Wednesday, April 15, 2026

வள்ளல் பெருமானும் - நானும்

வள்ளல் பெருமானும் - நானும் உண்மை அனுபவம் 1 அருட்பா - ஆறாம் திருமுறை - திருப்பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும் நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே இந்த பாடலில் : ஆன்மா தனக்கு என்னென்ன பரோபகாரம் - பர உதவிகள் பர அனுபவம் கொடுத்தது என விவரிக்கின்றார் உடல் பழுது எல்லாம் நீக்கியது – இதும் மிக மிக முக்கியம் என் அனுபவம் : சில உடல் உறுப்புகள் பழுது நீக்கியுள்ளார் விஷன் காட்டியது சோதனை செய்ததில் உண்மை என நிரூபணம் ஆயிற்று 2 மெய்யருள் வியப்பு ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ. எனக்கும் உனக்கும் தவ அனுபவத்தில் வள்ளல் பெருமான் மேலேற மேலேற கீழ் இறங்காதிருக்க படிகள் எடுத்து விட்டார்களாம் எனக்கு வந்த விஷன் : நான் மேலேற படிகள் வைக்கிறார் – ஏறியவுடன் கீழ் படிகள் எடுத்துவிடுகிறார் ஞானிகள் ( நான் ஆன்ம சாதகன் மட்டுமே ) அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே வேறுபடாது அனுபவத்தை எலாம் விஷன் காட்டிவிடும் இது கண் /திருவடி தவம் பெருமை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.