Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
என் பதிவுகள் யாருக்கு புரியும் ??
என் பதிவுகள் யாருக்கு புரியும் ??
என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும்
இது பெரும்பாலானவர்க்கு தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும்
எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம்
கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது
கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டு
ஆதலால் கண்ணில் இருக்கும் திருவடி குரு ஆகும்
சற்குரு செல்வராஜ் சீடர்கள் என் பதிவுகளை ஏற்றுக்கொள்வார்கள் – அவர்களுக்கு புரியும் – ஏனெனில் அவர்கள் குரு நிறைய நூல்களில் கண்மணி பெருமை – அதன் தவம் – திருமந்திரம் பற்றி நூல் எழுதி விளக்கம் அளித்துள்ள படியால் அவர்களுக்கு புரியும்
கண்மணி மாலை – மந்திர மாலை என நூலகள் இருக்கின்றன
மேலும் என்னிடம் தீக்கை வாங்கிய திரு செல்வராஜ் சீடர்களுக்கு இன்னமும் நன்றாக என் பதிவுகள் புரியும் – நான் சொல்ல வருவதும் புரியும்
அனேக திருமந்திரப் பாடல்களுக்கு அவர் விளக்கம் தவறாக இருந்தாலும் – அவர் திருமந்திரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது பாராட்டுக்குரிய விஷயம்
அதில் திருவடி – அருள் – கண்மணி அவசியம் – கண் பயிற்சி எல்லாம் எழுதியது பாராட்டுக்குரிய விஷயம்
சன்மார்க்கத்தவர் தான் இதை மதிப்பதேயில்லையே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.