Wednesday, April 15, 2026

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3 I கோவில் அமைப்பு : 1 துவஜஸ்தம்பத்தின் அடியில் பொன் , பணம் , வைர நகைகளை இட்டிருப்பர். அருத்தம் : அங்கு ” விந்து கலை – ஒளி � இருக்கிறது என்பதை தெரிவிக்க 2 துவஜஸ்தம்பத்தைச் சுற்றி வெள்ளைத் துணிச் சுற்றி மேல் வரை போகும் அருத்தம் : விந்து கலை சுழிமுனை நாடி வழியாக மேலே போகின்றது என்று பொருள். 3 துவஜஸ்தம்பத்தின் முடிவில் மணிகள் இருக்கும் அருத்தம் : சுழிமுனை நாடி முடியில் நாதம் விளங்குகின்றது என்பதை உணர்த்த II திருமணமான பெண்கள் எல்லா வண்ண உடைகளையும் அணிவர் பொருள் : அவர்கள் உலக மயமாய் இருப்பதனால் எல்லா வண்ண உடைகளையும் அணிகிறார்கள் . வண்ண உடைகள் = எல்லா குணங்களிலும் – ஆசை – பாசம் – ராக – துவேஷங்களிலும் அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று பொருள் அதே , விதவைகள் மற்றும் புருஷனை இழந்தவர்கள் – வெறும் வெள்ளை ஆடை மட்டுமே அணிவர் பொருள் : அவர்கள் – எல்லா குணங்களையும் தாண்டி போய்விட்டோம் என்பதை சூசகமாகத் தெரிவிக்கின்றனர் – நாங்கள் உலக மயமாய் இல்லை – இறைமை நோக்கி இருக்கிறோம் என்கிறார்கள். வெண்மை = எல்லா நிறங்களையும் தனக்குள் அடக்கியது போன்று விதவைகள் எல்லா ஆசா பாசம் – ராக – துவேஷங்களை நாங்கள் கடந்து விட்டோம் என்பதைக் குறிக்கின்றது அவர்களின் இந்த ஆடை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.