Saturday, April 25, 2026

சத்திய ஞான சபையில் 7 திரை - விளக்கம்

சத்திய ஞான சபையில் 7 திரை - விளக்கம் இது எல்லவரும் அறிந்ததே உரை நடையில் – ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் திரைகள் 7 என வருவதால் – அங்கு காட்டப்படும் ஒளி ஆன்ம ஒளியே அன்றி அபெஜோதி அன்று ஆனால் எல்லவரும் அபெஜோதி அபெஜோதி என்றே அழைக்கிறார் ஜோதி தரிசனத்தின் போது என் செய்வது ?? அந்த திரை விளக்கங்கள் அகவலில் கரைவின் மாமாயை கரும் பெரும் திரை என ஆரம்பித்து 1 கருமை 2 நீலம் 3 பச்சை 4 சிகப்பு 5 பொன்மை 6 வெண்மை 7 கலப்பு என காட்டப்படுது இதன் வண்ணங்கள் என்ன குறிக்குது எனில்?? கருமை – மாயா மலம் – மறைப்பு மலம் – அஞ்ஞானம் இதிலிருந்து ஓர் சாதகன் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து உயர்ந்து எல்லா மலங்களும் ஒழிந்து ஞானம் ஆகிய வெண்மை அடைதல் குறிக்குது இந்த 7 திரைகள் தான் ஆதி பழந்தமிழர் வாழ்வியலிலும் - சைவ மரபிலும் சப்த கன்னியர்களாக உருவகம் செயப்பட்டுள்ளது இவர்களை நம் கோவிலில் பார்க்கலாம் இந்த சப்த கன்னியர் பல்வேறு சக்திகளாகும் பின் எப்படி சாதி சமயம் மதம் எலாம் பொய் என ஆதியில் உரைத்திட்ட அபெஜோதி என பெருமானார் பாடினார் என்பது புரியவில்லை ?? நீங்கள் பதில் கூறுங்கள் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.