் கலைகளின் சங்கம்.
மகிஷாசுரமர்த்தினி = சுழுமுனை முச்சுடர் அனுபவம்.
வாலை = எட்டிரெண்டு (8+2=10) அனுபவம்.
தன்வந்திரி = பிரணவ கும்பம் (அமுத கலசம்).
10. விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும்
ருத்திரர் (விடையேறுபவர்) = காசி நாதன் – சுத்த சிவம்.
கள்ளழகர் (பரியேறுபவர்) = வாசி மீதேறி வரும் பரவிந்து.
இரண்டாவது பெருமானை (வாசி)ப் பிடித்தால்தான் முதலாமவர் (காசி நாதன்) சந்நிதிக்குச் செல்ல முடியும். வாசி மீதேறிப் பயணித்தால்தான் தூய சிவ அனுபவத்தை அடைய முடியும்.
11. முடிவுரை – புற உலக விழாவே அகத் திருவிழா
புற உலகில் கொண்டாடப்படும் இந்த மாபெரும் திருவிழா, உண்மையில் உனது கபாலச் சிம்மாசனத்தில் விழிப்புணர்வும் பேரொளியும் இணைந்து நடத்தும் மாபெரும் அகத் திருவிழா அன்றி வேறில்லை.
கடம்பவனம் = உனது உணர்ச்சி மையம்.
சுயம்பு லிங்கம் = உன் பினியல் ஒளி.
ஆலவாய் நாகம் = உயிராற்றலின் முழு வளையம்.
தடாதகையின் மூன்றாவது தனம் = அகங்கார அழிவு.
திருக்கல்யாணம் = சாட்சி உணர்வும் பேரொளியும் இணைதல்.
கள்ளழகர் வைகையில் இறங்கல் = வாசி மீதேறி ஜீவன் ஆன்மாவை அடைதல்.
இதுவே திருச்சிற்றம்பலம்.
இதுவே மரணமிலாப் பெருவாழ்வு (Jnana Deha).
“மதுரை வெளியில் இல்லை; மதுரை உனக்குள்ளே. அங்கே நீதான் மீனாட்சி. அங்கே நீதான் சுந்தரேசுவரர். அங்கே நீதான் கள்ளழகர்.”
நன்றி குருஜி Badhey Venkatesh 🌷
சித்தர்களின் ரகசியமும் -நவீன அறிவியலும்
சித்தர்களின் ரகசியமும் -நவீன அறிவியலும்
மரணத்தை வெல்லும் கலை!
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்”
– திருமந்திரம்
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
– திருமூலர், திருமந்திரம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நுண்ணோக்கியும் (Microscope) இல்லாத காலத்தில் திருமூலர் சொன்ன இந்த வரிகள் வெறும் ஆன்மீகப் பாடல்கள் மட்டுமல்ல.
இது மனித உடலின் செல்களைப் (Cells) பற்றிய மிகத் துல்லியமான உயிர்வேதியியல் (Biochemical) வரைபடம். “மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர்கள் சொன்னதை, இன்று நவீன உயிரியல் (Biology) எப்படி நிரூபிக்கிறது?
உங்கள் உடலை நீங்களே “மீள்நிலைப்படுத்த” (Reset) செய்யக்கூடிய 6 அறிவியல் ரகசியங்கள் இதோ.
ரகசியம் 1: உங்கள் ஆயுளின் ரகசியக் குறியீடு – டெலோமியர் பாதுகாப்பு (Telomere Protection)
உங்கள் DNA-வின் முனைகளில், காலணியின் (shoe) லேஸின் நுனியில் இருக்கும் பிளாஸ்டிக் உறை போன்ற ஒரு பகுதி உள்ளது. அதன் பெயர் டெலோமியர் (Telomere). ஒவ்வொரு முறை உங்கள் செல்கள் பிரியும்போதும் இது தேய்ந்து கொண்டே வரும். இது முழுமையாகத் தேய்ந்துவிட்டால், அதுதான் முதுமை; பிறகு மரணம்.
அறிவியல் விந்தை: தியானம், ஆழ்ந்த மன அமைதி மற்றும் சித்தர்கள் சொன்ன மூச்சுப் பயிற்சி (வாசி யோகம்) ஆகியவற்றைச் செய்யும்போது, டெலோமியர் தேய்வது குறைந்து, ஆயுள் நீடிக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எலிசபெத் பிளாக்பர்ன் (Elizabeth Blackburn) நிரூபித்துள்ளார்.
நோபல் விரிவுரை: 2009 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, டெலோமியர்கள் எவ்வாறு செல் முதுமையடைவதைத் தடுக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜாக் ஸ்ஜோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ரகசியம் 2: உடலின் உள்ளே நடக்கும் “சுய மறுசுழற்சி” – ஆட்டோஃபாகி (Autophagy)
நாம் பசித்திருக்கும்போது (நோன்பு / Fasting), நமது செல்கள் என்ன செய்யும்? உணவு கிடைக்காததால், உடலுக்குள் இருக்கும் பழுதடைந்த, தேவையற்ற புரதங்களையும் கழிவுகளையும் (Cellular Garbage) எரித்து ஆற்றலாக மாற்றும்.
சித்தர் பார்வை: இதைத்தான் சித்தர்கள் “உண்டியே சுருக்கி” வாழும் நோன்பு முறை என்றார்கள்.
அறிவியல்: ஆட்டோஃபாகி (Autophagy) என்ற இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்ததற்காக 2016 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானி யோஷினோரி ஓசூமி (Yoshinori Ohsumi) நோபல் பரிசு பெற்றார்.
ரகசியம் 3: பழையதை அழித்து புதியதைப் படைக்கும் மாயம் – ஸ்டெம் செல் மீளூக்கம் (Stem Cell Rejuvenation)
நீங்கள் நீண்ட நேரம் உண்ணாநோன்பு இருக்கும்போது, உங்கள் உடல் ஒரு அதிசயத்தைச் செய்கிறது: பழுதடைந்த பழைய வெள்ளை இரத்த அணுக்களை (White Blood Cells) அழித்துவிட்டு, ஸ்டெம் செல்களைத் தூண்டி புதிய, சக்திவாய்ந்த நோய் எதிர்ப்புச் செல்களை உருவாக்குகிறது. இது உங்கள் உடலின் “Restart Button”-ஐ அழுத்துவதற்குச் சமம்.
அறிவியல் குறிப்பு: இடைவிடா உண்ணாநோன்பு (Intermittent Fasting) ஸ்டெம் செல்களின் மீளுருவாக்கத் திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
ரகசியம் 4: மூளைக்கு வயதாவதில்லை! – நியூரோஜெனெசிஸ் & நியூரோபிளாஸ்டிசிட்டி (Neurogenesis & Neuroplasticity)
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் மூளை செல்கள் வளராது என்பது பழைய நம்பிக்கை. ஆனால், தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்பது, தியானம் மற்றும் நோன்பு ஆகியவற்றின் மூலம் மூளையில் புதிய நரம்புப் பாதைகளை (Neuroplasticity) உருவாக்க முடியும் என்பதை இன்று அறிவியல் ஆணித்தரமாகச் சொல்கிறது.
குறிப்பு: குவாண்டம் இயற்பியல் பற்றி எழுதும் எனக்கு (ஆசிரியர்) இரண்டு மாதங்களில் 78 வயது நிறைவடைகிறது. 1968 இல் நான் பொறியியல் படிக்கும்போது, கணினி கண்டுபிடிக்கப்படவில்லை. என் சொந்த முறையான தொடர் அறிதல் (Continuous Learning) மூலமே நான் அறிவியலில் இன்றளவும் புதுப்பித்த நிலையில் இருக்கிறேன்.
ரகசியம் 5: ஜீன்களைத் திருத்தி எழுதும் வித்தை – எபிஜெனெடிக் ரீசெட் (Epigenetic Reset)
“எங்க தாத்தாவுக்கு சர்க்கரை நோய், அதனால எனக்கும் வந்துடுச்சு” என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். மரபணுக்களை (Genes) மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவை எப்படிச் செயல்பட வேண்டும் (Gene Expression) என்பதை உங்களால் மாற்ற முடியும்.
அறிவியல் உண்மை: நல்ல உணவு, நோன்பு மற்றும் தியானம் ஆகியவை, ஆயுளைக் குறைக்கும் மரபணுக்களை ‘Switch Off’ செய்துவிட்டு, Sirtuins எனப்படும் புத்துயிர்ப்பு மரபணுக்களை ‘Switch On’ செய்கின்றன.
ரகசியம் 6: உடலைத் துருப்பிடிக்காமல் காக்கும் கவசம் – ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் (Reducing Oxidative Stress)
இரும்பு காற்றில் பட்டால் துருப்பிடிப்பதைப் போல, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனால் நமது செல்களும் உள்ளே “துருப்பிடிக்கின்றன” (Oxidative Stress). இதைத் தடுக்க, இயற்கையாகவே நமது உடலில் மெலடோனின் (Melatonin) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) சுரக்கின்றன. இருளில், சரியான நேரத்தில் உறங்கும்போது இது அதிகம் சுரந்து செல்களைக் காக்கிறது.
சித்தர்கள் சொன்ன “காயகல்பம்” என்பது வெளியில் கிடைக்கும் ஏதோ ரகசிய மூலிகை மட்டுமல்ல. வெளியிலும் சில காயகல்ப மூலிகைகள் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால், உண்மையான காயகல்பம் உங்கள் உடலுக்குள்ளேயே – இங்கு சொன்ன Autophagy, Epigenetic Reset, Telomere Protection போன்ற அறிவியல் விந்தைகளே அது.
உடலை ஒரு குப்பைத் தொட்டியாகக் கருதாமல், அதை ஒரு தெய்வத்தின் கோயிலாகக் கருதி, சரியான நோன்பு மற்றும் தியானம் மூலம் பராமரித்தால், முதுமையைத் தள்ளிப்போட்டு, ஆரோக்கியமாகப் பல்லாண்டு வாழலாம்.
இதுவே சித்தர்களின் மெய்ஞானம்.
