Friday, April 10, 2026

மார்கழி நீராடல் பெருமை - அமுத நீராடல் பெருமை “

மார்கழி நீராடல் பெருமை - அமுத நீராடல் பெருமை “ திருவெம்பாவை 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் “ எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் “ விளக்கம் : இதில் கடை வரி தான் மிக மிக முக்கியம் அதாவது சுனை எனில் அமுதம் ஊறும் சிறு இடம் /துளை அதாவது சுழிமுனை உச்சி அதிலிருந்து கொட்டும் அமுதத்தில் நீராடுங்கள் என்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் அது தான் உண்மையான மார்கழி நீராடல் ஆம் நாம் வீட்டில் அதிகாலையில் நீரில் குளித்தல் அல்ல மேலும் அந்த காலத்து வீசும் குளிர் காற்றும் அமுதக்காற்றே ஆம் அதை உடலில் படும் படி அந்த நேரத்தில் சத் காரியம் செயவும் என்பது தான் கருத்து மேலோட்டமான பொருள் விளக்கம் எடுக்கக் கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.