Wednesday, May 20, 2026

செஞ்சுடர்ப்பூவும் – செந்தூரமும்

“ செஞ்சுடர்ப்பூவும் – செந்தூரமும் பிரசாத மாலை " 1. திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் “ செஞ்சுடர்ப்பூ “ அளிக்கத் தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே 2 . அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்” செஞ் சுடர்ப்பூவைப் “ பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே இங்கு குறிக்கப்படும் செஞ்சுடர்ப்பூவும் பெண்கள் அணியும் செந்தூரமும் ஒரே பொருள் இடம் குறிப்பது ஆம் அது ஆன்மா விளங்கு நெற்றி நடு அனுபவம் செந்தூர் விளங்கு செந்தில் ஆண்டவர் ஆன்மா பிரம்மம் அப்ப எப்படி சமய மதம் பொய்யாகும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.