Wednesday, April 15, 2026

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2 திருமணத்தில் : 1 தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான். கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல் அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம் ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற பாடலில் – தான் ஆன்மா/சுழிமுனை அனுபவம் அடைந்ததை உறுதிப் படுத்துகிறர்ா. 2. மணமகள் நெற்றியில் ” பொட்டு” வைக்கின்றார். பொட்டு = ஆன்மா /புருஷன் புருஷன் என்பது 24 ஆன்ம தத்துவங்களில் ஒன்று என்பதைக் கவனிக்கவும். 3. உச்சியில் பொட்டு வைத்தால் – அங்கு சிவம் இருக்கிறது என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார்கள் 4. மரணத்தில் : புருஷன் இறந்து விட்டால் , பெண்ணிற்கு, பொட்டு அழித்து விடுகிறார்கள் அருத்தம் – நெற்றியில் இருக்கும் புருஷனாகிய ஆன்மா இல்லை – அதனால் பொட்டு இல்லை என்னே அறிவு என்னே அறிவு??? 5. அதனால் அவளை “முண்டை ” என்றும் அழைக்கின்றார்கள் அருத்தம் : தலை இல்லாத உடம்பிற்கு பெயர் முண்டம் அதாவது – இவள் புருஷனாகிய ஆன்மா இல்லாத வெறும் உடம்பாகிய முண்டம் என்று கூறுகின்றார்கள்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.