Saturday, April 4, 2026

முப்பூ – பிரணவம் பெருமை “

முப்பூ – பிரணவம் பெருமை “ “ சுசீந்திரம் ஊர் பெருமை சிறப்பு “ இந்த ஊர் கோவில் நாகர் கோவிலுக்கும் குமரிக்கும் இடையே இருக்கு இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி பேர் – “ தாணுமாலயன் “ எனில் ?? சிவன் – விஷ்ணு – பிரமன் கலந்த மும்மூர்த்திகள் கோவில் வரலாறு : புராணம் இந்திரன் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த சாபத்துக்கு விமோசனம் பெற்ற ஸ்தலம் கௌதம ரிஷி அளித்த சாபத்துக்கு விமோசனம் கிடைத்த இடம் எப்படி கிடைத்தது ?? இந்திரன் இந்த புனித ஸ்தலத்தில் தவம் செய , அங்கே ஒரு மரத்தில் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்த்து காட்சி கொடுத்து , அவர்க்கு சாப விமோசனம் அளித்ததாக புராணம் கூறுது இதன் உட்பொருள் : தவத்தில் சோமசூரியாக்கினியின் சூக்கும ஒளி – கலைகள் ஒன்று சேர்ந்தால் அது பாவத்தை நாசம் செயும் என்பது தான் சோமசூரியாக்கினி கலைகள் = சிவம் விஷ்ணு பிரம்மா ஆவர் ஒரு உயரிய கருத்தை உலகத்துக்கு புரிய வைக்க , நிறைய புராணம் தேவைப்படுது அனேக கதைகள் வேண்டியதாகுது ( எலாம் கற்பனை தான் ) ஆனாலும் உலகம் உண்மைக்கு அருகே கூட இலை முப்பூ என்பது சோமசூரியாக்கினி கலைகள் முப்பூ என்பது மும்மூர்த்தியர் முப்பூ தான் முக்கூடல் திரிகோண மலை எல்லாம் அதில் இருந்து இறங்கும் “ நதி தான் பாபநாசம் “ இது போதுமா ?? இன்னும் வேணுமா ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.