Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
அருட்பா – 5 ம் திருமுறை - பிரசாத மாலை 1
அருட்பா – 5 ம் திருமுறை - பிரசாத மாலை 1
திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
இந்த அருட்பா எல்லார் சந்தேகத்தையும் தீர்க்கிறது – யார் யார் எல்லாம் வள்ளல் பெருமான் ஒளி தேகம் பெற்றாரா ?? இல்லை
1 அவர் கற்பூரம் வைத்து எரித்துக்கொல்லப்பட்டார் என அந்தணர்களும்
2 செங்கல் சூளையில் வைத்துக்கொல்லப்பட்டார் என் பொய் கட்டுக்கதை கட்டிவிடும் மனவளக்கலை மன்றம் நிறுவனர் வேதாத்ரிக்கு இந்த பாடல் நல்ல தக்கதொரு பதில் ஆகும்
இந்த பாடல் தான் ஒளி தேகம் – ஆன்ம தேகம் அடைவதுக்கான சமிக்ஞை பெற்று அதன் அடைவு குறிக்கின்றார்
பொருள்
ஆன்மா தன் முன் எழுந்தருளி செஞ்சுடர்ப்பூ ஆகிய ஆன்ம ஒளி உடைய தேகம் அருள வர – அது அளிக்க – நான் தயவுடை நிதியே எனக்கு மீண்டும் அருள் நீறு வழங்கக் கோர -
ஆன்மாவும் அகமகிழ்ந்து அளித்ததாக தன் தேக மாற்றத்தை – ஸ்தூல தேகம் ஒளி தேகமாக மாற்றம் அடைவதுக்கான இசைவு அருள் – ஆன்மாவிடம் பெற்ற அனுபவத்தை இந்த
பாடல் – பிரசாத மாலை மூலம் உலகுக்கு அறைந்து தெரியப்படுத்துகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.