Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
யார் சுத்த சன்மார்க்கி ??
யார் சுத்த சன்மார்க்கி ??
1 முதல் நிலை :
நாம் எல்லாரும் ஒரு குலம் ஒரு இனம்
நாம் ஒரு தாய் மக்கள்
நாம் எல்லவரும் ஓரினத்திலிருந்து தான் வந்திருக்கிறோம் என உணர்வதும்
நாம் வணங்கும் தெய்வமாகிய சிவமே
உலகின் மற்ற நாடுகளில்
வேறு பேரால் வணங்கப்படுகிறது என அறிந்து உணர்வதும்
இஸ்லாமியர் அல்லா என்பதும் சிவம் தான்
கிறித்தவர் பிதா பரிசுத்த ஆவி என்பதுவும் சிவம் தான்
இதை அனுஷ்டித்து வந்தால்
ஒரு சாதகன்
சமய மதத்தில் சமரசம் அடைந்துவிட்டான் என பொருள்
அவன் மனதில் சமயமதத்தால் விகல்பமிலை
2 ரெண்டாவது நிலை :
பின் இது கடந்து
சாதனம் புரிந்து
ஆன்ம நிலை அனுபவம் பெற்று
அந்த ஆன்மாவைத் தான் எல்லா மதத்தலைவரும் போற்றி வணங்கினர் என அறிந்து உணர்வது
அவர் அந்த அனுபவம் பெற்று விளங்கினர் என உணர்வது
இது சன்மார்க்கம் என கொள்ளலாம்
3 மூன்றாம் நிலை
ஆன்ம நிலை தாண்டி கடந்து
சுத்த வெளிகளாம் பொன்னம்பலம் சிற்றம்பலம் பிரவேசித்து
அதன் பயனாம் ஒளி தேகம் அடைதல் தான் சுத்த சன்மார்க்கம்
அவனே சுத்த சன்மார்க்கி ஆவான்
சாகாதவன் ஆதலால் அவன் சன்மார்க்கி
ஆனால் நம் மக்கள் என்ன செய்து கொண்டுள்ளார் ??
சோறு போட்றவன் அதிதீவிர சுத்த சன்மார்க்கி எங்கிறார்
தான் சன்மார்க்கம் புகுந்து விட்டதாலேயே
எந்த ஆய்வும் களப்பணியும் இல்லாமல்
எடுத்தவுடன் தான் சமய மதம் கடந்தவன் எங்கிறார்
அது எலாம் பொய் எங்கிறார்
நல்ல வேடிக்கை இலையா ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.