Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 8, 2026
பல் நோக்கு அண்டங்கள் – Multi verses
பல் நோக்கு அண்டங்கள் – Multi verses
அபெஜோதி அகவல் :
287 மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஆன்ம தத்துவம் அடங்கும் வெளி
288 காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தியா தத்துவம் அடங்கும் வெளி
289 துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிவ தத்துவம் அடங்கும் வெளி
290 இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
இந்த மூன்று வெளிகளில் எந்த எந்த அண்டங்கள் விளங்கும் அடங்கும் என பட்டியல் இட்டு விளக்குகின்றார் வள்ளல் பெருமான்
291 ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
292. சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
294 . அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
298. ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
299. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
300. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
301. பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
302. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
303. எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
304. அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
305. உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அதாவது இந்த 36 தத்துவ வெளிகளில் உயிர் கலை சுத்த சிவ வெளிகளில் :
1 பிரம்மன் அவர் தம் அண்டங்கள்
2 விஷ்ணு அவர் தம் அண்டங்கள்
3 ருத்திரர் அவர் தம் அண்டங்கள்
4 மகேஸ்வரர் அவர் தம் அண்டங்கள்
5 சதாசிவர் அவர் தம் அண்டங்கள்
( ஐந்து தொழில் தலைவர் அண்டங்கள் )
6 அபர விந்து அவர் தம் அண்டங்கள்
7 அபர நாதம் அவர் தம் அண்டங்கள்
8 அளவில் சத்தி சத்தர் அவர் தம் அண்டங்கள்
9 பராசத்தி அவர் தம் அண்டங்கள்
10 பரசிவம் அவர் தம் அண்டங்கள்
இவ்வாறாக பல வகை அண்டங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.