அயோத்தியும் திருப்போரூரும்
புறத்தே
முதலாவது ராமனின் ஜென்ம பூமி
போரிலா அமைதியான இடம்
மௌனம் விளங்கு இடம்
உபசாந்த மௌனம் ஆகும்
ரெண்டாவது முருகனின் வாசஸ்தலம்
அது ரணபூமி போர்க்களம்
ஞான அஞ்ஞானத் தத்துவங்களுக்கிடையே சதா நடக்கும் போர்க்களம்
இது கண்ணனின் ஸ்தலம் கூட
அதனால் இது குருஷேத்ரமும் கூட
முன்னது அகத்திலே ஏகாதசம் எனில்
பின்னது துவாதசாந்த வெளி ஆகும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.