Monday, April 27, 2026

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – 6

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – 6 சுத்த சன்மார்க்கத்தின் தனிச்சிறப்பு அருட்பா - ஆறாம் திருமுறை - அருள் விளக்க மாலை 56 சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடைநின் றொளியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் : நம் சித்தர் பெருமக்கள் சாவேபோ மட்டும் தான் கூறியுள்ளனர் சாகாத்தலை = திவ்ய ஆகாயம் வேகாக்கால் = திவ்ய காற்று போகாப்புனல் = திவ்ய நீர் ஆனால் நம் பெருமான் தான் இதை தாண்டி இன்னும் 2 பொருள் சேர்த்து பாடியுள்ளார் அது ஒளியாக்கனல் = திவ்ய அக்கினி இடியாப்புவி = திவ்ய மண் இந்த ஐந்து சுத்த தத்துவங்கள் ஒன்று சேர்ந்து தான் சாகாக்கல்வி கற்றுத்தரும் – ஒளி தேகம் கிடைக்க வழி சொல்லும் இதை தான் மேலே இருக்கும் அருட்பா பறை சாற்றுது அதனால் இதை அடையாமல் ஒளி தேகம் சாத்தியமேயிலை என்பது உண்மை அதனால் சுத்த சன்மார்க்கம் என்பது அனைத்திலும் மேலோங்கி நிற்குது எப்படி எனில் –??? சைவம் சிற்றம்பலம் எனும் நிலை வரை உரை செய்ய – ஆனால் சுத்த சன்மார்க்கமோ அதையும் தாண்டி சுத்த சுகாதீத பெருவெளி வரை விளக்கி அனுபவம் உரைக்கிறது மாதிரி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.