தெளிவு
வீட்டின் பின் பக்க கதவு வழியாக
ஒருவன் உள் வந்தால்
அவன் திருடன் கள்வன்
வீட்டை துடைத்து சுத்தமாக்கி
சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான்
அதே ஆன்மாவும்
பின் வாசல் வழியாக வந்தாலும்
அதுவும் சுத்தம் செய்யும்
நம்மில் இருக்கும்
எல்லா துர்க்குணத்தை நீக்கி சுத்தம் செய்யும்
அவனும் கள்வன் தான்
ஆனால் உள்ளம் கவர் கள்வன் அவன்
எல்லா பேற்றையும் நல்கி
நம் வாழ்வை வளமாக்கும்
ரெண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு
உலகளவு வித்தியாசம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.