Wednesday, April 15, 2026

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை அருட்பா - ஆறாம் திருமுறை - திருப்பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும் நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே. இந்த பாடலில் : ஆன்மா தனக்கு என்னென்ன பரோபகாரம் - பர உதவிகள் பர அனுபவம் கொடுத்தது என விவரிக்கின்றார் 1 பள்ளி பயிற்றா கல்வி கற்பித்தது - அதாவது ஓதாது உணர்தல் 2 உடல் பழுது எல்லாம் நீக்கியது – இதும் மிக மிக முக்கியம் எந்த யோகத்தில் இதெலாம் சாத்தியம் ஆகும் ?? மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை இலா மருத்துவம் இலவசமாக கிடைத்தல் தான் இந்த அனுபவம் 3 கண்ணில் விழிப்புணர்வு வழங்கியது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.