Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
வள்ளல் பெருமானின் நடத்திய அற்புதம் 12
வள்ளல் பெருமானின் நடத்திய அற்புதம் 12
சத்திய ஞான சபைக்கான கொடி மரம் அமைத்தல் பணி
அதுக்கு மரம் வேண்டி தன் அன்பரை சென்னைக்கு அனுப்பி எடுத்து வர சொன்னார் – இந்த உயரம் அகலம் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்
அவரும் அவர் கூறிய மாதிரி தேர்ந்தெடுத்து பார்த்து – கடை முதலாளியிடம் விலை பேசினார்
அவரோ – இந்த விலைக்கு தான்
அன்பர்க்கும் அது மிக மிக அதிகமாக தோன்றியது
அதனால் வடலூர் வந்து வள்ளலிடம் சேதியை கூறினார்
அவர் நாளை செல்லவும் – நானும் அங்கிருப்பேன் என்றார்
அவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்த போது – வள்ளல் பெருமான் அந்த மரத்தின் மீது நின்றிருந்தார்
கடை அதிபர் – விலை குறைத்து அன்பர் கேட்ட விலைக்கே கொடுக்க சம்மதித்து கொடுத்து விட்டார்
அவர்க்கு வியப்போ வியப்பு
இது தான் ஞானியின் வல்லமை
மனதை மாற்றிவிடுவர்
அன்பர் தம்முடனே மரத்துடனே வண்டியில் செல்லலாம் என கூற , நீங்கள் எடுத்து வரவும் என கூறினாராம்
அன்பர் வடலூர் வந்து பார்த்த போது – அங்கே வள்ளல் பெருமான் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து – வியந்து – ஐயா எப்போது இங்கு வந்தார் ?? என வினவ
ஐயா எங்கும் செல்லவிலை – இங்கேயே காலையில் இருந்து இருக்கார் என கூற் , அவர்க்கு ஒன்றும் புரியவிலை
இது தான் சுத்த தேகம் போல் ஒளி தேகம் பெற்ற ஞானியர் வல்லமை - ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் சஞ்சரிக்க முடியும் என்பது இந்த சம்பவம் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.