Saturday, April 11, 2026

மறு பிறவி இரகசியம் “ 2

மறு பிறவி இரகசியம் “ 2 ஏன் மனித தேகம் தொடர்வதில்லை ?? எப்படி விலங்கு பறவை பூச்சி என மறு தேகம் அமைவது எனில் ?? அவர்கள் நல்லவராத்தானே இருந்தார் இந்த ஜென்மத்து வினைகள் மறு பிறவியிலேயே நாம் அனுபவிப்பதில்லை எந்த பிறவி கருமத்தை எந்த பிறவியில் அனுபவிக்கிறோமோ ஆர்க்கும் தெரியாது இதை சேர்ப்பது கட்டமைப்பது எல்லாம் அபெஜோதியும் அருள் தான் ஆகையால் இது பத்தி கவலைப்பட கூடாது முடிந்த வரையில் எவ்வளவு சீக்கிரம் பிறவிக்கணக்கு முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கப்பார்க்கணும் அதுக்குத் தான் வேலை செய்யணும் இது மாதிரி மறு பிறவி செய்தி தெரிந்த பின் எனக்குள் நேர்ந்த மாற்றங்கள் சொந்தம் பந்தம் எல்லாம் பொய் – எல்லாரும் பொதுவான உயிர்கள் எனும் பொது நோக்கம் வந்துவிட்டது இந்த கல்வி செல்வம் அந்தஸ்து அதிகாரம் பகட்டு எல்லாம் வீண் – சிறிது காலத்துக்கே பின் எல்லாம் மாறிவிடப்போகுது பின் இதனைப்பத்தி பெருமை பேசி என் பயன் ?? வருத்தப்பட்டும் என் பயன் ?? என தோன்றியது வீணான எண்ணம் கவலை கூடாது இது எல்லாம் என்னை பக்குவப்படுத்தி வருது எல்லாவற்றுக்கும் காலம் – நம் வினை – கோள்கள் துணை செயணும் என் மறு பிறவி செய்தி : உயர்ந்த அறிவு நிலையில் மறுபிறப்பு அமையும் பல்லாண்டுகளுக்கு முன்பே பார்வதி என் ( சிறு பிள்ளை ) தலையில் கிரீடம் சூட்டியதில் இருந்து அறிந்து கொண்டனன் இந்த மறுபிறவி விஷன் சொல்ல வரும் செய்தி : இந்த பிறவிகள் தொடர்கதை என வந்த வண்ணம் இருக்கும் – கடல் அலை என நாம் பயணம் தொடங்கிய வெளி சென்று சேரும் வரை மிக மிக நீண்ட நெடிய பயணம் – துன்பம் துயரம் நிறைந்த சோகப்பயணம் ஆக எவ்வளவு சீக்கிரம் சேர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேரணும் அதுக்கு தவம் செய்து ஜீவன் கண்ணுள்ள அழுக்கு – தானே இட்டுக்கொண்டுள்ள தளைகள் ஆசைகள் மனப்பதிவுகள் எல்லாம் தவத்தால் கரைந்து கரைந்து சீக்கிரம் வெளி சென்று சேர வேண்டும் ஞானம் அடைவதும் ஒளி தேக சித்தி அடைவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல லேசுபட்ட காரியம் அல்ல என அறிய வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.