Monday, April 27, 2026

கண்மணி பெருமை & சத்திய ஞான சபை விளக்கம் “

கண்மணி பெருமை & சத்திய ஞான சபை விளக்கம் “ அருட்பா - பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெருக என அது திறக்கும் பெருந திறவு கோலும் எட்டும் இரண்டும் தெரியாதே ஏன் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் அட்டி செய நினையாதீர் அரை கணமும் தரியேன் அரைக கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் உம ஆணை மணி மன்றில் நடம புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே ! பொருள் : பெட்டி – நம் தலை உலவாத பொருள் : ஆன்மா திறவு கோல் – கண்கள் எப்படி எனில்? சத்திய ஞான சபையில் நடு ஜோதிக்கு கீழ் இரு அறைகள் இவை அக்கு வடிவத்தை நினைவுபடுத்தத்தான் அப்படி எனில்
அவைகள் இரு கண்கள் தான் வள்ளல் பெருமான் இந்த அறையில் பெட்டியில் சாவி வைத்திருந்தார் ஒரு பக்க பெட்டியில் இருந்து சாவி எடுத்து – மற்றொரு அறை திறந்து அதில் இருக்கும் சாவி எடுத்து சத்திய ஞான சபை திறப்பார்களாம் அப்படி எனில் அவர் இரகசியமாக கூற வருவது : அந்த இரு பெட்டிகள் கண்கள் எனில் சாவி அது தானே என பொருள் ஆகுது அதனால் கண்ணில் இருக்கு சாவி - திறவு கோல் – கண் தான் சாவி அது கொண்டு தான் வாசல் திறந்து –உள் நுழைந்து நெற்றிக்கண்ணுக்கு செல்ல முடியும் ஆன்மாவைத் தரிசிக்க முடியும் இதே கண் கொண்டு தான் 8 /2 ஒன்று சேர்க்க முடியும் இந்த அக்கு ஏற்பாட்டை பார்த்து நம் சன்மார்க்க அன்பர்கள் இரு கண்கள் தான் 8 * 2 என கதை கட்டிவிட்டார்கள் – கன்னியாகுமரி தங்க ஜோதி சபை உட்பட வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.