🌷நன்றி குருஜி BG.Venkatesh Badhey Venkatesh
தெளிவு
தெளிவு
இருள் உள்ள இடத்தில் தான் ஒளியும் இருக்கும்
பிரமாணம்
கோவில் கர்ப்பக்கிரக இருளில் ஒளியாகிய ஆன்ம லிங்கப் பிரதிஷ்டை
இறை இருக்கும் கண்ணில் இருளும் இருக்கு
கண்ணில்
அன்பு பாசம் நேசம் கெஞ்சல் கொஞ்சல்
குழைவு காதல் காமம் கண்டிப்பும் மட்டுமல்ல
குரோதம் கொலவெறி ஏளனம்
அலட்சியம் எல்லாமும் உண்டு
முன்னது அருள் இறை பாகம் எனில்
பின்னது மாயா மலம் சம்பந்தப்பட்ட மன பாகம்
ஆக இருளும் ஒளியும் ஒரே இடத்தில்
மலத்திரை தீக்கிரையானால்
ஆன்மவொளி தோன்றும்
வெங்கடேஷ்
அருளும் குறளும்
அருளும் குறளும்
அருள் பெறுதல்
1.தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான்
எங்ஙனம் அருள் ஆளும்
இதில் கொல்லாமை பத்தி மட்டும் தான் . யோகம் இல்லை 2. கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் வணங்கும் இதில் கொல்லாமை பெண் போகம் மறுத்தல் விந்து அடக்கம் அதன் மூலம் காய கல்பம் , ஒளி தேகம் அடைதல் முதல் குறள் விட , ரெண்டாவது தான் அருளைப் பெறுவதுக்கான முழுமையான வழியும் துறையும் முறையும் ஆகும் விந்து தான் அருள் , சித்தி , ஒளி தேகத்துக்கு அடிப்படை இதை ஆரும் ஏற்றுக்கொள்வதிலை ஒப்புக்கொள்வதிலை
வெங்கடேஷ் Seen by 11
இதில் கொல்லாமை பத்தி மட்டும் தான் . யோகம் இல்லை 2. கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் வணங்கும் இதில் கொல்லாமை பெண் போகம் மறுத்தல் விந்து அடக்கம் அதன் மூலம் காய கல்பம் , ஒளி தேகம் அடைதல் முதல் குறள் விட , ரெண்டாவது தான் அருளைப் பெறுவதுக்கான முழுமையான வழியும் துறையும் முறையும் ஆகும் விந்து தான் அருள் , சித்தி , ஒளி தேகத்துக்கு அடிப்படை இதை ஆரும் ஏற்றுக்கொள்வதிலை ஒப்புக்கொள்வதிலை
வெங்கடேஷ் Seen by 11
சமயயதமும் சன்மார்க்கமும்
சமயயதமும் சன்மார்க்கமும்
முதலாமவர்
சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி
தவம் தியானம் ஆற்றுகிறார்
புற சூரியன் ஆன்மா என அறியாமலேயே
பின்னவர்
தவமே செய்வதிலை
தேவையேயிலை என்கிறார்
செய்வோர் ஆன்மா விளங்கும்
தென்திசை நோக்கியே
பார்வை மனம் பிராணன் செலுத்தறார்
ஏனெனில்
ஆன்மா அகச் சூரியன்
Soul Atman is Inner Sun
வெங்கடேஷ்
கண்மணிப் பெருமை
கண்மணிப் பெருமை
வாய் உதடு
பேசுவது மட்டுமல்ல பாஷை
பார்வை பேசுவது கூட பாஷை தான்
என்ன
அது பேசுவது மௌன பாஷை அவ்வளே
அதனால் தான்
மௌனமாகிய ஆன்மா அடைய
மௌன மொழி பேசும்
பார்வை துணை வேணும் என்றார் ஞானியர்
வெங்கடேஷ்
Seen by 8
தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் "
தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் "
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 71
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் " தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே "
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே
பொருள் :
” ஒருமை எனும் தவத்தால் ” கிடைக்கும் பெரும் பயனே
” சோறு மட்டும் போடும் சன்மார்க்கத்தார் கவனிக்க :
தவம் தவம் என தான் கூறியுள்ளார் – ஜீவகாருண்யம் – தயவு என கூறவிலை ”
"எல்லாம் அருளும் அளிக்கும் ஆன்ம நிலையாகிய தருமச்சாலையில் " எனக்கு எல்லாம் தந்த அளித்த தனித்தலைவா
தரும சாலை - ஆன்ம நிலையே அன்றி சோறு போடும் அன்னதானச் சத்திரம் - அன்னதானக்கூடம் அல்ல என்பதை எல்லா சன்மார்க்கத்தாரும் அறிந்து உணர வேண்டும்
ஆன்ம நிலையே எல்லாம் தங்கு தடையின்றி வழங்கும் என்பதால் வள்ளல் எப்போதும் அது அன்னம் வழங்கும் அன்னதானச்சாலை - சத்திரம் ஆக மாற்றி உலகுக்கு காட்டினார்
வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 21
பிரபஞ்ச பேராற்றல் 21
"பாத்திரம் அறிந்து பிச்சை இடு"
இது கோவிலில் இடும் பிச்சையை குறிக்கவிலை
அதாவது , மேலான ஞானம் , பர விஷயம், பர வித்தை யாவையும், எல்லார்க்கும் பீச்சில் விற்கும் சுண்டல் போல், கோவில் அன்ன தானம் போல் எல்லார்க்கும் சொல்லாமல் , கற்றுத்தராமல்,
அவரவர் பக்குவம் வினை ஆர்வம் ஆற்றல் பொறுத்தும், கணித்தும் இதனை கற்றுத்தர வேணும் என்று தான் இந்த மொழி கூறுது
"Bible : Don't throw Pearls in front of Swine's '
மேலும், பிரபஞ்ச பேராற்றல் கொண்டு செயும் பர உதவி ஆம்
நோய் தீர்த்தல்
துன்பம் துயர் தீர்த்தல் யாவையுமே , பெறும் அன்பர் , மக்கள் தராதரம் பாரத்து ஆற்ற வேணும் என்பதாகும்
வள்ளல் பெருமான் , ஒருவர்க்கு பர உதவி செய எழுந்தார், அருள் சம்மதம் கிடைக்காமல் போகவே, அங்கேயே அமர்ந்து விட்டார் .
தகுதி இல்லை
வெங்கடேஷ்
Seen by 8
என் பதிவுகள் யாருக்கு புரியும் ??
என் பதிவுகள் யாருக்கு புரியும் ??
என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும்
இது பெரும்பாலானவர்க்கு தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும்
எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம்
கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது
கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டு
ஆதலால் கண்ணில் இருக்கும் திருவடி குரு ஆகும்
சற்குரு செல்வராஜ் சீடர்கள் என் பதிவுகளை ஏற்றுக்கொள்வார்கள் – அவர்களுக்கு புரியும் – ஏனெனில் அவர்கள் குரு நிறைய நூல்களில் கண்மணி பெருமை – அதன் தவம் – திருமந்திரம் பற்றி நூல் எழுதி விளக்கம் அளித்துள்ள படியால் அவர்களுக்கு புரியும்
கண்மணி மாலை – மந்திர மாலை என நூலகள் இருக்கின்றன
மேலும் என்னிடம் தீக்கை வாங்கிய திரு செல்வராஜ் சீடர்களுக்கு இன்னமும் நன்றாக என் பதிவுகள் புரியும் – நான் சொல்ல வருவதும் புரியும்
அனேக திருமந்திரப் பாடல்களுக்கு அவர் விளக்கம் தவறாக இருந்தாலும் – அவர் திருமந்திரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது பாராட்டுக்குரிய விஷயம்
அதில் திருவடி – அருள் – கண்மணி அவசியம் – கண் பயிற்சி எல்லாம் எழுதியது பாராட்டுக்குரிய விஷயம்
சன்மார்க்கத்தவர் தான் இதை மதிப்பதேயில்லையே
வெங்கடேஷ்
சுத்த சன்மார்க்கத்தின் பெருமை
சுத்த சன்மார்க்கத்தின் பெருமை
மந்திரம் : சன்மார்க்கத்துக்கு முகம் தான் பீடம்
தமிழ் முது மொழி :
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்
அதனால் எட்டாவதாகிய சிரசில் தான்
பயிற்சி சாதனம் தவம் தியானம்
இருக்குதே அல்லாது
மற்ற மன்றம் உரைப்பது போல்
ஆசனம் சுருக்குவதில் இலை
அது ஏமாத்து வேலை
ஆனால்
உலகம் இதை புரிந்து கொள்ளவிலை
உண்மை சாதனம்
வழி முறை துறை எலாம்
கண்ணில் இருக்கு
வெங்கடேஷ்
எட்டாவதும் எட்டாததும்
எட்டாவதும் எட்டாததும்
மூலர் பெருமான்
தான் எட்டாவது ஜாண் ஆகிய
சிரசில் தான் தவம் செய்ததாக குறிப்பிடுகிறார்
இது சிரசின் பெருமை
எட்டாவதில் விளங்கும் அரும்பெரும் பொருள்
சாமானியர்க்கு எட்டாததாகவே விளங்குது
தயவு அருள் வேண்டும்
வெங்கடேஷ்
காவிய நாயகனும் கைபிடித்த நாயகனும்"
காவிய நாயகனும் கைபிடித்த நாயகனும்"
காவிய நாயகனாம் ராமனை
உயர்வரை உச்சிமேல் செலுத்தி
கையிலை நாயகனையும்
துவார கை நாயகனையும்
கூட வல்லாரே
நெற்றிக்கண் திறக்க வல்லார் ஆவர்
அவரே ஆன்ம தரிசனம் பெற வல்லார்
வ
ெங்கடேஷ்
கண்மணி பெருமை
கண்மணி பெருமை
அம்பு விழியால் அம்புகளை
அம்புலி மண்டலத்துக்கு
பாய்ச்ச வல்லாரே
மதியமுதம் உண்ண வல்லார் ஆவர்
ஒளி தேகம் பெற வல்லார் ஆவர்
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
சடங்கும் சன்மார்க்க விளக்கமும்
சடங்கும் சன்மார்க்க விளக்கமும்
எனக்கு திருமணமாகி , நான் மனைவியுடன் புது தில்லி சென்றேன்
அப்போது ரயிலில் செல்லும் போது, கிருஷ்ணா நதியில் மக்கள் காசு போட்டனர்
நானும் செய்தேன்
கங்கை யமுனையிலும் இதே மாதிரி செய்தனர்
என் என யோசித்தேன் ?????
விடை ;
விந்து செல்வத்தை , சிரசில் இருக்கும் நீர் நிலைகளாகிய நதி குளம் அதில் சேர்க்க வேணும் என்ற மகத்தான ஞான பயிற்சியின் புற வெளிப்பாடு தான் இந்த சடங்கு ஆம்
ஆனால் ஆற்றுவார் ஆர்???
வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 25
பிரபஞ்ச பேராற்றல் 25
நான் ஒருவரிடம் இதை நான் என்னுடல் கிரகிக்கிறது என்ற போது , சுகமளிக்கும் ஆற்றல் கொண்டு சோதித்துக் கொள்ளவும் என்றார்
சோதனையாக 2 பேர் தேர்ந்தெடுத்து , செய்து பார்த்ததில், இருவரும் சுகமாயினர்
ஆனால் கை அவர் மேல் வைத்து செயவிலை
எண்ணம் மூலம் பிரபஞ்சாற்றலை அவர் மீது பாய்ச்ச, சுகம் ஆனது
அவரிடம் தெரிவித்தேன்
நல்லது ஆனால் இன்னம் வளர வேணும் என்றார்
மக்கள் உடலில் கை வைத்து சுகமளிக்கும் வரையில் வளர வேணும் என்றார்
வெங்கடேஷ்
As Above So Below
As Above So Below
As is
Rotten fruits can't be offered to God
So is that
Semen embedded with all negative n Bad characters
Can't be offered to attain Wisdom
Hence it needs to be Purified thru Sublimation
BG Badhey Venkatesh
பிரபஞ்சப் பேராற்றல் 26
பிரபஞ்சப் பேராற்றல் 26
பி ஆற்றலும் எண்ணத்தின் வலிமையும்
நம் எண்ணத்தின் வலிமை அறிய வேணுமா ????
பிரபஞ்ச ஆற்றல் விடை சொல்லும்
எண்ணத்துக்கு வலிமை இருந்தால் , பிர ஆற்றல் அதை உடன் நிறைவேற்றிக் கொடுக்கும்
இதை வைத்தே எண்ண வலிமை அறிந்து கொள்ள முடியும்
எண்ணத்துக்கு வலிவு ஏற ஏற, பிரபஞ்சம் அவைகள் யாவையும் நிறைவேற்றும்
எப்படி வலிவு ஏற்றுவது ????
அது கண்ணில் இருக்கும் ரகசியம் ???
வெங்கடேஷ்
ஜலக்கிரீடை - சன்மார்க்க விளக்கம்
ஜலக்கிரீடை - சன்மார்க்க விளக்கம்
இலக்கியம் இதை அரசர்கள் தங்கள் அந்தப்புர ஆசை நாயகியருடன் நீரில் ஆடும் களியாட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது .
