Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ???
ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ???
உண்மைச் சம்பவம்
சென்ற ஆண்டு வந்த விஷன் அருட்காட்சி
நான் ஒரு சிறு அறைக்குள் நுழைகிறேன்
பல கதவுகள் திறக்கப்பெற்று உள் செல்கிறேன்
உள்ளே செல்ல செல்ல , அரவம் ஆள் , கூச்சல் , சத்தம் அடங்க அடங்க , அமைதியாய் விடுது
உள்ளே பொன்னொளி வீசும் அறை , நீர் இருக்கு , அங்கே ஒருவர் தலை கவிந்து தவம் செய்கிறார்
முடிக்கற்றைகள் முன்னே
நான் அருகே செல்கிறேன்
தலை நிமிர்ந்து எனைப் பார்க்கிறார்
என்ன வியப்பு ????
அவர் அச்சு அசலாக எனைப் போலவே
ஆனால் இளமையாக , எனைவிட அழகாக ஒளிவிடுது
ஆன்மா சுந்தர வடிவு, அதனால் சுந்தரராஜ, சௌந்தரராஜ பெருமாள் என அதுக்கு பேர்
ஒன்றும் பேசவிலை மௌனம் தான்
பிறகு தன் கையை ஓரிடத்தில் காட்டியதில், அங்கே ஒரு ஒளி அசையாமல் ஆடாமல் ஒளி வீசுது
அது தான் ஆன்ம ஒளி , அது அப்படித்தான் இருக்கும்
வள்ளல் தன் அருட்பாவில் :
மிகுபெரும் காற்றடித்தாலும் ஆடாதே அசையாதே என பாடுகிறார்
முழுமையான பாடல் நினைவுக்கு வரவிலை
எனக்கு இந்த விஷன் சில விஷயம் தெரியப்படுத்துது அல்லாது நான் இந்த அரும் பெரும் காட்சி தரிசனம் கிட்டும் எனத்தோன்றவிலை இந்தப் பிறவியில்
பொறுத்திருந்து தான் பாக்கோணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.