Monday, April 27, 2026

பிரபஞ்ச பேராற்றல் 41

பிரபஞ்ச பேராற்றல் 41 “ திருஞான சம்பந்தர் “ இவரும் ஒரு ஞானியோ , சிவனடியாரோ அல்லர் இவரும் தத்துவ உருவகம் தான் இவரும் பிரபஞ்சப்பேராற்றலின் மனித உருவகம் தான் அனுமன் மாதிரி இவர்க்கும் அனுமனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவெனில் ?? ஆனுமன் – சின்ன திருவடி என்பர் ஆனால் ஞான சம்பந்தப்பெருமானையோ - திருவடி என்பர் – விபரம் அறிந்தோர் இவர் “ சாவேபோ”வில் – வேகாக்கால் ஆவார் இவர் துணையில்லாமல் நாம் உண்மை திருவடி இருக்குமிடம் நுழைய முடியாது சிற்றம்பலம் சேரவும் முடியாது அதனால் இவரை தன் குருவாக வரித்து வள்ளல் பெருமான் தனக்கு என்னென்ன பர உதவிகள் செய்தார் என பட்டியலிட்டு பாடுகிறார் 1 உயிர் அனுபவம் 2 அருள் அனுபவம் 3 சுத்த சிவ அனுபவம் என்பவை யாவையுமே அரைக்கணத்திலே கிட்டச் செய்தார் எங்கிறார் இவர் பெருமை – உண்மை தன்மை அறியா நம் மக்கள் இவரா வள்ளல் பெருமானுக்கு குரு ?? இல்லை இல்லை அபெஜோதி தான் குரு என்று அடம்பிடிக்கின்றார் என் செய்வது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.