இது வேடிக்கையும் நகைச்சுவையும் வேதனையும் ஆம்
இதன் உண்மைப் பொருள் ஆன்மீகத்தில் தான் உளது
உண்மை விளக்கம் :
தாகத்துக்கு நாம் அருந்தும் நீரில் இருக்கும் ஆக்சிஜன் ஆகிய பிராண வாயுவை எப்படி உடல் கிரகிக்குதோ , அவ்வாறே தான் குளிக்கும் போது , நீரில் இருக்கும் ஆக்சிஜனை உடல் கிரகிக்கச் செய்வதாகும்
கிரீடம் என்றால் இணைத்தல் சேர்த்தல் என பொருள் ஆம்
ஜலக்கிரீடை என்றால் ஜலத்தில் இருக்கும் சக்தியை உடலுடன் சேர்ப்பதாம்
இது சன்மார்க்க விளக்கமாம்
இதே கருத்தை முன்மொழிந்தார் ஜக்கி ஒரு டிவி காணொளியில்
நான் வியப்பின் உச்சியில்
இந்த மாதிரி வித்தியாசமான விளக்கங்களால் அவர் மீது எனக்கு மதிப்பு அதிகம் , தற்கால குருமார் யாரை விடவும்
வெங்கடேஷ்
உபதேசமும் உபசாந்தமௌனமும்
உபதேசமும் உபசாந்தமௌனமும்
பயிற்சி பெற்றுக் கொண்டு பயின்று வந்தால்
உபதேசம் அடைந்தும்
அதன் பயனால்
உபசாந்த மௌனம் அடைவர்
உபதேசத்தில் இருக்கு உபசாந்த மௌனம்
வெங்கடேஷ்
அகமும் புறமும்
அகமும் புறமும்
எல்லா அசைவும் ஒழிந்து விட்டால்
மனிதன் ஆட்டம் முடிந்துவிட்டது
ஆனால் ஆன்ம சாதகனுக்கோ
தவத்தில் எல்லா அசைவும் ஒழித்து நின்றால்
உள்ளே பரனின் ஆட்டம் ஆரம்பம் என பொருள்
இது தான் வேறுபாடு
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
உலக வாழ்வின்
கவலைகளிலிருந்து துன்பத்திலிருந்து
நிவாரணம் வேண்டுமா
நிர்வாணம் அடைவது தான் ஒரே தீர்வு
நிர்வாணம் எனில்
ஆடையால் அடைவதல்ல
தத்துவத்தால் அடைவது
அதை களைந்தும் கடந்து செல்வதும் ஆம்
வெங்கடேஷ்
Seen by 8
போதியும் கபோதியும்
போதியும் கபோதியும்
போதி மரத்தை சுத்தி சுத்தி வந்தாலும்
கண்ணிலா கபோதியராக உளார் மக்கள்
கண் திறந்திருந்தாலும்
உள் விழிப்புணர்வு வந்தபாடிலை
அந்த மரம் புறத்தில் இலை
அது பிரணவ மரம்
வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 31
பிரபஞ்ச பேராற்றல் 31
ஊசி இடம் கொடுத்தால் தான்
நூல் நுழைய முடியும் உள்ளே
உடல் சுத்தமாக இருந்தால் தான்
அது பிரபஞ்ச சக்தியை இழுக்கும்
உள்ளே அனுமதிக்கும்
சுத்தம் தான் சுத்தத்துடன் சேரும்
பிரபஞ்ச சக்தி சுத்த அணுக்களாம்
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
தாமரை ஆம் ஆன்மாவில்
படர் தாமரை ஆம் மாய மலம் படர்ந்திருக்கு
ஜோதியை வாசியால் ஊதி
பெருஞ்ஜோதி ஆக்கி
அதனை எரித்து சாம்பலாக்கி நீக்க
ஆன்மா பிரகாசிக்கும்
வெங்கடேஷ்
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ???
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ???
உண்மைச் சம்பவம்
சென்ற ஆண்டு வந்த விஷன் அருட்காட்சி
நான் ஒரு சிறு அறைக்குள் நுழைகிறேன்
பல கதவுகள் திறக்கப்பெற்று உள் செல்கிறேன்
உள்ளே செல்ல செல்ல , அரவம் ஆள் , கூச்சல் , சத்தம் அடங்க அடங்க , அமைதியாய் விடுது
உள்ளே பொன்னொளி வீசும் அறை , நீர் இருக்கு , அங்கே ஒருவர் தலை கவிந்து தவம் செய்கிறார்
முடிக்கற்றைகள் முன்னே
நான் அருகே செல்கிறேன்
தலை நிமிர்ந்து எனைப் பார்க்கிறார்
என்ன வியப்பு ????
அவர் அச்சு அசலாக எனைப் போலவே
ஆனால் இளமையாக , எனைவிட அழகாக ஒளிவிடுது
ஆன்மா சுந்தர வடிவு, அதனால் சுந்தரராஜ, சௌந்தரராஜ பெருமாள் என அதுக்கு பேர்
ஒன்றும் பேசவிலை மௌனம் தான்
பிறகு தன் கையை ஓரிடத்தில் காட்டியதில், அங்கே ஒரு ஒளி அசையாமல் ஆடாமல் ஒளி வீசுது
அது தான் ஆன்ம ஒளி , அது அப்படித்தான் இருக்கும்
வள்ளல் தன் அருட்பாவில் :
மிகுபெரும் காற்றடித்தாலும் ஆடாதே அசையாதே என பாடுகிறார்
முழுமையான பாடல் நினைவுக்கு வரவிலை
எனக்கு இந்த விஷன் சில விஷயம் தெரியப்படுத்துது அல்லாது நான் இந்த அரும் பெரும் காட்சி தரிசனம் கிட்டும் எனத்தோன்றவிலை இந்தப் பிறவியில்
பொறுத்திருந்து தான் பாக்கோணும்
வெங்கடேஷ்
சிவராத்திரி – பெருமை “
சிவராத்திரி – பெருமை “
“ சாமானியர் கவலையால் தூக்கம் தொலைக்கிறார் ஞானியரோ நாதத்தால் தூக்கம் ஒழிக்கிறார் “ தூக்கம் ஒழித்தால் தான் ஞானம் அடைய முடியும் நாதத்திலே மனம் லயிக்கச்செய்து விழிப்பு நிலையிலே இருக்கார் இதனால் ஜக்கி சிவராத்திரி முழுதும் மேளம் கொட்டச்செய்கிறார் ஆட்டம் பாட்டம் நடனம் என் மனதை தூக்கத்தின் பால் இருந்து திருப்பி விழிப்பு நிலையிலே இருக்கச்செய்கிறார் அவர் விஷயம் தெரிந்த ஞானி தான் வெங்கடே ஷ்
“ சாமானியர் கவலையால் தூக்கம் தொலைக்கிறார் ஞானியரோ நாதத்தால் தூக்கம் ஒழிக்கிறார் “ தூக்கம் ஒழித்தால் தான் ஞானம் அடைய முடியும் நாதத்திலே மனம் லயிக்கச்செய்து விழிப்பு நிலையிலே இருக்கார் இதனால் ஜக்கி சிவராத்திரி முழுதும் மேளம் கொட்டச்செய்கிறார் ஆட்டம் பாட்டம் நடனம் என் மனதை தூக்கத்தின் பால் இருந்து திருப்பி விழிப்பு நிலையிலே இருக்கச்செய்கிறார் அவர் விஷயம் தெரிந்த ஞானி தான் வெங்கடே ஷ்
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 4
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 4
** தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே திருச்சிற்றம்பலத்தே
வானலால் வேறொன்றிலை எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
— பிள்ளைச்சிறுவிண்ணப்பம்
இங்கு அசைவிலாத் தலைவனே என குறிப்பிடுவது ஆன்ம ஜோதியைத்தான்
நம்மவர் தலைவா என்றவுடன் அபெஜோதியைத்தான் எண்ணுவர்
அவர்க்கு அபெஜோதியை விட்டால் யாரும் அறியார்
** இதை கவிகள் – “ துளங்காமல் துலங்கும் ஜோதி “ எங்கிறார்
வெங்கடேஷ்
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 3
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 3
அருட்பா
அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
இதில்
“ அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே “
என்பது ஆன்ம ஜோதியைத் தான் குறிப்பிடுது
வெங்கடேஷ்
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
மனிதராகிய நாம் வாழ்வதும் எல்லா செயலையும் ஆற்றுவது வெளியில் தான்
அதே போல்
நம்மை ஆட்டிப்படைக்கும் தத்துவங்களும் இருப்பது வெளியிலும் தான்
அவைகள் தத்துவ வெளிகள் ஆம்
தத்துவங்கள் 36
ஆன்ம தத்துவம் – 24
வித்யா 7
சிவ தத்துவம் 5
மொத்தம் 36
இவைகள் எங்கெங்கு உள என விளக்கும் அகவல் வரிகள்
1 மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 573 - 574
இதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம் உயிர் வெளியில் வகுத்து வைத்துள்ளதாம் அபெ ஜோதி
2 காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576
இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி
3 துரிசறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 577 -578
சுத்த தத்துவங்கள் ஆகிய சிவ தத்துவங்களை சுத்த நல் வெளியில் அபெஜோதி வைத்து வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார் வள்ளல் பெருமான்
எல்லாம் வெளியில் தோன்றி அங்கேயே ஆட்சி செய்தும் முடிவில் முடியும்
வெங்கடேஷ்
பிரபஞ்சப் பேராற்றல் 35
பிரபஞ்சப் பேராற்றல் 35
எப்படி
இயங்குதலும் இயங்காமையும் சார்ந்திருக்கோ ??
பின்னி பிணைந்திருக்கோ
தண்டவாளம் அசையாமல் நின்றிருந்தால் தான்
அதன் மேல் ரயில் அசைந்து செல்ல முடியும்
அவ்வாறே தான்
பிரபஞ்சப் பேராற்றலும் பார்வையும் மனமும் பின்னிப்பிணைந்திருக்கு
பார்வையும் மனமும் இயங்காமல் நின்றால் தான்
பிரபஞ்சப் பேராற்றல் நம் உடலில் இயங்கும்
வெங்கடேஷ்
வள்ளல் பெருமானின் நடத்திய அற்புதம் 12
வள்ளல் பெருமானின் நடத்திய அற்புதம் 12
சத்திய ஞான சபைக்கான கொடி மரம் அமைத்தல் பணி
அதுக்கு மரம் வேண்டி தன் அன்பரை சென்னைக்கு அனுப்பி எடுத்து வர சொன்னார் – இந்த உயரம் அகலம் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்
அவரும் அவர் கூறிய மாதிரி தேர்ந்தெடுத்து பார்த்து – கடை முதலாளியிடம் விலை பேசினார்
அவரோ – இந்த விலைக்கு தான்
அன்பர்க்கும் அது மிக மிக அதிகமாக தோன்றியது
அதனால் வடலூர் வந்து வள்ளலிடம் சேதியை கூறினார்
அவர் நாளை செல்லவும் – நானும் அங்கிருப்பேன் என்றார்
அவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்த போது – வள்ளல் பெருமான் அந்த மரத்தின் மீது நின்றிருந்தார்
கடை அதிபர் – விலை குறைத்து அன்பர் கேட்ட விலைக்கே கொடுக்க சம்மதித்து கொடுத்து விட்டார்
அவர்க்கு வியப்போ வியப்பு
இது தான் ஞானியின் வல்லமை
மனதை மாற்றிவிடுவர்
அன்பர் தம்முடனே மரத்துடனே வண்டியில் செல்லலாம் என கூற , நீங்கள் எடுத்து வரவும் என கூறினாராம்
அன்பர் வடலூர் வந்து பார்த்த போது – அங்கே வள்ளல் பெருமான் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து – வியந்து – ஐயா எப்போது இங்கு வந்தார் ?? என வினவ
ஐயா எங்கும் செல்லவிலை – இங்கேயே காலையில் இருந்து இருக்கார் என கூற் , அவர்க்கு ஒன்றும் புரியவிலை
இது தான் சுத்த தேகம் போல் ஒளி தேகம் பெற்ற ஞானியர் வல்லமை - ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் சஞ்சரிக்க முடியும் என்பது இந்த சம்பவம் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்
வெங்கடேஷ்
பிரபஞ்சப் பேராற்றல் 36
பிரபஞ்சப் பேராற்றல் 36
உண்மை சம்பவம்
நம்மாழ்வார் வரலாறு
இவர் வைணவ பெரியார்களில் ஒருவர் - பெயர் போனவர்
இவர் பிறந்தவுடன் வாய் பேசவிலை – பால் குடிக்கவில்லை – கண் திறக்கவிலை
16 ஆண்டுகள் இப்படித்தான் இருந்தார்
பின் எப்படி உயிர் வாழ்ந்தார் ?? எனில் ??
