Friday, April 10, 2026

வள்ளலாரின் ஒளி தேக சித்தி

வள்ளலாரின் ஒளி தேக சித்தி இந்த பதிவு APJ n Deathless Bodies by TRT என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுளது அதாவது எல்லா ஞானியரும் இறுதியானது சிற்றம்பலத்தில் வெட்ட வெளியில் கலந்தது மாதிரியாகத் தான் இருக்கும் 1 மாணிக்க வாசகர் 2 சுந்தரர் 3 ஔவையார் 4 சம்பந்தர் மாதிரியாக அது எல்லாருக்கும் உலகத்துக்கும் பொதுவான அனுபவமாகும் ஆனால் வள்ளல் பெருமான் தன் தேகம் ஒளி தேகமாக மாற்றி பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் தன்மை என்பது தனிப்பட்ட சிறப்பான அனுபவம் அது எல்லாருக்கும் அனதும் அல்ல அது அபெஜோதியால் வழங்கப்பட்ட தனிசிறப்பான வரம் மாதிரியானது அது உலக நன்மைக்காக உலகம் செய்த தியாகம் மாதிரியாக அதை இறையும் அங்கீகரித்து அளித்த மாபெரும் சீர் எனலாம் ஆகையால் “ எம் குலத்து முதல் மகன் நீ “ என்று பாடுகிறார் இது எல்லவரும் அடைய வேண்டிய இறுதி அனுபவம் அல்ல என்பது தான் இங்கே வலியுறுத்தும் கருத்து எது உலகத்துக்கும் எல்லாருக்கும் பொதுவோ அது தான் நாம் அடைய முயற்சி செய்ய வேண்டியது ஆகும் “ சிற்றம்பலம் சேர்ந்து திருவடி கலப்பே எல்லவருக்குமானது “ இந்த கருத்தை இந்த நூல் ஆசிரியர் பலப்பல இடங்களில் வலியுறுத்தியுள்ளமையால் நான் இங்கே பதிவு செய்து அறிவிக்கிறேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.