Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
நாதம் – வாசி அனுபவம்
நாதம் – வாசி அனுபவம்
உண்மை சம்பவம் – கோவை ஏப்ரல் 2024
ஒரு குடும்பப்பெண் நடுத்தர வயது
பொள்ளாச்சி
இரு பிள்ளைகளுக்குத் தாய்
தவம் ஏதும் செயவிலை எந்த பயிற்சியும் இல்லை
ஆனால் நாதம் கேட்டுவருவதாகவும்
நான்கு நாதம் கேட்டுவிட்டதாகவும் என்னிடம் அலைபேசி தெரிவித்தார்
மணி – வண்டு கடல் மாதிரி
இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதாகவும் கூறினார்
இரு காதில் வெவ்வேறு ஒலிகள் கேட்கிறது என்றார்
எப்படி ?? அனுபவம் ?
மிக மிக அருமையான அனுபவம் என்றேன்
அதனால் வாசி மேலேறுவதாகவும் தெரிவித்தார்
என் வலை பார்த்து அதில் விளக்கம் பார்த்து தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்
எப்படி நான் எந்த தவம் செயவிலை என்றார் ??
நான் :
இது பூர்வ ஜென்ம வினைத்தொடர்பு – அதனால் வந்த பயன் அனுபவம்
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்
சுழி வாசல் திறந்து வாசி அனுபவம் சித்தியாகிவிட்டது
ஏனெனில் ??
பலர் 60 ஆண்டுகள் பயின்றும் ( குரு ) இன்னும் வாசி சித்திக்கவிலை
அவர் :
உடல் மிக மிக லேசாக இருப்பதாகவும்
உடல் உபாதைகள் தானாகவே சரி ஆகிவிடுவதாகவும் தெரிவித்தார்
கவனம் குவிவதாகவும் தெரிவித்தார்
ஆஹா என்ன அற்புதம் ??
இவர் ரெண்டாவது நபர் – முற்பிறவி வினைத்தொடர்பால் வாசி அனுபவம் சித்திப்பது
முதலாமவர் வேலூர் சேர்ந்த இளைஞர் பொறியியல் பட்டதாரி
இந்த கலியிலும் இப்படிப்பட்ட மனிதரும் இருக்கத்தான் செய்கிறார்
ஏமாற்றும் குருமார் மத்தியில் இந்த மாதிரி காண அரிதான பிறவிகள்
ஆகையால் வாசி நாதம் எல்லாம் உண்மை தான் என அறிந்து கொள்ள வேணும்
இந்த சம்பவம் முற்பிறவி என்பதெலாம் கதை என கதைவிடும் ஆபிரகாமிய மதத்துக்கு நல்ல சாட்டையடி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.