Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
1 மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பொருள் :
மனம் முதலிய கரணாதிகட்கும் அறிய முடிய மாட்டாத உயரிய நிலையில் இருக்கும் வெளி சிற்சபை வெளி
அதாவது இங்கு மனம் முதலிய கருவி கரணங்கள் தத்தம் சக்தி இழந்து – இறந்தும் பணி செய்யாமல் இருக்கும் – அது சுத்த வெளி ஆகும்
2 ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பொருள் :
படித்து படித்து பார்த்தாலும் உணர முடியாத உயர்ந்த நிலையில் விளங்கும் சிற்சபை
அதாவது சிற்றறிவு என்பது நம் மனம் ஆகிய கருவி கொண்டு வருவதால் – அந்த சிற்றறிவால் பார்க்க / உணர முடியாது
ஆன்ம நிலையில் – அந்த அனுபவத்திலே அருகிய காட்சியாக காணக்கூடிய ஒன்று எப்படி நம் கருவி கரணத்தால் அறிய முடியும் ???
இது தான் சிற்சபை பெருமை ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.