Friday, April 10, 2026

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் ஜனவரி 2022 உரையாடல் – அலைபேசி 1 அன்பர் : இப்போது சித்தர்கள் என்ன செய்து கொண்டிருப்பர் ?? நான் : உண்மையாக கடவுளை தேடுவோரை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள் அவர்க்கு எல்லா விதத்திலும் உதவுவர் போலிகள் – சாமியார்/ மத போதகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என பார்த்து சிரித்தபடி இருப்பர் எப்படி எல்லாம் ஊரை அப்பாவி மக்களை ஏமாத்தி பொருள் ஈட்டுகிறார் எப்படி பெண்கள் கற்பை சூரையாடுகிறார் எப்படி தவறாக யோகம் ஞானம் பொருள் விளக்கம் அளித்து , பயிற்சி அளிக்கிறார் என பார்த்தபடி இருப்பர் இதில் பலர் மோசம் போவது பார்த்து – அவரவர் கர்மம் என எண்ணியபடி இருப்பர் அற்பமான செயல்கள் -மத மாற்றம் – போலி பிரசங்கம் இதர காரியம் பார்த்து எள்ளி நகையாடியபடி இருப்பர் அவர் : ஏன் ?? நான் : இதுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமே இலை எனும் போது , அவர் வேறென்ன செய்வார்?? இதனால் எல்லாம் ஞானம் அடைய முடியுமா ?? உலகத்தில் பொருள் – சுக போக – உல்லாச வாழ்வு வேணுமானாலும் கிட்டலாம் ஆனால் தெயவத்தின் அருள் ?? கடவுளுக்கு இதில் துளி கூட சம்மதம் உடன்பாடு இன்று வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.