பிரப ஞ்சப்பேராற்றலின் உதவியால் தான்
இவர் மற்றொரு பெயர் – சடகோபன்
அதாவது நாம் சுவாசிக்கும் சடமாகிய பிராண வாயு இவர் நாசியில் நுழைய முற்பட்ட போது – அப்போது இவர் கோபப்பட்டு – சீ போ என கூறியதாகவும்
சடத்தின் மீது கோபப்பட்டதால் இவர்க்கும் சடகோபன் என்று பெயர்
இது தான் பிர சக்தியின் மகிமை
இது சித்தி ஆனால் போதும் – உணவு உறக்கம் எதுவும் தேவையிலை
வாழ்ந்து கொண்டே இருக்கலாம்
வெங்கடேஷ்
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
சுட்டுதற்கரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்ட மேல் சபை எனும் அருட்பெருஞ்சோதி ( 73 -74 )
பொருள் :
இந்த ரெண்டு வரியில் எல்லா ரகசியத்தையும் போட்டு உடைத்து விடுகிறார் பெருமான்
அட்டமேல் சபை என்றால் 8 கோண சபை ஆகிய ஞான சபையின் மேல் உத்தரத்தில் விளங்கும் சுகாதீத வெளி ஆகிய பேரின்ப வெளி
அது சிற்றம்பல வெளி மேல் விளங்கும் ஞானப்பெருவெளி – 17வது சுத்த சிவ துரியாதீத வெளி ஆம்
அதாவது எண் கோண் சபை எனில் அது அபெஜோதி விளங்கும் சபை அல்ல
அது ஆன்மாவின் சபை என தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்
ஆனால் ஜோதி தரிசனத்தின் போது அபெஜோதி அபெஜோதி என்ற சொல்லே காதில் கேட்குது
வெங்கடேஷ்
பிரபஞ்சப்பேராற்றல் 39
பிரபஞ்சப்பேராற்றல் 39
நம் இதிகாச புராணங்களிலும் இந்த பேராற்றல் பற்றி செய்தி உளது
ஆனால் அவைகள் உருவகம் செயப்பட்டுள்ளன
1 ராமாயணம் – அனுமன்
இவர் வாசி ஆகிய பிரபஞ்ச சக்தி ஆவார் -
பிராண சக்தி ஆவார் - அதனால் தான் வாயு புத்திரனாக சித்தரிக்கப்பட்டுள்ளார்
இவரால் ஆகாத காரியமிலை
எல்லாம் ஜெயம் தான்
மிக பலசாலி
2 ஹம்சம் எனும் புள்
இந்த பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , பாலை மட்டும் பிரித்து உண்டுவிடும் வல்லமை உடைத்து என நம் புராணம் உரைக்குது
உண்மையில் அப்படி ஒரு பறவை இல்லவே இலை
அதாவது எந்த ஆன்ம சாதகன் தான் உள்ளிழுக்கும் சுவாசக்காற்றில் ,அதில் கலந்து நிற்கும் பிராணனாகிய பிரப ஞ்ச சக்தியை பிரித்து அதன் மூலம் வாழ்கின்றானோ அவன் தான் ஹம்சப் பறவை
ஹம் சம் என்றாலே
ஹம் ஆகிய மேல் ஏறும் சுவாசம்
சம் வெளி வரும் சுவாசம் ஆக இருக்கையில் – அது நாம் சுவாசிக்கும் பிராணவாயுவே அன்றி – ஒரு பறவை குறிப்பிடவில்லை
வெங்கடேஷ்
கண்மணி பெருமை
கண்மணி பெருமை
கண் ஒரு உறுப்பு
அது ஒரு இந்திரியம்
அதை வைத்து எப்படி சாதனம் என
கண் தவம் நயன தவம் ஏளனம் செய்தவர்கள்
இதில் சன்மார்க்க அன்பரோடு மற்றவரும் அடக்கம் தான்
அதே கண் வைத்து
ஏழாம் அறிவு டோங்கு லீ
மனிதர் ஜடப்பொருள் கட்டுப்படுத்தினால்
ஆஹா ஓஹா என வாயார புகழ்கின்றார்
ரசிக்கின்றார் பாராட்டுகின்றார்
என்ன உலகமடா இது?
வெங்கடேஷ்
Seen by 7
சடங்கின் சன்மார்க்க விளக்கம்
சடங்கின் சன்மார்க்க விளக்கம்
ஐயர் வீட்டில் கோவிலில் யாகம் வளர்க்கும் போது அந்த வேள்வித்தீயில் என்ன ஊற்றி தீ வளர்க்கிறார் ?
நெய்
இதில் பெரிய ரகசியம் இருக்கு
அதாவது
நெய் – பசுவின் பாலில் இருந்து வருது
பசு = ஜீவன்
பால் = விந்து
நெய் = விந்துவின் ரசம் சாறு
அதனால் நாம் விந்துவை சாதனத்தில் மேலேற்றுவதிலை
அதன் ரசம் சாறு ஆகிய கலைகள் விந்துகலை தான் மேலேறுது ஏற்ற வேண்டும்
புறத்தில் எல்லா சடங்கும் அக சாதனத்தின் புற வெளிப்பாடு தான் என்பதில் ஐயமில்லை
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
கண்மணி பெருமை & சத்திய ஞான சபை விளக்கம் “
கண்மணி பெருமை & சத்திய ஞான சபை விளக்கம் “
அருட்பா -
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ
பெருக என அது திறக்கும் பெருந திறவு கோலும்
எட்டும் இரண்டும் தெரியாதே ஏன் கையிலே கொடுத்தீர்
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டி செய நினையாதீர் அரை கணமும் தரியேன்
அரைக கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக
வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் உம ஆணை
மணி மன்றில் நடம புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !
பொருள் :
பெட்டி – நம் தலை
உலவாத பொருள் : ஆன்மா
திறவு கோல் – கண்கள்
எப்படி எனில்?
சத்திய ஞான சபையில் நடு ஜோதிக்கு கீழ் இரு அறைகள்
இவை அக்கு வடிவத்தை நினைவுபடுத்தத்தான்
அப்படி எனில்
அவைகள் இரு கண்கள் தான் வள்ளல் பெருமான் இந்த அறையில் பெட்டியில் சாவி வைத்திருந்தார் ஒரு பக்க பெட்டியில் இருந்து சாவி எடுத்து – மற்றொரு அறை திறந்து அதில் இருக்கும் சாவி எடுத்து சத்திய ஞான சபை திறப்பார்களாம் அப்படி எனில் அவர் இரகசியமாக கூற வருவது : அந்த இரு பெட்டிகள் கண்கள் எனில் சாவி அது தானே என பொருள் ஆகுது அதனால் கண்ணில் இருக்கு சாவி - திறவு கோல் – கண் தான் சாவி அது கொண்டு தான் வாசல் திறந்து –உள் நுழைந்து நெற்றிக்கண்ணுக்கு செல்ல முடியும் ஆன்மாவைத் தரிசிக்க முடியும் இதே கண் கொண்டு தான் 8 /2 ஒன்று சேர்க்க முடியும் இந்த அக்கு ஏற்பாட்டை பார்த்து நம் சன்மார்க்க அன்பர்கள் இரு கண்கள் தான் 8 * 2 என கதை கட்டிவிட்டார்கள் – கன்னியாகுமரி தங்க ஜோதி சபை உட்பட வெங்கடேஷ்
அவைகள் இரு கண்கள் தான் வள்ளல் பெருமான் இந்த அறையில் பெட்டியில் சாவி வைத்திருந்தார் ஒரு பக்க பெட்டியில் இருந்து சாவி எடுத்து – மற்றொரு அறை திறந்து அதில் இருக்கும் சாவி எடுத்து சத்திய ஞான சபை திறப்பார்களாம் அப்படி எனில் அவர் இரகசியமாக கூற வருவது : அந்த இரு பெட்டிகள் கண்கள் எனில் சாவி அது தானே என பொருள் ஆகுது அதனால் கண்ணில் இருக்கு சாவி - திறவு கோல் – கண் தான் சாவி அது கொண்டு தான் வாசல் திறந்து –உள் நுழைந்து நெற்றிக்கண்ணுக்கு செல்ல முடியும் ஆன்மாவைத் தரிசிக்க முடியும் இதே கண் கொண்டு தான் 8 /2 ஒன்று சேர்க்க முடியும் இந்த அக்கு ஏற்பாட்டை பார்த்து நம் சன்மார்க்க அன்பர்கள் இரு கண்கள் தான் 8 * 2 என கதை கட்டிவிட்டார்கள் – கன்னியாகுமரி தங்க ஜோதி சபை உட்பட வெங்கடேஷ்
தெற்கத்திக் கள்ளன் சன்மார்க்க விளக்கம்
தெற்கத்திக் கள்ளன் சன்மார்க்க விளக்கம்
இது சினிமா படமல்ல
தென் திசையில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய கள்ளன் தான் விளக்கம்
வெங்கடேஷ்
சந்தேகம் தெளிதல்
சந்தேகம் தெளிதல்
பொற்சபை சிற்சபை எனில் ??
இரு கண்கள் காட்டும் நம் மக்கள் – கன்னியாகுமரி செல்வராஜ் குழுவும் இதில் அடக்கம் ஆவர்
என் கேள்வி ??
பட்டினத்தார் பாடல் :
“பொன்னம்பலத்தாடும் ஐயனை காண கண்கள்
எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்திருக்கின்றனவோ “ ??
அடிகள் பொன்னம்பலம் காண வேணுமெனில் பல கோடி யுகம் தவம் செய வேண்டும் என்கையில் , நம் மக்கள் ?? ஒன்றும் செய்யாமலே கண் நோக்கினால் போதும் - அதில் ஆடலரசன் தெரிவான் அது தான் பொன்னம்பலம் பொற்சபை என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் தானே ??
நம்மவர்க்கு ஆய்வு என்பதே இல்லை
அதான் இந்த பரிதாப நிலைக்கு காரணம்
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
நம் பிள்ளைகள்
நமக்கு காரியம் ஆற்றில்
இந்த பூமியில்
நாம் எடுத்த பிறவி முடிந்தது என பொருள்
நாமே ஞான காரியம் ஆகிய சாதனம் தவம் செயின்
நம் பிறவித் தொல்லையே முடிந்தது என பொருள்
நம் பிறவிக் கணக்கு முடிவுற்றது என பொருள்
வெங்கடேஷ்
Seen by 8
பிரபஞ்சப் பேராற்றல் 40
பிரபஞ்சப் பேராற்றல் 40
குரு துரோணர் புத்திரன் அஸ்வத்தாமன்
இவர் பிறந்த விதம் சற்றே வித்தியாசமானது தான்
குதிரை வயிற்றில் இருந்து வந்ததாக நம் இதிகாச புராணம் உரைக்குது
குதிரை – உலக குதிரை அல்ல
அது பரி ஆகிய வாசிக்குதிரை ஆம்
அதனால் இவர் பிரபஞ்சப்பேராற்றலின் உருவகம் ஆவார்
இவர் மூலம் நம் ரிஷிகள் உலகுக்கு சொல்லும் பாடம்
அஸ்வத்தாமனுக்கு
1 முதுமை கிடையா
2 நோய் அண்டாது
3 மரணம் கிடையாது
ஆக நாமும் இந்த பேராற்றலை கிரகிக்க ஆரம்பித்தால் நாமும் இவ்வாறு வாழலாம் என்றென்றும் என்பதில் ஐயமிலை
வெங்கடேஷ்
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6
ஓளியாக்கனல் : மூலாக்கினி
இரு திருவடிகளின் இணைப்பினால் நெற்றியில் தோன்றிடும் ஒரு வகையான அக்கினி
மூலம் தொடங்கி சுழிமுனை வரை ஓங்கி வளர்ந்து மலங்களையும் வினைகளயும் அழிக்க வல்லது
அருளைக் கொடுக்கின்ற ஒளி
இது தோன்ற , விந்து பர விந்துவாக மாறும்
2 வேகாக்கால் : அமுதக் காற்று – இறைச் சுவாசம் – Cosmic breath – Cosmic Prana – Gods breath etc
பிராணன் – காரணக் காற்று
முதலில் சூரியகலை – சந்திர ( வாசி ) கலையாக மாற்றம் பெறும். நாதம் உண்டாகும் . பரவிந்து வாசியுடன் கூடி சுழிமுனை வழியாக மேலேறி , பிரமப்புழை திறக்கப்பட்டு, துவாதசாந்தப் பெருவெளி அடையும்.
முழு நிலவு உருவாகும் – அதிலிருந்து குளிர்ந்த காற்று வீசும். இது சாகாக்கலை – அமுதக்கலை , இறைச்சுவாசம்
பசி தூக்கம் போகும், உடல் லேசாக , தக்கையாக இருக்கும் , உடல் மிதக்கும் .
3. போகாப்புனல் : அமுதம் ( அமுதமாகிய மாறிய விந்து )
பூரண சந்திரனிலிருந்து குளிர்ச்சியான அமுதம் இறங்கும். அருளமுதம்
மூன்று உளுந்து பிரமாணமுள்ள அமுதம் இறங்கும். இதுவே சுத்த கங்கை – ஆகாய கங்கை
4 சாகாத்தலை : சுத்த ஆகாயம்
பரவிந்துவினால் எல்லா மலங்களும் எரிந்து நாசமானபின் , ஆகாய பாகம் சுத்தம் ஆன பின் உருவாவது
சுத்த காற்று - சுத்த நீர் - சுத்த ஆகாயம் தான் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்
விளக்கம் ஆம் சுருக்கமாக சொல்லில்
வெங்கடேஷ்
You Tube Videos 5
You Tube Videos 5
நான் பல காணொளி பார்த்த பின் இந்த பதிவு
நிறைய பேர் தப்பு தப்பாக தான் விளக்கமளிக்கின்றார்
உ ம்
1 எட்டிரெண்டு 8 & 2
8 – எண் சாண் உடம்பாம்
2 – பிறப்பு இறப்பாம்
நல்ல வேடிக்கை
மேலும் 8 வகை ரெண்டு இருக்குதாம்
மேலும் கீழும்
சாதலும் பிறத்தலும்
இந்த மாதிரி 8 வகை பெருமான் சொல்லியிருக்காராம் மெய்யருள் வியப்புவில்
இது மாதிரி 20 வகை விளக்கம் சொல்ல முடியுமாம்
சரி
ஆனால் உண்மை ஒன்றே தானே ?
