Wednesday, April 22, 2026

பிரபஞ்ச சக்தி – 58

பிரபஞ்ச சக்தி – 58 வள்ளல் பிரான் தன் உரை நடையில் – பக்கம் 250 -251 அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி உதய பரியந்தம் வரை இருக்கின்றது அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியில் இருப்பது நலம் விசேஷம் தேகாதி பிண்டத்திலும் அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும் ஒரு கால் ஒரு ஷணம் அந்த காற்று வியாபகம் ஆயிருக்குங்கால் – ஜீவர்களுக்கு தாங்களறியா கடவுள் விளக்கம் உண்டாகும் மேற்படி காற்று வியாபகம் ஏகதேசம் இல்லாவிடில் ஜீவர்கள் விஷக்காற்றினால் சதா வியாபகமடைதலில் இந்த சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வர மாட்டாது அமுதக்காற்று வியாபகமாயிருக்கும் காலத்தில் ஜீவர்களுக்கு அறிவு விளக்கம் – மன நெகிழ்ச்சி – இந்திரிய அடக்கம் – ஈசுரபத்தி முதலியவும் விளங்கும் அக்காலத்தை காற்றின் வியாபக காலமென்று அறிய வேண்டும் இதன்றி இருள் மயமாய் முன்பின் தோன்றாது அறிவின்றி இருக்குங்காலம் – விஷக்காற்று வியாபகமாயிருக்கும் காலம் என்றறிய வேண்டும் அமுதக்காற்று – பிரபஞ்ச சக்தி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.