Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 22, 2026
குருவின் அவசியம் “
குருவின் அவசியம் “
உண்மைச் சம்பவம்
சென்ற ஞாயிறன்று அபார்ட்மெண்ட்டில் பேச்சு
ஆன்மீகம் – குரு – ஜக்கி என ஒரு சுற்று
அப்போது ஒருவர் பெரியவர் குரு என்பவர் இடைத்தரகர் மாதிரி – அவர் எதுக்கு ?? என்றார்
நான் : – நேற்று உங்கள் மகன் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தாரே ?? எனக்கேட்டேன்
அவர் : ஆமாம் – கார் ட்ரைவிங்கு ஸ்கூலில் வந்து கற்றுக்கொடுக்கிறார்
நான் : ஏன் என்றேன் – அவராகவே கத்துக்கிட்டு ஓட்ட வேண்டியது தானே ?
“
அவர் : எப்படி முடியும் ?? கத்துக்கொடுக்க ஆள் வேணும் என்றார்
நான் : ட்ரைவிங்கு லைசென்ச் ஓட்டுனர் உரிமம் எப்படி எடுப்பீர்கள் ??
அவர் : ஒரு இடைத்தரகர் மூலம் தான்
நான் : ஏன் RTO மூலம் நீங்களாகவே எடுக்க வேண்டியது தானே ??
அவர் : புரோக்கர்க்கு தான் என்ன வேணும் ?? எப்படி செய்வது ? யாரைப்பார்ப்பது என தெரியும் எவ்ளோ கட்டணம்
நான் : உங்கள் மகன் எந்த காலேஜ் ??
அவர் : PSG Engg
நான் : மேற்படிப்பு எங்கு ?? எப்படி ??
அவர் : அமெரிக்கா – அதுக்கு அவர் கல்லூரி பேராசிரியர்கள் உதவுகிறார்கள்
நான் : ஏன் அவனாகவே முயன்று தெரிந்து கொண்டு போகலாம் அல்லவா ??
அவர் : எப்படி முடியும் ??? அவர்க்கு தான் இவன் படிப்புக்கு எங்கே எந்த கல்லூரி சரிப்பட்டு வரும் – நல்ல மதிப்பு – வேலை வாய்ப்பு தெரியும்
நான் : இதுக்கெல்லாம் இடைத்தரகர் புரோக்கர் – விஷயம் தெரிந்தவர் வேணும் – ஆனால் கடவுள் எங்கே எப்படி இருக்கார் னு தெரியாது ?
எப்படி அடைவது ? என்ன செய்தால் அடையலாம் னு தெரியாது ??
அதை சொல்லிக்கொடுக்கிறவர் – அவர் இடைத்தரகர் புரோக்கர் – அவர் வேணாமா ??
னல்ல வேடிக்கை நகைச்சுவை இலையா ??
அவர்க்கு கோவம் வந்து போய்விட்டார்
இது தான் நிதர்சனம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.