அது என்ன ??
அவர்க்கு தெரியவிலை
2 ஒளி தேகம் சுத்த தேகம்
பெருமான் கரிசாலை உண்டு உண்டே ஒளி தேகம் அடைந்துவிட்டாராம்
அறிவிலிகள்
ஞான மருந்து அவர் கண்ணுக்கு புலப்படவிலை
3 எல்லாரும் புருவ மத்தி தான் இறைவன் இருப்பிடம் அங்கு தான் அபெஜோதி இருக்கு என கதை கட்டி அளக்கின்றார்
அவர் கூறுவது மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம்
4 தீப பயிற்சி தியானம்
எல்லாரும் – சேலம் பெரிய புள்ளி உட்பட அகல் விளக்கை உற்று உற்று கண் சிமிட்டாமல் பார்க்க கற்றுத்தருகிறார்
எங்கு பார்ப்பது
எதை எப்படி பார்ப்பதில் தான் விஷயமே இருக்கு
கோட்டை விட்டுவிட்டார்கள்
5 கண்ணாடி தியானம்
எல்லவரும் தத்தம் உருவத்தை பார்க்க வேணுமாம்
நல்ல ஹாஸ்யம்
அதனால் இந்த காணொளி பாடங்களை நம்பவே கூடாது
வெங்கடேஷ் [
வெங்கடேஷ் [
சாதகனின் கடமையும் தர்மமும்
சாதகனின் கடமையும் தர்மமும்
கண்ணில் ஆடுபவன் அசைவு நிறுத்தி
அசைவிலாத் தலைவனை நோக்கி பயணித்தலும்
அவனை அடைதலும் அவனுடன் கலத்தலும் ஆம்
வெங்கடேஷ்
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – 6
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – 6
சுத்த சன்மார்க்கத்தின் தனிச்சிறப்பு
அருட்பா - ஆறாம் திருமுறை - அருள் விளக்க மாலை 56
சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொளியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே
பொருள் :
நம் சித்தர் பெருமக்கள் சாவேபோ மட்டும் தான் கூறியுள்ளனர்
சாகாத்தலை = திவ்ய ஆகாயம்
வேகாக்கால் = திவ்ய காற்று
போகாப்புனல் = திவ்ய நீர்
ஆனால் நம் பெருமான் தான் இதை தாண்டி இன்னும் 2 பொருள் சேர்த்து பாடியுள்ளார்
அது
ஒளியாக்கனல் = திவ்ய அக்கினி
இடியாப்புவி = திவ்ய மண்
இந்த ஐந்து சுத்த தத்துவங்கள் ஒன்று சேர்ந்து தான் சாகாக்கல்வி கற்றுத்தரும் – ஒளி தேகம் கிடைக்க வழி சொல்லும்
இதை தான் மேலே இருக்கும் அருட்பா பறை சாற்றுது
அதனால் இதை அடையாமல் ஒளி தேகம் சாத்தியமேயிலை என்பது உண்மை
அதனால் சுத்த சன்மார்க்கம் என்பது அனைத்திலும் மேலோங்கி நிற்குது
எப்படி எனில் –???
சைவம் சிற்றம்பலம் எனும் நிலை வரை உரை செய்ய – ஆனால் சுத்த சன்மார்க்கமோ அதையும் தாண்டி சுத்த சுகாதீத பெருவெளி வரை விளக்கி அனுபவம் உரைக்கிறது மாதிரி
வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 41
பிரபஞ்ச பேராற்றல் 41
“ திருஞான சம்பந்தர் “
இவரும் ஒரு ஞானியோ , சிவனடியாரோ அல்லர்
இவரும் தத்துவ உருவகம் தான்
இவரும் பிரபஞ்சப்பேராற்றலின் மனித உருவகம் தான் அனுமன் மாதிரி
இவர்க்கும் அனுமனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவெனில் ??
ஆனுமன் – சின்ன திருவடி என்பர்
ஆனால் ஞான சம்பந்தப்பெருமானையோ - திருவடி என்பர் – விபரம் அறிந்தோர்
இவர் “ சாவேபோ”வில் – வேகாக்கால் ஆவார்
இவர் துணையில்லாமல் நாம் உண்மை திருவடி இருக்குமிடம் நுழைய முடியாது
சிற்றம்பலம் சேரவும் முடியாது
அதனால் இவரை தன் குருவாக வரித்து வள்ளல் பெருமான் தனக்கு என்னென்ன பர உதவிகள் செய்தார் என பட்டியலிட்டு பாடுகிறார்
1 உயிர் அனுபவம்
2 அருள் அனுபவம்
3 சுத்த சிவ அனுபவம் என்பவை யாவையுமே அரைக்கணத்திலே கிட்டச் செய்தார் எங்கிறார்
இவர் பெருமை – உண்மை தன்மை அறியா நம் மக்கள் இவரா வள்ளல் பெருமானுக்கு குரு ?? இல்லை இல்லை
அபெஜோதி தான் குரு என்று அடம்பிடிக்கின்றார்
என் செய்வது ??
வெங்கடேஷ்
கண்ணன் பிறப்பின் இரகசியம் 3
கண்ணன் பிறப்பின் இரகசியம் 3
1 கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தான் எனில் ??
எண் கோண வடிவ உடை சிரசில் – உச்சியில் , கண்ணன் இருக்கின்றான் என பொருள் ஆகும்
2 ஆலிலையில் துயில்கிறான் எனில்
கண்ணில் இருக்கின்றான் - மேலும் ஆல் போல் இருக்கும் பிரணவ மரத்தில் கண்ணன் அசையாது இருக்கின்றான் என பொருள் ஆம்
ஆல் கீழ் அமர்ந்து நால்வர்க்கு அருள் செயும் தென் திசை குருமூர்த்தி ஆம் தஷ்ணாமூர்த்தியும் கண்ணனும் ஒரே நபரை குறிப்பதாகும்
அவர் ஆன்மா ஆவார்
வெங்கடேஷ் ,
சம்யமாவும் - இமய பாபாவின் கிரியா யோகமும் “
சம்யமாவும் - இமய பாபாவின் கிரியா யோகமும் “
உண்மை சம்பவம்
கோவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி – மென் பொறியாளர்
என்னிடம் மூன்று கட்டமும் பயிற்சி முடித்துவிட்டார்
அவர்க்கு பல துறைகளில் ஈடுபாடு
அவர் மேலும் கற்க விரும்பி – பாபாவின் கிரியா யோகா கற்க ராஞ்சி சென்று கற்று வந்தார்
இவர் அலை பேசியிலேயே நேரலை பாடம் கற்று வந்தார்
பின்னர் நேரடியாக கற்க விரும்பி ராஞ்சி சென்று வந்தார்
சென்று வந்த பின் , எனக்கு தெரிவித்த தகவல் :
நீங்கள் கற்றுக்கொடுத்த கண் வித்தையும் அங்கு அவர் கற்றுக்கொடுத்த வித்தையும் ஒன்றே தான்
நீங்கள் கற்றுக்கொடுத்ததையே அவரும் அங்கே கற்றுத்தருகிறார் என்றவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
நான் : யோகப்பயிற்சிகள் உலகமயமானவை.
Yoga Practices are Universal – None can say its OURS
வெங்கடேஷ்
CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “
CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “
CAA வைத்து
நம் தமிழக கட்சிகள் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார்
தவறான தகவலை பரப்புகின்றார்
இல்லாததை பொல்லாததையும் சொல்லி
மக்கள் மனதை குழப்புகிறார்
பயமும் பாதுகாப்பின்மை அளிக்கின்றார்
ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பார்க்கின்றார்
ஆட்சி கட்டில் ஏற துடிக்கின்றார்
இதை போல் தான் ஆன்மீகத்திலும்
மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவலை
காணொளியிலும் பதிவிலும் அளித்து
தவறாக வழி நடத்தி செல்கின்றார்
அரசியல்வாதியரும் ஆன்மீக அன்பர்களும் ஒன்றோ ??
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
வயலும் வாழ்வும் சார்ந்த நிலை மாறி
ஆகாயமும் அம்சப்பறவையும் ஆக மாறும் வாழ்வு கிட்டாதவரை
மரணமிலாப்பெரும் வாழ்வு முத்தேக சித்தி ஞான சித்தி
எல்லாம் கனா மயம்
வெங்கடேஷ்
சுத்த பிரணவ ஞான தேகம் - 3 :
சுத்த பிரணவ ஞான தேகம் - 3 :
சுத்த தேகம் :
நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும்.
அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும்.
இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும்.
இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி
சமாதியினால் – நோயற்ற உடல் சித்திக்கும்
திருவடிகள் செயல்பாட்டினால் – விந்து மேலேறி புருவ மத்திக்கு வந்தடையும் –
அங்கிருக்கும் மூலாக்கினியால்,விந்து பரவிந்துவாக மாற்றம் அடையும்.
பரவிந்து சுழிமுனையில் ஏறி, பிரமத்துவாரம் திறந்து , துவாதசாந்தப் பெருவெளி அடைந்து , அதன் மேல் உள்ள சிதாகாசப் பெருவெளியில் முழு நிலவாக ஜொலிக்கும் – ஒளிவிடும் .
இந்த ஒளிக்கதிர்கள் – பால் போன்ற வெண்ணிறமாக இருக்கும் – குளிர்ச்சியாகவும் இருக்கும் – இது சுத்த உஷ்ணம் ஆகும்
இது சிறு சிறு துளிகளாக சாதகன் உடல் மீது வீசும் – இது போகாப்புனல் – இதனால் சாதகனுக்கு வெம்மை என்னும் பசி நீங்கும் – தூக்கம் போகும்
இதனால் சாதகனுக்கு உணவு , நீர் தேவை இல்லை ஆதலால் , மல ஜல உபாதைகள் இலையாகையால் – உடல் சுத்த உடம்பாகிவிடும்
வள்ளலார் ஆறாம் திருமறையில்- ” போகாப்புனலால் சுத்த உடம்பினராம் “
இந்த சுத்த உஷ்ணமானது உடலின் அசுத்த அணுக்களை வேதித்து சுத்த அணுக்களாக மாற்றி – சுத்த உடம்பாக மாற்றிவிடுகிறது
இந்த சுத்த உஷ்ணமானது இலட்சக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் – அதனால் மும்மலங்களும் நாசம் ஆகும் – திரைகளும் விலகும் – ஆன்ம தரிசனம் கிட்டும்
சுத்த உஷ்ணம் காரண உஷ்ணமாக மாறும் போது – அது கோடிக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் –
அதனால் உடல் இன்னும் நுண்மை நுண்மை அடைந்து பிரணவ ஞான தேகமாக மாறிவிடுகிறது
========
முத்தேக சித்தி - ஒளி தேகப்பயிற்சி மிகவும் ரகசியமாகையால் – இந்த விஷயம் நான் உண்மைக்கு அருகே வரை விளக்கியிருக்கிறேன்
மற்றபடி நான் உண்மை பயிற்சியை மறைத்துவைத்திருக்கிறேன்
பயிற்சி பெறுவோர்க்கு மட்டும் 3 ம் கட்டம் போது தான் தெரிவிக்கப்படுது
வெங்கடேஷ்
திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “
திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “
திருக்கடையூர் மிக பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆம்
எல்லவரும் அறிந்ததே
எமனை காலால் உதைத்த ஸ்தலம்
அப்பன் – கால சம்ஹார மூர்த்தி
கடம் = அமுத கலசம் / பானை
புஷ்கரிணி – அமுதத்தில் தீர்த்தமாடும் திருத்தலம்
அதாவது இந்த குளம் அமுத த்தால் ஆனது என்ற பொருளாம்
தத்துவ விளக்கம் :
தவத்தால் விந்து கலை மேலேற்றி சிரசில் உள்ள குளத்தில் நிரப்பி அதில் தீர்த்தமாடினால் , நாம் இழந்த இளமையை மீட்டும் அடைவோம்
யௌவனம் மீட்டு எடுப்போம்
கிழவனும் பாலன் ஆவான்
அது தான் அந்த அமுத குளம்
இந்த கதை கருத்து தான் நீலகண்டர் வாழ்வில் – சிவம் அவரை குளத்தில் மூழ்கி சத்தியம் செயச் சொல்ல அவர்கள் மீண்டும் இளமையுடன் திரும்புவர்
அமுத குளத்தில் மூழ்கி எழுந்தால் உடல் காயகல்பம் அடையும் என்றவாறு
வெங்கடேஷ்
நாதம் – வாசி அனுபவம்
நாதம் – வாசி அனுபவம்
உண்மை சம்பவம் – கோவை ஏப்ரல் 2024
ஒரு குடும்பப்பெண் நடுத்தர வயது
பொள்ளாச்சி
இரு பிள்ளைகளுக்குத் தாய்
தவம் ஏதும் செயவிலை எந்த பயிற்சியும் இல்லை
ஆனால் நாதம் கேட்டுவருவதாகவும்
நான்கு நாதம் கேட்டுவிட்டதாகவும் என்னிடம் அலைபேசி தெரிவித்தார்
மணி – வண்டு கடல் மாதிரி
இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதாகவும் கூறினார்
இரு காதில் வெவ்வேறு ஒலிகள் கேட்கிறது என்றார்
எப்படி ?? அனுபவம் ?
