Monday, April 27, 2026

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் - 6 ஓளியாக்கனல் : மூலாக்கினி இரு திருவடிகளின் இணைப்பினால் நெற்றியில் தோன்றிடும் ஒரு வகையான அக்கினி மூலம் தொடங்கி சுழிமுனை வரை ஓங்கி வளர்ந்து மலங்களையும் வினைகளயும் அழிக்க வல்லது அருளைக் கொடுக்கின்ற ஒளி இது தோன்ற , விந்து பர விந்துவாக மாறும் 2 வேகாக்கால் : அமுதக் காற்று – இறைச் சுவாசம் – Cosmic breath – Cosmic Prana – Gods breath etc பிராணன் – காரணக் காற்று முதலில் சூரியகலை – சந்திர ( வாசி ) கலையாக மாற்றம் பெறும். நாதம் உண்டாகும் . பரவிந்து வாசியுடன் கூடி சுழிமுனை வழியாக மேலேறி , பிரமப்புழை திறக்கப்பட்டு, துவாதசாந்தப் பெருவெளி அடையும். முழு நிலவு உருவாகும் – அதிலிருந்து குளிர்ந்த காற்று வீசும். இது சாகாக்கலை – அமுதக்கலை , இறைச்சுவாசம் பசி தூக்கம் போகும், உடல் லேசாக , தக்கையாக இருக்கும் , உடல் மிதக்கும் . 3. போகாப்புனல் : அமுதம் ( அமுதமாகிய மாறிய விந்து ) பூரண சந்திரனிலிருந்து குளிர்ச்சியான அமுதம் இறங்கும். அருளமுதம் மூன்று உளுந்து பிரமாணமுள்ள அமுதம் இறங்கும். இதுவே சுத்த கங்கை – ஆகாய கங்கை 4 சாகாத்தலை : சுத்த ஆகாயம் பரவிந்துவினால் எல்லா மலங்களும் எரிந்து நாசமானபின் , ஆகாய பாகம் சுத்தம் ஆன பின் உருவாவது சுத்த காற்று - சுத்த நீர் - சுத்த ஆகாயம் தான் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் ஆம் சுருக்கமாக சொல்லில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.