Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
ஒளி தேகம் - அபெஜோதி அகவலும் - உண்மை அனுபவமும்
ஒளி தேகம் - அபெஜோதி அகவலும் - உண்மை அனுபவமும்
• தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட
• 726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
• 727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
• 728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
• 729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
• 730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
• 731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
• 732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
• 733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட
• 734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
• 735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
• 736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
• 737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
இந்த மேல் கண்ட வரிகள் எல்லாம் ஒளி தேகம் அதன் அனுபவம் ஆகும்
இதை அப்படியே கண்கூடாக கண்டுள்ளார் பாண்டி அரவிந்தர் ஆசிரம துறவி கங்காதரன் சுவாமிகள்
இது சுவாமி கங்காதரன் பாண்டி அவர்க்கு பெருமான் காட்டிய அருட்காட்சி
இது APJ and Deathless bodies book TR Tulasi Raman எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
ஆங்கிலத்தின் தமிழாக்கம் :
1 நான் 1978 ல் அண்ட உச்சிக்கு சென்ற காட்சி இது
அது பல மணி நேரம் நீடித்ததாம்
அவர் திருக்காப்பிட்ட பின் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் பதிவு
30.1.1874
ஒரு சிறு கிராமம் தெரிகிறது – வள்ளல் பெருமான் இருக்கிறார்
அவர் முகத்தில் சாந்தம் அமைதி – அவர் உடல் ஒளி விடுது
அவர் முற்றத்துக்கு வந்து தீபத்தை அதிகப்படுத்தி – தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொள்கிறார்
அங்கு பேரமைதி நிலவுது
அவர் சென்று வெண் துகில் போர்த்தப்பட்ட பலகையில் அமர்ந்து கொள்கிறார்
அவர் அங்கிருந்து வெளி நோக்கினார்
பௌர்ணமி நிலா தெரிகிறது
பின் பிரபஞ்சமே காண்கிறார்
அருள் ஒளி தோன்றி – அவர் உடலை முதலில் இதயத்திலிருந்து தலை வரை வேதித்துக்கொண்டு வந்தது
ஆனால் உலக பொருள் எரிந்தால் எரிந்த வாசம் போல் இல்லாமல் – அது நறுமணம் வீசியது
அவர் தம் தேகம் வெண் பொடியாக மாறியது
தலைமுடி கூட அருள் ஒளியாக மாறிவிட்டது
ரத்தம் கூட அருள் ஒளியாக மாறி – ஒளி வீசியது
பின் ரெண்டாம் கட்டமாக – அருள் ஒளி இதயப்பகுதியிலிருந்து கால் வரை தேகத்தை வேதித்து அதுவும் வெள்ளொளி ஆக மாறியது
இது தான் ஒளி தேகம்
இப்படித்தான் அவர் தேகம் ஒளி தேகமாக மாறியது
2 பின்னர் – மற்றுமொரு அருட்காட்சி – அதில் அவர் ஒளி தேகம் அருள் அணுக்களாக மாற்றப்பட்டு எல்லா அண்டங்களிலும் நம் பூமியிலும் தூவப்பட்டது என முடிக்கிறார்
ஆனால் நம் அன்பர் அவர் ஜோதியாகி ஆண்டவருடன் கலந்துவிட்டார் என்பர்
ஆக அவர் கண்ட காட்சி உண்மை தான்
அகவலில் இருப்பது தான் உண்மை சம்பவமாக நடந்தேறியுள்ளது
ஆனால் சன்மார்க்க உலகம் இந்த அரிய செய்தியை நம்புவதில்லை
அவர் கற்பனைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கே என அதுக்கு கவலை
உலகை நம்பக்கூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.