Monday, April 27, 2026

தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் "

தருமச்சாலை - சன்மார்க்க விளக்கம் " அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 71 காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் " தருமச் சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே " சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும் மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் : ” ஒருமை எனும் தவத்தால் ” கிடைக்கும் பெரும் பயனே ” சோறு மட்டும் போடும் சன்மார்க்கத்தார் கவனிக்க : தவம் தவம் என தான் கூறியுள்ளார் – ஜீவகாருண்யம் – தயவு என கூறவிலை ” "எல்லாம் அருளும் அளிக்கும் ஆன்ம நிலையாகிய தருமச்சாலையில் " எனக்கு எல்லாம் தந்த அளித்த தனித்தலைவா தரும சாலை - ஆன்ம நிலையே அன்றி சோறு போடும் அன்னதானச் சத்திரம் - அன்னதானக்கூடம் அல்ல என்பதை எல்லா சன்மார்க்கத்தாரும் அறிந்து உணர வேண்டும் ஆன்ம நிலையே எல்லாம் தங்கு தடையின்றி வழங்கும் என்பதால் வள்ளல் எப்போதும் அது அன்னம் வழங்கும் அன்னதானச்சாலை - சத்திரம் ஆக மாற்றி உலகுக்கு காட்டினார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.