Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : குன்றிப்போகா தேய்ந்து போகா பெரிய நலம் அளித்து அருளும் அழியாத சபை சிற்சபை உலகில் அகிலத்தில் எல்லாம் – ஊரும் நாடும் அழிந்து போனாலும் - சிற்சபை அழியாது என்றென்றெங்கும் ஓங்கும் பெருமை ம்கும் சபை சிற்சபை . கற்பம் பலபல கழியினு மழிவுறா அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : ஓரு கற்பம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் இந்த மாதிரி பலப் பல கற்ப காலம் கழிந்தாலும் – அழியாமல் ஓங்கும் அற்புதம் இயற்றும் சபை இந்த அற்புதமான சபை சிற்சபை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.