Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 21, 2026
அருட்பா 6ம் திருமுறை – ஞான சரியை 27
அருட்பா 6ம் திருமுறை – ஞான சரியை 27
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
பொருள் :
சன்மார்க்கத்தாரின் தம் தலைவனாகிய அபெஜோதியை – எனைத்தாங்குகின்ற பெரும் தலைவனை –
தனித்திருக்கும் சபையின் தலைவனை – பொன்னம்பல சிற்றம்பல தலைவனை -
நல்ல மார்க்கத்தில் நடத்திய தெய்வத்தை –எனக்கு
அருளமுதம் அளித்த தலைவனை –
அறிவில் சிறியதாய் விளன்கும் மார்க்கத்தார் அறிய முடியாத புண்ணிய்னை
ஞானப்பொருளாகி – உண்மைப்பொருளாகி - முழுமைப் பொருளாகி – அதில் பொருந்தி இருக்கும் மருந்தை -
மற்ற மார்க்கம் விடுத்து சிற்றம்பல வெளியில் நடம் செய் அபெஜோதியை அடைவீர் உலகீர் தெளிவு அடையும் பொருட்டே
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.