Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
தெளிவு 516
தெளிவு 516
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ஒன்றுவைத்து புறம் ஒன்றுபேசுவார்
உறவுகலவாமை வேண்டும்
பெருமைபெரு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபென்ஆசையை மறக்கவேவேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்
நோயற்ற வாழ்வில் நான்வாழ வேண்டும்
தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள்
வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகதுய்யமணி உன்முக
சைவமணி சண்முகதெய்வ மணியே.
மக்களில் சிலர் – ஞானிகள் பெண்ணாசையை மறக்க வேணுமெனில் – பெண்கள் ஆணாசையை மறக்க வேணும் தானே ?
அப்படி அவர்கள் பாடவிலையே என கேட்கின்றார்கள் ??
இது இரு பாலர்க்கும் பொருந்தும் பொதுவானதாம்
அதாவது பாலுணர்வில் இருந்து –விடுதலை வேணும் என்பது தான் அது
எதிர் பாலின மோகத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பது தான் அது
இதுக்கு மகா கவி பாரதி பாடல் தான் பிரமாணம்
“ மோகத்தை கொன்றுவிடு
அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு “
மோகம் என்பது இரு பாலர்க்கும் பொதுவான வார்த்தை ஆம்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.