மிக மிக அருமையான அனுபவம் என்றேன்
அதனால் வாசி மேலேறுவதாகவும் தெரிவித்தார்
என் வலை பார்த்து அதில் விளக்கம் பார்த்து தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்
எப்படி நான் எந்த தவம் செயவிலை என்றார் ??
நான் :
இது பூர்வ ஜென்ம வினைத்தொடர்பு – அதனால் வந்த பயன் அனுபவம்
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்
சுழி வாசல் திறந்து வாசி அனுபவம் சித்தியாகிவிட்டது
ஏனெனில் ??
பலர் 60 ஆண்டுகள் பயின்றும் ( குரு ) இன்னும் வாசி சித்திக்கவிலை
அவர் :
உடல் மிக மிக லேசாக இருப்பதாகவும்
உடல் உபாதைகள் தானாகவே சரி ஆகிவிடுவதாகவும் தெரிவித்தார்
கவனம் குவிவதாகவும் தெரிவித்தார்
ஆஹா என்ன அற்புதம் ??
இவர் ரெண்டாவது நபர் – முற்பிறவி வினைத்தொடர்பால் வாசி அனுபவம் சித்திப்பது
முதலாமவர் வேலூர் சேர்ந்த இளைஞர் பொறியியல் பட்டதாரி
இந்த கலியிலும் இப்படிப்பட்ட மனிதரும் இருக்கத்தான் செய்கிறார்
ஏமாற்றும் குருமார் மத்தியில் இந்த மாதிரி காண அரிதான பிறவிகள்
ஆகையால் வாசி நாதம் எல்லாம் உண்மை தான் என அறிந்து கொள்ள வேணும்
இந்த சம்பவம் முற்பிறவி என்பதெலாம் கதை என கதைவிடும் ஆபிரகாமிய மதத்துக்கு நல்ல சாட்டையடி
வெங்கடேஷ்
Time
Time
Past Present n Future becomes one continuity of Time . When this happens, reversing of Ageing is possible. One shall remain youth forever
BG VENKATESH
Sunday, April 26, 2026
உத்திரமும் உத்திரோத்திரமும்
உத்திரமும் உத்திரோத்திரமும்
துவஜஸ்தம்பம் ஏறி
36 தத்துவம் தாண்டினால்
உத்திர அனுபவம்
ஆன்ம தரிசனம் கிட்டும்
அங்கிருந்து சிவாகார பூர்ணஸ்தம்பம் மீதேறி
சிற்றம்பல வெளிக்குள் பிரவேசம் செய்தால்
உத்திரோத்திர அனுபவம் சுத்த சிவம் அனுபவம் சித்தி
ஒளி தேகம் மரணமிலாப்பெருவாழ்வு ஞான சித்தி எல்லாம் கைவசம்
ரெண்டு ஸ்தம்பம் ஏற வழி தெரியணும்
வெங்கடேஷ்
நாடும் வீடும் ஒன்றே
நாடும் வீடும் ஒன்றே
எப்படி எனில் ?
வீட்டில் ஆரம்பிப்பது நாட்டிலும் தொடருது
முதலில் வீட்டில்
யார் பெரியவன் – கணவனா மனைவியா ??
சம்பாதிக்கும் கணவன் தான் தான் பெரியவன் என்பதில் ஆரம்பிக்குது
அது நாட்டில் வெளியில்
ஒரு பெரிய நிறுவனம்
தான் தான் முதலாவதாக விளங்க ஆசை கொண்டு
எல்லா சிறு நிறுவனத்தையும் நசுக்கி விடுது
இல்லை விலைக்கு வாங்கிவிடுது
ஒரு நாடு
தான் தான் பெரியவனாக காட்டிக்கொள்ள முனையுது
தான் தான் அந்த மத/ஒன்றிய கூட்ட நாடுகளுக்கு தலைவன் என காட்ட முற்படுது
ஒரு மதம்
தான் தான் உலகை ஆளணும் என்கிற வெறியில்
பணத்தை வாரியிறைத்து மதமாற்றம் செய்யுது
ஒரு கையில் புத்தகம் மறு கையில் பணம்
இன்னொரு மதம்
தான் தான் உலகை ஆளணும் என்கிற வெறியில்
தன் கடவுள் தான் உண்மை கடவுள்
மற்றதெலாம் இல்லை என விமர்சனம் செயுது
ஒரு கையில் நூல் மறு கையில் அரிவாள் கத்தி
வன்முறை மூலமும்
மக்கள் பெருக்கத்தின் மூலமும்
தன் மதத்தை மற்ற நாட்டில் நிலை நாட்டப்பார்க்குது
மற்ற நாடுகளை துண்டாடப்பார்க்குது
இப்படித்தான் எல்லாரும்
தான் தான் பெரியவன் என உலகில்
தன்னை நிலை நாட்ட முயற்சி செய்கிறார்
அது வீடானாலும் நாடானாலும் சரி
அதனால் நாடும் வீடும் ஒன்றே தான்
வெங்கடேஷ்
Saturday, April 25, 2026
பிரபஞ்சப் பேராற்றல் – 42
பிரபஞ்சப் பேராற்றல் – 42
நாம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய் + வாழைப்பழம் எடுத்து செல்கிறோம்
ஏன் ??
ஆண்டவர்க்கு படைக்க மட்டுமல்ல – நமக்கு மிக நல்லது – மேலும் ஆரோக்கியத்துக்கு மிக மிக உகந்தது என்பதாலும் தான்
ஏன் ??
தேங்காயும் வாழையும் பிரபஞ்ச ஆற்றல் ஆகிய அண்ட சக்தியை ஆகாய பாக சக்தியை தன்னிடத்தில் அதிகம் வைத்துள்ளதால் , இதை அறிந்திருந்த நம் முன்னோர் இந்த ஏற்பாட்டை செய்தனர்
நம் பண்பாட்டுக்கு உலகில் யாரும் ஈடாகார்
ஆனால் நாம் எங்கே இதை மதிக்கிறோம் ??
வெங்கடேஷ்
திருவடி தவ அனுபவம்
திருவடி தவ அனுபவம்
எப்படி
நெடிதுயர்ந்த மலை
புயல் அடித்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்குமோ ??
அப்படித்தான்
ஆன்ம சாதகனும் எவ்வளவு எண்ணம் வந்தாலும்
அதன் தாக்கத்தால் ஆடாமல் அசையாமல் நிற்பான்
இது திருவடி வல்லபம்
வெங்கடேஷ்
சுத்த சன்மார்க்க உணவு முறை
சுத்த சன்மார்க்க உணவு முறை
பிராண சக்தி – அண்ட – பிரபஞ்ச சக்தி அதிகம் இருக்கும் உணவு வகைகளான
வாழை – செவ்வாழை – நேந்திரம்
தேங்காய்
பப்பாளி
நான் உண்டு வருகிறேன்
மேலும் உலோகங்களான தாமிரம் - இரும்பு சத்தும் – சேர்த்து வருகிறேன்
வெங்கடேஷ்
கீழாலவத்தையும் மேலாலவத்தையும் “
கீழாலவத்தையும் மேலாலவத்தையும் “
இது திருமந்திரத்தில் இருக்கும் தலைப்பு ஆம்
கீழாலவத்தை எனில் ??
சகல ஜீவ ராசிகளும் தினமும் அனுபவிக்கும் அவஸ்தை ஆகும்
சாக்கிரம் சொப்பனம் உறக்கம் துரியம் துரியாதீதம்
இவைகள் யாவும் தவம் எனும் சாதனம் இயற்றாமலே வருவது
மேலாலவத்தை எனில் ??
துரியம் ஆரம்பித்து
அதன் அதீதம் சென்றும்
அதன் மேல்
பரதுரியம் குரு துரியம் சிவதுரியம் சுத்த சிவ துரியாதீதம்
இவைகள் யாவுமே தவத்தில் ஒரு சாதகன் அனுபவிப்பது ஆகும்
இவைகள் கண் வைத்து செய சித்திக்கும் அனுபவம் ஆம்
இது தான் ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்
வெங்கடேஷ்
உடல் நினைவொழிந்து போவது எப்படி ??
உடல் நினைவொழிந்து போவது எப்படி ??
தவத்தில் உடல் நினைவு ஒழிந்து
அனுபவத்தில் திளைத்து நிற்றல் எப்படி எனில் ?
திருமந்திரம் எட்டாம் தந்திரம்
“ அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே “
பொருள் :
அதாவது மனம் கண் உச்சியில் வைத்து சாதனம் பயின்றால் உடல் நினைவு அற்று நீண்ட நேரம் தவத்தில் இருப்போம்
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
கண்மணி பெருமை
கண்மணி பெருமை
திருவடி தவத்தால் கண்மணி தவத்தால் – அதன் வல்லபத்தால்
1 மூன்று மலங்களும் சாதகன் கண் முன்னே நிறுத்தும்
2 36 தத்துவங்களும் நம் கண் முன்னே காட்டும்
( வள்ளல் பெருமான் – ஆறாறு காட்டிய அபெஜோதி )
வெங்கடேஷ்
Seen by 13
சுத்த சன்மார்க்கத்தின் பெருமை
சுத்த சன்மார்க்கத்தின் பெருமை
சுத்த சன்மார்க்கத்தில் இருப்பதுவும் பயில்வதும் என்பது ஐஐடி யில் முதுகலை – டாக்டர் பட்டம் பயில்வதுக்கு சமம் ஆம்
அங்கு மாணவராகவும் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஆக இருப்பதுக்கு சமமாக இருக்கையில் - அப்படி இராமல் நம்மவர் , பக்தி நிலை மாதிரி அன்னதானம் செய்து கொண்டு இருப்பது , , அருட்பாக்களை பாடுவது என்பது அந்த கல்வி நிறுவனத்தில்
சமையல்காரர் தோட்டக்காரர் – செக்யூரிட்டி வேலை செய்வதுக்கு சமம் ஆம்
ரெண்டும் வேண்டும் – ஜீவகாருண்ணியம் அன்னதானமும் செயணும் தவமும் ஆய்வும் செய வேணும்
அப்போது தான் மேலேற முடியும் – மேல் வீதியில் பயணிக்க முடியும்
இது திண்ணம்
வெங்கடேஷ்
கீழாலாலவத்தையும் மேலாலவத்தையும் 2
கீழாலாலவத்தையும் மேலாலவத்தையும் 2
ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ??
முதலாவது
கழுத்துக்கு கீழ் சாமானியரால் பெறப்படும் அவத்தைகளாம்
ரெண்டாவது
ஆன்ம சாதகன் தன் சாதனத்தில்
கழுத்துக்கு மேல் சிரசில் பெறுவதாகும்
இது தான் மிக முக்கியமான வித்தியாசம் ஆம்
வெங்கடேஷ்
சிரிப்பு
சிரிப்பு
க மணி :
என்னடா காலண்டரையே பார்க்கறே – கைவிரல விட்டு என்ன எண்ணிக்கிடே இருக்கே??
செந்தில் :
இல்லண்ணே – 2024 க்கு இன்னம் எத்தனை வருஷம் பாக்கி இருக்குன்னு பார்க்கறேன் ?
க மணி : ஏன் – அந்தாண்டு தேர்தல்ல யார் ஜெயிப்பாங்கன்னு கணக்கு பாக்கிறியா ??
