Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு விளக்கம் – 23
மெய்யருள் வியப்பு விளக்கம் – 23
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே
தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற்பாதமே
உலக விடயக் காட்டில் செல்லாதெனது போதமே ( பாடல் 60 )
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே – வள்ளல் பெருமானுக்கு பிறப்பிறப்பு என்னும் அவத்தை நீக்கப்பட்டுவிட்டதாம்
தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே – ஆன்மாவின் அருளால் அவருக்கு அமுதம் கொடுக்கப்பட்டதாம்
இங்கு தனி என்று குறிப்பிடுவது ஆன்மாவை
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற்பாதமே
உலக விடயக் காட்டில் செல்லாதெனது போதமே = வள்ளலாருக்கு எல்லாம் திருவடிகள் தான் – அவருடை பொறி புலன்கள் – கண்கள் – உணர்வு எல்லாம் ஆன்மாவை நோக்கித் தான் இருக்குமே அல்லாது உலகம் என்னும் காட்டில் உலவாது என்று தன் சாதனத்தை விளக்குகின்றார்.
திரண்ட கருத்து :
வள்ளல் பெருமானுக்கு ஆன்மாவின் அருளினால் பிறப்பிறப்பு நீங்கியது – அவர் தம் நோக்கம் ஆன்மாவிலே இருந்ததே அல்லாமல் உலக விஷயத்தில் தோய்ந்து இருக்கவே இல்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.