Friday, May 22, 2026

ஆறாம் திருமுறை – ஞானசரியை – 23 பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. பொருள் : உலகீர் இந்த உலக போகம் எலாம் ஒரு பொருட்டே அல்ல – இது பொய் ஆகும் – தெளிவிலாத இருளில் இருப்போரே – இந்த உலகில் மரணமடைவது அழகலவே சுத்த சிவ சன்மார்க்கத்தில் அணைந்து மரணமிலாப்பெரு வாழ்வு வாழலாம் – வாருங்கள் இங்கே சிற்சபை அமுதம் உண்டு களித்து அருள் திறத்தால் எண்ணியது எல்லாம் ஈடேற வாழலாம் – வாருங்கள் என அழைக்கும் வள்ளல் பெருமான் உங்களை சேர்ப்பதுக்கு இருப்பாரே அன்றி - தடுப்பவர் யாருமிலையே
வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.