Saturday, April 25, 2026

சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1

சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1 I சுத்த சன்மார்க்கம் : தெய்வம் : அ பெ ஜோதி ஆண்டவர் இருப்பிடம் : சத்திய ஞான சபை படிநிலை : 17வது நிலை – சுத்த சிவ துரியாதீதம் II சைவம் : தெய்வம் : நடராஜர் இருப்பிடம் : சிதம்பரம் – ஆகாய ஸ்தலம் படிநிலை : 15/16 வது நிலை – பொன்னம்பலம் – சிற்றம்பலத்தைக் குறிக்கின்ற ஆகாய வெளிகள் III வைணவம் : தெய்வம் : ரங்க நாதர் இருப்பிடம் : ஸ்ரீ ரங்கம் படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை உட்பொருள் : நீரால் சூழப்பட்டுள்ளது ஆன்மா – ஸ்ரீ ரங்கமும் ஒரு தீவு – அது நீரால் சூழப்பட்டுள்ளது IV சீக்கிய மதம் : இருப்பிடம் : – அமிர்த சரஸ் படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை உட்பொருள் : நீரால் சூழப்பட்டுள்ளது ஆன்மா – பொற் கோவிலும் ஒரு தீவு போல் நீரால் சூழப்பட்டுள்ளது V கிறிஸ்துவ மதம் : தெய்வம் : இயேசு கிறிஸ்து படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை இயேசு கிறிஸ்து என்பது ஆன்மாவைக் குறிக்கின்றது VI புத்த மதம் : தெய்வம் : புத்தர் படிநிலை : நிர்வாணம் அடைந்தார் உட்பொருள் : நிர்வாணம் என்பது 36 தத்துவங்களைக் கடந்த நிலை – ஆன்ம அனுபவம் பெற்றிருக்கலாம் – ஆன்மா நிலையை அடையவில்லை VII ஜைன மதம் : தெய்வம் : மஹா வீரர் படிநிலை : நிர்வாணம் அடைந்தார் உட்பொருள் : நிர்வாணம் என்பது 36 தத்துவங்களைக் கடந்த நிலை – ஆன்ம அனுபவம் பெற்றிருக்கலாம் – ஆன்மா நிலையை அடையவில்லை VIII வேதாந்தம் : படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை உட்பொருள் : வேட்கை ஒழிந்த விடம் வேதாந்தம் – அது ஆசை அற்ற நிலை – ஆன்மா ஆசை இல்லாதது – எனவே வேதாந்தம் என்பது ஆன்ம நிலை மேற்கூறியவைகளை ஆராயும்போது, உலகிலுள்ள எல்லா சமய மதங்களும, 12வது நிலையான ஆன்ம நிலையைத் தொட்டு நிற்க, சைவ சமயம் மட்டும், அதையும் தாண்டி சாகாக்கலைத் தழைக்கும் வெளிகள் வரை நிற்கிறது எனவே தான் , வள்ளலார் சைவ சமயத்தில் மட்டும் தான் சாகாக்கலை சொல்லப்பட்டிருக்கிறது என்கின்றார். இப்பொழுது ஏன் வள்ளலார் சமய மதங்களை கடைப்பிடிக்க வேண்டாம் என்று கூறியதன் அர்த்தம் விளங்கும் என நம்புகின்றேன்- ஏனெனில் அவைகள் கடைசிப் படியான அ பெ ஜோதி ஆண்டவரை காட்டுவதில்லை . எனவே தான் வேண்டாம் என்று கூறுகின்றாரே தவிர சமய மதங்கள் பொய் என்ற அர்த்தத்தில் இல்லை சுத்த சன்மார்க்கம் என்பது சமய மதங்களைத் தாண்டி , மேல் நின்று விளங்குவதாயும் அதனில், எல்லா அனுபவங்களும் அடங்கி விளங்குவதாயும் இருப்பது ஆகும். BG [Badhey Venkatesh](https://www.facebook.com/badhey.venkatesh?__tn__=%2CdKH-R-R&eid=ARCeHfbs14BHVnwGL3qpVRzd2hts6c54mppf4G0dmtxt43uKNsk1qPhkuELGquS8YEBvzFyfn8hvpCmc&fref=mentions) [1008petallotus.wordpress.com](https://l.facebook.com/l.php...)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.