ஸெந்தில் : அது இல்லண்ணே -அப்போவும் தாமரை தான் அண்ணே ஜெயிக்கும்
நம்ம சன்மார்க்க மக்கள் எலாம் 2024 வந்து வள்ளலார் சித்தி அடை ஞ்சி 150 வருஷம் ஆயிருக்கும் – அந்த வருஷத்தில் இருந்து சன்மார்க்க காலம் ஆரம்பிக்கும்னு வாய பொளந்திட்டு காத்திருக்காங்கோ
அது நடக்குமான்னு தான் பார்க்கறேன்
க மணி : அதென்ன 150 வருஷம் ??
ஸெந்தில் : அவுக 2 ½ கடிகை கணக்கு = 150 வருஷம்னு தப்பு கணக்கு போட்றாய்ங்க அண்ணே
இன்னமும் நம்ம மக்கள் மதத்தில சமரசம் அடையாத போது – இவுக எங்கே இதெல்லாம் விட்டு – எல்லாம் தாண்டி போகப்போறாங்க ??
அதெலாம் வெறும் கனவு கானல் தான்
அல்லா – அல்லே லூயானு ஒரே கூத்தா இருக்கும் போது எங்கே இதெல்லாம் ஒழிந்து சமம்
வரப்போவுது ??
ஆனால் எல்லா சன்மார்க்கத்தாரும் வாயை பிளந்து 2024 க்கு காத்துகிடக்கிறார்
வெங்கடேஷ்
தெளிவு
தெளிவு
வள்ளல் பெருமான்: உரை நடையில்
“ தியானமயமானால் பொசிப்பு மாறும் “
இதன் பொருள் இப்படி இருக்கக்கூடும் :
அதாவது “ யார் தியான தவம் மூலம் பிரப ஞ்ச பேராற்றல் கிரகித்து அதன் மூலம் உணவு உறக்கம் தேவை குறைத்து வாழ முடியும் “
இதனால் உணவின் அளவு குறையும் என்பதை இதன் மூலம் நமக்கு உரைக்கிறார்
அதை தான் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார்
VEங்கடேஷ்
Seen by 12
என்னிடம் பயிற்சி பெறுபவர் எப்படி ??
என்னிடம் பயிற்சி பெறுபவர் எப்படி ??
ஏனில்
சிலர் , எல்லாரும் அல்லர் , ,
எல்லா குழுக்களிலும் இருப்பவர்
அதாவது மனவளக்கலை
வாசி
ஈஷா
சாலை
கன்னியாகுமரி செல்வராஜ் என பல குழுக்கள்
அவர்க்கு தத்தம் குழு பணி நிமித்தமாக கோவை வரும் போது – என்னையும் பார்த்து பயிற்சி பெற்று செல்கிறார்
இது ஒரு சடங்கு மாதிரி கூட என வைத்துக்கொள்ளலாம்
சித்ரா பௌர்ணமிக்கு வெள்ளிங்கிரி மலை ஏற வருபவர் – ஒரு நாள் முன்னதாக வந்து பயிற்சி எடுத்து செல்வர்
பின்னர் அடுத்த வருடம் தான் அடுத்த கட்டத்துக்கு வருவர்
மேலும் சிலர் அலுவலக நிமித்தமாக கோவை – திருப்பூர் வருவோர் – அப்படியே என்னை பார்த்து பயிற்சி பெற்று செல்கிறார்
அடுத்து பணி எப்போது அமையுமோ அப்போது தான் அடுத்த கட்டத்துக்கு வருவர்
ஈஷாவுக்கு பயிற்சிக்கு வருவோர் எனையும் கண்டு பயிற்சி பெற்று செல்வர்
பின்னர் அடுத்த கட்டத்துக்கும் வருவர்
வெங்கடேஷ்
சிங்கா சிங்கி
சிங்கா சிங்கி
சிங்கா :
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதுக்கு உதாரணம் சிங்கி
சிங்கி :
வள்ளல் பெருமான் ஒளி தேகத்துக்கு அடிப்படையாக இருந்தது அவர் உட் கொண்ட கரிசாலை என உரைப்பதாகும் சிங்கா
சிங்கா : மிக்க சரி
வெங்கடேஷ்
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
முருகன் கையில் வேலும்
ஆணின் விந்தணுவும்
ஒரே வடிவத்தில் இருப்பது
எதேச்சையாக தான் இவ்வாறு இருப்பது கண்டேன்
அதனால்
முருகன் வேலாயுதம் கொண்டு
சூரபதுமரை வென்றார் என்பது
ஆன்ம சாதகனும்
ஞான மருந்தாகிய விந்துவை சுப்பிரமணியாக்கி
அதன் மூலம் மாயா மலங்களை தீக்கிரையாக்கி அழிக்கணும் என்பதாம்
அதனால் விந்து என்பது ஆயுதமாகும்
நமக்கு பிறவி பகை தீர்க்கும் ஆயுதமாகும்
அதை உபயோகிக்கும் முறை தெரிந்தால்
வெங்கடேஷ்
உரை நடை விளக்கம்
உரை நடை விளக்கம்
பெருமானார் கூறியதாக :
கலியுக முடிவு
கலியுகத்துக்கு 5000ஆண்டுகள் தான் காலம் அதனால் இந்த யுகம் முடிவதுக்கு இன்னம் 27ஆண்டுகள் தான் பாக்கி என வருது
ஆனால் உண்மையில் கலியுகத்தில் நடந்து முடிந்திருப்பது 5100 + க்கு மேல்
அதன் மொத்த கால அளவு 432000 ஆண்டுகள் ஆம்
அதனால் அந்த செய்தி தப்பானது ஆகும்
அதனால் உரை நடை யில் இருக்கும் செய்தி தகவல் யாவும் உண்மை அல்ல – அவைகளை அப்படியே நம்பக்கூடாது எடுத்துக்கொள்ள கூடாது
அவைகள் வள்ளல் பெருமான தன் கைப்பட எழுதியதும் அல்ல
அவைகள் குறிப்பு எடுக்கப்பட்டு பின்னர் தொகுக்கப்பெற்றதாகும்
சன்மார்க்க காலம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கே அல்லாது - உலகத்துக்கே அல்ல என்பது உண்மை
அது அவனுக்குள் நடக்கும் மாறுபாடு – சிந்தனை கண்ணோட்டத்தின் மாறுதல்கள் ஆம்
வெங்கடேஷ்
சத்திய ஞான சபையில் 7 திரை - விளக்கம்
சத்திய ஞான சபையில் 7 திரை - விளக்கம்
இது எல்லவரும் அறிந்ததே
உரை நடையில் – ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் திரைகள் 7 என வருவதால் – அங்கு காட்டப்படும் ஒளி ஆன்ம ஒளியே அன்றி அபெஜோதி அன்று
ஆனால் எல்லவரும் அபெஜோதி அபெஜோதி என்றே அழைக்கிறார் ஜோதி தரிசனத்தின் போது
என் செய்வது ??
அந்த திரை விளக்கங்கள் அகவலில்
கரைவின் மாமாயை கரும் பெரும் திரை என ஆரம்பித்து
1 கருமை
2 நீலம்
3 பச்சை
4 சிகப்பு
5 பொன்மை
6 வெண்மை
7 கலப்பு என காட்டப்படுது
இதன் வண்ணங்கள் என்ன குறிக்குது எனில்??
கருமை – மாயா மலம் – மறைப்பு மலம் – அஞ்ஞானம்
இதிலிருந்து ஓர் சாதகன் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து உயர்ந்து எல்லா மலங்களும் ஒழிந்து ஞானம் ஆகிய வெண்மை அடைதல் குறிக்குது
இந்த 7 திரைகள் தான் ஆதி பழந்தமிழர் வாழ்வியலிலும் - சைவ மரபிலும் சப்த கன்னியர்களாக உருவகம் செயப்பட்டுள்ளது
இவர்களை நம் கோவிலில் பார்க்கலாம்
இந்த சப்த கன்னியர் பல்வேறு சக்திகளாகும்
பின் எப்படி
சாதி சமயம் மதம் எலாம் பொய் என ஆதியில் உரைத்திட்ட அபெஜோதி என பெருமானார் பாடினார் என்பது புரியவில்லை ??
நீங்கள் பதில் கூறுங்கள் ??
வெங்கடேஷ்
பட்டி மண்டபம் " – சன்மார்க்க விளக்கம்
பட்டி மண்டபம் " – சன்மார்க்க விளக்கம்
பட்டி எனில்
ஆடு மாடுகள் ஓரிடத்தில் திரட்டி அடைத்து வைப்பதாம்
இது புறம்
அது போல் அகத்தில்
ஞானத்துக்கு தேவையான அடிப்படை விஷயமான
கண் – மனம் – சுவாசம் யாவையும்
ஓரிடத்தில் கட்டி அடைத்து வைக்கும் இடமே பட்டி மண்டபம்
வள்ளல் பெருமான் : அகவலில்
எட்டிரெண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றி
பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே
அதாவது தன்னை – தன் உணர்வை சிரசில் ஏற்றி நிற்க வைத்தார் என பொருள் பட தன் அனுபவம் உரைக்கிறார்
வெங்கடேஷ்
பயிற்சிகள் எப்படி ??
பயிற்சிகள் எப்படி ??
என்னிடம் பயிற்சி பெற்ற செஞ்சி அன்பர் , அதை பற்றி விளக்கிய பின் கூறியது :
எல்லாரும் கண்ணாடி பயிற்சியில் – அதில் தன் முகம்/உருவம் தான் காணச்சொல்கிறார்
தீபப் பயிற்சியில் எல்லாரும் சுடரைத்தான் நோக்கச்சொல்கிறார்
ஆனால் நீங்கள் கூறியவாறு ஒருவரும் கூறவில்லை
நான் : அதில் தான் சூக்குமம் இருக்கு
அது தான் சன்மார்க்க பயிற்சி – கண்ணாடி திருவடி தவம்
வெங்கடேஷ்
சத்திய ஞான சபையில் 7 திரை – விளக்கம் 2
சத்திய ஞான சபையில் 7 திரை – விளக்கம் 2
என்னுள் நீண்ட நாளாக இருந்த சந்தேகம் தான் இது
அதாவது கோவிலில் கிரகங்களுக்கு அணிவிக்கும் ஆடைகள் நோக்கினால்
அவைகள்
கருமை – சனி
மஞ்சள் – குரு
செம்மை - செவ்வாய்
என பல வண்ணம்
இவைகள் யாவும் காலத்துக்கு கட்டுப்பட்டு நமக்கு நம் கர்ம பலன் தருவன
இவைகள் கூட ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் திரைகள் ஆகும் என்பதில் ஐயமிலை
கிரகங்கள் – மாயா சக்திகள் – திரைகள் தான்
ஆனால் ஆன்மா – ஆன்ம ஒளி காலத்துக்கு அப்பால் உளது
அதனால் தான் இதை எல்லாம் தீக்கிரையாக்கினால் – தாண்டி சென்றால் தான் ஆன்ம ஒளி – சத்திய ஞான ஒளி தரிசனம் ஆகும் என்ற பொருளில் தான் சத்திய ஞான சபையில் திரை நீக்கி தரிசனம் ஆகிறது
அதனால் தான் முருகன் கோவிலில் 60 படிகள் மேல் ஆன்ம ஒளி ஆகிய முருகன் ஸ்தாபனம் செய்திருக்கார் நம் முன்னோர்
அதாவது காலத்துக்கு அப்பால் தான் ஆன்மா
வெங்கடேஷ்
சுத்த சன்மார்க்கமும் - சத்திய ஞான சபை திரைகளும்
சுத்த சன்மார்க்கமும் - சத்திய ஞான சபை திரைகளும்
எப்படி
சுத்த சன்மார்க்கம் எனில்
எல்லா சமய மத அனுபவங்கள் தன்னுள் அடக்கியும்
அதன் உத்தரத்தில் விளங்குதோ ??
அவ்வாறே தான்
சத்திய ஞான சபையின் கடை திரையாம் கலப்பு திரை எனில் ?
அது எல்லா திரைகளைத் தாண்டி மேலேயும்
ஆனால் அவைகளை தன்னுள் அடக்கியும் வைத்திருக்கு என பொருளாகலாம்
வெங்கடேஷ்
இயற்கை நிகழ்வும் - சன்மார்க்க விளக்கமும்
இயற்கை நிகழ்வும் - சன்மார்க்க விளக்கமும்
நம் சைவ கோவிலில் , சில கால கட்டங்களில் , லிங்கத்தின் மீது சூரிய ஒளி மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்
இதன் விளக்கம் யாதெனில் ??
