Monday, April 27, 2026

பிரபஞ்சப்பேராற்றல் 39

பிரபஞ்சப்பேராற்றல் 39 நம் இதிகாச புராணங்களிலும் இந்த பேராற்றல் பற்றி செய்தி உளது ஆனால் அவைகள் உருவகம் செயப்பட்டுள்ளன 1 ராமாயணம் – அனுமன் இவர் வாசி ஆகிய பிரபஞ்ச சக்தி ஆவார் - பிராண சக்தி ஆவார் - அதனால் தான் வாயு புத்திரனாக சித்தரிக்கப்பட்டுள்ளார் இவரால் ஆகாத காரியமிலை எல்லாம் ஜெயம் தான் மிக பலசாலி 2 ஹம்சம் எனும் புள் இந்த பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , பாலை மட்டும் பிரித்து உண்டுவிடும் வல்லமை உடைத்து என நம் புராணம் உரைக்குது உண்மையில் அப்படி ஒரு பறவை இல்லவே இலை அதாவது எந்த ஆன்ம சாதகன் தான் உள்ளிழுக்கும் சுவாசக்காற்றில் ,அதில் கலந்து நிற்கும் பிராணனாகிய பிரப ஞ்ச சக்தியை பிரித்து அதன் மூலம் வாழ்கின்றானோ அவன் தான் ஹம்சப் பறவை ஹம் சம் என்றாலே ஹம் ஆகிய மேல் ஏறும் சுவாசம் சம் வெளி வரும் சுவாசம் ஆக இருக்கையில் – அது நாம் சுவாசிக்கும் பிராணவாயுவே அன்றி – ஒரு பறவை குறிப்பிடவில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.