Wednesday, April 22, 2026

தகராகாசமும் - தாம்பரமும் “

தகராகாசமும் - தாம்பரமும் “ தாம்பரம் – நாம் அறிந்தது இந்த ஊர் சென்னை அருகே உள்ளது தகராகாசம் – இது நாம் அறியாதது இது என்ன ?? இது வெளி ஆகும் – சிரசில் இருக்கும் பரவெளி ஆகும் – உச்சிக்கு மேல் விளங்கும் சுத்த சிவ வெளிகள் ஆம் தகரக்கண்ணாடி உடை தகர விளக்கு – இந்த ஏற்பாட்டுடன் கூடிய விளக்கு தான் எல்லா சன்மார்க்க சங்கத்திலும் இருக்கும் இதையே வள்ளல் பெருமானும் ஞான சபையில் வைத்தார் ஏன் ?? தகர விளக்கு இருக்க வேண்டிய இடம் தகராகாசத்தில் அதான் அந்த விளக்கு + கண்ணாடியுடன் வைத்தார் கண்ணாடி = சுழுமுனை விளக்கு = ஆன்ம ஜோதி அகத்தில் இருக்கும் தகராகாசமும் புறத்தில் இருக்கும் ஆகாயமும் ஒன்று தான் என புரிய வைக்கத்தான் – புறத்தே , தாம்பரம் என்று ஓர் ஊருக்கு பேர் வைத்து காட்டுகின்றார் நம் முன்னோர் தாம்பரம் – தகராகாசத்தின் புற வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.