Friday, May 15, 2026

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ??

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? யாரைக் கேட்டாலும் – எந்த சாதகரை கேட்டாலும் – நான் புருவ மத்தி தியானம் செய்கிறேன் – அங்கு தான் எல்லாம் இருக்கு – ஆன்மா அபெஜோதி உட்பட என்றே கூறுகிறார் இது என்ன அனியாயம் ?? இது எப்படி இருக்கு எனில்? எல்லாத்துக்கும் மோடி தான் காரணம்னு சொல்ற மாதிரி வீட்டில் நீர் வரவிலை எனில் அதுக்கு மோடி தான் காரணம் நாட்டில் மழை வெள்ளம் வந்தால் அதுக்கும் மோடி தான் காரணம் என்பார் இது நல்ல நகைச்சுவை ஆம் இதை சன்மார்க்கத்தாரும் சொல்வது – சாதகம் செயும் சன்மார்க்கத்தார் அரிதிலும் அரிது – அவரும் இப்படி கூறுவது மிகப்பெரிய சறுக்கல் – இது அவர் இன்னமும் ஆய்வு செய்து உண்மை கண்டுபிடிக்க வேணும் என்பதை காட்டுது இந்த கூற்றையே வாசி பயிற்சியாளரும் கூறுவது எனக்கு மிகவும் வியப்பும் வேதனை தருகிறது சன்மார்க்கத்தார் ஒரு பயிற்சியும் செய்யாத போது – இந்த குழு சேர்ந்தவர் தீவிர பயிற்சி ஆற்றுகின்றார் – சந்தோஷம் தான் – ஆனால் இந்த கருத்து தான் சறுக்கல் - இவர் சாதனம் செய்வதாலேயே இவர் மீது எனக்கு தனி மரியாதை மதிப்பும் உண்டு ஏனெனில் நம் சன்மார்க்க சாதனைக்கும் வாசி பயிற்சிக்கும் அனேக ஒற்றுமைகள் உள்ளன ஆனால் இவர் இம்மாதிரி உண்மைக்கு புறம்பாகக் கூறுவது தான் இவர் இன்னமும் உண்மையை – சரியான பாதை கண்டுபிடிக்கவில்லை அனுபவம் பெறவில்லை என்பதை உறுதி செயுது காலம் அருள் தான் வழி காட்ட வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.