புறச் சூரியன் – ஆன்மா ஆகும்
அதனால் தான் லிங்கமாகிய ஆன்மா மீது சூரியனாகிய ஆன்ம ஒளி மீது படுவதாக நம் முன்னோர் அமைத்துள்ளனர்
எல்லாம் ஒரு காரணத்துக்காக
வெங்கடேஷ்
குகன் “ – சன்மார்க்க விளக்கம்
குகன் “ – சன்மார்க்க விளக்கம்
இது முருகனின் பல பேர்களில் ஒன்று தான்
இதன் வேர் ??
யார் குகையில் இருப்பவனோ?
அவன் தான் குகன்
அது ஆன்மா
ஆக முருகன் தான் ஆன்மா
ஆன்மா குகையில் வைக்கப்பட்டுள்ளது
சின்ன துவாரம் உள்ள வாசஸ்தலம்
ஆனால் உள்ளே பெரிய வசிக்கும் இடம்
தியான லிங்கம் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு நோக்கவும்
எளிதாக விளங்கும்
வெங்கடேஷ்
பயிற்சியில் வெற்றி பெறுவது எப்படி ?
பயிற்சியில் வெற்றி பெறுவது எப்படி ?
சன்மார்க்க பயிற்சிக்கு அடிப்படையாக இருப்பது
கண் – மனம் – சுவாசம்
இது மூன்றும் ஒன்று சேர்த்து பட்டி மண்டபம் ஏறுவது எப்படி ?
1 பார்வை எங்கே ??
மனம் அங்கே ( கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்ற பாடல் நினைவு கொள்க )
2 மனம் எங்கே ??
ஸுவாசம் அங்கே மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு என்ற மந்திரத்தை நினைவு கொள்க )
அவ்வளவு தான்
ஆனால் இதை கட்டுவதுக்கு பல்லாண்டுகள் ஆகும்
வெங்கடேஷ்
ஞானியும் சாமானியரும்
ஞானியும் சாமானியரும்
கால்பந்தாட்டக்காரர்
பந்தை கடத்தி கடத்தி கோல் இடம் சென்று
கோல் அடித்துவிடுகிறார்
அதே போல் தான் ஆன்ம சாதகனும்
தன் கண்மணியான பந்தை
கோல் வலை ஆகிய உச்சிக்கு கடத்தி செல்கிறார்
ஞானம் அடைகிறார்
இருவரும் ஒன்று தானே ??
ரெண்டும் பந்து தான்
இதை தான்
வள்ளல் பெருமான் ஆடேடி ஆடேடி பந்து என பாடினார்
ஆனால் யார் புரிந்து கொள்வது ??
எல்லாரும் ஜீவகாருண்ணியம் அன்னதானம் என்றே உளார்
எப்போது உலகம் - தமிழ் – சன்மார்க்கத்துக்கு ம் விடிவு வரும் ??
வெங்கடேஷ்
தமிழ் பெருமையும் குமரி கண்டமும்
தமிழ் பெருமையும் குமரி கண்டமும்
வள்ளல் பெருமான் : இறை அடைய எளிய மொழி தமிழ் என அருள் செய்துளார்
அதனால் தமிழ் பெருமை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல் தான் இந்த பதிவு
1 குமரிக்கண்டம் : - LEMURIA
குமரி கண்டம் என்பது – நம் த நாட்டுக்கு கீழ் இலங்கைக்கு கீழும் நீரில் மூழ்கியிருக்கும் நிலப்பரப்பு ஆம்
அது பல தீவுக்கூட்டங்களாக இருந்திருக்கக்கூடும் என்றும் – அது மேற்கே அப்பிரிக்கா மடகாஸ்கர் – கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் இருந்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர் நம்பிக்கை – முடிவும்
இங்கு தான் உலகின் மூத்த குடி – தமிழன்
மூத்த முதல் ஆதி மொழி – தமிழ் வழங்கி வந்தது எங்கிறார் தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள்
சுமார் 20000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் இனம் மொழி
இங்கே தான் உலகின் மூத்த – முதல் குருவான ஆதிகுரு சிவன் வாழ்ந்து நான்கு வேதங்கள் உலகுக்கு உரைத்ததாகவும் கூறப்படுது
குமரி கண்டம் – எல்லா கலைகளிலும் அறிவிலும் நாகரீகத்திலும் – பண்பாட்டிலும் சிறந்து விளங்கியது என்றும்
அவர் தம் அறிவு கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் எலாம் தற்போதையதை விட பன்மடங்கு உயர்ந்தும் சிறந்தும் விளங்கியது என்று வரலாற்று ( ஆங்கிலேயர் உட்பட ) அறிஞர் சான்று உரைக்கின்றார்
அது எல்லாரும் சமம் எனும் தத்துவத்தை கொண்டிருந்தது என்றும்
பிராமணர்கள் போல் தீண்டாமை – சாதி பகுப்பு பார்க்கவிலை எனவும் சொல்லப்படுது
அவர் அறிவில் உயர்ந்து விளங்கியமையால் அவர் பிராண சக்தி கொண்டு வாழ்ந்ததாகவும் – நாம் தற்போது வாழ்வது போல் – உயிரற்ற ஜடப் பொருட்களுடன் வாழவிலை என்றும் சொல்லப்படுது
அந்த சக்தி தம் ஆசை நிறைவேற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுது
2 பிரளயம் – உலக மதங்களின் தோற்றம் : :
பைபிள் : பிரளயத்துக்கு முன் நோவா ஓர் கப்பலில் தன் குடிகளுடன் தப்பித்ததாக கதை சொல்கிறது
அவர் குமரியில் இருந்து தான் சென்றிருக்கார் என்று கூறுகிறார்
அவர்கள் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று அங்கே யூதம் – இஸ்லாம் – கிறித்தவம் என பல மதங்கள் தோன்றலாயின
அவர்கள் மதம் மொழிக்கு அடிப்படையானது தமிழும் அதன் சிவ வழிபாடும் தான்
நம் த நாட்டின் பூம்புகார் – தனுஷ்கோடி கடலால் கொள்ளப்பட்டு அழிந்து போயின என நாம் வரலாறு படித்திருக்கோம்
இதெல்லாம் அந்த பிரளயத்தைக் குறிப்பதாம்
அந்த பிரளயத்திலிருந்து தப்பி பிழைத்தது தான் இலங்கை – லட்சத்தீவுகள் – மால தீவு என்பது ஆய்வின் முடிவு
இலங்கையில் இருந்து பெயர்ந்து த நாட்டுக்கு வந்து வாழ்ந்தனர்
அவர் தான் பாண்டியர் என்றும் அழைக்கப்பட்டனர்
இந்த பிரளயத்துக்கு பின் இந்த மக்கள் உலகெங்கும் பரவி வெவ்வேறு இடம் – நாடுகளில் புகுந்து வாழ்ந்து வருவதாகவும் – அதனால் தமிழ் தான் உலகின் எல்லா மொழிக்கும் மதத்துக்கும் அடிப்படை என தமிழ் ஆராய்ச்சியாளர் வரலாற்று ஆய்வாளர் உரைக்கின்றார்
தமிழர் தம் வழிபாட்டு முறை – ஆதி சைவம் தான் கிறித்தவம் யூதம் – முகம்மதியம் பௌத்தம் எல்லா மதத்துக்கும் அடிப்படை ஆம்
இங்கிருந்து தான் எல்லா தேசத்துக்கும் பரவியது எங்கிறார் ஆய்வாளர்
Lemuria is the Cradle of Human civilization
அதாவது குமரிக்கண்டம் உலக நாகரீகத்தின் தொட்டில்
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்று
இதுவும் அதுவும் ஒன்று
எப்படி அருவுருவ லிங்கம்
ஆண் பெண் சேர்க்கையோ ??
அப்படித்தான்
முருகனின் நட்சத்திரமாகிய இருமுக்கோணமும்
அதுவும் ஆண் பெண் சேர்க்கையைத்தான் குறிக்குது
கீழ் நோக்கிய முக்கோணம் - – பெண்
மேல் நோக்கிய கோணம் -ஆண்
ரெண்டும் சேர்ந்தது அறு கோணம்
அது ஆறுமுகம் கொண்ட முருகன் – உருவ வடிவில்
வெங்கடேஷ்
ஒருமையின் பெருமை வல்லமை
ஒருமையின் பெருமை வல்லமை
இது அடைந்தால்
ஆன்ம சாதகனுக்கு
மனதில் கொந்தளிப்பு வெகுளி
காழ்ப்புணர்ச்சி வேக்காடு மனப்புழக்கம் எல்லாம் நீங்கிவிடும்
வெங்கடேஷ்
குமரிக்கண்டமும் - தெய்வீகத்தொடர்பும்
குமரிக்கண்டமும் - தெய்வீகத்தொடர்பும்
குமரிக்கண்டம் – அது பல தீவுகளாக இருக்கக்கூடும் என்றும் – சுமார் 50 தீவு நாடுகள் இருக்கலாம் என்கிறார் ஆய்வாளர்
அதன் அமைப்பை நோக்கினால் அது அண்டத்தில் பால் வெளி நினைவு படுத்துகிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து
அண்டத்தின் பால்வெளி – பிண்டத்தில் தலையில் தென் திசையில் சூக்குமமாக
புறத்தில் அது குமரிக்கண்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம்
நடுவே கரு போல் அது பெரிய தீவு – அதை சுற்றி பல சிறு சிறு தீவுகளாக இருந்திருக்கக்கூடும்
எப்படி பாற்கடல் பால்வெளி எலாம் சிரசில் நீல ஒளியால் மறைக்கப்பட்டிருக்கோ அவ்வாறே தான் குமரிக்கண்டமும் கடலால் கொள்ளப்பட்டு மறைபட்டிருக்கும் என்பது என் கருத்து
பால் வெளியில் இறைவன் பள்ளி கொண்டுளான் என்பது தான்
குமரிக்கண்டத்தில் ஆதி குரு ஆகிய சிவன் இருக்கார் என்றும் கொள்ளலாம்
அதனால் தென்புலமாகிய தமிழ் தேசமாகிய குமரிக்கண்டம் உலகுக்கு முதல் எல்லாவற்றிலும்
மொழி – கலாச்சாரம் – நாகரீகம் – பண்பாடு என எல்லாவற்றிலும்
வெங்கடேஷ்
Seen by 12
குமரிக்கண்டமும் அதன் உலகத்தொடர்பும்
குமரிக்கண்டமும் அதன் உலகத்தொடர்பும்
குமரி தான் உலகத்தின் ஆதிக்குடி - மொழி – கலாச்சாரம் – பண்பாடு - நாகரீகம் எல்லாவத்துக்கும்
எப்படி?
பார்ப்போம் வாருங்கள்
இலங்கையில் கதிர்காமத்தில் முருகன் கோவில்
இங்கு தான் இராவணின் உறவு முறையான சிற்பி தச்சன் மயன் வாழ்ந்ததாக நம் புராணம் கூறுது
இந்த மாயன் நாகரீகம் தான் தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் Mayan civilization – Calendar என வழங்குது
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேசும் மொழி – தமிழ்
நம் வார்த்தைகள் சொற்கள் அப்படியே உள்ளன
பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் – நதிகள் பெரும்பாலும் தமிழ் வேர் ஆகவே உள்ளன
நம் த நாட்டில் இருந்து தான் போதி தர்மர் எனும் புத்த துறவி சீனம் சென்று அங்கு தற்கால குங்க்ஃபூ தற்காப்புக்கலை மற்றும் யோகாவை பரப்பி அங்கே உயிர் துறந்தார் என்றும் வரலாறு கூறுது
நம் தமிழ்க்கடவுளான முருகனின் சின்னமான அறுகோண நட்சத்திரம் யூதர்களின் சின்னமாகவும் வணங்கப்பட்டும் வருது - இதை கொரோனா வைரசால பாதிக்கப்பட்டு இருக்கும் இஸ்ரேல் காட்டும் போது – அவர் வண்டியில் இந்த சின்னம் பார்த்து அதிர்ந்து போனேன்
சமர் என்ற தமிழ் சொல்லில் இருந்து தான் சுமேரிய நாகரீகம் - மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியது என்பதில் ஐயமிலை
ஆக ( இந்த வார்த்தை கூறினால் – எனக்கு , ஒரு திராவிட தலைவர் நினைவு தான் வருது ) எனவே – குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஆதித்தமிழர் தான் உலகுக்கு எல்லாவற்றிலும் முன்னோடி ஆவர் என்பதில் ஐயமிலை
வெங்கடேஷ்
Seen by 12
Subscribe to:
Posts (Atom)