Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 19, 2026
ஞான சரியை - 28
ஞான சரியை - 28
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே
பொருள் :
உலக வாசனை இல்லாதவர் – உலக னோக்காக இல்லாதவர் மனதில் உண்மையாய் அமர்ந்து அருளும் மேலான உண்மை ஆசிரியரை – சுத்த சிவத்தை
எவராலும் காண முடியாத என்றும் விளங்கும் வான் பொருளை மேலான பரம்பொருளை
எல்லா னிலைகளிலும் கலந்து தானாகி விளன்குகின்ற உண்மையை சத்தியத்தை
எனக்கு எல்லாம் செயும் வல்லபத்தை அளித்த தனிப்பதியை
உறவு என சென்றடைந்து மக்களே மனமெல்லாம் கனிந்து உருகி உள்ளபடி னினைந்து புகழ்ந்து வணங்கவும்
எல்லாம் இனிதாய் ஆகும்
வெங்கடேஷ்
முற்றிற்று See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.