Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : இது அது என சுட்டும் போதம் ஒழிந்த போதாந்த நிலை ஆகிய – எல்லாம் ஒன்றென ஒருமை ஓங்கும் வெளி ஆகிய சிற்சபை 2 வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : வேதங்கள் ஆகமங்கள் உரைக்கும் அனுபவங்கள் யாவுக்கும் ஆதாரமாகும் சபை சிற்சபை ஏனெனில் எல்லா அனுபவத்தையும் தன்னுளே அடக்கி வைத்திருக்கும் அறிவு வெளி ஆகும் இந்த அற்புத சபை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.