Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
சித்தர் பாடல் - உண்மை விளக்கம்
சித்தர் பாடல் - உண்மை விளக்கம்
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ.
பொருள் :
இது கண் தவத்தின் பெருமை எடுத்துரைக்க வந்த பாடல்
சாதாரண ஜீவன் பிறத்தல் = ஆண் பெண் சேர்க்கையில் – நாத விந்து கலத்தலில் ஆகுதல்
இது புறம்
மாற்றிப் பிறத்தல் என்பது = சாதனா தந்திரத்தால் தனக்குள்ளே நாத விந்து ( இரு கண் ) சேர்க்கை செய்து , அதன் மூலம் ஜீவன் உள்ளுக்குளே உண்டாக்கி – அதன் மூலம் ஆன்மாவை அடைதல் ஆம்
வள்ளல் பிரான் உரை நடையில் – ஜீவன் கண்டத்தில் எங்கிறார்
அதாவது கண்டத்தில் எனில் இரு துண்டாக இரு கண்ணில்
அதை ஒன்றுபடுத்துவதன் மூலம் முழுமையான உயிர் உருவாகும்
தவம் ஆகிய ஒன்றுபடுத்துவது தான் மருந்து
அந்த மருந்து மூலம் புது பிறப்பு எடுத்து – ஆன்மாவின் பாதம் சேரேனோ என்று பாடுகிறார் சித்தர்
யார் சரியான அர்த்தம் புரிந்து – தவம் செய்து இலக்கை அடைகிறார் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.