பக்ஷ பேதமும் - ஆன்மா பெருமையும்
பக்ஷ பேதத்தில் ஆண் பெண் சேர்க்கை இல்லா கரு உருவாக்க முடியும் பக்குவ நிலை உள்ளது
இது மகாபாரத இதிகாசத்தால் கர்ணன் பிறப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது
இதே மாதிரி காரண காரியம் வைத்து ,
காரண ஆன்மா - காரிய ஜீவன் உடல் அமைப்பை தானே முடிவு செய்து கொளும் எனவும் வள்ளலார் உரை நடையில் தெரிவித்துள்ளர்
இது எப்படி சாத்தியம் ஆகும் என்பது என் நீண்ட நாள் கேள்வி
உண்மையா ?? இல்லை இடை செருகலா ??
சாத்தியம் தான்
உடல் அமைப்பு எதன் அடிப்படையில் அமைகிறது என்று நோக்கில் , வித்தியா தத்துவம் தான் நிர்ணயிக்குது
சூக்கும் தேகத்தில் பஞ்ச கஞ்சகம் + புரியட்ட காயம் தான் இதனை நிர்ணயம் செய்கிறது என்பதால் ,
எப்போது இந்த தத்துவம் நம் வசம் ஆகுதோ ?? அப்போது உடல் அமைப்பு , எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள முடியும்
காலம் தேசம் பெற்றோர் கல்வி வாழ்க்கை செழிப்பு அந்தஸ்து ஆயுள் எல்லாம் நாமே முடிவு செய்து கொள்ள முடியும் என்பது புலனாகுது
இதனை நிரூபிக்கும் அகவல் வரிகள் :
571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
இந்த வரிகள் அனுபவமாக , இறை வசம் இருக்கும்
தத்துவ செயல்பாடு கட்டுப்பாடு எப்போது நம் கைக்கு வருதோ அப்போது இதெல்லாம் சாத்தியம் ஆகும்
மேலும் ,
“ தன் அரசே செலுத்தி நின்ற தத்துவங்கள் அனைத்தையும்
என் வசமாக்கிய என் தனித் தந்தையே “ என்ற வரிகளும் உள
இதனை கருத்தில் கொண்டே உரை நடையில் இவ்வாறு எழுதியுள்ளார் வள்ளல் பெருமான்
இந்த வரிகள் எனக்கு விஷன் தான் எடுத்துக்கூறியது
அதுக்கு பல மாதங்கள் ஆனது
இதெல்லாம் நாம் ஆன்மா அடைந்து அதன் அனுபவத்தில் அதன் சன்னிதானத்தில் நடக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.