Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 21, 2026
அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26
அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
பொருள் :
நான் உங்களுக்கு நல்ல தேவையானதை சொல்கிறேன் – ஏனெனில் எல்லவரும் ஆன்மா தான் என்ற ஒருமை உணர்வினால் அன்றி வேறிலை
கல்வி கற்றாரும் – கல்லாதாரும் மாண்டு போகவே காண்கிறோம்
அந்தக்கரணம் – மனம் கலங்கடிக்கும் மரணம் அடைய உங்களுக்கு சம்மதமா ??
எனக்கு இதில் சற்றும் இசைவில்லை
உங்கள் மனம் என்ன மனமோ ?? கல்மனமோ ? வல்மனமோ ?? என நானறியேன்
சன்மார்க்கம் அணைமின் – இது இறப்பொழிக்கும் நன்மார்க்கம் ஆம் என அழைக்கும் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.