Sunday, April 5, 2026

ஆடுதுறை - சுழிமுனை உச்சி பெருமை “ அகத்தியர் துறையறி விளக்கம்

கடை “ – சன்மார்க்க விளக்கம் “ ஆடுதுறை - சுழிமுனை உச்சி பெருமை “ அகத்தியர் துறையறி விளக்கம் கற்புடைய மனத்தோர்கள் கால்ரெண்டைத்தான் “ கடைக்கோடி “ நடுத்தெருவே கட்டும்போது உற்பனமும் அறிவார்கள் உண்மை காண்பார் ஓரெழுத்து மீரெழுத்து முண்மை காண்பார் “எப்படியும் கடைக்கோடி முனையில் நிற்பார்” இறவார்கள் பிறவார்கள் எமனை வெல்வார் சொற்பொருளாம் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே விளக்கம் : மனதை உலக நோக்காக இல்லாமல் ஆன்ம நோக்கமாக வைத்திருப்பவர் கற்புடையோர் - ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சரி அவர் சுவாசம் இரண்டையும் “ சுழிமுனை உச்சியில் “ வைத்து கட்டியிருப்பர் அதனால் கடை = சுழிமுனை உச்சி ஆகும் இதை தான் 1 கடைத்தேற வேண்டும் எனில் – தவத்தால் , சுழிமுனை உச்சிக்கு ஏற வேண்டும் என்ற அடிப்படையிலும் 2 கடை விரித்தேன் என வள்ளல் பெருமான் கூறினார் என்றால் , உச்சி ரகசியங்களை விரித்துரைத்தேன் ஆனால் உலகம் மக்கள் அதை புரிந்து கொள்வதாயிலை அவர் கவனம் வேறு பணம் பதவி 3 தனுஷ்கோடி – நம் தென் இந்தியாவின் முனை ஆகிய அழிந்து போன ஊர் ஊழியால் அழிந்த ஊர் தனுஷ் = இடை நாடி ஆகிய சுழிமுனை நாடி கோடி - முனை அதனால் கடைகோடி = சுழுமுனை நாடி குறிப்பதாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.