Saturday, April 25, 2026

தமிழ் பெருமையும் குமரி கண்டமும்

தமிழ் பெருமையும் குமரி கண்டமும் வள்ளல் பெருமான் : இறை அடைய எளிய மொழி தமிழ் என அருள் செய்துளார் அதனால் தமிழ் பெருமை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல் தான் இந்த பதிவு 1 குமரிக்கண்டம் : - LEMURIA குமரி கண்டம் என்பது – நம் த நாட்டுக்கு கீழ் இலங்கைக்கு கீழும் நீரில் மூழ்கியிருக்கும் நிலப்பரப்பு ஆம் அது பல தீவுக்கூட்டங்களாக இருந்திருக்கக்கூடும் என்றும் – அது மேற்கே அப்பிரிக்கா மடகாஸ்கர் – கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் இருந்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர் நம்பிக்கை – முடிவும் இங்கு தான் உலகின் மூத்த குடி – தமிழன் மூத்த முதல் ஆதி மொழி – தமிழ் வழங்கி வந்தது எங்கிறார் தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள் சுமார் 20000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் இனம் மொழி இங்கே தான் உலகின் மூத்த – முதல் குருவான ஆதிகுரு சிவன் வாழ்ந்து நான்கு வேதங்கள் உலகுக்கு உரைத்ததாகவும் கூறப்படுது குமரி கண்டம் – எல்லா கலைகளிலும் அறிவிலும் நாகரீகத்திலும் – பண்பாட்டிலும் சிறந்து விளங்கியது என்றும் அவர் தம் அறிவு கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் எலாம் தற்போதையதை விட பன்மடங்கு உயர்ந்தும் சிறந்தும் விளங்கியது என்று வரலாற்று ( ஆங்கிலேயர் உட்பட ) அறிஞர் சான்று உரைக்கின்றார் அது எல்லாரும் சமம் எனும் தத்துவத்தை கொண்டிருந்தது என்றும் பிராமணர்கள் போல் தீண்டாமை – சாதி பகுப்பு பார்க்கவிலை எனவும் சொல்லப்படுது அவர் அறிவில் உயர்ந்து விளங்கியமையால் அவர் பிராண சக்தி கொண்டு வாழ்ந்ததாகவும் – நாம் தற்போது வாழ்வது போல் – உயிரற்ற ஜடப் பொருட்களுடன் வாழவிலை என்றும் சொல்லப்படுது அந்த சக்தி தம் ஆசை நிறைவேற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுது 2 பிரளயம் – உலக மதங்களின் தோற்றம் : : பைபிள் : பிரளயத்துக்கு முன் நோவா ஓர் கப்பலில் தன் குடிகளுடன் தப்பித்ததாக கதை சொல்கிறது அவர் குமரியில் இருந்து தான் சென்றிருக்கார் என்று கூறுகிறார் அவர்கள் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று அங்கே யூதம் – இஸ்லாம் – கிறித்தவம் என பல மதங்கள் தோன்றலாயின அவர்கள் மதம் மொழிக்கு அடிப்படையானது தமிழும் அதன் சிவ வழிபாடும் தான் நம் த நாட்டின் பூம்புகார் – தனுஷ்கோடி கடலால் கொள்ளப்பட்டு அழிந்து போயின என நாம் வரலாறு படித்திருக்கோம் இதெல்லாம் அந்த பிரளயத்தைக் குறிப்பதாம் அந்த பிரளயத்திலிருந்து தப்பி பிழைத்தது தான் இலங்கை – லட்சத்தீவுகள் – மால தீவு என்பது ஆய்வின் முடிவு இலங்கையில் இருந்து பெயர்ந்து த நாட்டுக்கு வந்து வாழ்ந்தனர் அவர் தான் பாண்டியர் என்றும் அழைக்கப்பட்டனர் இந்த பிரளயத்துக்கு பின் இந்த மக்கள் உலகெங்கும் பரவி வெவ்வேறு இடம் – நாடுகளில் புகுந்து வாழ்ந்து வருவதாகவும் – அதனால் தமிழ் தான் உலகின் எல்லா மொழிக்கும் மதத்துக்கும் அடிப்படை என தமிழ் ஆராய்ச்சியாளர் வரலாற்று ஆய்வாளர் உரைக்கின்றார் தமிழர் தம் வழிபாட்டு முறை – ஆதி சைவம் தான் கிறித்தவம் யூதம் – முகம்மதியம் பௌத்தம் எல்லா மதத்துக்கும் அடிப்படை ஆம் இங்கிருந்து தான் எல்லா தேசத்துக்கும் பரவியது எங்கிறார் ஆய்வாளர் Lemuria is the Cradle of Human civilization அதாவது குமரிக்கண்டம் உலக நாகரீகத்தின் தொட்டில்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.