Tuesday, May 19, 2026

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3 1 சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்? பொருள் : இந்திரியங்கள் தத்தம் செயல் இழ்ந்து – வாய் பேசாது – காது கேளாது – அதாவது காணாக்கண் கேளாச்செவி அனுபவம் சித்தித்து –சதா உன் நினைவாகவே – உன் ஒரே நினைவாகவே இருப்பது எப்போது ?? பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? 8 பொருள் : ஓரிடத்தில் நிலைத்து வாழாமல் பேய் போல் அலைந்து – பிணம் போல் கிடந்து – ஆடாமல் ஆசையாமல் பிணம் போல் கிடந்து – எல்லா பெண்களையும் தாய் போல் பாவித்து என் தவம் முடிப்பது எப்போது?? வெங்கடேஷ் See les

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.