Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
சுத்த பிரணவ ஞான தேகம் - 3 :
சுத்த பிரணவ ஞான தேகம் - 3 :
சுத்த தேகம் :
நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும்.
அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும்.
இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும்.
இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி
சமாதியினால் – நோயற்ற உடல் சித்திக்கும்
திருவடிகள் செயல்பாட்டினால் – விந்து மேலேறி புருவ மத்திக்கு வந்தடையும் –
அங்கிருக்கும் மூலாக்கினியால்,விந்து பரவிந்துவாக மாற்றம் அடையும்.
பரவிந்து சுழிமுனையில் ஏறி, பிரமத்துவாரம் திறந்து , துவாதசாந்தப் பெருவெளி அடைந்து , அதன் மேல் உள்ள சிதாகாசப் பெருவெளியில் முழு நிலவாக ஜொலிக்கும் – ஒளிவிடும் .
இந்த ஒளிக்கதிர்கள் – பால் போன்ற வெண்ணிறமாக இருக்கும் – குளிர்ச்சியாகவும் இருக்கும் – இது சுத்த உஷ்ணம் ஆகும்
இது சிறு சிறு துளிகளாக சாதகன் உடல் மீது வீசும் – இது போகாப்புனல் – இதனால் சாதகனுக்கு வெம்மை என்னும் பசி நீங்கும் – தூக்கம் போகும்
இதனால் சாதகனுக்கு உணவு , நீர் தேவை இல்லை ஆதலால் , மல ஜல உபாதைகள் இலையாகையால் – உடல் சுத்த உடம்பாகிவிடும்
வள்ளலார் ஆறாம் திருமறையில்- ” போகாப்புனலால் சுத்த உடம்பினராம் “
இந்த சுத்த உஷ்ணமானது உடலின் அசுத்த அணுக்களை வேதித்து சுத்த அணுக்களாக மாற்றி – சுத்த உடம்பாக மாற்றிவிடுகிறது
இந்த சுத்த உஷ்ணமானது இலட்சக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் – அதனால் மும்மலங்களும் நாசம் ஆகும் – திரைகளும் விலகும் – ஆன்ம தரிசனம் கிட்டும்
சுத்த உஷ்ணம் காரண உஷ்ணமாக மாறும் போது – அது கோடிக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் –
அதனால் உடல் இன்னும் நுண்மை நுண்மை அடைந்து பிரணவ ஞான தேகமாக மாறிவிடுகிறது
========
முத்தேக சித்தி - ஒளி தேகப்பயிற்சி மிகவும் ரகசியமாகையால் – இந்த விஷயம் நான் உண்மைக்கு அருகே வரை விளக்கியிருக்கிறேன்
மற்றபடி நான் உண்மை பயிற்சியை மறைத்துவைத்திருக்கிறேன்
பயிற்சி பெறுவோர்க்கு மட்டும் 3 ம் கட்டம் போது தான் தெரிவிக்கப்படுது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.